Search This Blog n

09 January 2013

குழந்தையின் விரல்? நகம்,கோமா நிலைக்கு சென்று திரும்பிய தாய்!

கருவில் இருந்த குழந்தையின் விரல் நகம் தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்து அலர்ஜி ஏற்பட்டது. இதனால் கோமா நிலைக்கு சென்ற தாய், 12 மணி நேரத்தில் கண் விழித்தது டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இங்கிலாந்தின் செஷயரில் உள்ள செஸ்டர் நகரைச் சேர்ந்த தம்பதிகள் டேவிட், ஏஞ்சலா கோட்டம்(32). இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பள்ளி ஆசிரியையாக இருக்கும் ஏஞ்சலா மீண்டும் இரட்டைக் குழந்தைகளைக் கருவுற்றார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஏஞ்சலாவுக்கு 8 மாதமானதும் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் உடனடியாக அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்தார்[ புகைபடங்கள் ]
அங்கு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஏஞ்சலாவுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவ பரிசோதனையின் போது கருவில் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் நகம் அல்லது தலை முடி, தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்ததும், ரத்த ஓட்டத்தில் அது நுரையீரலுக்குள் சிக்கி கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 80 ஆயிரம் பேரில் ஒருவருக்கு நடக்கும் இதுபோன்ற சமயத்தில் தாயின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்பதால் மருத்துவர்கள் பரபரப்புடன் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர் பின்பு அறுவை சிகிச்சையின் மூலம் 8 மாதமே ஆன இரட்டை குழந்தைகளை வெளியில் எடுத்தனர். அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடந்ததால் ஏஞ்சலாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது.
அத்துடன் ரத்தம் உறையும் தன்மையும் குறைந்தது. இதனால் 22 முறை ரத்தம் மாற்றப்பட்டு ஒருவழியாக ஏஞ்சலாவின் உடல்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் டாக்டர்கள் எதிர்பார்த்தபடியே அவர் கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்து மீள பல நாட்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மன உளைச்சலுடன் இருந்த டேவிட்டிற்கு அதன் பின்பு ஆச்சரியம் நடந்தது. ஏஞ்சலா தூங்கி விழித்தது போன்று கோமா நிலையிலிருந்து 12 மணிநேரத்தில் விழித்தார். மருத்துவர்களுக்கும் டேவிட்டுக்கும் ஆச்சரியமோ, ஆச்சரியம். ஒரே வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆனார். 8 மாதம் முன்பு குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளான அமிலி, அவா தற்போது நல்ல எடையுடன் ஆரோக்கியமாக உள்ளன. குழந்தைகளுடன் ஏஞ்சலா டேவிட் தம்பதியும் சந்தோஷமாக இருக்கின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment