Search This Blog n

15 January 2013

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லத் தட

25 வயதுக்கும் குறைந்தவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் தொழில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது சஹரிய சட்டங்கள் மற்றும் இலங்கை சட்டங்கள் கருத்திற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். உடன்படிக்கைகளின் போது தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய வகையிலான நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் என்ற பெண்ணுக்கு அண்மையில் சவூதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment