This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 December 2013

வடமாநிலங்களில் கடும் குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் டெல்லி முழுவதும், கூடுதல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரியில் இருந்து.

 மேலும் உத்தரபிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் கடும் குளிர் நிலவயது.
இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் முடங்கிகிடந்தனர்.
 

28 December 2013

கூடங்குளம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர்  திட்டத்தினை

கூடங்குளம் அணுமின் நிலைய சுற்று வட்டார பகுதிகளுக்கான வளர்ச்சி  திட்டத்தின் கீழ்  செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 68 கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் வருடாந்திர பராமரிப்பு செலவிற்காக 87 லட்சம் ரூபாய்  ஆகியவற்றிக்கு  நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு  55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்

ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டத்தில் நாண்டேட் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாயினர். இதில் பலியாவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனக கார்கே அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர், புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

27 December 2013

குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மனைவி தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக மேல்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மிகப்பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது குல்பர்க் என்னுமிடத்தில், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. இஸான் ஜாஃப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. இஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து ஜாகியா ஜாஃப்ரி புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் படையை (எஸ்.ஐ.டி.) உச்சநீதிமன்றம் அமைத்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுப் படை தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அதனையடுத்து அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை ஆமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, சிறப்புப் புலனாய்வுப் படைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் படை அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், மோடி உள்பட குற்றம்சாட்டப்பட்ட யாருக்கும் அச்சம்பவத்தில் தொடர்பில்லை என்றும், எனவே விசாரணையை முடித்துக் கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுப் படை தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து, வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.ஜே. கனத்ரா, ஜாகியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக மேல் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாகியா ஜாஃப்ரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததை அறிந்ததும், அவர் கதறி அழுதார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) வழக்கறிஞர் ஆர்.எஸ். ஜாமுர்,
"சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணை அறிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்ததற்கு, ஜாகியா ஜாஃப்ரியின் மனுதான் தடையாக இருந்ததாகவும், தற்போது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும்" கூறினார்.

ஆமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறப்புப் புலனாய்வுப் படை தலைவர் ராகவன், தனது குழுவினர் நடத்திய விசாரணை உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாகவும் ராகவன் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக ஆமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி, உண்மை வென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

 

சிறுமியை கடத்தி கற்பழித்த இளைஞன் கைது

சென்னையை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஆசீப்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இதன்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாட்டு மற்றும் நடனம் கற்றுத்தருவதாக அவளது பெற்றோரிடம் கூறி,  குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்றுள்ளது. 
கேரளாவில் ஆலப்புழையிலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சிறுமியை துபாய்க்கு கடத்த திட்டமிட்டதாக ஹுமாயுன்நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

போலி வாக்காளர் அடையாள அட்டையுடன் வலம் வந்த முகமது முஸ்தபா பலரிடம் முறைகேடு செய்து பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ஐதராபாத் பொலிஸார் முல்லபள்ளி என்ற இடத்தில் கைது செய்தனர்.
 

தேவ்யானி கைது தொடர்பில் புதிய தகவல்: தொடரும் !!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவ்யானி கோப்ரகடே.

இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 12ம் திகதி தேவ்யானி கைது செய்யப்பட்டார். அவர் ஆடை களைந்து சோதனையிடப்பட்டார். இதனால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு சில சலுகைகளை பறித்தது. இந்த மோதல் போக்கு விரைவில் தீரும் என்று இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தேவ்யானியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தின் ஆலோசகராக கடந்த ஓகஸ்ட் 26ம் திகதியிட்டு நியமிக்க இந்தியா சிபாரிசு செய்ததாக புதிய தகவல் தெரிய வந்துள்ளது.
அதனால், அவருக்கு ஐ.நா. தூதரக அதிகாரி அந்தஸ்து கிடைத்துள்ளது. இது, வியன்னா பிரகடனத்தின்படி, கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கு கிடைக்கக்கூடிய ‘சட்ட பாதுகாப்பு’ கொண்ட பதவி ஆகும்.

எனவே, தேவ்யானி, தனது கைதின் போதே சட்ட பாதுகாப்பு பெற்றவராக இருந்தார். அதையும் மீறி, அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேவ்யானி, ஐ.நா. தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டது, எந்த விதத்திலும் இந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தாது. முன்தேதியிட்டு அவருக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடியாது’ என்று கூறினார்.
இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான மோதல் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
 

24 December 2013

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்

இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை இந்தியாவில் தொடர்வதற்கான புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.கலாச்சார உறவுகளுக்காக இந்தியப் பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 180 புலமைப்பரிசில்கள் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.  நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இளமாணிக் கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளியல், மனிதப் பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டத்தில் முதுமாணி கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், பொருளியல், மனித பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 50 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், இத்திட்டத்தில் பொறியியல், விஞ்ஞானம், மற்றும் விவசாய கற்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ரஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தில் தொழில்நுட்ப துறையில் பொறியியல் இளமாணி மற்றும் தொழில்நுட்ப  இளமாணி பட்டம் ஆகிய இளமாணி பட்டங்களுக்கு 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுமாணி மற்றும் கலாநிதி ஆய்வுக்கு 5 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இந்திய அரசு இந்தப் புலமைப்பரிசில்களுக்காக இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் பயனாளிகளைத் தெரிவு செய்யவுள்ளது.  மிக உயர்ந்த திறமை கொண்ட நபர்களும், பல்கலைக்கழகங்களில் ஆய்வு உள்ளிட்ட உயர் கல்வி கற்பதற்காக இலங்கை உயர் கல்வி அமைச்சினுடைய ஆலோசனைகளின் படி புலமைப்பரிசில் பெறும் நபர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

எல்லாப் புலமைப் பரிசில்களும் கல்விக் காலம் முழுமைக்குமான கல்விக் கட்டணத்துடன் செலவுப் படிகளை உள்ளடக்கியுள்ளது.  அத்துடன், தங்குமிடக் கொடுப்பனவுடன் புத்தகம் மற்றும் காகிதாதிக்கான ஒரு வருடக் கொடுப்பனவும் வழங்கப்படும். இவை தவிர இந்தியாவிலுள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவையின் அனைத்துப் புலமையாளர்களுக்கும் சிறு சிறு உதிரி

நன்மைகளுக்கு மேலாக முழுமையான சுகாதார வசதிகள், இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்திற்கான விமானப் பயணச்சீட்டு கட்டணம், நாட்டின் பல பாகங்களுக்கான கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படும்.

இதற்காக இலங்கை உயர் கல்வி அமைச்சு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. உயர் கல்வி அமைச்சின் இணையத்தளமான றறற.அழாந.பழஎ.டம எனும் முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை சிக்க வைத்தவருக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி

திருவள்ளூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்க வைத்த நபருக்கு ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ரூ. 1 லட்சம் வெகுமதியாக அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தனக்கு வாரிசு சான்றிதழ் கோரி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனிடம் விண்ணப்பித்துள்ளார்.

வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரி ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சகாதேவன் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்க வைத்தார்.

இதுபோல் துணிச்சலாக கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்க வைத்த சகாதேவனுக்கு ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ரூ. 1 லட்சம் வெகுமதியாக அளித்தனர்.
அதற்கான வரைஓலையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் திங்கள்கிழமை சகாதேவனுக்கு வழங்கினார். இதுகுறித்து தமிழ் மீட்சி இயக்கத்தின் மாநில செயலாளர் நந்தகோபாலன் கூறும்போது: ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஐந்தாவது தூண், தமிழ்மீட்சி இயக்கம், இந்திய மக்கள் நலமன்றம், விழிகள் மகளிர் இயக்கம், சட்ட உரிமை இயக்கம், காந்திய மக்கள் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட 20 இயக்கங்கள் சேர்ந்து ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்துள்ளோம்.

இக்குழுவின் மூலம் இதுவரை இம்மாவட்டத்தில் இதுபோல் 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளோம். லஞ்சம் ஊழலை ஒழிக்க இனி இதுபோன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றார். இதில் நிர்வாகிகள் லயன்ஸ் சேகர், கடம்பத்தூர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

23 December 2013

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை

 முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேயை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் அவரது தாயார் வீட்டில் பிணமாகக் கிடந்தார்.
இது தற்கொலை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர், தற்கொலைக் கடிதம் ஒன்றையும் அவர்கள் மீட்டுள்ளனராம்.

அதில் தான் தனது வாழ்க்கையில் மிகவும் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கும், சலீல் அங்கோலாவுக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
 

20 December 2013

தமிழக மீனவர்கள் 30 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரின் விளக்கமறியலை மல்லாகம் நீதிமன்றம் நீடித்துள்ளது. கடந்த நவம்பர் 5ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் 30 மீனவர்களும் 5வது முறையாக ஆஜர்படுத்தப்பட்டனர். 30 மீனவர்களின் விளக்கமறியல் 2014 ஜனவரி 3 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 மீனவர்கள் 30 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு.

18 December 2013

அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அரசு அனுமதி தேவையில்லை:

 உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் வழக்குகளில் அரசு அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.

 இந்த வழக்கில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இணை இயக்குநர் பொறுப்பு வகிப்பவர்களும், அதற்கு மேற் பொறுப்பில் உள்ளவர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹனவதி, சிபிஐயின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“உயர் பொறுப்புகளில் இருப்பவர்களை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்த

தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்’ என்று வாஹனவதி கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்பதாகக் கூறி பிறப்பித்த உத்தரவின் விவரம்:

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் வழக்குகளின் நிலையை விசாரணை அமைப்பு அவ்வப்போது நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறது. பொதுநலனை கருத்தில் கொண்டே முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதுபோன்ற வழக்குகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் முன் அனுமதியை சிபிஐ பெறத் தேவையில்லை.

அரசு பதவிகளை சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம்


தமிழக மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நாகப்பட்டினம் மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். சில பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

16 December 2013

45 பேர் கருகிய கோர விபத்து: ரகசியம் அம்பலமானது

பெங்களூரில் வோல்வோ பேருந்து விபத்திற்குள்ளான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர்.

அந்த பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகரில் சென்று கொண்டிருக்கையில் மீடியானில் இடித்து டீசல் டேங்க் தீப்பிடித்தது. தீ மளமளவென பேருந்தில் பரவியதில் தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற 45 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுனருக்கு இரண்டு நேரப்பணி போடப்பட்டதால் அவர் ஓய்வின்றி உழைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் ஓய்வில்லாததால் களைப்பாக இருந்த அவரால் பிரேக்கை கண்டுபிடிக்க முடியாமல் திணறியதும், பேருந்துக்குள் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன போன்ற தகவல்களும் தெரியவந்துள்ளது.

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு வழக்குகள்

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தேதி ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பயணம் செய்தபோது, 5 காமுகர்களைக் கொண்ட கும்பல் ஒன்றினால் கற்பழிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பிறகு கற்பழிப்பு வழக்கில் சிக்கிவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
அதன்பின்னர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னர் இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்பு கற்பழிப்பு சம்பவங்கள் வெளியே வராது. இப்போது பெண்கள் துணிச்சலுடன் பொலிஸ் நிலையம் வந்து புகார் செய்கின்றனர். அதனால்தான் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது என்று டெல்லி பொலிஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டெல்லி பொலிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில்,
கடந்த நவம்பர் 30ம் திகதி வரை 11 மாதங்களில் அங்கு 1,493 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. 2012-ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட இது இரு மடங்குக்கும் அதிகமாகும்.
2010-ம் ஆண்டு 507, 2011-ம் ஆண்டு 572, 2012-ம் ஆண்டு 706 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.

பாலியல் தொல்லை குற்ற வழக்குகள் இந்த ஆண்டு 5 மடங்குகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, நவம்பர் 30ம் திகதி வரை 11 மாத காலத்தில் 625 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 3,237 ஆக உயர்ந்துள்ளது.

பெண்களை மானபங்கப்படுத்துதல், கேலி கிண்டல் செய்தல், பின்தொடர்ந்து செல்லுதல் உள்ளிட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 165 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 852 என எகிறி உள்ளது.

டெல்லியில் கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். கூடுதலான பெண்கள் இப்போது பாலியல் பலாத்காரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் பொலிஸ் நிலையம் வந்து புகார் செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

15 December 2013

முதலமைச்சர் பதவியை குறிவைக்கிறார் ஹிருணிகா!

 சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள், ஹிருணிகா ஆளும்கட்சி சார்பில் மேல் மாகாணசபைத் தேர்தலில், போட்டியிடத் தீர்மானித்துள்ளார். கென்யா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் ஹிருணிகாவும் அவரது தாயாரும் இதுதொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட ஹிருணிகா திட்டமிட்டுள்ளார்.
   
எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதி ஹிருணிகாவின் தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. வழக்கு விசாரணைகளின் பின்னர் ஹிருணிகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
 

12 December 2013

தடுத்து வைக்கப்பட்டுள்ள 141 இந்திய மீனவர்களும் இன்று


இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 141 இந்திய மீனவர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

முல்லைத்தீவு,செம்மலை,அலம்பில் ஆகிய கடற்பகுதிகளில் வைத்து நேற்று காலை 15 படகில் வந்த 111 இந்நிய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்களையும்  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இதில் 111 பேர் திருகோணமலையிலும் 30 பேர் காங்கேசன்துறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

இவர்கள் இன்று  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

10 December 2013

மனைவியுடன் கருத்து வேறுபாடு: நடிகர் பவன்கல்யாண் விவகாரத்து?

 
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை ரேணு தேசாயை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் நடிகர் பவன் கல்யாண் மனு கொடுத்திருக்கிறார் என்று தெலுங்கு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சிரஞ்சீவியின் உடன் பிறந்த தம்பி. தெலுங்கில் இவருக்கு பவர் ஸ்டார் என இன்னொரு பெயரும் உண்டு.

பவன் கல்யாணுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி நந்தினியை 1997ம் ஆண்டு திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக 2007ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மனைவிக்கு ரூ.5 கோடி ஜீவணாம்சம் கொடுத்தார்.
அதன் பிறகு தெலுங்கு நடிகை ரேணு தேசாய்க்கும் பவன் கல்யாணுக்கும் காதல் ஏற்பட்டது. 2009ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது பவன் கல்யாண், ரேணு தேசாய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த ஆண்டிலிருந்தே இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

முதலில் நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிக்க முடிவு செய்திருந்தார் பவன் கல்யான். ஆனால் இப்போது பரஸ்பர விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனு கொடுத்துள்ளதாக தெலுங்கு உலகில் தகவல் வெளியாகியுள்ளது.






09 December 2013

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கோவில் கால்நடை வளர்ப்பாளர்கள்!


திருக்கோவில் பிரதேசத்தில் வட்டமடு மேய்ச்சல் தரைக்கு சொந்தமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு ஒரு தலைப்பட்சமாக விவசாயிகளுக்கு வனபரிபாலன சபை அனுமதி வழங்கியதற்கு கால்நடையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலையில் இருந்து சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக 1976 ம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு கால்நடையாளர்கள் அதனுள் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.
 
பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் கால்நடையாளர்கள் அங்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இதனை பயன்படுத்தி காணிச் சட்டத்திற்கு முரணாக போலி தற்காலிக காணிப்பத்திரத்தை பெற்று விவசாயிகள் அத்துமீறி வேளாண்மை செய்துவந்துள்ளனர. இதன் பின் ஏற்பட்ட சமாதான சூழலில் கால்நடையாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டு சென்றபோது அதன்

நிலப்பரப்பை அத்துமீறி விவசாயிகள் வேளாண்மை செய்து வந்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் 19 ம் திகதி திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக அமைச்சர் சுனில் பிரேமஜெயந்த தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் அமைச்சர்களான அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள, பிரதேச செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது இங்கு விசேடமாக அம்பாறை வட்டமடு மேய்ச்சல்தரை பிரச்சினை

கலந்துரையாடப்பட்டது. இதில் அமைச்சர் சுனில் பிரேம் ஜெயந்த இது ஒரு கலந்துரையாடல் எனுவும் இதற்கான தீர்வு இங்க வழங்கப்படமாட்டாது எனவும் வட்டமடு மேய்ச்சல் தரை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு களநிலவரங்களை பார்வையிட்டு அதன் பின்னர் அம்பாறை கச்சேரியில் கலந்துரையாடல் நடைபெற்று பின்னர் தீர்வு காணப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் வட்டமடு மேச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 4 கண்டங்கள் உள்ளிட்ட 1380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதி வழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்கபட்டு அனுமதி

வழங்கப்பட்டுள்ளது. இவ் அனுமதியானது ஒருதலைப்பட்சமானது என கண்டித்து ஆலைடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச கால்நடை வளர்ப்பு சங்கங்கத்தினர் இதனை மீள்பரீசிலனை செய்ய வேண்டும் எனவும் இல்லாவிடில் 40 ஆயிரம் கால்நடைகளை அரசு பெறுப்பேற்று கால்நடையாளர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என இதற்கான தீர்வு கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் உண்ணாவிரத போராட்டத்தில் மஹிந்த சிந்தனையில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதும், இத் தீர்மானத்துக்கு மாறாக அம்பாறை மாவட்டத்தில் பால் உற்பத்தி மழுங்கடிக்கப்படுகின்றது. வட்டமடு மேச்சல் தரையில் நீதி நித்திரை கொள்கின்றதா, போன்ற

சுலோகங்கள் தாங்கியவாறு 50 மேற்பட்டோர் இன்று காலை 6.00 மணியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆரம்பமான நிலையில் கால்நடையாளர்களுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் தலைமையில் விவசாயிகள் கால்நடையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் கால்நடையாளர்கள் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதித்து அவ் இடங்களை சென்று பார்வையிட்டு தீர்மானிப்பதற்காக வட்டமடு பிரதேசத்துக்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இருபகுதியினரும் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்து உண்ணாவிரதம் இடம்பெறவில்லை. அதேவேளை விவசாயிகள் வேளாண்மை செய்வதற்கு

வனபரிபாலனசபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் கால்நடையாளர்கள் தங்களை வேளாண்மை செய்ய விடாது தடுத்து வருவதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். இன்று பிற்பகல்வரை உண்ணாவிரதம் தொடர்கிறது.



 
 

08 December 2013

தனது மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விலை பேசிய கணவர்


மனைவியை நண்பர்கள் அனுபவிக்க ஒரு இரவுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு விலை பேசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷார் அலி லஷ்கர்(26). இவர் கடந்த நவம்பர் 28ம் திகதி மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்கு தனது 23 வயது மனைவியுடன் வந்துள்ளார்.
மும்பை மங்குட் ரயில் நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர் அங்கு காத்திருந்த தனது நண்பர்கள் மொபின் குரேஷி(40), சஜித் குரேஷி(24), நிஜாம் கான்(25) மற்றும் சுஜித் குமார் சௌராஸ்யா(43) ஆகியோருடன் ஆட்டோவில் செல்லுமாறு தனது மனைவியை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் தான் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மும்பைக்கு வரும் முன்பு அவர் தனது மனைவியை ஒரு நாள் இரவு அனுபவிக்க நண்பர்கள் 4 பேரிடம் ரூ.1.5 லட்சம் விலை பேசியுள்ளார். அதன்படி தான் அந்த நால்வரும் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் அவர்கள் லஷ்கரிடம் இருந்து தப்பிச் சென்று அந்த பெண்ணை பைங்கன்வாடியில் உள்ள ஜாகிர் ஹுசைன் நகருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து நவம்பர் 30ம் திகதி இரவு 9.30 மணி முதல் டிசம்பர் 1ம் திகதி அதிகாலை 3.30 மணி வரை அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இரவு 1.30 மணி வரை தனது மனைவியையும், அந்த நான்கு பேரையும் தேடிய லஷ்கர், தான் கேட்ட அளவுக்கு ரூ.1.5 லட்சம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் விலையை ரூ. 50,000 ஆக குறைத்த அவர் ரூ.1,500 வரை இறங்கி வந்தார். ஆனால் அந்த 4 பேர் பணம் தர மறுத்ததால் தனது மனைவி கடத்தப்பட்டதாக பொலிசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் லஷ்கர் தான் பேரம் பேசி மனைவியை அனுப்பியதை அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் லஷ்கரையும் கைது செய்தனர்.

ஏடிஎம் கொள்ளையன் கைது?


பெங்களூர் ஏடிஎம் கொள்ளையனை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில பொலிசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனர்.
மேலும் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த குற்றவாளி பெங்களூர் அருகே உள்ள தும்கூரில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தும்கூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

07 December 2013

ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே!-

 
இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது? இவ்வாறு குறிப்பிட்டு தமிழருவி மணியன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு மடல் ஒன்றை வரைந்துள்ளார்.

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு…
வணக்கம். வளர்க நலம்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் ‘சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது.

இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம் என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
ஈழ நிலத்தில் இலங்கை அரசு இனப்படுகொலையை நடத்தியது என்று முதன்முதலாக நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வாக்குமூலம் மத்திய அரசின் வாக்குமூலம் என்று நாங்கள்

ஏற்கக்கூடுமா? மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு. ராசா ‘இனப்படுகொலை’ என்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து உங்கள் அரசு அகற்றியது ஏன்?
இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது?

இரண்டாம் உலகப் போரில் யூத இனத்தைப் படுகொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையின் இரக்கமற்ற நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன சர்வதேச சமுதாயம், இனியொரு முறை இதுபோன்ற அரக்க மனதுடன் எந்த அரசும் செயல்பட அனுமதிக்கலாகாது என்று தீர்க்கமான முடிவுடன்… ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவில் டிசம்பர் 9, 1948 அன்று இனப்படுகொலையைத் தடுக்கவும். மீறுவோரைத் தண்டிக்கவும் ஓர் அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, ஜனவரி, 12, 1951 அன்று நடைமுறைப்படுத்தியது. அதுதான் ‘Genecide convention’ என்பதை அறிவார்ந்த நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ஓர் அரசு இழைக்கும் கொடுமைகளிலேயே கடுமையானதும், மன்னிக்க முடியாததும் இனப்படுகொலை என்பதில் இரு கருத்து இருக்கவே இயலாது.

இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய போது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும்

மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை, அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும்.
ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை?

குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது’ என்கிறீர்களே… குற்றவாளிகள் ராஜபக்ச சகோதரர்களைத் தவிர வேறு யார்? ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்சவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? கொமன்வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத்

தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே!

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-ல் உருவானது. அது, இடையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தமாக நவம்பர் 14, 1987 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இடையில் 26 ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களும், இந்திய அரசும் இன்றுவரை இடையறாமல் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை 13-வது திருத்தம் மூலம் பெற்றுத்தருவதற்கு இரவு பகல் பாராமல் முயன்றுகொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், அந்த அரசியல் தீர்வோ இந்திய அரசின் இயலாமையால் தொடுவானம்போல் பிடிபடாமல் விலகி நின்று வேடிக்கை காட்டுகிறது. ஏன் இந்த நிலை என்று எவரேனும் கேட்டால், விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்று தயங்காமல் பழிதூற்றுவீர்கள்.

விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை இராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக ராஜபக்ச ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே?

போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்சவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் ’13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா?
இன்று அதே ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், ’13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை?

ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப் போகிறீர்கள்?

இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? ராஜபக்சவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு ‘உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்… 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே!

சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. ‘தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். இதுதானே நீங்கள் முயன்று உருவாக்கிய 13-வது திருத்தத்தின் அம்சங்கள்!

வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே மாகாணமாக மாறும். சிங்களத்துடன் தமிழ், இலங்கையின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்’ என்ற இரண்டு அம்சங்கள் மட்டுந்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உருப்படியானவை. ஆனால், அந்த இரண்டும் சிங்கள பௌத்த பேரினவாத கூட்டத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட போது, காந்தியின் குரங்குகளாக (இது தவறான சொற்பிரயோகம் இல்லை) நீங்கள் அனைவரும் காட்சி தந்தது ஏன்? விளக்குவீர்களா?

எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. இதை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழரின் ‘அரசியல் அதிகாரம்’ பழுதுபடாமல் பாதுகாக்கப்படும் வரை இந்திய அரசும் நீங்களும் ஓயப்போவதே இல்லை. நல்ல நாடகம்.

நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர், சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து… இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்?

பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் ‘இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும்.

ராஜபக்ச அரசு, இப்போது 13-வது திருத்தத்தை நிராகரித்தாலோ, நீர்த்துப்போகச் செய்தாலோ, தார்மிக அடிப்படையில் அது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தகுதியை இழந்துவிடாதா? அதனுடைய தவறைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா? நீங்கள்தான் எனக்குத் தெளிவுரை தரவேண்டும். காரணம், காங்கிரஸில் உள்ள ‘அறிவுஜீவிகளின் ஆதர்சம்’ நீங்கள் ஒருவர்தான் என்று பழைய காங்கிரஸ்காரனாகிய நான் பூரணமாக அறிவேன்.

இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு சிறுபான்மையினர் தனி நாடு கேட்க முடியாது. இதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக அரசியல் முடிவெடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கிய நீங்கள், இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் பிரிவினை கோரிக்கையை நினைவூட்டியிருக்கிறீர்கள். இந்திரா காந்தி வங்கதேசத்தைப் பிரித்துக் கொடுக்கப் படை நடத்தியபோது ‘பாகிஸ்தான் இறையாண்மை’ பறிபோவதை ஏன் சிந்திக்கவில்லை?

ஈழத் தமிழரின் பசியாற்ற ராஜீவ் காந்தி வான்வழியாக விமானங்களை அனுப்பி உணவுப்பொருள்களை வீசியபோது ‘இலங்கை இறையாண்மை’ மீறப்படுவதை ஏன் பொருட்படுத்தவில்லை? அப்போதெல்லாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைக்குரல் எழவில்லையா?
ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள்

துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் ‘கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள்.
ஆப்பிரிக்காவில் எரித்ரியா, தெற்கு சூடான், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து விடுபட்ட திமூர் ஆகியவற்றில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தனி நாடு கண்ட வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பணிகளுக்கிடையில் கொஞ்சம் பிரித்துப் படியுங்கள். நீங்கள் மிகவும் ‘சீரியஸான’ மனிதர் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

வடிவேலுவைவிட நகைச்சுவை உங்களுக்கு நன்றாக வருவதை இன்றுதான் அறிந்தேன். ‘சர்வதேச அரங்கில் மன்மோகன் அரசு கடந்த நான்கரை ஆண்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சியினால்தான், கனடா போன்ற நாடுகள் கொழும்புக்கு எதிராகப் பேசிவருகின்றன’ என்று எப்படி உங்களால் இவ்வளவு நகைச்சுவையாகப் பேச முடிகிறது?

கொஞ்சம் போனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் மன்மோகனிடம் நடத்திய ஆலோசனைப்படியே யாழ்ப்பாணம் போனதாகவும், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பேசியதாகவும் கதை சொல்ல முனைவீர்களோ?

சிதம்பரம் அவர்களே… சமத்துவம் இல்லாத இடத்தில் சமதர்மம் இருக்காது. சமதர்மம் நிலவாத சூழலில் சுதந்திரக் காற்றை யாரும் சுவாசிக்க இயலாது. சிங்கள பௌத்த பேரினவாத அரசும், ராஜபக்ச சகோதரர்களும், இனவாத அமைப்புகளும், வெறிபிடித்த பௌத்த துறவிகளும் (!) ஒருநாளும் ஈழத் தமிழருக்கு எந்த உரிமையும் வழங்கப்போவது இல்லை.

இலங்கையைப் போன்ற போக்கிரி அரசை ‘நட்பு நாடு’ என்று நீங்களும் உங்கள் அரசும் பாராட்டலாம். ஆனால், உலக நாடுகள் நீண்ட நாள் வேடிக்கை பார்க்காது. ஒரு நாள் அவை வெகுண்டு எழும். அப்போது ஈழ மக்கள் வாக்கெடுப்பு (Referendum) மூலம் நிச்சயம் தமிழீழம் மலரும்.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள்.
தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி, ஜனநாயகப் பேரவை நாயகராக நீங்கள் வலம் வந்தபோது ஒரு வார இதழில் ‘நமக்கே உரிமையாம்’ என்று ஒரு கட்டுரைத் தொடரை வடித்துத் தந்தது உங்கள் நினைவில் நிழலாடுவது உண்டா? ‘இந்தியாவின் தேர்தல் விதிகளை மாற்றுவதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

முதலில் மாற்றப்பட வேண்டிய விதி எது தெரியுமா? யாரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது என்றொரு விதியை இயற்ற வேண்டும். அதேபோல் யாரும் மூன்று பதவிக் காலங்களுக்கு (15 ஆண்டுகளுக்கு) மேல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

பழையன கழிவதற்கும், புதியன புகுவதற்கும் இதுவே சிறந்த வழி’ என்று அதில் ஊருக்கு உபதேசம் செய்தீர்களே… அதன்படி நீங்கள் நின்றீர்களா? ‘தேர்தல் விதியையே மாற்றி எழுதிய’ மகத்தான மனிதரல்லவா நீங்கள்!

பாவம் நீங்கள்… ‘இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான். அழைப்பாளரும் நான்தான். பேச்சாளரும் நான்தான்’ என்று எவ்வளவு வெளிப்படையாக உங்கள் இதய வலியை இறக்கிவிட்டீர்கள்! முதலில் பல்குழுக்களாகப் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு காங்கிரஸை ஒன்றாக்கப் பாருங்கள். அதற்குப் பிறகு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்க ஓயாமல் போராடலாம்!

04 December 2013

திருப்பதி அருகே 2 போலீஸ்காரர்கள் கொலை


 திருப்பதி அருகே சித்தூர் மாவட்டத்தில், இரண்டு போலீஸ்காரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் செம்மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் சேர்ந்தவர்கள் வெட்டி கடத்தி அண்டை மாநிலங்களில் விற்றுவருகின்றனர்.

செம்மரகட்டை கடத்தலை தடுக்க வனத்துறை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனபகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

சித்தூர் அடுத்த பலமனேர் காட்டில் சோதனை நடத்துவதற்காக போலீசார் ஜவஹர்லால் நாயக் (வயது 23), ஊர்காவல் படையை சேர்ந்தவர். தேவா (22) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் சென்றனர்.
ஆனால் அவர்கள் திரும்பிவரவில்லை இதனால் இருவரையும் போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் பலமனேர் வனபகுதியில் மாடு மேய்க்க சென்ற சிலர் வனப்பகுதியில் காக்கி உடையில் 2 பிணம் கிடப்பதாக கூறினார். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு போலீஸ்காரர் ஜவஹர்லால் நாயக், ஊர்க்காவல் படை வீரர் தேவா கொலை செய்யபட்டு பிணமாக கிடப்பதை கண்டனர். ஜவஹர்லால் நாயக் உடலில் கத்திகுத்து காயங்கள் உள்ளது. பூட்ஸ் காலால் கழுத்தை மிதித்து உள்ளனர். தேவாவின் கழுத்து இறுக்கபட்டு இருந்தது.

இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஹரிநாத் ரெட்டி இன்ஸ்பெக்டர் பாலய்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சித்தூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
செம்மரகட்டை கடத்தலை தடுக்க முயன்ற போது போலீஸ்காரர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

01 December 2013

திரைப்படமாக உருவாகும் ஆருஷியின் கொலை வழக்கு

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யபட்டார்.
வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

2012-ம் ஆண்டு மே மாதம், ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் சதித்திட்டம் தீட்டி இந்த கொலைகளை செய்து அதன் சாட்சியங்களையும் அழித்துள்ளனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் இருவரும் படுக்கை அறையில் தகாத முறையில் காணப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் தல்வார் ஜோடி கொன்றனர் என்று சி.பி.ஐ. உறுதிபடக் கூறியது.

5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆருஷியின் பெற்றோர் தாஸ்னா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிளப் எஃப். ருண்யார்ட் நேற்று தாஸ்னா சிறைக்கு வந்தார்.

ஆருஷியின் பெற்றோரை சந்திக்க மனு செய்த அவர் இந்த கொலை வழக்கை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக மருத்துவ தம்பதியரை சந்திக்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் கூறினார்.

அவருக்கு அனுமதி அளிக்க மறுத்த சிறை அதிகாரிகள் சட்டப்படி இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் மருத்துவ தம்பதியை சந்திக்க முடியும் என தெரிவித்து அந்த இயக்குனரை திருப்பி அனுப்பி வைத்தனர்.

25 November 2013

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை கைது செய்தது மும்பை பொலிஸ்!


நடிகை ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை மும்பை பாந்தரா போலீசார் கைது செய்தனர். தாராவி பகுதியைச் சேர்ந்த அசோக் சங்கர் திரிமுகே என்ற அந்த நபர் புரொடக்‌ஷன் பாயாக பணியாற்றி வருகிறார்.கைது செய்யப்பட்ட அசோக் சங்கர் திரிமுகே, தனது தங்கைக்கு வேலை கேட்பதற்காகவே ஸ்ருதிஹாசனை சந்திக்கச் சென்றதாகவும், பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதிஹாசன் கதவை மூட முயன்றதால் தான் அதை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் செய்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
   
ஆனால் ஸ்ருதிஹாசனோ அந்த நபர் தன்னை கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தினால் ஸ்ருதிஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தனது தோழி வீட்டில் தங்கி வந்தார். போலீசில் புகார்

 கொடுக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், நேற்று பாந்தரா போலீசில் புகார் அளித்தார்.ஸ்ருதிஹாசனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அசோக் சங்கர் திரிமுகே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 452, 354, 354D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நியாயம் வேண்டும்:


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
   
கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்:-சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:-வேளாண்துறையில் உர சப்ளை செய்ய டெண்டர் விட்டதில் பேரம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:-தமிழக விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள் வழங்க மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்குகிறது. இதைக் கொண்டு கரும்பு, வாழை விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான நிதி, மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு, வேளாண்துறை மூலமாக உரம் இறக்குமதி செய்து சப்ளை செய்வதற்கான 'டெண்டர்' விடப்படவேண்டும். இந்த ஆண்டில் இதற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. உரம் சப்ளை செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டது.

என்ன 'காரணத்தாலோ' அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இரண்டு முறை 'டெண்டர்' கோரப்பட்டு, அவைகளும் முறையான காரணம் தெரியாமலேயே ரத்து செய்யப்பட்டன. தற்போது நவம்பர் 27-ல் நான்காவது முறையாக டெண்டர் கோரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
நான்காவது முறையாவது டெண்டர் உறுதி செய்யப்படுகிறதா என்று பார்ப்போம். ஆனால் இவர்கள் டெண்டர் உறுதி செய்வதற்குள், இந்த ஆண்டு வேளாண்மை முடிந்துவிடும் என்கிறார்கள் விவசாயிகள்.
கேள்வி:-மின் உற்பத்தி பாதிப்பு என்ற செய்தி மட்டும் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறதே? அந்தத் துறைக்கான அமைச்சர் அதையெல்லாம் கவனிக்கிறாரா இல்லையா?

பதில்:- மின்துறையிலேயே அமைச்சர் கவனிப்பது வேறு ஒரு பணியை, அதை அவர் முறையாகக் கவனித்து வருகிறாராம். 19.11.2013 அன்று வந்த செய்திப்படி, மின் உற்பத்தி பாதிப்பு என்பது வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாவது அலகில் உள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் பாதையில் ஓட்டை ஏற்பட்டு, அதை சரி செய்யாமல் அலட்சியமாக விட்ட காரணத்தினால், கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் தீப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும், இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணி சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்களாம்.

சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சருக்குப் பதிலாக நீண்ட நேரம் பதிலளித்த முதல்-அமைச்சர் தமிழ்நாடு விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது தமிழ்நாட்டு ஏடுகளைப் புரட்டினால், தமிழ்நாடு மின் மிகை மாநிலமா? மின் பகை மாநிலமா? என்றுதான் சந்தேகம் வருகிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்
 

சிறுமி ஆருஷியை பெற்றோரே கொலை செய்ததாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!


நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார். டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
   
இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ.கோர்ட்டில் கூறியது. அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ. கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரியவந்தது.
ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து

தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
 

23 November 2013

இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது


இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.
மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார்.
மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை பொலிசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்–  சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்
 

இவர்தான் ஸ்ருதியை தாக்கியவராம்! புகைப்படம் வெளியானது


நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது.
மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா பொலிசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது ஸ்ருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.
மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு

அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கமெரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
 

22 November 2013

மனைவியின் துன்புறுத்தல்கள் குறித்து சென்னையில் 5000


ஆண்கள் புகார்; மனைவி தாக்குவதாக 10% புகார், மனைவிக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு 10%
சென்­னையில் இவ்­வ­ருடம் மாத்­திரம் மனை­வி­மார்­களின்  கொடு­மைகள், துன்­பு­றுத்­தல்கள், தொடர்­பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக  ஆண்­களை பாது­காப்­ப­தற்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சர்­வ­தேச ஆண்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நிலையில், இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தி­யாவில் சென்­னை­யி­லி­ருந்­துதான் அதிக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ ளது.
சென்­னையில் கிடைத்த 400 முறைப்­பா­டு­களில் விவா­க­ரத்­துக்­கான கோரி க்கை விடுக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, மும்­பையில் இவ்­வ­ருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனை­வியின் துன்­பு­றுத்தல் தொடர்­பாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

ஈகோ மோதல்கள் முதல் பாலி யல் சித்­தி­ர­வதை வரை பல்­வேறு வகை­யான விட­யங்கள் தொடர்­பாக இம்­மு­றைப்­பா­டுகள் உள்­ளன.
முறைப்­பாடு செய்­த­வர்­களில் 20 சத­வீ­த­மானோர், கூட்­டுக்­கு­டும்­ப­மாக வாழ்­வது குறித்து மனை­விமார் சண்­டையை ஆரம்­பிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.

சென்­னையில் முறைப்­பாடு செய்த 5000 ஆண்­களில் சுமார் 500 பேர் மனைவிமார் தம்மை தாக்­கு­ வ­தாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

மேலும் 10 சத­வீ­த­மான ஆண்கள் தமது மனை­விமார் அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் தம்மை பற்றி பொய்­யான முறைப்­பா­டு­களை செய்­வ­தாக கூறி­யுள்­ளனர்.  முறைப்­பாடு செய்­த­வர்­களில் 10 ஆண்கள்  தன்­னிடம் மனைவி பாலியல் திருப்தி காணாமல் திரு­ம­ணத்­துக்குப் புறம்­பான பாலியல் உற­வு­களில் ஈடு­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளனர்.

தான் இரவுநேர கட­மைக்கு சென்­றபின் தனது மனை­வியும் தனது சகோ­த­ரனும் பாலியல் உற வில் ஈடு­ப­டு­வ­தா­கவும் இதனால் மனை­வி­யுடன் தான் வாழ­வி­ரும்­ப­வில்லை எனவும் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவில் 8 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை திரு­ம­ண­மான ஆண்கள் திரு­மண வாழ்க்கை அல்­லது பணப்­பி­ரச்­சி­னைகள் கார­ ண­மாக தற்­கொலை செய்­து­கொள்­வ­தாக இந்­தி­யாவின் தேசிய குற்­ற­வியல் பதிவு திணைக்­கள புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

சமூக செயற்­பாட்­டா­ள­ரான எஸ்.சயீட் அலி கருத்துத் தெரி­விக்­கையில், "இந்­திய சமூ­கத்தில் ஆண்கள் பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்­து­வ ­தற்கோ, முறைப்­பாடு செய்வதற் கோ, உதவி கோருவதற்கோ சொற்ப வாய்ப்புகளே கிடைக் கின்றன. எம்மிடம் முறைப்பாடு செய்யவரும் பெரும்பலான ஆண்கள் நீண்டகாலமாக மனை வியினால் துன்புறுத்தல்கள், தொல்லைகளுக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.



பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாகக் கூறி, நிந்தவூரில் தம்பதி மீது வாள்வெட்டு, தாக்குதல்!



நிந்­தவூர் பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளில் சென்ற இனந்­தெ­ரி­யாதோர் வீடு ஒன்றில் உள்­நு­ழைந்து கணவன்இ மனைவி மீது வாள்­களால் வெட்டி தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில்
 அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

தப்­பி­யோ­டி­ய­வர்­களின் மோட்­டார்­சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

நிந்­தவூர் மீரா­நகர் பிர­தே­சத்தில் உள்ள குறித்த வீட்டில் சம்­ப­வ­தி­னத்­தன்று இரவு 11.15 மணி­ய­ளவில் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்ற இருவர் உள்­நு­ழைந்து பொலி­ஸா­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தாக கூறி கணவன் மனைவி இரு­வ­ரையும் வாள்­களால் வெட்டி மீது தாக்­கி­யுள்­ளனர்  இதன்­போது அவர்கள் கூக்­கு­ர­லை­யிட்டு அய­வர்கள் சென்­ற­போது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் மோட்­டார்­சைக்­கிளை விட்­டு­விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கணவன் மனைவி இரு­வ­ரையும்  சம்­மாந்­துறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­கப்­பட்­டுள்­ள­துடன் தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

19 November 2013

பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு


பெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது.
நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள், சிறுமியை வாயைப் பொத்தி தூக்கி சென்றனர். மறைவான ஒரு இடத்திற்கு சென்றதும் சிறுமியை மிரட்டி குளிர்பானத்தை குடிக்க வைத்தனர்.

பின்னர் 4 பேரும் மாறிமாறி கற்பழித்தனர். மயக்கம் அடைந்த சிறுமியை அதே இடத்தில் போட்டு விட்டு தப்பி விட்டனர். நேற்று காலை சிறுமி தனியாக கிடந்ததை கிராமத்தினர் சிலர் கண்டு, அவளது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறுமி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ் விசாரணையின்போது சிறுமி, இசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது 4 பேர் சேர்த்து என்னை ஒரு இடத்துக்கு கடத்திச் சென்றனர். என்னை மிரட்டி குளிர்பானம் குடிக்க வைத்தனர். எனக்கு மயக்கம் வந்தது. பின்னர் என்ன நடந்தது என்று தெரிய வில்லை என தெரிவித்தார்.
கடத்தியவர்களில் தனது கிராமத்தை சேர்ந்த 2 பேரின் பெயரையும் கூறினார். அவர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்

18 November 2013

சச்சின் ஓய்வு: மனமுடைந்த ரசிகர் தற்கொலை


டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20). இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்.
சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின் இறுதிநாள் என்று கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சச்சின் ஓய்வு பெற்றதை தாங்க முடியாத விஜய் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்


குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே ஏழு இலட்ம் ரூபா பணத்துடன், ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் அருகே உள்ள சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒரு கனரக வாகனத்தில் வந்த சிலர் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கி அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இயந்திரத்தின் உள்ளே 6.97 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.டி.எம். மையத்தின் வெளியே காவலாளி யாரும் இல்லாததால் கொள்ளையர்கள் துணிச்சலாக தங்களது கைவரிசையை காட்டிவிட்டு சென்றுள்ளனர் என்று கூறும் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்
 

15 November 2013

உதயமானது சென்னை கலங்கரை விளக்கம்


சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்துள்ளார்.

நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று சென்னை கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அவர் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை திறந்து வைத்து நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பயன் பாட்டுக்காக புதுப்பித்து திறக்கப்பட்டுள்ளது.
இது கப்பல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பதற்கும், ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் இது பயன்படும், கடலில் கப்பல் செல்வதையும் இதன்மூலம் பார்க்கலாம்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு இதை திறக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எல்லா வசதிகளையும் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இப்போது திறந்திருக்கிறோம்.

இந்தியாவிலேயே லிப்ட் வசதியுடன் கூடிய கலங்கரைவிளக்கம் சென்னையில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தரைத்தளத்தில் கப்பல் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் துறை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதனை நேற்றைய தினம் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.

கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க சிறுவர்களுக்கு ரூ
.5ம், பெரியவர்களுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்கலாம்.
மேலும் கமெராவுடன் சென்று படம் எடுக்க கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திங்கட்கிழமை விடுமுறை, பார்வையாளர்கள்

  போன்று சமூக விரோதிகள் கலங்கரை விளக்கத்துக்குள் நுழைவதை தடுக்க மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர நேரத்தில் பார்வையாளர்கள் வெளியேற மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை தூரத்தில் இருந்தே கலங்கரை விளக்கத்தினை பார்வையிட்ட பொதுமக்களும், மாணவர்களும் இன்று உள்ளே சென்று நேரடியாக பார்த்து ரசித்தனர். 9மாடிவரை லிப்டில் பயணம் செய்து 10 வது மாடிக்கு படியில் சென்று மெரீனா கடற்கரையின் அழகை கண்டு உற்சாகமடைந்தனர்.
 
 



கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் (காணொளி, இணைப்பு)


இந்தியாவிலேயே பாரம்பரியமிக்க கோவில்களையும், சிற்பங்களையும் பெற்று கலையம்சம் கொண்ட பகுதியாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் காணக் கிடக்கின்றன.
இங்கு பல்வேறு இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன.
இவற்றில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அமையப் பெற்றது தான் மாமல்லபுரம்.

கல்லிலே கலைவண்ணம் கண்ட இந்த மாமல்லபுரமானது சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
மகேந்திரபல்லவராலும், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட பொக்கிஷம்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அழகிய கற்கோயிலானது இது, காண்போரின் கண்களை வெகுவாக கவர்கிறது.
இந்திய மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் இக்கோயில் பற்றிய அருமைகள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொன்னால் ஒரு யுகம் வேண்டுமென்றே சொல்லலாம்.
கடற்கரை கோவில்
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இந்தக் கடற்கரைக் கோவில் இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை.

 

                                                                       பஞ்ச ரதம்
நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை.
இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது.
 


                                                              அர்ச்சுனன் தபசு
சுமார் 30 மீட்டர் உயரமும், சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.


                                                        மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது.

இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.

இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை.
இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச் சின்னங்களை 1984ம் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.
தமிழகத்திற்கு அழியாப் புகழ் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தின் அற்புத சிலைகள் 300 ஆண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குறிய விடயமாகவே உள்ளது.