This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 January 2013

தர்ஹாவிற்கு சென்று திரும்பிய போது நேர்ந்த விபத்து


குஜராத்தின் பட்டன் பகுதியில் நேற்றிரவு பக்தர்களை ஏற்றி வந்த வான், அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வானில் வந்த அனைவரும் அருகில் இருந்த தர்ஹாவிற்கு சென்று வழிபாடு செய்து விட்டு வீடு திரும்பிய போது இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கார் ஓட்டிய பெண் கனடிய கவுன்சிலருக்கு??


கனடாவில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் கவுன்சிலருக்கு $1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவருடைய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடத்திற்கு ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள பெண் கவுன்சிலர் Ana Bailao குடிபோதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்ப்பட்ட கவுன்சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குடிபோதையில் கார் ஓட்டியதை அவர் ஒப்புக்கொண்டதால், அவருக்கு $1,000 அபராதம் விதித்ததோடு, ஒரு வருடத்திற்கு அவருடைய லைசென்ஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது தண்டனையாகும். ஏற்கனவெ அவர் ஒருமுறை இதுபோன்று தண்டனை பெற்றுள்ளார். ஆனாலும் Ana Bailao அவர்கள் தனது கவுன்சிலர் பணியை திறம்பட இதுவரை செய்துவந்த காரணத்தால், அவர் தன்னுடைய பணியில் நீடிக்கலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். தீர்ப்பை கேட்டது கவுன்சிலர் Ana Bailao நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் வடித்தார்.

30 January 2013

முடியை ரசித்து ருசித்து சாப்பிடும் வினோத பெண்


அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் பூனை முடியை ரசித்து ருசித்து சாப்பிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா(வயது 43). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல பிராணியான பூனையை கொஞ்சி கொண்டிருந்த போது, அதன் முடியை தின்றாராம். ருசியாக இருந்ததால், தினமும் சாப்பிட தொடங்கியுள்ளார், பிற்காலத்தில் அதற்கு அடிமையாக மாறிவிட்டாராம். ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை வாயில் வைத்து மெதுவாக மென்று சுவைத்துள்ளார். இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். இதுகுறித்து அவர் கூறுகையில், தினமும் காலை நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி சேகரிப்பேன். ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்கும். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைப்பேன். பிறகு எடுத்து விடுவேன் என்கிறார்[காணொளி ,புகைபடங்கள்,]

29 January 2013

நபர் ஒருவரின் கையை துண்டிக்கும் படம்

ஈரானில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஈரானில் முஸ்லிம் மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. போதை மருந்து கடத்தல், கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. கள்ள உறவு போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்தல், பிரம்பு அடி போன்றவையும், திருட்டு போன்ற குற்றங்களுக்கு கை மற்றும் விரல்கள் துண்டிக்கப்படுகின்றன. இந்நிலையில் விரல் மற்றும் கையை துண்டிக்கும் இயந்திரத்தின் படத்தை அந்நாட்டு அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ஈரானின் ஷிராஸ் மாவட்டத்தில் திருடன் ஒருவனின் கையை நான்கு பேர் சேர்ந்து துண்டிக்கும் காட்சியையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது {காணொளி}

28 January 2013

கோடிக்கணக்கில் கமலுக்கு நஷ்டம்: லண்டனில்லாபம்

விஸ்வரூபம் படம் திரையிடப்பட முடியாமல் போனதால் நடிகர் கமலஹாசன், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி தெரிவித்துள்ளார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடக வினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர் பிரகாஷ்ரெட்டி தெரிவித்தனர். விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் உலகம் முழுவதும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். தடை காரணமாக படம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சில நகரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை விட குறைவான தொகையே திரும்ப கிடைத்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லண்டனில் வரவேற்பு ஆனால் அமெரிக்காவில் விஸ்வரூபம் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. கடந்த மூன்று நாட்களில் ரூ 2 கோடி வரை வசூல் கிடைத்ததாக தெரிகிறது. லண்டன் திரையரங்கங்களில் விஸ்வரூபம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் பிரிட்டிஷ் நகர திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் ரூ.57 லட்சம் வசூல் செய்துள்ளது

வீடியோ கேம்! குடிகாரன் போல ஆகிவிட்டான்தாய்

சாப்பாடு, தூக்கத்தைக்கூட மறந்துவிட்டு தினமும் 16 மணி நேரம் வீடியோ கேமில் மூழ்கிக் கிடந்து அதற்கு அடிமையான மகன் பற்றி அவுஸ்திரேலிய தாய் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச ஒன்லைன் வீடியோ கேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன் எஸ்கேப்’. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது, விளையாட்டின் நோக்கம் என்ன, எந்த இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் கேமுக்குள் இருக்கும் ஆலோசகர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். இதுதான் இலக்கு என்று எதுவும் கிடையாது. எதை நோக்கி போவது, என்ன சாதிப்பது என்பது நம் விருப்பம்தான். ஆகமொத்தம், உள்ளுக்குள் ஒரு உலகமே இருக்கும். உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் ஒன்லைனில் இந்த கேம் ஆடுவதாக கூறப்படுகிறது. மல்டிபிளேயர் ஆன்லைன் கேம் என்ற வரிசையில் ரன்எஸ்கேப், கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த கேம். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்த சாம் என்ற டீன்ஏஜ் சிறுவனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதுபற்றி அவனது தாய் கரென் கண்ணீருடன் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்புகூட சாம் சுறுசுறுப்பான, துடிப்பான சிறுவன்தான். நன்கு படிப்பான். நண்பர்களுடன் டீமாக சேர்ந்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 2010-ம் ஆண்டில் அவனது போக்கு திடீரென மாறியது. பள்ளியில் இருந்து நின்றுவிட்டான். தொழில்நுட்ப கல்வியையும் நிறுத்தினான். நண்பர்கள் என்றால் அவனுக்கு ரொம்ப இஷ்டம். ஆனால், படிப்படியாக நண்பர்களுடன் பேசுவது, விளையாடுவதைக்கூட நிறுத்திவிட்டான். குடும்பத்திலும் அவ்வளவாக ஒட்டுவதில்லை. எந்நேரமும் ரன்எஸ்கேப் கேமிலேயே மூழ்கிக் கிடந்தான். அதாவது, வெளியில் இருக்கும் நிஜ உலகத்தை மறந்து போலியான கிராபிக்ஸ் உலகிலேயே வாழ ஆரம்பித்தான். வீட்டில் நான் திட்டுவேன் என்பதால் இன்டர்நெட் மையத்தில் விளையாடினான். 2 வாரத்துக்கு ரன்எஸ்கேப் கேமுக்காக 400 க்கு மேலான அவுஸ்.டொலர்களை அதிகமாக செலவிட்டான். அவன் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப்போயின. சாப்பிடாமல், தூங்காமல், தலைவாராமல், குடிகாரன் போல கம்ப்யூட்டரே கதியென்று கிடந்தான். தினமும் 16 மணி நேரம் கேம் ஆடுவான். ஒருமுறை நொன்-ஸ்டாப்பாக 25 மணி நேரம் ஆடினான். அவனுக்கு ‘ஷிசோபெர்னியா’ என்ற மனநல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறினர். அவர்களது ஆலோசனைப்படி, வீட்டில் இருந்து முதல் வேலையாக கம்ப்யூட்டரை அகற்றினேன். இது தெரிந்ததும் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டான். திரைச்சீலைகளை கிழித்தான். வயர்களை கத்தரியால் கட் செய்தான். டாக்டர்களின் ஆலோசனையை கேட்டு படிப்படியாக அவனை மாற்றி வருகிறேன். போதை, மது போல வீடியோகேமுக்கு என் மகன் அடிமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டாக்டர்கள் சொன்னது போல, வீட்டின் ஹாலில் கம்ப்யூட்டரை வைத்திருக்கிறேன். குறிப்பிட்ட நேரம்தான் ஆடவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். சில நேரங்களில் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்துமாறு லாக் பொருத்தி இருக்கிறேன். இப்போதெல்லாம் வேளாவேளைக்கு சாப்பிட்டு, போதிய நேரம் தூங்கிவிட்டு பிறகுதான் விளையாடுகிறான். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோல உலகமெங்கும் பல சிறுவர்கள், இளைஞர்கள் வீடியோகேமுக்கும் இன்டர்நெட் கேமுக்கும் அடிமையாகி வருகிறார்கள். அவர்களது பெற்றோர் ஆரம்பத்திலேயே உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு தாயார் கரென் கூறியுள்ளார்

24 January 2013

பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதி மீது புகார்

உத்திர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை மாவட்ட நீதிபதி ஒருவர் அவரது அலுவலக அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 21 வயது இளம்பெண் ஒருவரும் அந்த நீதிபதி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இப்பெண்கள் இருவரும், நீதிபதி இவ்வழக்கில் இருந்து தப்பி விடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

கற்பழித்து கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

 
பீகார் மாநிலம், ராக்ஹோபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், 6 வயது சிறுமியொருவரை கற்பழித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தமைக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இண்டல் குமார் சர்மா என்கிற இந்திரா தாக்கூர் (வயது 30). கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் திகதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவளை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தான்.
இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, சிறுமியின் பிணத்தை தனது வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டான். 2 நாள் கழித்து, சர்மா மீது சந்தேகம் அடைந்த சிறுமியின் தாத்தா இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு கொடுத்தார். அதன்பேரில் சர்மாவை பொலிஸார் கைது செய்து, சிறுமியின் பிணத்தை அவன் வீட்டில் இருந்து தோண்டி எடுத்தனர்.
இது தொடர்பாக சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சிங், குற்றம் சாட்டப்பட்ட சர்மாவுக்கு சிறுமியை கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும், கற்பழித்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், சாட்சியங்களை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்

குளிரில் சிக்கிய 150 பேர் விமானப் படையினரால் மீட்பு

 
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பனி பெய்து வருகிறது. உறை நிலையான பூஜ்ஜியம் டிகிரியையும் தாண்டி, சில மாவட்டங்களில் நேற்றைய தட்பவெப்ப நிலை மைனஸ் 6 டிகிரி ஆக நீடித்தது. ரத்த ஓட்டத்தை உறைய வைக்கக்கூடிய கடும் குளிரில் ஏராளமான மக்கள் சிக்கித் தவித்தனர்.
இந்திய விமானப்படையின் கமாண்டர் பி.பாட்டன்கே மற்றும் ஜம்மு வட்டார கமாண்டர் பிரதீப் குப்தா மேற்பார்வையில், பாதிக்கப்பட்ட மக்கள் விமானம் மூலமாக அப்பகுதியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டனர்.
அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்ட கிஷ்ட்வார் மாவட்டத்தின் நவபஞ்சி, சொன்டார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 150 பேர், எம்-17 ரக ஹெலிகாப்டர்களின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விஸ்வரூபம் படத்திற்கு தடை: கமல் மனு தாக்கல்

விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை கமலஷாசன் சந்தித்து வருகின்றார். விருதுநகர் மாவட்டத்தில் விஸ்வரூபம் படத்தை 15 நாட்களுக்கு திரையிட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி இஸ்லாமிய அமைப்பினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளித்துள்ளனர். படத்தை திரையிடுவதா இல்லையாக என்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பிப்ரவரி 8ம் திகதி வரை விஸ்வரூபம் படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
மேலும் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக இதனை ஏற்குமாறும் நீதிபதி வெங்கட்ராமனை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தணிக்கை குழு அனுமதி அளித்த பின்னும் தடை விதிப்பது சட்ட விரோதமானது என கமல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கமலின் மனுவை ஏற்ற நீதிபதி வெங்கட்ராமன், வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்

சிறுவர்களை நரகபலி இட்ட மாந்திரீக பெண்

சென்னை மாவட்டம் நந்தம்பாக்கம் பட்ரோடு துளசிங்கபுரத்தில் உள்ள கூத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன், கார் டிரைவராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (வயது 8). தனசேகரனின் அக்காள் மாலதி மகன் லத்தீப் (8). கடந்த 20ம்திகதி வீட்டு முன்பு விளையாடிய சிறுவர்கள் பாலாஜி, லத்தீப் இருவரும் மாயமானார்கள். அவர்கள் இருவரும் துளசிங்கபுரம் - நந்தம்பாக்கம் பொலிஸ் நிலையம் இடையே உள்ள புள்ளுக்கோவில் அருகே பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தனர். பொலிசார் 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினார்கள். முதலில் சிறுவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் சிறுவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு சென்று விளையாட வாய்பில்லை என்பதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழும்பியது. சிறுவர்கள் பிணமாக கிடந்த கிணற்றின் அருகே எலுமிச்சம் பழம், மது பாட்டில்கள், பூஜை பொருட்கள் கிடந்தன. எனவே சிறுவர்கள் நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து சிறுவர்கள் இறப்பதற்கு முன்பு கடைசியில் யாருடன் சென்றார்கள் என்பது பற்றி பொலிசார் விசாரித்தனர். அப்போது உறவுப் பெண் ஒருவர் சிறுவர்கள் பாலாஜி, லத்தீப் இருவரையும் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதை பாலாஜியின் தந்தை தனசேகரன் தெரிவித்தார். அந்த உறவுப் பெண் சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் உறவினர்களுக்கு மாந்திரீகம் தெரியும். எனவே நரபலிக்காக சிறுவர்களை கொன்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது

மருத்துவமனைகள் மீது சி.பி.ஐ மீது அதிரடி ரெய்டு

பல்மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பு துவங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு பல்மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி கேட்டு டில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதன் பேரில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு கமிட்டி, கடந்த ஆண்டு, அக்டோபர் 5ம் திகதி ஆய்வு செய்தது. அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும்படி, கல்லூரி நிர்வாகத்துக்கு ஆய்வு கமிட்டி உத்தரவிட்டது.
இதற்கிடையே, முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி பெறுவதற்காக, இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினரான, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முருகேசனுக்கு, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகம், 1 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப் போவதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இம்மாதம், 7ம் திகதி, டாக்டர் முருகேசன் வீட்டை, சி.பி.ஐ., அதிகாரிகள், மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
அப்போது, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள், எம்.எல்.ஏ., பழனி ஆகியோர், 25 லட்ச ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்த போது, அனைவரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆதிபராசக்தி கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடங்குவதற்கு, பல் மருத்துவ கவுன்சிலில் பொறுப்பு வகிப்பவர்கள் அனைவருக்கும், லஞ்சம் கொடுக்க முடிவு செய்ததாகவும், டாக்டர் முருகேசனுக்கு முதல் தவணையாக, 25 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில், தமிழ்நாடு பல்மருத்துவ கவுன்சில் தலைவரும், இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான, டாக்டர் குணசீலன் உட்பட, பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக, டாக்டர் குணசீலனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணையில், லஞ்ச விவகாரத்தில், குணசீலனுக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் 3 பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 8 இடங்களில் உள்ள பல் மருத்துவக்கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, ஐதராபாத், மங்களூரு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.

கண் பார்வையை பாதிக்கும் ஆஸ்பிரின் மாத்திரை

ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் கண் பார்வை பாதிக்கும். இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உலகம் முழுவதும் ஆஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயதான காலத்தில் கண் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கண் பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வயதான காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதே காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23 January 2013

பெருமையல்ல; அவமானம்தான். மேனகா காந்தி

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழகத்தின் அவமானமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி. சென்னை வந்த அவர் அங்கு நாய்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள் காயமடைகின்றன. கொடுமைப்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளை அடக்கும்போது காயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாசாரம் என்று கூறி அரசியல்வாதிகள் இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றனர். மகர சங்கராந்தி பண்டிகைக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று, இதனை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பெருமையல்ல; அது அவமானம்தான். எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். இந்திய நாய்கள் குறித்த கண்காட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு நம் நாட்டில் 28 வகையான நாட்டு நாய்கள் இருந்தன. அவை அனைத்தும் தனித்தனி திறமைகளை உள்ளடக்கியவையாக இருந்தன. ஆனால், ஆங்கிலேயர் வந்ததும் நம் நாய்களை விரட்டியடித்துவிட்டு, அவர்கள் நாட்டின் நாய்களை இறக்குமதி செய்து நம் நாட்டு நாய்களை கேவலமாக நடத்தினர். அவற்றின் விளைவாக ஒரு சில நாட்டு நாய்களின் வகைகள் அழிந்துவிட்டன. எனவே நம் மக்கள் நமது நாட்டு நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்றார் அவர். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் மேனகா. அதேசமயம், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்

22 January 2013

ஒரே நாளில் தங்கம் ரூ.328 அதிகரிப்பு

இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 அதிகரித்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சிறிது ஏறி இறங்கி வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 904 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2904-க்கு விற்கிறது. விலை உயர்வுக்கு தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதிக்கு இதுவரை 4 சதவீத வரி விதிக்கப்பட்டது. அன்னிய செலவாணியை கருத்தில் கொண்டு தங்கம், பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நேற்று திடீரென 6 சதவீதமாக உயர்த்தியது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.328 அதிகரித்து இருப்பதாக நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.260 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.59 ஆயிரத்து 245 ஆகவும், ஒரு கிராம் ரூ.63.70 ஆகவும் உள்ளது

கணவன் கண் முன்னே மனைவியைக் கற்பழித்த 6 பேர் கைது

ஒடிஷா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், மருத்துவமனையில் வைத்து கணவருக்கு முன்னால் மனைவியைக் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், மயூர்பஞ்ச் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க அவரது தங்கை, தனது கணவருடன் நேற்றுமுன் தினம் மாலை மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டுக்கு புறப்பட்டார். மருத்துவமனை வாசலில் நின்றிருந்த சிலர் அந்த பெண்ணை கேலி செய்தனர். இதை தட்டிக்கேட்ட அவரது கணவரை அந்த கும்பல் அடித்து உதைத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டது. அவரை விடுவிக்க போராடிய அந்த இளம்பெண்ணை 6 பேர் மாறி, மாறி கணவரின் கண் முன்னரே கதறக் கதற கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், குந்தன் முகி (33), ரகு பிஸ்வால் (19), கோபி முகி (19) பலராம் முகி (27), சிபாராம் கடேயி (20), சந்தன் முகி (20) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்

பெண் பொலிஸை மானபங்கம் படுத்திய நபர் கைது

தர்மபுரியில், ஊர்காவல் படை பெண் பொலிசை மானபங்கப்படுத்திய வாலிபரை பொலிசார் கைது செய்தனர். தர்மபுரியை அடுத்த பங்குநத்தத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் திலகவதி, 27. இவர் தர்மபுரி ஊர்காவல் படை பெண் பொலிசாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பிரசவ வார்டுக்குள் வாலிபர் ஒருவர் செல்ல முயன்றார். அவரிடம் திலகவதி பிரசவ வார்டுக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என கூறி தடுத்தார். ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், திலகவதியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து மனபங்கம் செய்துள்ளார். அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பிடித்து, தர்மபுரி டவுன் பொலிசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தர்மபுரியை அடுத்த மல்லிக்குட்டையை சேர்ந்த சபரி, 23, என்பதும், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உறவினர் ஒருவரை பார்க்க வந்தும் தெரியவந்தது. சபரியை போலீஸார் கைது செய்தனர்

பதவி கிடைத்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகின்றேன்

எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காகப் பாராட்டி மகிழ்கிறீர்கள். ஆனால் எனது தாயார் அதை நினைத்து எனது அருகே அமர்ந்து அழுதார். பதவியானது விஷம் என்பது அவருக்குத் தெரியும் என்று ராகுல் காந்தி பேசியபோது காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தின் 2வது நாள் இறுதியில் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நேற்று நடந்த 3வது நாள் கூட்டத்தில் அவர் துணைத் தலைவராக உரையாற்றினார். ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க உணர்ச்சிகரமாக இருந்தது. குறிப்பாக தனது பாட்டி இந்திரா காந்தி குறித்தும், தாயார் சோனியா காந்தி குறித்தும் அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது {புகைபடங்கள்}

21 January 2013

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கடைத்தெரு ஒன்றில் ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். இதே காட்சியை செய்தியாக அந்நாட்டின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. இந்த வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்ய ஈரான் அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீது விரைவு விசாரணை நடத்தப்பட்டது இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மேலும் இருவருக்கு தலா 74 சவுக்கடியும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களும், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் வானொலி செய்தி வெளியிட்டது. சுமார் 300 பேர் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவித்தது.{ (வீடியோ இணைப்பு)}

கற்பழிப்பு காட்சியை தொலைபேசி மூலம் பரப்பிய 5 பேர் கைது

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கற்பழித்த காட்சியை கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்து மிரட்டிய 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த நவம்பர் மாதம், வயல்வெளி வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்த என்னை, பிரதீப், பாரு, கோலியா ஆகியோர் வழிமறித்து கத்தி முனையில் கற்பழித்தனர். அந்த காட்சியை கைத் தொலைபேசியில் ஒருவன் படம் பிடித்தான். சில நாட்களுக்கு பிறகு அந்த காட்சியை காட்டி மிரட்டிய குல்தீப் என்பவனும் பலவந்தமாக என்னை கற்பழித்தான். சில நாட்களுக்குப் பிறகு மங்கே ராம் என்பவனுடன் என் வீட்டுக்கு யாருமில்லாத நேரத்தில் வந்த குல்தீப், அவனுடன் சேர்ந்து என்னை மீண்டும் கற்பழித்தான். இவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவி கூறியிருந்தார். மருத்துவ பரிசோதனையில் குறித்த மாணவி பலமுறை கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

நடைபெற தயாராகிறது இந்தியா-இலங்கை கூட்டு கூட்டம்

இந்தியா-இலங்கை நாடுகளிடையேயான கூட்டு கூட்டம் வரும் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைப‌ெற உள்ளது. இந்தியா-இலங்‌கை இடையேயான 8-வது கூட்டு கூட்டத்தில் இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்‌சர் ஜி.எல்.பெரிஸ் தலை‌மையிலான குழு நாளை திங்கட்கிழமை இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அவரது வருகையின் போது இரு நாடுகளிடையோன வர்த்தகம், மீனவர் பிரச்னை இலங்கையில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வே திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இலங்கை அரசியல் அமைப்பில் இலங்கை தமிழ் அமைப்புகளு்க்கான அதிகாரப்பகிர்வு குறித்து ‌நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற 7-வது கூட்டு கூட்டத்தி்ல் அப்போதைய இந்திய வெளியுறவுத்து‌றை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா கலந்து கொண்டார். அந்நிகழ்வின்போது யாழ்பாணப்பகுதியில் இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார்

மூணாறை சுற்றி வரும் யானைகள்

மூணாறிலும், சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் சில மாதங்களாக புலிகள் நடமாட்டம் உள்ளதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் தேவிகுளம்,சொக்கநாடு,நயமக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏழு, கால்நடைகள் புலிகளிடம் சிக்கி பலியாகியுள்ளன. தேவிகுளம் பகுதியில், வீட்டில் இருந்த நாயை, இரவில் புலி தூக்கிச் சென்றதை, இப்பகுதியினர் நேரில் கண்டனர். சில வாரங்களாக, புலி நடமாட்டம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில், மூணாறில் வேலை முடிந்து இரவு 8 மணியளவில், வீடு திரும்பியவர்கள் சென்ற ஆட்டோவின் முன், டாப் டிவிஷன் பகுதியில், தேயிலைத் தோட்டத்தினுள் இருந்து, ரோட்டின் குறுக்கே இரண்டு புலிகள் ஓடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் குடியிருப்பு பகுதியிலும் பரவியது. புலிகள் நடமாட்டம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதியில், புலியை நேரில் கண்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு பதிந்திருந்த, கால் தடங்களை ஆய்வு செய்து, அவை புலியின் கால் தடங்கள் என்பதை உறுதி செய்தனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி செல்லும் வரை, கால்நடைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொள்ளும் படி, தோட்ட தொழிலாளர்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

20 January 2013

உயர் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட மனைவி

கணவனுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார் பாதிக்கப்பட்டவரின் மனைவி. அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து, உடனடியாக மருத்துவக் குழு கூடி, விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர், அன்பரசி. இவரது கணவர், சிவப்பிரகாசம். இவரது கல்லீரல் செயல் இழக்கும் நிலையில் இருந்தது. எனவே, அவரசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இம்மாதம், 16ம் திகதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பெங்களூருவில் இருந்து, கல்லீரல் கொண்டு வரப்பட்டது. இறந்த ஒருவரின் கல்லீரல், சிவப் பிரகாசத்துக்கு பொருத்தப்பட்டது. அந்த கல்லீரல் செயல்படவில்லை. எனவே, மீண்டும் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்பரசி மற்றும் அவரது உறவினர்களிடம், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்லீரல் தானம் செய்ய, சிவப்பிரகாசத்தின் நெருங்கிய உறவினரான சாய்வினோத் முன்வந்தார். ஆனால், அரசு நியமித்துள்ள மருத்துவக் குழுவிடம் அனுமதி பெற, கால தாமதம் ஏற்படும் என கருதப்பட்டது. அதேநேரத்தில், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, உயர் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று முறையிட, அன்பரசி முடிவு செய்தார். நீதிபதி என்.பால் வசந்தகுமார் முன், நேற்று முன்தினம், அன்பரசி ஆஜராகி முறையிட்டார். "உடனடியாக, கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கணவர் உயிருடன் இருக்க மாட்டார்' என, கண்ணீர் மல்க கூறினார். சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் கோரினார். இதையடுத்து, அன்பரசியின் முறையீட்டை, உடனடியாக மருத்துவக் குழு பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்

நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிய தெருநாய்!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நபரொருவர் தனது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தினை எடுத்துக் கொண்டு தெருநாய் ஓட்டம்பிடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் நாக்செட் மியான். இவரது மகன் அரபு நாட்டில் வேலை செய்து வருகின்றார். தாய்நாடு சென்றதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையில், மாதாமாதம் தந்தைக்கு பணம் அனுப்பி வந்தார். மகனுக்கு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கிப்போடும் ஆவலில் நாக்செட் மியான் புரோக்கர் மூலம் இடம் தேடி வந்தார். அவரது எண்ணம் போல் ரூ.4 லட்சம் விலையில் ஒரு வீட்டு மனை விற்பனைக்கு வருவதை அறிந்த அவர், மனையை வாங்கும் நோக்கத்தில் கைப்பையில் ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். 'நல்ல காரியத்துக்கு போகிறோம். முகத்தை கழுவிக்கொண்டு போகலாமே' என்று நினைத்தவர் கைப்பையை வீட்டில் உள்ள கட்டிலின் மீது வைத்துவிட்டு, பின்புறம் உள்ள பம்பில் தண்ணீர் அடித்து முகத்தை கழுவிக்கொண்டு வீட்டுக்குள் திரும்பி வந்தார். அவர் வரும் ஓசையை கேட்டதும், கட்டிலின் மீதிருந்த பணப்பையை கவ்விக்கொண்டு ஒரு தெரு நாய், முன்வாசல் வழியாக வெளியே ஓடியது. நாக்செட் மியான் கூச்சலிட்டபடியே நாயை விரட்டிச் சென்றார். ஆனால், நாயின் நாலுகால் பாய்ச்சலுடன் அவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. வாயில் கவ்விய பணப்பையுடன் சந்து, பொந்துகளில் நுழைந்து சில நிமிடங்களில் அந்த நாய், தலைமறைவாகிவிட்டது. நடந்த சம்பவம் குறித்து, பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டிற்கு அருகாமையில் உள்ள தெருமுனையில் சிதறிக்கிடந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை நாக்செட் மியானிடம் ஒப்படைத்தனர். 'கட்டிலின் மீது கிடந்த கைப்பையில் தின்பண்டம் ஏதாவது இருக்கும் என்ற ஆசையில், நாய் அதை கவ்விக்கொண்டு ஓடியிருக்கும்' என்று கூறும் பொலிஸார், 'நாய் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பே இல்லை' என்று கூறியுள்ளனர்.

தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை!

ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தாவது:- இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து வருகின்றது. மனித உரிமை மீறல் தொடருகின்றது. அனைத்துலக சமூகம் எமது நிலை தொடர்பாக தமது முயற்சிகளை கைவிட முடியாது. தொடர்ந்து செயற்பட்டு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நாட்டின் இறைமையில் தமிழ் மக்களும் பங்காளிகளாக வேண்டும். தற்போதைய அரசமைப்பு முறைமையின் கீழ் அது சாத்தியமற்றதாகும். சாதகமான நிலை விரைவில் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அடுத்த வாரம் அமெரிக்க அரச உயர்மட்டக்குழு ஒன்று கொழும்பு வரவிருக்கின்றது. தற்போதைய இலங்கை நிலைவரத்தை அறிந்து 2013 மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இக்குழு சமர்ப்பிக்கும் என்று நம்புகின்றோம். அமெரிக்காவும் வேறு நாடுகளும் அறிக்கைகளை சமர்ப்பிக்கவிருப்பதாக அறிகின்றோம். அமெரிக்கா, இந்தியா மற்றும் அனைத்துலக சமூகமும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அரசியல் தீர்வு காணும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது. இது விடயத்தில் அனைத்துலக அரசுகள் தெளிவாக இருக்கினறன. இதனை உள்வாங்கும் நிலையில் கொழும்பு அரசாங்கம் இல்லை. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும் பறிக்க விடமுடியாது. அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும். அதிகாரம் நம் கைகளில் இல்லாதபடியால் நாம் இப்போதும் சமமான மக்களாக வாழமுடியாத நிலையில் உள்ளோம். நாம் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில் தற்போதைய நிலவரங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றார் இரா. சம்பந்தன்

மீது பொங்கிய பிரதமர், சிங்கள ராணுவம் மீது ஏன் பொங்கவில்லை.

தஞ்சை பொங்கல் விழா​வில் நடராஜன் பொங்கி எழுவார்... கோப வார்த் தைகளால் ஜெயலலி​தாவைக் கரும்பாகப் பிழிந்​தெடுப்​பார் என்று பலரும் எதிர்​பார்த்தனர். ஆனால் அவரோ, 'புரட்சித் தலைவி’ என உச்சரித்து ஆச்சர்யத்தில் அலற வைத்தார். தன்னைக் கைது செய்தது யார் என்று கண்டுபிடிக்கப்(!) போவதாக​வும் சொன்னார்! தன் தந்தை பெயரில் நடத்தி வரும் மருதப்பா அறக்கட்டளை சார்பில், பொங்கல் விழாவை தமிழர் கலை இலக்கிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் ம.நடராஜன். இந்த விழா அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு அந்த எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு எகிறியது. நில அபகரிப்பு வழக்கு, நீதிமன்ற அலைக்கழிப்பு, 90 நாட்கள் சிறைவாசம்... இதனால் தன்னுடைய அரசியல் பாதையில் ஏதேனும் புதிய முடிவெடுத்து, விழாவில் அதிரடியாக அறிவிப்பார் என்ற பேச்சு அலை​பாய்ந்தது. விழா நடந்த ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுமே நடராஜனின் ஒவ்வோர் அசை வையும் உளவுத் துறையினர் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தனர். திவாகரன், மகாதேவன் உள்ளிட்ட சசிகலாவின் நேரடி ரத்த சொந்தங்கள் எவரும் விழாவில் தென்படவில்லை. நடராஜனின் சகோ தரர்களான சுவாமிநாதன், ராமச்​சந்திரன் உள்ளிட்டோர் இதைத் தங்கள் வீட்டு விழாவாகவே கருதி எல்லா ஏற்பாடுகளையும் கவனித்​தனர். அ.தி.மு.க. கரை வேட்டி கட்டியவர்கள் இந்த விழாவில் அதிகமாகவே நடமாடினர். விழாவில் பேசிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ''டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்காக நாடே துடித்தது. நாங்களும் துடித்தோம். ஆனால், ஈழத்தில் 20 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் சிங்களர்களால் சீரழிக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டபோது, எங்களுக்காக குரல் கொடுக்க வடநாட்டில் யாருமே இல்லை. எங்கள் இசைப்ரியாவை சிங்கள வன்முறைக் கும்பல் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய் ததோடு மட்டும் இல்லாமல், நிழற்படம் எடுத்தும் ரசித்தது. ஆனால், அதைத் தட்டிக்கேட்கத்தான் நாதி இல்லை'' என்று குமுறினார். பழ.நெடுமாறன், ''மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து, இரண்டு இந்திய ராணுவ வீரர்களைப் படுகொலை செய்து விட்டால், 'இனி அந்த நாட்டோடு எந்த உறவும் இல்லை’ என்கிறார் மன்மோகன் சிங். இப்போது மட்டும் பொங்குகிற ரோஷம், தெற்கு எல்லையில் 500 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும்போது ஏன் பொங்கவில்லை?'' எனக் கொந்தளித்தார். 'சமரசமற்ற சமரே... தஞ்சை மகிழ்கிறது இப்போது... தமிழகம் மகிழ்வது எப்போது?’ என்ற ஃப்ளெக்ஸ்கள் வைக்கப்பட்டு இருந்ததால், நடராஜன் நிச்சய​மாக அனல் பறக்கத்தான் பேசுவார் என்று அனைவரும் காத்திருந்தனர். நிறைவாகப் பேசிய நடராஜனோ, ''பத்திரிகையாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நான் நல்லது செய்தால், எழுத மாட்டார்கள். நான் வாய் தவறி ஏதாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால், அதையே நான்கு நாட்களுக்கு 24 மணி நேரமும் போடுவார்கள். நான் எதுவும் தீனி போடுவேனா, மாட்டேனா என்று காதைத் தீட்டி வைத்திருக்கிறார்கள்'' என்று காட்டமாக ஆரம்பித்தவர், ''கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால்தான், காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு இந்த அளவுக்கு பாதகமான நிலை ஏற்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்களாகச் சென்றுள்ளவர்கள், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் காவிரிக்காகக் குரல் கொடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள். வரப்போகும் தேர்தலில் அவர்களை எல்லாம் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். வாக்குச்​சீட்டை மாற்றிப் போட்டால்தான் அவர்​கள் நம்முடைய வழிக்கு வருவார்கள். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 'புரட்சித்​தலைவி’ ஜெயலலிதா அவர்களும் நானும் காவிரி நீர் கேட்டு கடிதம் கொடுத்தோம். நாங்கள் இங்கு வருவதற்குள் காவிரி நீர் வந்து விட்டது. அதுபோல் இப்போது ஏன் மத்தியில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் அமைச்சர்களால் காவிரி நீரைப் பெற முடியவில்லை? வரப்போகும் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். குறிப்பாக, ப.சிதம்பரம் கண்டிப்பாகத் தோற் கடிக்கப்பட வேண்டும். எப்போது எல்லாம் அவர் நிதி அமைச்சராக வருகிறாரோ, அப்போது எல்லாம் மாநில சுயாட்சிக்குப் புறம்பாக ஏராளமான சேவை வரிகளை விதிக்கிறார். உங்களைக் கேட்​காமல் எவரும் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை உருவாக வேண்டும்'' எனப் பேசி முடித்தவர், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் மைக் பிடித்து, ''இடத்தை ஆக்கிரமித்ததாகச் சொல்லி என் மீது வழக்குத் தொடர்ந்து, 90 நாட்கள் சிறையில் வைத்து இருந்தனர். வெட்கம் இல்லாத அரசாங்​கம் என் மீது வழக்குத் தொடர்ந்ததே தவிர, சார்ஜ்ஷீட் கொடுக்கவே இல்லை. காரணம், அது பொய் வழக்கு'' என்றவர், திடீர் எனத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, ''என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்கிறேன். எலெக்ஷன் வரும்போது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறேன். செய்வீர்களா?'' என கேள்வி எழுப்ப... அவரது ஆதாவாளர்கள், ''செய்வோம்... செய்வோம்'' எனக் குரல் எழுப்பினர். ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலை எடுத்து பேசியவர், திடீர் என டிராக் மாறி ஆட்சியைத் திட்டியது ஏன் என்பது புரியாமல் விழாவுக்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்!

19 January 2013

பிரதமரின் ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரி திடீரென தூக்கில்

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று காவல்துறை கூறுகிறது. பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதபோதகர் ஒருவரின் தலைமையில் மக்களின் அரச எதிர்ப்பு போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையிலேயே பிரதமரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றத்தின் உத்தரவும் வந்தது. பிரதமரை உடனடியாகக் கைதுசெய்யக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்ற போதிலும் பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது

18 January 2013

பாலியல் தொந்தரவு கொடுத்த 13 வயது ஒண்டோரியோ பள்ளி மாணவன்

கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர். பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பள்ளியின் பெயரை தெரிவிக்க காவல்துறை அதிகாரி மறுத்துவிட்டார். மேலும் 13 வயது மாணவன் என்பதால், சிறுவர் கிரிமினல் சட்டத்தின்படி, மாணவனின் பெயரையும் அதிகாரி தெரிவிக்கவில்லை

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக மாணவி .

       


கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்தால், ஆயுதங்கள் தடை சட்டப்பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது 42 வகையான பிரிவிகளின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயுதங்களை பள்ளிக்கு எதற்காக கொண்டு வந்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

1. Possession of a Restricted Firearm with Ammunition
2. Possession of a Restricted Weapon Obtained by the Commission of an Offence
3. Altering, Defacing, or Removing Serial Number on a Firearm
4. Careless Use of a Firearm
5. Firearm Careless Storage
6. Unauthorized Possession of a Firearm
7. Possession of Unregistered Restricted Weapon
8. Possession of a Restricted Weapon Knowing its Possession is Unauthorized
9. Careless Storage Ammunition
10. Carry Concealed Weapon


மேற்கண்ட 10 வகையான முக்கிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நான்கு மாணவர்களும் மைனர் என்பதால், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்தால் துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாது, கனடாவிலும் பரவி வருவது குறித்து மாணவர்களையும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் கவலை கொள்ள செய்துள்ளது

புதையல் தேடிய ஆஸ்திரேலிய நபருக்கு 5 கிலோ தங்கக்கட்டி கிடைத்த

ஆஸ்திரேலியாவில் மெட்டல் டிடெக்டரின் துணையோடு புதையல் தேடியலைந்த ஒருவருக்கு 5 கிலோ தங்கக் கட்டி கிடைத்துள்ளது. சுமார் ஐந்தரை கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டியின் விலை 3 லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுவரை பெயர் வெளியிடப்படாத ஒரு நபர், விக்டோரியா மாகாணத்தில் பாலார்ட் என்ற நகருக்கருகே கையில் எடுத்துப் போகக் கூடிய மெட்டல் டிடெக்டர் மூலம் நடத்திய தேடுதலின் போது தரைக்குக் கீழே இரண்டடி ஆழத்தில் ஒரு உலோகக் கட்டி இருப்பதை ''பீப்'' ஒலி உணர்த்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் சூடுபிடித்த தங்க வேட்டையின் போது, இந்த இடம் தங்கம் தேடுவோர் மத்தியில் பிரபலமாக இருந்ததது. சமீப காலத்தில் இங்கு எடுக்கப்பட்ட மிகப் பெரிய தங்கக் கட்டி இதுதான் என்று உள்ளூர் நிபுணர்கள் கூறுகின்றனர்

17 January 2013

விலைப்பட்டியல். கட்டாயமாக்குகிறது மத்திய அரசு.

டாக்டர் ஃபீஸ் - ரூ.100, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ.4,500, ஈ.சி.ஜி. - ரூ.150, ஐ.சி.யு. கேர் (ஒரு நாளுக்கு) - ரூ.2,000 - நீங்கள் நுழையும் ஒரு மருத்துவமனையில் இப்படி ஒரு விலைப் பட்டியல் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு செலவாகும் என்பதை மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு நிம்மதியாக டாக்டரை சந்திக்கலாம். இப்படி ஒரு விதியைக் கட்டாயமாக்கப் போகிறது மத்திய அரசு. மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2011-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் என்ன சொல்கிறது? ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் வசதிகள், கொடுக்கப்படும் சிகிச்சைகள், ஆகும் செலவுகள் பற்றி நோயாளிகளுக்குத் தெரியும்படி போர்டு வைக்க வேண்டும். ஒவ்வொரு சிகிச்சைக்கும் என்ன கட்டணம் என்பதை​யும் பட்டியலாக வெளியிட வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் இந்த விலைப் பட்டியல் இருப்பது அவசியம். கிராமப்புற, நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள் என்ற அடிப்படையில் சிகிச்சைக்​கான கட்டணங்கள் மூன்று வகையாகத் தரம் பிரிக்கப்படும். நகராட்சிகளில் உள்ள மருத்துவமனை என்றால், தேனியில் ஒரு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் எடுத்தால் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்களோ, அதே சார்ஜ்தான் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையிலும் இருக்க வேண்டும். தாம்பரத்தில் நீங்கள் காய்ச்சலுக்காக ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றால் அதற்கு எவ்வளவு கன்சல்டிங் ஃபீஸ் வாங்குகிறாரோ, அதே சார்ஜ்தான் விழுப்புரத்திலும் இருக்கும். மருத்து​வமனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை எலெக்ட்ரானிக் டிவைஸ் ரெக்கார்டு மூலமாகப் பதிவுசெய்ய வேண்டும். நேஷனல் கவுன்சில் என்ற அமைப்பு தொடங்கப்​பட்டு, ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் கண்​காணிக்கும். அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். இந்த அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும். மாவட்ட கலெக்டர் அல்லது எஸ்.பி., மருத்துவத் துறையோடு சம்பந்தப்பட்ட என்.ஜி.ஓ. அமைப்பில் இருந்து ஒருவர், மருத்துவத் துறை சார்ந்த ஒருவர் என மூவர் அடங்கிய குழு மாவட்டம்தோறும் அமைக்கப்படும். அந்தக் குழு மருத்துவமனைகளைக் கண்காணிக்கும். மருத்துவப் படிப்பு முடித்த அத்தனை பேரும் மெடிக்கல் கவுன்சிலில் நிச்சயம் பதிவுசெய்ய வேண்டு மருத்துவர்கள் சிலரோ இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவரான டாக்டர் பிரகாசத்திடம் இது தொடர்பாகப் பேசினோம். ''மருத்துவம் படித்த அத்தனை பேரும் மெடிக்கல் கவுன்சிலில் பதிவுசெய்து இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் போலி மருத்துவர்​களை ஒழிக்க முடியும். சிகிச்சைக்கு ஆகும் செலவுகளைப்பற்றி போர்டுவைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது. இது என்ன ஹோட்டலா? இட்லி இவ்வளவு, மசால் தோசை இவ்வளவு என்று போர்டுவைப்பதற்கு? நோய் ஒன்றுதான். ஆனால், நோயின் தன்மை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். எனவே இந்த நோய்க்கு இவ்வளவு கட்டணம் என்று எப்படி வரையறுக்க முடியும் அதேபோல பிசியோதெரபி படித்தவர்கள் தனியாக கிளினிக் வைத்துக்​கொள்ள அந்தச் சட்டம் அனுமதிக்கிறது. பிசியோதெர​பிஸ்ட்கள் தனியாகச் சிகிச்சை அளிக்கவே முடியாது. ஒரு மருத்துவரின் மேற்பார்வை​யில்தான் அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மத்திய அரசின் மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்து இருக்கிறோம்'' என்றார். பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கமோ, ''உலகச் சுகாதார நிறுவனமும் மத்திய அரசும், பிசியோதெரபி மருத்துவர்கள் தனியாகச் சிகிச்சை அளிக்கலாம் என அங்கீகரித்து இருக்கிறது. தமிழகத்தில் இதை எதிர்ப்பது வேதனையாக இருக்கிறது'' என்கிறார்கள். மத்திய அரசின் இந்தச் சட்டம் பற்றி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், ''இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசு ஒரு கமிட்டி அமைத்து இருக்கிறது. சுகாதாரத் துறைச் செயலாளர் தலைமையில் இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் அமைப்பைச் சேர்ந்த​வர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்திவருகிறது. அந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்கிறார்.

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்.

பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும் பன்றி இறைச்சியின் கூறுகள் இருந்ததாக அயர்லாந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள். குதிரை இறைச்சி உண்பதால் உடல் நலத்துக்கு கேடு எதுவும் விளையாது, ஆனால் பிரிட்டிஷ் தீவுகளில் இதை உண்பது குறித்து ஒரு கலாசார ரீதியான அருவருப்பு நிலவுகிறது. பிரிட்டனின் முன்னோடி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான டெஸ்கோவினால் விற்கப்பட்ட பர்கர் ஒன்றில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு குதிரை மாமிசம் இருந்ததாக சோதனைகளில் கண்டறியப்பட்ட பின்னர், அதன் வாடிக்கையாளர்களிடம் அது மன்னிப்பு கோரியிருக்கிறது

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக திடீரென

மேலாடையின்றி போராடிய உக்ரைன் இளம்பெண்கள்.வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் கலந்து கொண்டார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது உக்ரைன் நாட்டு பெண்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த பெண்கள் திடீரென்று மேலாடைகளை கலைந்து வீசி விட்டு, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க கோரி கோஷங்களை முழங்கி போராட்டம் நடத்தினர். ஓரின சேர்க்கைக்கு ஆதரவான வாசகங்களையும் உடலில் எழுதியிருந்தனர்இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அரசு இன்று ஒப்புதல்!

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில மாற்று அரசு அமைக்க எந்த கட்சியும் முன் வராததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஜார்கண்ட மாநில ஆளுநர் சையத் அகமது அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதுபற்றி மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கடந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும்

ஆஸ்திரேலியர்கள் வரத்து வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது

வாடகை தாய்மார்கள் குறித்த புதிய சட்ட திருத்தத்தை இந்தியா அமல்படுத்தி உள்ளதால் இனி ஆஸ்திரேலியர்களின் வரத்து மிக வெகுவாக குறையும் என தெரிய வந்துள்ளது.வெளிநாட்டில் வாழும் பலர் தங்களால் குழந்தை பெற்று கொள்ள இயலாத பட்சத்தில், விந்து அணுக்களை கொண்டு வந்து வாடகை தாய்மார்கள் உதவியுடன் இந்தியாவில் குழந்தை பெற்று எடுத்து செல்கின்றனர். ஆரம்பத்தில் மிக சிறிய அளவில் நடந்த இந்த தொழில் பின்பு மிக அதிக வருமானம் தரும் தொழிலாக மாறியது. வட இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர பல மருத்துவ மனைகள் முளைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ மனைகளுக்கு இது கல்லா கட்டும் தொழிலாக மாறியது. வெளி நாட்டில் வசிப்பவர்கள் இதுபோன்ற மருத்துவ மனைகளை தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை கூறினால் போதும், அவர்கள் வெளி நாட்டில் இருந்து இங்கு வந்து தங்குவது, வாடகை தாய் ஏற்பாடு பண்ணுவது முதல் குழந்தை பெற்று கொடுத்து மீண்டும் தங்கள் நாட்டிற்கு குழந்தையுடன் திரும்பி செல்வது வரை என மொத்தமாக ஒரு தொகையை பேக்கேஜ்ஆக கறந்து விடுகின்றனர். வட மாநிலங்களில் மக்கள் பலர் வறுமையால் வாடுகின்றனர். தின கூலிக்கே வழி இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களது ஏழ்மை நிலையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் புரோக்கர்கள், ஒரு குழந்தை பெற்று கொடுத்தால் 50,000 முதல் 1 லட்சம் வரை பேசி படிய வைக்கின்றனர். தின சாப்பாட்டிற்கே வழி தெரியாத இவர்களுக்கு , கனவிலும் கிட்டாத இந்த தொகை அவர்களை சம்மதிக்க வைக்கிறது. இந்த "வாடகை தாய்" முறை பல நாடுகளில் நடைபெறுகிறது. ஆனால் வெளி நாடுகளில் இந்த முறையில் ஒரு குழந்தை பெற வேண்டும் என்றல் குறைந்தது $30,000 - $45,000 வரை செலவு ஆகும். ஆனால் இந்தியாவில் ஒரு குழந்தை பெற்று எடுக்க வேண்டுமானால் $15,000 .,க்குள் அனைத்து செலவும் முடிந்துவிடும். எனவே வெளிநாட்டினர், அதுவும் குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவிற்கு வருகை புரிந்த வண்ணம் இருந்தனர். மருத்துவ மனையை பொறுத்தவரை, குழந்தை பெற்று தரும் தாய்க்கு 50,000 முதல் 1 லட்சம். தாய்மார்களை ஏற்பாடு பண்ணும் புரோக்கர்களுக்கு 10,000- 25,000. மேலும் மகப்பேறு செலவு என மொத்தத்தில் 2- 2.5 லட்சம் செலவில் கதையை முடிகின்றனர். எனவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கும் , மருத்துவமனைக்கும் இது நல்ல லாபம் தந்து வந்தது இந்த நிலையில் இந்தியா "வாடகை தாய்" குறித்த புதிய சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது. இந்த புதிய சட்ட திருத்தப்படி குழந்தை வேண்டி வரும் தம்பதியினர், தங்களுக்குள் திருமணம் ஆகி ,இரண்டு ஆண்டுகள் சேர்த்து வாழ்ந்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால் மட்டுமே இந்திய தாயை வாடகைக்கு அமர்த்த முடியும். ஆனால் ஆஸ்திரேலிய மக்களின் கலாச்சாரம் மிகவும் மாறுபட்டது. திருமணதிற்கு முன்பே குழந்தை பெற்றுகொள்வது, திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுகொள்வது, திருமணமே செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுகொள்வது ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணம். எனவே இந்தியா அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய சட்ட மாறுதல்கள் ஆஸ்திரேலியர்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் குழந்தை வேண்டி இந்தியா வரும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை மிக கடுமையாக குறையும் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சட்ட திருத்தம் கல்லா கட்டும் மருத்துவ மனைகளுக்கு மிக பெரிய அடியாகி உள்ளது

37 வீர‌ர்களை கு‌தி‌‌த்து பதம்பார்த்தது காளை!

உலக‌ப் புக‌ழ் பெ‌ற்ற மதுரை அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌ல்‌லி‌க்‌‌க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் காளைக‌ள் கு‌த்‌திய‌தி‌ல் 37 பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர். பல‌த்த காய‌ம் அடை‌ந்த 2 பே‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மதுரை மாவ‌‌ட்ட‌ம் அவ‌னியாபுர‌த்த‌ி‌ல் கட‌ந்த 14ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற்ற ஜ‌ல்ல‌ி‌க்க‌ட்டு‌ப் போ‌ட்டி‌யி‌ல் 20 பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர். ஆனா‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. பாலமே‌‌ட்டி‌ல் நே‌ற்று ந‌ட‌ந்த ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் 50 ப‌ே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர். ‌இ‌‌ங்கு‌ம் எ‌ந்த‌வித உ‌யி‌‌ர் ப‌‌லியு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் உலக‌ புக‌ழ் பெ‌ற்ற அல‌ங்காந‌ல்லூ‌‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி இ‌ன்று காலை 8 ம‌ணி‌க்கு தொட‌ங்‌கியது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் இரு‌ந்து 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட காளைக‌ள் ப‌ங்கே‌ற்றன. 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீர‌ர்க‌ள் கள‌ம் இற‌ங்க‌ப்ப‌ட்டன. மு‌ன்னதாக ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் காளைக‌ள் அனை‌த்தும‌் மரு‌த்துவமனை ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இதை‌போ‌ல் ‌வீர‌ர்களு‌க்கு‌ம் மரு‌‌த்துவ ப‌ரிசோதனை நட‌த்த‌ப்ப‌ட்டது. இத‌ன் ‌பி‌ன்னரே ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி ‌விளையாடி அனும‌‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டது. முத‌லி‌ல் கோ‌யி‌ல் காளைக‌ள் ஒ‌வ்வொ‌ன்றாக ‌‌‌விட‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் படி‌ப்படியாக ம‌ற்ற காளைக‌ள் ‌‌‌அ‌‌வி‌ழ்‌த்து‌வி‌ட்ட‌ப்ப‌ட்டன. ஒ‌வ்வொ‌ன்றாக ‌விட‌ப்ப‌ட்ட காளைக‌ள் ‌சீ‌றி‌ப்பா‌ய்‌ந்தது. ‌சீ‌றி வரு‌ம் காளைகளை ‌வீர‌ர்க‌ள் அட‌‌க்‌கி மு‌ய‌ன்றன‌ர். இ‌‌தி‌ல் பல காளைக‌ள் ‌வீர‌ர்களை ச‌மா‌ளி‌த்து ‌பிடிபடாம‌ல் ஓ‌ட்ட‌ம் ‌பிடி‌த்தது. பல ‌வீர‌ர்க‌ள் காளைகளை அட‌ங்‌கி ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை த‌ட்டி‌ச் செ‌ன்றன‌ர் இ‌ந்த ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் 37 பே‌ர் காய‌ம் அட‌ை‌ந்தன‌ர். இ‌தி‌ல் பல‌த்த காய‌ம் அடை‌ந்த 2 பே‌ர் மதுரை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த போ‌ட்டி‌யிலு‌ம் உ‌யி‌ரிழ‌ப்‌பு ஏ‌ற்பட‌வி‌ல்லை. இ‌ந்த போ‌ட்டிக‌ள் ‌பி‌ற்பக‌ல் 2 ‌ம‌ணியுட‌ன் முடிவட‌ை‌ந்தது அவ‌னியாபுர‌ம், பாலமேடு ஜ‌ல்‌லி‌க்க‌ட்டுவை தொட‌ர்‌ந்து அல‌‌ங்காந‌ல்லூ‌‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டியு‌ம் எ‌ந்தவித உ‌யி‌‌ர் சேத‌‌மி‌ன்‌றி அமை‌தியாக நட‌ந்து முடி‌ந்ததா‌ல் மாவ‌ட்ட ‌‌‌நி‌ர்வாக‌ம் ‌நி‌‌ம்ம‌தி அடை‌ந்து‌ள்ளது

எம்.ஜி.ஆர். சிலை: இன்று திறப்பு!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இன்று திறந்து வைக்கிறார். ÷நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, வெண்கலத்தால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கிலோ எடையுடைய இந்தச் சிலையை சென்னை போரூரைச் சேர்ந்த சிற்பி ரவி என்பவர் உருவாக்கியுள்ளார். இத்தகைய கலைநயமிக்க எம்.ஜி.ஆர். சிலைகள் கிருஷ்ணகிரி உள்பட வெகுசில இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதாக சிற்பி தெரிவித்தார். கோத்தகிரியில் உதகை - மேட்டுப்பாளையம் - கொடநாடு சாலை சந்திப்பு பகுதியான டானிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்

16 January 2013

கலாச்சாரத்திற்கு அமெரிக்காவில் புதிய சட்டம், அதிபர் ஒபாமா!

அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கடிவாளம் போட புதிய சட்டத்தினை அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். அதற்கான சட்டவரைவு அறமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி கலச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடும் உயிர்பலியும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது அ‌ரசு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி நியூடவுணில் உள்ள சாண்டி ஹூக் பள்ளி ஒன்றில்நடந்து துப்பாக்கிச்சூட்டில் 20-ம் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். இதற்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.முன்னதாக அமெரிக்காவில் குருதுவராவில் உள்ள சீக்கிய கோயில், கொலராடோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பலர் பலியாகினர். இதற்கு முடிவு கட்ட அதிபர் ஒபாமா துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தினை ‌கொண்டு வரப்படும் என்றார். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய்கெர்னி கூறுகையி்ல், துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இனி எதிர்காலத்தில் உயிரிழப்புகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி நியூடவுண் நகரில் உள்ள சாண்டிஹூக் பள்ளி குழந்தைகள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன் ஒபாமாவிற்கு கோரிக்கை அடங்கிய கடிதத்தினை அளித்தனர். இதனை ஏற்று ஒபாமா, நாட்டின் துப்பாக்கி பயன்பாடு குறித்து ஆராய துணை அதிபர் ஜோபைடன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் இனி துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.புதிய சட்டத்தின் படி பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பின்னணி குறித்தும், எந்த காரணத்திற்காக வைத்துள்ளார்கள் என்பதும்,துப்பாக்கி வாங்குபவர்கள், விற்பவர்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஒபாமாவின் இந்த புதிய சட்டத்திற்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர்

குடிநீருக்காக பரிதவிக்கும் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம்!

ஆத்தூர் பகுதியில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, சேகோ ஆலையில், மரவள்ளி கிழங்கு அரவைக்கு தேக்கி வைத்துள்ள, "பாசான்' படிந்த நீரை, பொதுமக்கள் குடிநீருக்கு பிடித்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், 33 வார்டுகளும், நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகளும் உள்ளன. இங்கு வசிக்கும், 1.20 லட்சம் மக்களுக்கு, மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், பொது கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் முட்டல் நீரேற்றும் நிலையம் மூலம், உப்பு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பருவ மழை பொய்த்துபோனதால், வசிஷ்ட நதி உள்ளிட்ட நீர் நிலைகள் கடும் வறட்சி ஏற்பட்டதோடு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அதனால், ஆழ்துளை கிணறு, பொது கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், வார்டுகளுக்கு உப்பு தண்ணீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி வார்டுகளில், 40 நாட்களுக்கு மேலாகியும், காவிரி குடிநீர் சப்ளை வழங்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையில், குடிநீர் இல்லாததோடு, நகராட்சி நிர்வாகமும் குடிநீர் சப்ளைக்கு மாற்று ஏற்பாடு செய்யாததால், ஆத்தூர் நகர பகுதி மக்கள், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீருக்காக, கண்ணீருடன் பரிதவித்து வருகிறன்றனர். ஆத்தூர் நகராட்சி, 33வது வார்டு, வி.வி., காலனி, பைத்தூர் ரோடு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, உப்பு தண்ணீர் மற்றும் காவிரி குடிநீர் சப்ளை செய்ய, பைப் லைன் இல்லாததால், லாரி மூலம் வழங்கி வந்தனர். தற்போது, குடிநீர், உப்பு தண்ணீர் சப்ளை வழங்காததால், அப்பகுதியில் உள்ள சேகோ ஃபேக்டரியில், மரவள்ளி கிழங்கை அரவை செய்வதற்காக, தொட்டிகளில் தேக்கி வைத்துள்ள, "பாசான்' படிந்த உப்பு தண்ணீரை குடம் உள்ளிட்ட பாத்திரங்களில் பிடித்து சென்றனர். பல நாட்களாக, தொட்டியில் தேக்கி வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்தினால், காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படும். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, அவற்றை பொருட்படுத்தாமல், "குட்டை' தண்ணீரை பிடித்து செல்லும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. நேற்று, மதியம், 12.30 மணியளவில், ஆத்தூர் வழியாக கூலமேடு கிராமத்துக்கு சென்ற, சேலம், டி.ஆர்.ஓ., பிரசன்னவெங்கடேசனிடம், ஆத்தூர் நகராட்சி, சேர்மன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், குடிநீர் சப்ளை வழங்கும்படி தெரிவித்தனர். ""குடிநீர் சப்ளை பாதிப்பு குறித்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ., உறுதியளித்தார். இதுகுறித்து, சேலம் டி.ஆர்.ஓ., பிரசன்னவெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் நகராட்சிக்கு, காவிரி குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டதால், 40 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்க முடியவில்லை. சேலம் அம்மாபேட்டையில், ஆத்தூருக்கு வரும் தண்ணீரை, சேலம் மாநகராட்சிக்கு எடுத்துக் கொள்வதாகவும், குடிநீர் சப்ளை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என, சேர்மன் உள்ளிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். அம்மாபேட்டை, "பம்பிங்' பகுதியில், சேலம் மாநகராட்சி மற்றும் ஆத்தூர் பகுதிக்கு ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறதா என, குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு, ஆத்தூருக்கு செல்லும் குடிநீர் எடுப்பது தெரியவந்தால், மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுநாள் வரை, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள குடிநீர் பிரச்னை குறித்து, நகராட்சி நிர்வாகம், தெரியப்படுத்தவில்லை. குடிநீர் சப்ளை குறித்த விபரங்கள் தெரிவிக்கும்படி, நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதிக்கு ஒதுக்கீடு அளவுக்கு ஏற்ப குடிநீர் சப்ளை வழங்கப்படும்.

பரவலாக தொடரும் படுகொலைகள்!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொழில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதில் கடத்தல் கும்பல்களிடையே போட்டி நிலை நிலவி வருகிறது. இது பல நேரங்களில் வன்முறையில் முடிகிறது.
இந்நிலையில், தொலுக்கா பகுதியில் கடத்தல் கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இதேபோல், மெக்சிகோ சிட்டி என்னுமிடத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
போதைப் பொருள் கும்பல்கள் மற்றும் அதுதொடர்பான வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 7 வருடங்களில் மட்டும் மெக்சிகோவில் போதைப்பொருள் வன்முறை சம்பவத்தில் சுமார் 70,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

15 January 2013

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக

ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது

நடனம் பார்த்த சென்னை வாலிபருக்கு கத்தி குத்து

சென்னையைச் சேர்ந்த மதன் என்பவரும் அவரது நண்பர்களும் பொங்கல் கொண்டாட கோவா சென்றனர். கோவாவில் பொங்கல் கொண்டாடி விட்டு நேற்றிரவு கிளப் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அங்கு டிஸ்கோ நடனம் பார்த்த போது மதன் நண்பர்களுக்கு வேறொரு தரப்பினருக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதலில் மதனை குறித்த தரப்பினர் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இந்த கத்தி குத்தில் மதனுடன் சென்ற நண்பர்கள் இருவர் படுகாயமடைந்ததுடன் அவர்களது பணம் மற்றும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால் கோவாவில் சற்று பதற்றம் காணப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் சுற்றுலாஸ்தளங்களுக்கு பெயர்போன ஊர் கோவா. வெளிநாட்டு பயணிகள் உட்பட ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்ற நிலையில் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவன் சிறுவன் தானா?

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 குற்றவாளிகள் சிறையிலும், 18 வயதை அடையாதவன் என்பதால் 6வது குற்றவாளி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளான். 6வது குற்றவாளி சிறுவன் தானா? என்பதை உறுதிப்படுத்த, அவன் படித்த ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் இன்று இளம் சிறார் குற்றவாளிகளுக்கான நீதிபதியின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இந்நிலையில் படவுன் மாவட்டம் பவானிபூரில் வசிக்கும் 6வது குற்றவாளியின் தாயார் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு 6 குழந்தைகள், எனது மூத்த மகன் 11 வயதில் வேலை தேடி டெல்லிக்கு போனான். ஆரம்பத்தில் சில மாதம் 600 ரூபாய் பணம் அனுப்பினான். 3 வருடங்களாக அவனிடம் இருந்து பணமும் வரவில்லை. அவனைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால், திடீரென்று டெல்லி பொலிசார் எங்கள் கிராமத்துக்கு வந்து அவனைப் பற்றி விசாரித்தபோது திகைத்துப் போனோம். அதிலும், அவன் செய்த குற்றம் பற்றி அறிந்த பின் அவமானத்தால் தலைகுனிந்து வாழும் நிலைக்கு எங்கள் குடும்பம் ஆளாகியுள்ளது. அவன் செய்த தவறுக்கான தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும் என அவர் கூறினார்.

இன்று 65வது இந்திய இராணுவ தினக் கொண்டாட்டம்

இந்திய இராணுவ தினத்தை இன்று கொண்டாட இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 15ம் திகதி இந்திய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கொண்டாடப்படும் 65வது இராணுவ தினத்தில் இந்திய இராணுவத்தின் சார்பில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் நினைவாக இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இராணுவ அணிவகுப்புக்கள், இராணுவ சாகசங்கள் ஆகியவற்றுடன் இராணுவத்தின் தொழில்நுட்பங்கள், சாதனைகள் குறித்தும் நிகழ்ச்சிகளும் டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் நடைபெற உள்ளது. இந்தியா எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக சீனாவுடன் ஒரு தடவையும் பாகிஸ்தானுடன் இரண்டு தடவைகளும் போரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது