Search This Blog n

08 January 2013

எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து பங்குச்சந்தை நிறுவனத்தில் ரூ.13 கோடி


பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி, 13 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், புங்கனூரைச் சேர்ந்தவர், கிருஷ்ணகுமார், 53; சிவகாசியை சேர்ந்தவர், சுரேஷ்குமார், 28. இவர்கள் இருவரும், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளனர். காட்பாடி காந்தி நகரில், "பாபா ஸ்டாக் டிரேடர்ஸ்' என்ற பெயரில், பங்குச்சந்தை முதலீடு நிறுவனத்தை துவங்கினர். இதில், ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், மாதம்தோறும், 10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்தனர். முதலீடு செய்த, 34 பேருக்கு, மூன்று மாதம் வரை, தலா, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்.
இதையடுத்து, நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்தனர். அவர்களிடம், மாதம்தோறும் கொடுக்க வேண்டிய பணம், 10 ஆயிரம் ரூபாயை, பங்குச் சந்தையில் மறு முதலீடு செய்திருப்பதாகவும், விரைவில் அதிகளவு பணம் கொடுப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இந்த நிறுவனம் செயல்படவில்லை; இருவரும் தலைமறைவாயினர்.
பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரை அடுத்து, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 13 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில், திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்

0 கருத்துகள்:

Post a Comment