This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 November 2012

பின்லேடன் பற்றி தகவல் அளித்த மருத்துவர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு ஒசாமா பின்லேடன் பற்றிய தகவலை பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஷகீல் அப்ரிடி தான் தெரிவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், ஷகீல் அப்ரிடிக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெஷாவரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அப்ரிடி சிறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி அப்ரிடி உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவரது போராட்டத்திற்கு அது காரணம் இல்லை என்றும், அவருடைய உறவினர்கள், வக்கீல்களை சந்திக்க அதிகாரிகள் தடைவிதித்திருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது

28 November 2012

இன்று மாவீரர் நாள் 27 /11 /2012

தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்.அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்.காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள்.
தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள்.இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்து கொள்வோம்.{காணொளி,}


27 November 2012

பிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்

 
லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா, பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த மாவீரர் செல்வங்களின் கல்லறைகள மீது தமிழ் தேசிய இனத்தின் தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
அதனை அடுத்து, மணி ஓசை மண்டமெங்கும் வியாபிக்க, முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டது. இம்முதன்மைச் சுடரினை யாழ். கோட்டை முற்றுகைச் சமரில் வீரமரணமெய்திய மாவீரர் கப்டன். ஹீரோ ராஜ் அவர்களின் பெற்றோர் சண்முகசுந்தரம், கமலாதேவி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இங்கு காணொளி உடாக நெடுமாறன், வைகோ ஆகியோர் மாவீரர் தின எழுச்சி உரை நிகழ்த்தினர்{புகைபடங்கள்},

தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை : விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்

 

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் வாசிக்கப்பட்ட மாவீரர் நாள் அறிக்கையினை செவிமெடுக்க....(ஒலி வடிவம்}

தமிழீழ மாவீரர் நாள் - 2012

தலைவலியை உண்டாக்கும் செயல்கள்

தலைவலி நாம் செய்யும் செயல்களால் தான் ஏற்படுகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும்.
ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால் இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.
ஈரமான கூந்தல்
காலையில் தலைக்கு குளித்ததும் சரியாக காய வைக்காமல் அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள்.
இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.
ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமான வெப்பம்
வேலையாக வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது தலைவலியானது உண்டாகும்.
மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.
வாசனை திரவியங்கள்
உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர்.
இதனால் அந்த செண்ட் வாசனை அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல் மிதமாக உபயோகிப்பது நல்லது.
தொலைக்காட்சி திரை
கணனியை போன்று தான் தொடர்ச்சியாக தொலைக்காட்சியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது.
மேலும் சிலர் தொலைக்காட்சியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும்.
ஆகவே அவ்வாறு உட்காராமல் சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
மேலும் தொலைக்காட்சி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.
படுக்கையில் படித்தல்
படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால் கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும்.
ஆகவே எப்போது படிக்கும் போதும் உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக குளிர்ச்சி
அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும்.
ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.
சரியான தூக்கம்
தூக்கம் குறைவாக இருந்தாலும் அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர்.
சாதாரணமாக ஆல்கஹால் சாப்பிட்டாலே மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால் தலை வலி தான் அதிகமாகும்.
அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

26 November 2012

வயிட்ஹோல் வீதியை ஸ்தம்பிக்க வைத்த நிர்வாண மனிதன்!

                  
லண்டனில் பிரதமர் டேவிட் கெமரூன் வீட்டுக்கு அருகில் உள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ள சிலை மீது நிர்வாணமாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் இதனால் ஸ்தம்பித்தது.
மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்கி வந்த அந்நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் உள்ளது வயிட்ஹோல் வீதி. மிக முக்கியமான இந்த சாலை அருகில்தான் பிரதமர் டேவிட் கெமரூனின் வீடு அமைந்துள்ள சாலையும் உள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய அலுவலகங்களும் இந்த சாலையில் உள்ளது. 19ம் நூற்றாண்டில் இந்த பகுதியின் இராணுவ தளபதியாக இருந்தவரும், கேம்பிரிட்ஜ் பகுதியை ஆட்சி செய்தவருமான பிரின்ஸ் ஜோர்ஜ் சிலை நிறுவப்பட்டுள்ளது. குதிரை மீது ஜோர்ஜ் செல்வது போன்ற சிலை, உயர்ந்த பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் மீது நேற்று பகல் 12 மணியளவில் ஒரு வாலிபர் நிர்வாணமாக சரசரவென ஏறினார். பின்னர் சிலையின் தலை மீது அமர்ந்து கொண்டார். கால்களை மாற்றி மாற்றி அவ்வப்போது பல்வேறு போஸ்களும் கொடுத்துள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றி விட்டனர். கடும் பனியில் நிர்வாணமாக அந்நபர் உட்கார்ந்திருந்த ஸ்டைலை பார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், அவருடன் பேச்சு கொடுத்தனர். அவர் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொலிஸார் சந்தேகப்பட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிற்பகல் 3 மணிக்கு அந்நபர் தானாகவே கீழே இறங்கி வந்தார். உடனே பொலிசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் பரபரப்பான லண்டன் சாலை 3 மணி நேரம் ஸ்தம்பித்தது. அவர் எதற்காக சிலை மீது ஏறினார், அவர் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை{புகைபடங்கள்},

25 November 2012

கிழக்கில் இன்று முதல் வரும் புதன்கிழமை வரை பொது நிகழ்வுகளுக்கு ?

 
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 28 ம் திகதி வரையில் நடைபெறவுள்ள பொது நிகழ்வுகளுக்கு படையினர் தடைவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள படையினரின் இவ்வாறான செயலானது பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் குழப்பும் வகையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை ஏற்பாடுசெய்யப்பட்ட பொது நிகழ்வுகளை நிறுத்துமாறு குறித்த பகுதிகளில் உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சிங்கள படையினர் அச்சுறுத்தியது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவீரர் தினத்தை கருத்தில் கொண்டே இலங்கை படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மனதில் நீங்காத நிலையையே ஏற்படுத்தும். மாவீரர் தினம் என்பது போரின்போது உயிரிழந்த போராளிகளை நினைவு கூருவதாகும்.
அவர்கள் வேறு யாரும் அல்ல எங்கள் உறவுகள். அவர்களை நினைவுகூரும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது.
அத்துடன் எதிர்வரும் கார்த்தினை 28 ஆம் திகதி இந்துக்களின் புனித தினமான கார்த்திகை விளக்கீடு இருக்கின்றது.
அதனை இந்துக்கள் வழிபாடு செய்யாமல் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.
அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் வீடு வீடாகச் செல்கின்ற படையினர் குடும்ப விபரங்களைத் திரட்டுவதுடன், குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை புகைப்படமும் எடுத்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக அரியநேந்திரன் கூறினார்.
சில குடும்பங்களில் கணவன்மார் வெளிநாடு சென்றுள்ளதால் மனைவியை மாத்திரம் வைத்து புடைப்படம் எடுக்கின்றனர்.
அத்துடன் பகல் வேளைகளில் வீடுகளுக்குச் செல்வதனால் கணவன் தொழிலுக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்றுள்ள நிலையில், குடும்பப் பெண்ணை தனியாக வைத்து புகைப்படம் எடுப்பதால் அந்தப் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி குறித்த பிரதேச மக்களின் குடும்ப விபரங்களை படையினர் திரட்டி வருவது சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட ராணுவக் கட்டளைத் தளபதி ஆகியோரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முறையிட்டிருந்த நிலையில் மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இராணுவத்தினர் குடும்ப விபரங்களை எடுப்பது தங்களுக்கு தெரியாதெனவும், இனிமேல் இவ்வாறான விபரங்களை இராணுவத்தினர் சேகரிக்கும்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மீண்டும் எதுவித அனுமதியுமின்றி யாருக்கும் தெரியாமல் சிங்கள படையினர் இவ்வாறான விபரங்களைத் திரட்டுவது மக்களுக்கு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான விவாதத்தின் போது வெளிக்கொணரவுள்ளதாகவும்; அவர் குறிப்பிட்டார்

24 November 2012

எதுவும் நடத்தக் கூடாது என நாம் யாருக்கும் அறிவிக்கவில்லை ?


27 ம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது.
எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக் கொண்டாடுதற்கு யாழ். மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
27 ம் திகதி ஆலயங்களில் விசேட வழிபாடுகள் எதுவும் நடத்தக் கூடாது என நாம் யாருக்கும் அறிவிக்கவில்லை. அவ்வாறு எங்களுக்கு செய்யவும் முடியாது. ஏனென்றால் விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதத்தவர்களது பாரம்பரியம். அதனை நாம் தடுத்துவிட முடியாது.
மக்களது கலாச்சார நிகழ்வுகளுக்கு நாங்கள் தடையில்லை. அன்றைய நாள் எங்கள் சமயப்படி பௌர்ணமி தினம் நாமும் அதனை அனுஷ்டிப்போம்.
அன்றைய தினம் ஆலங்களில் விசேட பூஜைகளும், மணி ஒலிக்கவும் மக்களுக்கு உரிமையுண்டு என்றார்.
இதேவேளை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து இம்முறை கார்த்திகை 27 ம் திகதியில் தீபத் திருநாளை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

23 November 2012

புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை வழக்கிலிருந்து

        
 
சென்னைபாண்டிபஜாரில்கடந்த1982ல்விடுதலைப் புலிகளுக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றில் சிபிசிஐடி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், புளொட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், ராகவன் எனப்படும் சிவகுமார் ஆகியோர் சுட்டதில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் எனப்படும் உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் பொலிசார் கைது செய்து அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், மே 23ம் திகதி சிவனேஷ்வரன் என்றழைக்கப்படும் நிரஞ்சன் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார். மே 25ம் திகதி கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில் உமா மகேஸ்வரனை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர்கள் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிணையில் வெளிவந்த இவர்கள் தலைமறைவானார்கள்.இந்த வழக்கு 7வது கூடுதல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
4 பேர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணை நடந்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது, சிபிசிஐடி சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டார். அவரது உடல் நந்திக்காடல் பகுதியில் 2009 மே 19ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று புதுடெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல் அனுப்பியுள்ளார்.
சிவகுமார் இந்தியாவைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. ஜோதீஸ்வரன், ஹாங்காங் நாட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
நிரஞ்சன் இறந்துவிட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன், நிரஞ்சன் ஆகியோரை நீக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது

22 November 2012

சிலியில் கடும் நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்

       
தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் பீதி அடைந்து தெருக்களில் ஓடினார்கள். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 551 பேர் பலியானார்கள் என்பது நினைவிற்குரியது

இலங்கை அரசாங்கம் அடிமைச் சேவகம் செய்து வருகிறது

       
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கை அரசாங்கம் அடிமைச் சேவகம் செய்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இந்தியாவும் மௌனமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பொருளாதார பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அடிவருடிகளைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வினை தடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை வழங்குவதாக ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்க வாக்களித்த போதிலும் அந்த வாக்குறுதிகளை உதாசீனம் செய்ய முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட யோசனையில் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை எனவும்

21 November 2012

10 வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் இங்கிலாந்து

இங்கிலாந்தில் மிக இளம் வயதிலேயே சிறுவர்கள் பாலியல் குற்றவாளிகளாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் வரை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதாகியுள்ளனராம்.
ஓன்லைன் மூலம் படங்களை பார்த்து இவர்கள் கெட்டுச் சீரழிவதாகவும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இணையத்தில் பாலியல் சம்பந்தமான தகவல்கள் அதிகளவு கிடைப்பதால், சிறுவர்கள் அதிகளவு கெட்டுப் போய் விடுகின்றனராம்.
இதுகுறித்து குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு கூட்டணி அமைப்பின் ஜான் கார் கூறுகையில், இளம் வயதிலேயே சிறுவர்கள் பாலியல் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் 10 வயது சிறுவன் பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளான் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் ஆபாச படம் பார்ப்பது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்

20 November 2012

பிரபாகரனின் மகனை கொல்வதற்கு எந்த அவசியமும் எமக்கு இல்லை:

 
பிரபாகரனின் மகனை படுகொலை செய்வதற்கான தேவை எமக்கு இருக்கவில்லை. அவரை நாம் கொல்லவும் இல்லை. ஆனால் அவர் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் டிலான் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிள்ளையான் எந்த அடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசகரானார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அவர் அவ்வாறான பதவியை வகிப்பதற்கு சகல தகுதிகளையும் பெற்றிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

'கே.பி. குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கள் அனைத்தும் அவரை ஏன் கொலை செய்யவில்லை என்றே அமைந்திருக்கின்றன. இப்படியிருக்கையில் பிரபாகரனின் மகனை ஏன் கொன்றீர்கள் என மங்கள சமரவீர எம்.பி. கேள்வி எழுப்புகிறார்.

பிரபாகரனின் மகனையோ வேறு யாரையோ நாம் கொலை செய்யவில்லை. ஆனால் மோதல்களின்போது அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் பொதுமக்கள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என சகலரையும் கொலை செய்தனர். இது குறித்துப் பேசுவதற்கு இங்கு யாரும் கிடையாது.
ஜே.வி.பி.யினரும் ஆயுதப் போராட்டங்களை நடத்தியவர்களே. எனினும் அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வந்துள்ளதன் பின்னணியில் அவர்களின் ஜனநாயகப் பிரவேசத்தை நாம் வரவேற்கிறோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணாவாக இருந்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் போராளியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் போன்றோரும் இவ்வாறு ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பினர். ஆயுதங்களைக் களைந்து ஜனநாயகத்துக்குள் நுழைபவர்களை நாம் ஏற்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்

19 November 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகின்றது?

     
By.Rajah.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கும், உலக சமூகத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகின்றது. 13ம் திருத்தச் சட்டத்தை வேண்டுமெனக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இதனை கடுமையாக எதிர்த்து வந்தது.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே. அனைவருக்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகளை அளிக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இன்று துரித அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்

18 November 2012

மனித உரிமைகள் நான் தொடர்ந்து அவதானத்தை செலுத்தி?

           
 
By.Rajah.இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள உள்ளக அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவிக்கையில்,

'இலங்கை மக்கள் பலவருடங்களாக முகம்கொடுத்து வருகின்ற மனித உரிமை மீறல்களை இந்த அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகள் தொடர்பில் நான் தொடர்ந்து அவதானத்தை செலுத்தி வருகின்றேன்.

இந்த அறிக்கையானது இறுதி யுத்தத்தின்போது ஐ.நா.மற்றும் அதன் தொண்டு நிறுவனங்களின் இயலாமையை சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்கவும் எதிர்கால தோல்விகளை தடுப்பதற்கான எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பரிந்துரைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

17 November 2012

சர்வதேச வலையமைப்பின் முக்கிய தலைவர் பிரான்ஸில் கைது !

        
By.Rajah.தமிழீழவிடுதலைப்புலிகளின்சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரானவிநாயகம்,பிரான்ஸில்வைத்துகைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் ஒரு பிரிவிற்கு விநாயகம் தலைமை வகிக்கின்றார்.
புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸின் பாரிஸ் பொலிஸார் விநாயகத்தை கைது செய்துள்ளனர். ஐரோப்பாவில் செயற்பட்டு வந்த புலிகளின் வலையமைப்புக்களில் விநாயகத்தின் வலையமைப்பு மிகவும் வலுவானது.
பரிதி கொலையுடன் இலங்கை அரசாங்கத்தை தொடர்புபடுத்த புலிகள் முயற்சித்ததாக தெரிவித்துள்ளது. பரிதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் நபர் விநாயாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகம் 2009ம் ஆண்டு போர் இடம்பெற்ற காலத்தில் ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்று, புலிகளின் வலையமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனத் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

16 November 2012

சிலியில் கடுமையான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், அடகாமா பாலைவன பகுதியில் இருந்த வீடுகள் குலுங்கின.
காக்குயும்போ நகருக்கு வடக்கே 88 கிலோ மீற்றர் தூரத்தில், 61 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த சேத விபரங்கள் தெரியவரவில்லை. இதன் அதிர்வுகள் தலைநகர் சாண்டியாகோவிலும் உணரப்பட்டுள்ளது

15 November 2012

ஒலிபெருக்கியினை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ?

    
By.Rajah.வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபைவளாகத்தில்நடைபெற்றகண்காட்சியில் ஒலிபெருக்கியினைநிறுத்துமாறுயாழ்நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டபோதும்அதனைப்பொருட்பாடுத்தாது கண்காட்சி நடைபெற்றுள்ளது.
நாளை யாழ்ப்பாணத்தில் நாடைபெறவுள்ள ஆளுனர் மாநாட்டைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையினால் பல லட்சம் ரூபா செலவில் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது
இந்தக் கண்காட்சி நடைபெறும் வளாகத்திற்கு முன்னாள் யாழ் நீதிமன்றம் உள்ளதால் பலத்த சத்தத்துடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றது இதனை உடனடியாக நிறுத்துமாறு பதிவாளர் ஊடக யாழ் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பாக நீதவானிடம் கதைக்குமாறு யாழ் மேயர் அனுப்பட்டு நிகழ்வு நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று காலை 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டடிருந்தபோதும் 2 மணித்தியாலம் ஆளுனரின் வருகைக்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் காத்துக்கிடந்தனர்.
இன்றைய தினம் மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நாள் என்பதால் இதன் காரணமாகவே ஆளுனர் இரண்டு மணி நேரம் தாமதமாக வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விருந்தினர்களை அழைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கு எதுவித உணவோ குடிநீரோ வழங்காது 7.30 தொடக்கம் 11.00 மணிவரை வீதியில் காக்கவைக்கப்பட்டுள்ளதோடு அங்கு கடமையாற்றிய திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கு பானம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

14 November 2012

பரிதியைக் கொல்ல கட்டளை வந்தது!

         
 
By.Rajah.பிரான்ஸ் வர்டமான் பிரதேசத்தில் இருந்தே பரிதியைக் கொல்லச் சொல்லி கட்டளை வந்தது எனச் சந்தேகிக்கிறது பிரெஞ்சுப் பொலிஸ் ! இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுட்டுக்கொல்லவில்லை என்று பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அன்று இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில், பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரிதியின் மனைவியோ பிள்ளைகளோ அங்கே இருக்கவில்லை.
சந்திப்புகள் முடிந்த பின்னர் பரிதி உடபட 4 பேர் தமது வீட்டுக்குச் செல்ல புறப்பட்டுள்ளார்கள். கேணல் பரிதி பாரிஸ் நகரில் 2 முறை முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்வேளை, தமது அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியூடாக வெளி நடமாட்டத்தைக் கவனிப்பது வழக்கம்.
இதுபோல அவர் கவனித்துவிட்டுத் தான் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் 4ல்வரும் பஸ் நிலையத்தை அண்மித்து அங்கே நின்றிருந்தவேளை, தமக்குப் பின்னல் இருந்த கண்ணாடி திடீரென உடைந்ததை பார்த்துள்ளார்கள். அடுத்தகணமே, ஓடுங்கள் யாரோ சுடுகிறார்கள் என்று, 4ல் வரில் ஒருவர் கத்தியுள்ளார்.

எனவே 4ல்வரும் ஓட ஆரம்பித்தவேளை, 2டாவது குண்டு கேணல் பரிதி மீது பாய்ந்துள்ளது. சுட்டவர் சற்றும் பயமில்லாது பரிதியின் அருகே வந்து 3 முறையும் சுட்டுவிட்டு அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். சிறிது தூரத்துக்கு அப்பால் நின்றிருந்த காரில் ஏறி அவர் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் பாவித்த துப்பாக்கி 9MM என்று அழைக்கப்படும், கைத்துப்பாக்கி ஆகும்.
இதில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்ததா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. முதலில் மோட்டார் சைக்கிளில் வந்தவர், கறுப்பு கவசம் அணிந்திருந்தார் என்றும், அவரே சுட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட சமயம், அவ்வளியே ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது அவ்வளவு தான். ஆனால் கேணல் பரிதியை சுடும்போது அவர் அருகில் நின்ற 3 பேரில் ஒருவரின் வாக்கு மூலத்துக்கு அமையவே இச் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

மூன்று 9MM ரக துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு வயது 33 என்றும் மற்றவர் பெயர் மற்றும் வயதைக் குறிப்பிடவில்லை. இதேவேளை கைதாகியுள்ள சந்தேக நபர் ஒருவர் தாம் 50,000 ஆயிரம் யூரோக்களை வாங்கிக்கொண்டு தான் இக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இது ஒரு செய்தியாக வெளிவந்துள்ளதே தவிர, பொலிசார் இதுகுறித்து எவ்வித தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை. குறிப்பிட்ட பிரெஞ்சு ஊடகம் ஒன்று மட்டுமே இவ்வாறு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். மேற்படி இப் பத்திரிகை வெளியிட்ட செய்தி. இதேவேளை குற்றவாளி என்ற சந்தேகத்தில் கைதாகியுள்ள இருவரும் தாம் அக் குற்றத்தைச் செய்யவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். சிலவிடையங்களை நாம் மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது. அதாவது கைதுசெய்யப்பட்டுள்ள 2வருமே சந்தேகத்தின் அடிப்படையில் கைதானவர்களே ஒளிய அவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் இதுவரை நிருபனமாகவில்லை. எனவே எவரையும் நாம் குற்றவாளி என்று கூறிவிடமுடியாது.

பொலிசார் தகுந்த ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து, வெற்றுத் துப்பாக்கி ரவைகளில் உள்ள கைரேகை அடையாளங்களைப் பாவித்து இல்லையேல் வெறு முறையில் தடையங்களைக் கண்டுபிடித்து குற்றவாளி இவர்தான் என்று நிரூபிக்கவேண்டும். இதனை நீதிமன்றம் சரியாக விசாரித்து, தீர்ப்பு வழங்கும் பட்சத்திலேயே அவர் குற்றவாளியாகிறார். அதற்கு முன்னர் நாம் ஊகங்களிலும் அனுமாணங்களிலும் பேசமுடியாது

13 November 2012

சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் இடிபாடுகள் இன்று ?

      By.Rajah.1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் இடிபாடுகள் இன்று மீட்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுளளது.
1998ம் ஆண்டு பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த விமானமே புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானம் மன்னார் கடற்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டபோது கடலில் மூழ்கியது.
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமைய இந்த விமானத்தை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விமானத்தின் இடிபாடுகளையும் மீட்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தபோதிலும், அப்பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
 

12 November 2012

15 மில்லியன் அமெரிக்க டாலர் - பணத்துக்கு என்ன நடந்தது!

       
By.Rajah.விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பதும் பலராலும் அறியப்பட்ட விடையம். இதேவேளை அவர்கள் சுங்கத்துறை, வணிகப் பிரிவு, வருமாணப் பிரிவு, நீதித்துறை, பொலிஸ் பிரிவு என்று பல திணைக்களங்களை நடாத்தி வந்தனர்.
இதனுள் தமிழீழ வங்கியும் அடங்கும். வன்னியில் மட்டும் சுமார் 12 கிளைகளைக் கொண்டு இயங்கிவந்த தமிழீழ வங்கியில் சுமார் 10,000 பேர் வைப்பீடுகளைச் செய்துள்ளனர் என்றும், சேமிப்பு வங்கிக் கணக்கு போக சுமார் 300 கரன் எக்கவுண்டுகள் இருந்ததாகவும் அறியப்படுகிறது. கிளிநொச்சியில் உள்ள தமிழீழ வங்கி ஒன்றின் மனேஜராகப் பணியாற்றிய மகாலிங்கம் வீரதேவன் என்னும் நபர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மகாலிங்கம் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ வங்கியில் சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மதிப்பான ரூபாய்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு வரும் பணத்தை, புலிகள் தமது தமிழீழ வங்கிக்கே மாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாகவே பெரும் பணம் இவ்வங்கியில் தேங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, புலிகள் வெல்லப்பட்டதும், பின்னர் அவர்களது நிர்வாக நகரமான கிளிநொச்சி இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் இப் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று மாகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தமிழீழ வங்கி தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பல தகவல்களைப் பெற்றுள்ளது. இதில் சில தகவல்கள் விக்கி லீக்ஸ் ஊடாகவும் கசிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

11 November 2012

WinLIRC மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

    By.Rajah..தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற சாதனங்களை   தொலைவிலிருந்து இயக்குவதற்கு Remote Control பயன்படுகின்றது. தற்போது இத்தொழில்நுட்பமானது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளுக்கும் சாத்தியமாகியுள்ளது.
அதாவது Infrared வசதி கொண்ட கணனிகளில் WinLIRC எனப்படும் மென்பொருளினை நிறுவிக் கொள்வதன் மூலம் Media Player Classic, Media Portal, BSPlayer போன்றவற்றின் செயற்பாடுகளை தொலைவிலிருந்து Remote Control மூலம் கட்டுப்படுத்த முடியும்.
தவிர PHP framework - இன் அடிப்படையில் HttpIrc புரட்டக்கோலின் ஊடாக இணைய உலாவிகளின் மூலமாகவும் WinLIRC மென்பொருளின் உதவியுடன் தொலைவு இயக்கல் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

புலம் பெயர் தமிழர்கள் - திமுகவிற்கு மாதாந்தம் 1 மில்லியன்


ByRajah...தமிழீழத்திற்காக குரல் கொடுப்பதற்காக தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக கட்சி மில்லியன் கணக்கான டொலர் பணத்தைப் பெற்றுக் கொள்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலி ஆதரவு புலம் பெயர் தமிழர்கள் திமுகவிற்கு இந்தப் பணத்தை வழங்கி வருகின்றனர்.
மாதாந்தம் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்படுகின்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகின்றது.
டெசோ மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் டெசோ தீர்மானங்களை சமர்ப்பித்தமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு இந்தப் பணமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது

10 November 2012

தொண்டர்கள: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஒபாமா

By.Rajah.அதிபர் ஒபாமா, தேர்தலில் தனது வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தொண்டர்களாகிய உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என கூறியவாறே கண் களங்கினார். இதனால் கூடியிருந்த தொண்டர்கள் ஒபாமாவின் பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்

08 November 2012

வட்டி செலுத்தத் தேவையில்லை!ஜனாதிபதி


By.Rajah..விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக இல்லாது செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம்
சென்றடையும் எனவும் ஜனாதிபதி தனது வரவு - செலவு திட்ட உரையில் தெரிவித்தார். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

07 November 2012

இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கப்படும்: கனடா பிரதமர் ?

       By.Rajah.இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்கப்படும் என கனடா   பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா- கனடா நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, நல்லுறவு தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அணு உலை செயல்பாட்டுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனியம் அதிகமாக கிடைக்கும் நாடுகளில் கனடா முதலிடம் வகிக்கின்றது.
இந்திய அணு உலைகளுக்கு தேவையான யுரேனியத்தை தொடர்ந்து வழங்குவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கனடா, இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இருப்பினும் நாங்கள் வழங்கும் யுரேனியத்தை அழிவுக்கான நோக்கங்களுக்கன்றி, ஆக்கப்பூர்வமான தேவைகளுக்காக மட்டுமே இந்தியா பயன்படுத்தும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே நாங்கள் யுரேனியத்தை வழங்குவோம் என்று கனடா கூறி வந்தது.
இந்நிலையில் உடனடியாக இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடிவு செய்து, ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது

06 November 2012

நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் ?

By.Rajah..பிரதம நீதியரசருக்கு சிராணி பண்டாரநாயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ எடுக்கப் போவதில்லை என நீதியரசர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக நீதியரசர்கள் சங்கம் நேற்று கூடிய போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்காவிற்கு எதிராக தற்போது அரசாங்கம் குற்றப் பிரேரணை முன்வைத்துள்ளது.
அதன்படி 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றம் சுமத்தி கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தலைமை தாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சர்வதேசமே நீதித்துறைக்கே இந்த நிலை இலங்கையில் என்றால் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையினை நடாத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்

ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட

By.Rajah..லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.
லண்டனில் நாளை நடைபெறும் தமிழர் மாநாட்டில் பங்கேற்க செல்லும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லண்டனில் சர்வதேச தமிழர் மாநாடு நாளை தொடங்குகிறது.
மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர் பாலு, டி.ராஜா, தா.பாண்டியன், திருமாளவளவன், மற்றும் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து திருமாவளவன் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனக் கூறினார்.
அதுமட்டுமின்றி ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்படும் எனவும் திருமாவளவன் கூறினார்

04 November 2012

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுக்கும் சீன சீனியர் சிட்டிசன்கள்


சீனாவை சேர்ந்தவர் வாங் சுஷாங் (84). பிள்ளைகள் கவனிக்காததால் தனியே வசித்து வரும் இவர் சமீபத்தில் மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். படம் வரைந்து பயிற்சி பெறும் ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்வதுதான் இவரது வேலை. இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: எனக்கு 2 மகன், 2 மகள். இளைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டான். மற்ற பிள்ளைகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். மனைவி இறந்து 15 ஆண்டுகள் ஆகிறது.

தனியாகத்தான் வசிக்கிறேன். மகள்கள் இருவரும் மாதம் ஒருமுறை வந்து என்னை பார்த்துவிட்டு போவார்கள். மகன் வாரம் ஒருமுறை வருவான். ஏதாவது சாப்பிட கொடுத்துவிட்டு போவான். சேர்ந்த அழுக்கு துணிகளை எடுத்து சென்று, அடுத்த வாரம் வரும்போது துவைத்து எடுத்து வருவான். மற்றபடி என் வேலைகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.
மாத பென்ஷன் ரூ.6,800 செலவுக்கு போதவில்லை. அதனால், மாடலிங் தொழிலுக்கு செல்கிறேன். ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்ந்திருக்க வேண்டும். முக்கால் மணி நேரம் சிலை போல ஆடாமல், அசையாமல் உட்கார வேண்டும். இதற்கு ரூ.900 வரை தருகிறார்கள். இதன்மூலம் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பாதிக்கிறேன். நிர்வாண போஸ் கொடுப்பது கூச்சமாக இல்லை. தள்ளாத வயதிலும் சொந்தக் காலில் நிற்பது பெருமையாகத்தான் இருக்கிறது. இவ்வாறு வாங் சுஷாங் கூறினார்.
 
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதாக கூறி குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள அரசு வலியுறுத்துகிறது. இருக்கும் ஒரு பிள்ளையும் கவனிக்காமல் போவதால் பல பெற்றோர் கடைசி காலத்தில் கஷ்டப்படுகின்றனர். திருமணமானதும், பெற்றோரை விட்டுவிட்டு தொழில் நகரங்களை நோக்கி இளைஞர்கள் ஓடுகின்றனர். இது போன்ற காரணங்களால் சீனாவில் சீனியர் சிட்டிசன்கள் பலர் தனிமையில் வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. அதிக வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய நிலை உள்ளது. வாங் சுஷாங் போல பல முதியவர்கள் நிர்வாண மாடலிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,,,,,By.Rajah.