Search This Blog n

08 January 2013

பள்ளி ஆசிரியைக்கு இன்று இறுதிச்சடங்கு. உறவினர்கள் கண்ணீர்?

ஒண்டோரியோவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென காணாமல் போனார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவருடைய உடல் woodlot west of Petrolia என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறுவதாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.ஒண்டோரியோவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், Noelle Paquette என்பவர் kindergarten ஆசிர்யையாக வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற ஜனவரி 1ஆம் தேதி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து காவல்நிலையத்தில் அவருடைய உறவினர்கள் புகார் செய்தனர். போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவருடைய மறைவிற்காக அவருடைய உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், நூற்றுக்கணக்கான பலூன்களை பறக்க விட்டும் அஞ்சலி செலுத்தினர். Noelle Paquette கொலை தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 31 வயதான Tanya Bogdanovich என்பவரும், 19 வயதான Michael MacGregor என்பவரும் ஆகும்.இவர்கள் இருவரும் ஜனவரி 10ஆம் தேதி, ஒண்டோரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மருத்துவர்களிடம் இருந்து வந்தபிறகும், மரணம் எதனால் ஏற்பட்டது என்பதை காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆசிரியையின் மரணம் தங்களது பள்ளிக்கு ஏற்பட்ட ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று St. Matthew's elementary பள்ளியின் பிரின்ஸிபால் Kevin Cannon தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment