Search This Blog n

02 January 2013

என்றென்றும் இளமையுடன் இருப்பதற்கு

அனைவருக்குமே என்றென்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், இதற்கு நாம் உண்ணும் உணவுகள் மிக முக்கியம்.
பெர்ரி
பெர்ரி பழங்களில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், தொடர்ச்சியாக சாப்பிட்டால் சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.
ஆகவே இளமையை தக்க வைக்க ஆப்பிள், ஆப்ரிக்காட், ப்ளூபெர்ரிஸ், ஸ்ட்ராபெர்ரி, பச்சை மற்றும் கருப்பு திராட்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
பச்சை இலை காய்கறிகள்
இவற்றில் வைட்டமின்களான சி, இ மற்றும் பி12 போன்றவை மட்டும் இல்லை, உடலை ஆரோக்கியமாக வைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளன.
இவற்றை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடைவதோடு, சருமத்தில் பழுதடைந்திருக்கும் செல்களை விரைவில் சரிசெய்யும். எனவே பசலைக் கீரை, ப்ராக்கோலி, பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை சாப்பிடுவதால் தக்க வைக்கலாம்.
மீன்
மீனில் உடலுக்குத் தேவையான எண்ணெய்கள் உள்ளன. இதனால் அவை சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை புதுபிக்கும்.
அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா-3 அதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே அடிக்கடி மீனை அதிக அளவில் உடலில் சேர்த்து வந்தால், சருமம் பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
கோதுமை
கோதுமைப் பொருட்களில் நார்ச்சத்துக்கள் மட்டும் அதிகமான அளவில் இல்லை, புரோட்டீன், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
இதில் உள்ள சத்துக்களால் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சீராக இயங்குவதோடு, இறுதியில் சருமத்திற்கும் ஒரு நல்ல பலனை அளிக்கும்.
கிரீன் டீ
பொதுவாக கிரீன் டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நன்கு தெரியும். ஆனால் அதே கிரீன் டீயை குடித்தால், அதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களால், சருமத்தில் விரைவில் ஏற்படும் சுருக்கங்கள் தடுக்கப்படும்.
ஆகவே இந்த கிரீன் டீயை தினமும் 2 கப் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராகவும், சருமம் பொலிவோடும் காணப்படும்.

0 கருத்துகள்:

Post a Comment