This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 February 2013

பிரித்தானியாவின் ஸ்மார்ட்போன் அம்சங்களைக் ?


ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து(கடந்த 25ம் திகதி)பிஎஸ்எல்வி-20 ராக்கெட் மூலம் ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இவற்றில் பிரித்தானியாவின் தயாரிப்பான ஸ்ட்ரான்டு-1(Strand-1) என்ற செயற்கைக்கோளும் ஒன்று. விண்வெளி சூழலில் ஸ்மார்ட்போனின் பாகங்கள், எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.
பிரித்தானியாவின் விண்வெளி ஆய்வு மையமான எஸ்.எஸ்.சி., Surrey Space Centre (SSC) மற்றும் செயற்கை கோள் தொழில் நுட்பநிறுவனமான எஸ்.எஸ்.டி.எல்., Surrey Satellite Technology Limited (SSTL)ஆகியவை இணைந்து இதை தயாரித்துள்ளன. 4.3 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் ஸ்மார்ட்போன் அம்சங்கள் கொண்டது ஆகும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன், விண்வெளியில் வழக்கமான ஆய்வுகளுடன் வேடிக்கையான செயல்களையும் மேற்கொள்ளும்.
மனிதர்களின் அலறல் குரல்கள் பதிவான வீடியோ காட்சிகளை இந்த ஸ்மார்ட்போன் விண்வெளியில் ஒளிபரப்பும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள பதிவு செய்யும் கருவி அலறல் சத்தங்களை மீண்டும் பதிவு செய்யும்,,

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ,,,


நாகலாந்து, திரிபுரா, மேகலாயா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியாகி வருகின்றன.
நாகாலாந்து
நாகாலாந்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாகா மக்கள் முன்னணி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு கடந்த 23ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
இதில், இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 47 தொகுதிகளில் நாகா மக்கள் முன்னணி கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
5 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 4 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 13 தொகுதிகளில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
திரிபுரா
திரிபுராவில் ஆளும் இடதுசாரிகள் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
அதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 44 இடங்களில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 5வது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மேகாலயா
30 தொகுதிகளில் வெற்றி பெற்று மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
60 தொகுதிகள் உடைய மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இது கடந்த தேர்தலை விட 5 தொகுதிகள் அதிகமாகும்.
ஐக்கிய ஜனநாயகக் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் இக்கட்சி 3 தொகுதிகளை இழந்துள்ளது.இதர கட்சிகளும், சுயேட்சைகளும் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்,


ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பான


பேச்சுவார்த்தையில்,கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இருப்பினும் ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவும், சீனாவும் தெரிவித்துள்ளன.
இனி நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன

27 February 2013

மாணவி வழக்கு: சிங்கப்பூர் டொக்டர் சாட்சியம்,


டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் உடல் திசுக்களை ஆய்வு செய்த சிங்கப்பூர் சோதனைக்கூடத்தின் பெண் மருத்துவர் அஞ்சுலா தாமஸ், விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சாட்சியமளித்தார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த டிசம்பர் 16ம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு முதலில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 29ம் திகதி இறந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை, தெற்கு டெல்லியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சாகேத் விரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் மாணவியின் உடல் திசுக்களை ஆய்வு செய்த பார்க்வே சோதனைக்கூடத்தின் மருத்துவர் (பேதாலஜிஸ்ட்) அஞ்சுலா தாமஸ் செவ்வாய்க்கிழமை விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சாட்சியம் அளித்தார். அதை விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா பதிவு செய்தார்.,,,,,

ஐதராபாத்தில் ஸ்லிப்பர் செல்கள் அதிகரிப்பு,,,


ஐதராபாத்தில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு, ஸ்லிப்பர் செல்ஸ்களே காரணம் என்றும் 200க்கும் மேற்பட்டோர் ஊடுருவி உள்ளனர் என உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தில்சுக் நகரில் கடந்த வாரம் தொடர்படியாக குண்டுகள் வெடித்து நாட்டை அச்சுறுத்தியது.
இதில் 17 பேர் பலியானார்கள், 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போலவே தற்போதைய குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த குண்டுகள் ஐதராபாத் நகரிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது 700 கிராம் அம்மோனியம் நைட்ரேட், மற்றும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து பந்து போல குண்டு தயாரித்து உள்ளனர்.
அதனை செப்புக் கம்பியால் சுற்றி அலுமினிய டப்பாவில் வைத்துள்ளனர். டப்பாவில் காலியாக உள்ள இடத்தில் இரும்பு குண்டுகள், மற்றும் இரும்புத் தட்டு துகள்கள் அடைத்து வைத்துள்ளனர். இவைகள் வெடித்தவுடன் மனித உடலுக்குள் புகுந்து சல்லடைகளாக துளைத்து விடுகிறது. இந்த வெடிகுண்டை டிஜிட்டல் சர்கியூட் மூலம் வெடிக்க செய்துள்ளனர்.,{புகைபடங்கள்}
மேற்கண்ட தகவல்கள் தேசிய புலனாய்வு பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெடிகுண்டு சிதறல்கள் கிடந்த துணியில் உருது எழுத்து உள்ளதாகவும், அந்த துணி நார்நாராக கிழிந்து போனதால் அதுபற்றி முழு விவரங்கள் சேகரிக்க முடியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சதி இருந்துள்ளது உறுதியாகி உள்ளதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இது போன்ற சதிசெயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது,

26 February 2013

கத்தோலிக்க திருச்சபை குறித்து வதந்திகள்: வாடிகன் புகார்

போப் பெனடிக்ட் பதவி விலக முடிவு செய்த பின்னர் கத்தோலிக்க திருச்சபை குறித்து பத்திரிகைகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என வாடிகன் புகார் கூறியுள்ளது.
உலகில் கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவராக போப் இருந்து வருகிறார்.
தற்போது 16வது போப்பாக இருக்கும் பெனடிக்ட் நாளை மறுநாள் 28ம் திகதி, பதவி விலகுகிறார்.
போப்பின் இந்த முடிவு குறித்து, இத்தாலிய பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதுகுறித்து வாடிகன் அதிகாரி பெடரிக்கோ லொபர்டியோ கூறியதாவது: போப் பதவி விலகுவது 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து பத்திரிகைகள் அவதூறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த வதந்திகள், திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது.
வாடிகனில், சில பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்ததால் தான் போப் பதவி விலக தீர்மானித்ததாக இத்தாலி நாட்டின் "லா ரிப்பப்ளிக்" பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக சில பத்திரிகைகள் கூறியுள்ளன.
வாடிகனில் உள்ள சில கார்டினல்கள் குறித்தும் தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன. புதிய போப்பை தெரிவு செய்வதற்கு கூட சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும் என்றும் பத்திரிகைகள் எழுதி வருகின்றன என பெடரிக்கோ லொபர்டியோ கூறியுள்ளார்

25 February 2013

டிலுஸ்காந்தின் கண்ணீர் அஞ்சலி ,,,,,

செல்வன் ஜெயநாதன் டிலுஸ்காந்,,,
நண்பனுக்காகத் தன்னுயிரையே ஈந்து நட்புக்கே இலக்கணம் வகுத்த ஏந்தல்.... கடலில் இழுத்துச் செல்லப்பட்ட நண்பனைக் காப்பாற்றி. தன்னுயிரை ஈந்த தெய்வம்....
- Sithamparanadesan Pirashanth, Kesavan Devarajan, Putthiran Siva, Kabilan Vanniyasingam, Lingam Prabu, Suja Kugan, Nishanthan Nissan, Nishanth Ganeshalingam Nishanth, Mugunthan Ketharan, Jeyatheepan Sinnaththurai, Keerthanan Pathmanathan, Roeshanthan Suthendran, Nada Hari, Arun Leema Mic, Jesith Sathananthasivam, Sangeetha Raju, Jey Krishnan, Luckshagan Vipulananthan, Jaso Kulan, Sinthu Visvaa, Mohan Peeris, Nishopana Jegatheeshan, Sayanthan Yoganathan, Piraveen Luxan, Mathushan Yogarasaமற்றும் Sivananthaselvam Ninshan உடன்,இந்த இணைய யத்தின் கண்ணீர் அஞ்சலியும் ,,,,,

மேலாடையின்றி முன்னாள் பிரதமரை எதிர்த்த பெண்களால் பரபரப்பு

,,,
இத்தாலியில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானி போட்டியிடுகின்றார். தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த நிலையில் மிலன் நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் ஓட்டு போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன போது அங்கு ஓட்டு போட முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனியும் வந்திருந்தார். அப்போது, மேலாடை அணியாத 3 பெண்கள் திடீரென அவர் முன்பு ஓடி வந்து நின்றனர். சில்வியோ பெர்லஸ் கோனியே இந்த நாட்டின் பிரதமர் என வாழ்த்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பொலிசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பினர் என தெரிய வந்தது ,{காணொளி}


24 February 2013

கொலைக்குற்றவாளிகளை தூக்கிலிடுவது சட்டத்திற்?


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூவரை தூக்கிலிடுவது அரசியல் சாசனப்படி சரியல்ல என அவர்களது தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனையை உறுதி செய்து தனது தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் இயற்கை குணம், பண்புகள் மற்றும் அவர்களது முன்னோர்கள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தாமஸ் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மூவரையும் தூக்கிலிடுவது அரசியல் அமைப்பின்படி சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த தீர்ப்புக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னர், நீதிபதி சின்ஹா தலைமையிலான அமர்வு பிறப்பித்த ஒரு உத்தரவில், குற்றவாளியின் பண்புகளையும், இயற்கை குணங்களையும் ஆராயாமல் மரண தண்டனை விதிக்கக்கூடாது என உறுதிபட தெரிவித்ததை தாமஸ் சுடடிக்காட்டியுள்ளார்.
ஆகவே, முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யலாம் என நீதிபதி தாமஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறையில் கழித்துள்ள 22 ஆண்டுகள், ஆயுள் தண்டனையைவிட கூடுதலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மூன்று பேரையும் தூக்கில் போடுவது, ஒரே குற்றத்திற்காக இரண்டு தண்டனை விதிப்பது போன்றதாகும் என அவர் கூறியுள்ளார்.
நீதிபதி தாமஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, கடந்த 2000ம் ஆண்டு ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் மூவரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

5 வயது சிறுமி துப்பாக்கியால் சுட, தாய் ???



தூத்துக்குடி அருகே 5 வயது சிறுமி ஏர்கன் துப்பாக்கியை வைத்து விளையாடிய போது குண்டு பாய்ந்து அவரது தாய் பலியானார்.
கொற்கை என்ற கிராமத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ், அமலா தம்பதியினரின் மகள் 5 வயது சிறுமி கேத்ரின்.
அந்தோணிராஜின் இளைய சகோதரர் சில்வர்ஸ்டார் தனது துப்பாக்கியால் வேட்டையாடிய பறவைகளை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். துப்பாக்கியின் விசையை கேத்ரின் தற்செயலாக அழுத்த, குண்டு பாய்ந்து அமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த ஏரல் பொலிசார், உயிரிழந்த அமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியிடம் ஏர்கன் துப்பாக்கியை விளையாடக் கொடுத்த, அச்சிறுமியின் சித்தப்பாவின் நண்ரான ஜெயக்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சில்வர் ஸ்டார் மற்றும் சிறுமி கேத்ரினிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 

23 February 2013

2ம் ஆண்டு நினைவு...

நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களை விட்டு நீங்காது.....!!! - Selvarani Koneswaran, Ahilvana Vathsan, Ajirtha Thavakugan, Nerusha Thavakugan, Chayarubi Pahitharan, Abihas Kunaseelan, சி.த. அமலன், Agash Kunaseelanமற்றும் Sriparan Sarankan உடன்

22 February 2013

சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள்

 
ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4  தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது.
இந்தநிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பே வழங்கியதாக சனல் 4 ன் பணியாளரும், நோ பயர் சூன் (No Fire Zone) என வெளிவர இருக்கும் ஆவணப்படத்தின் தயாரிப்பாளருமான கெலம் மக்ரே வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதற்கான போராட்டத்தில் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பின் பணி முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

21 February 2013

தொழிலாளருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த தொடர் சித்ரவதை:



வீட்டுவேலைக்காக பிரித்தானியா சென்ற இந்திய பெண், அவரது எஜமானரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயான 39 வயது பெண், பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடியின் மேலாளராக பணியாற்றிய அலீமுதின் முகமது என்பவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். அப்பெண்ணிற்கு 34 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக அலீமுதின் முகமது வாக்களித்திருந்தார்.

துணி துவைத்தல், சமையல் உள்ளிட்ட வேலைகள் செய்ய பணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அலீமுதின் முகமதுவும் அவரது மனைவி ஷமீனா யூசுப்பும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினர்.

எஜமானி ஷமீனா யூசுப், இந்திய பெண்ணின் கைகளில் வெந்நீரை கொட்டியும், தலை உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வரும் அளவுக்கு தாக்கியும் சித்ரவதை செய்துள்ளார்.

அவருக்கு 1,700 ரூபாய் தான் சம்பளம் தரப்பட்டது. இது தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளில் புகார் அளித்தும் அலீமுதின் தம்பதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு முறை தேநீர் கிண்ணத்தை வீசி காலில் காயம் ஏற்படுத்தியதற்காக ஷமீனா யூசுப் மீது அந்த பெண் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, ஷமீனா யூசுப் கைது செய்யப்பட்டார். எனினும் அந்த வழக்கு பின் கைவிடப்பட்டது.

பின்னர் அலீமுதின் முகமதின் தாய் நடத்தி வந்த கடையில் இந்திய பெண் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் அவருக்கு சித்ரவதை தொடர அத்துடன் அந்த கடையின் இன்னொரு முதலாளி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பின் கண்ணாடி கடை நடத்தி வந்த சஷி ஓபராய் என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அவரும், பேசிய சம்பளத்தை தராமல், அந்த பெண்ணை அடித்து சித்ரவதை செய்தார்.

புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு உதவும் "கல்யாண்" என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, உதவ முன்வந்ததையடுத்து, அந்த பெண்ணை சித்ரவதை செய்த ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக,,,



இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு! நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம்
[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 12:23.47 AM GMT ]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கேட்டபோது,

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

அதிமுக நிலையை விளக்கி அக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கொண்டு வர வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை, தமிழகத்துக்குச் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்துவர் என்றார்.

இதற்கிடையே, இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவை அ.தி.மு.க. கட்சித் தலைவர் டாக்டர் வா.மைத்ரேயன் கொடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறுகையில்,  சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உள்படுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்' என்றார்.

பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் கூறினார்.

2ம் இணைப்பு

நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம்

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று திமுக, அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பத் தொடக்கினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை இருக்கையில் அமருமாறு மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா மற்றும் நாராயணசாமி ஆகியோர் வலியுறுத்தினர். எனினும், எவ்வித இடையூறும் இன்றி பிரணாப் தனது உரையை தொடர்ந்தார்.

சமைத்துச் சாப்பிடுபவர்களா, தமிழர்களு க்கு ..


பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, தமிழர்களு
க்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்? - கவிஞர் வைரமுத்து
இலங்கை அதிபர் ராஜபக்ச கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்? என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

சர்வதேச சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை இலங்கையில் விழுகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் 12 வயது பாலசந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும் போது இருதயம் ஒரு கணம் நின்று விட்டது. என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது.

பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள், மிருகம் கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ. இதயமற்ற இலங்கை இராணுவத்திற்கு?.

மரணம் நெருங்கும் போது என்னதான் நினைத்திருக்குமோ. அந்தக் கொலைக்களத்துக் குலக்கொழுந்து? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான்.

வாழைத்தண்டு மார்பில் வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப் போன தோட்டாக்கள். கண்கள் என்ற உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன்.

ஒரு பிள்ளையைக் கொல்லவா பீரங்கி? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு? போர்க் குற்றங்களை மறைக்கும் இலங்கை இன்று ஒரு சர்வதேசச் சாட்சியத்தின் முன்னால் தலைகுனிந்து நிற்கிறது.

இலங்கை அதிபர் ராஜபக்ச கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்?

இந்த நூற்றாண்டை நினைத்தே நான் வெட்கப்படுகிறேன். மனிதன் வானத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறான். மனிதம் பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.

உலக நாடுகள் வெட்கித் தலைகுனியட்டும். ஐ.நா சபை இது குறித்து ஆழ்ந்த கவலை கொள்ளட்டும்; தீர்வு சொல்லட்டும்.

பால்முகம் மாறாத பாலகனே! பாலசந்திரனே! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி ஆனவனே! அழுகிறோம். சாவை மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து சிந்திய இரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து.

ஏவுகணை தாக்குதல்: சிரியாவில் 19 பேர்??


சிரியா ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கெதிராக நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர் பதவி விலகாததால் மக்களுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற கடந்த சில வாரங்களாக சண்டை நடந்து வந்ததில் சிரியா ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியதில் 19 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கவே அலெப்போவில் ராணுவத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அலெப்போ விமான நிலையம் கிளர்ச்சியாளர்கள் வசமாவதை தடுக்க கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் அலெப்போவை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வான்வழி தாக்குதல்கள் மூலம் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது
 

20 February 2013

மாணவிகளுடன் கலந்துரையாடிய கமரூன்,,

பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் நடிகர் அமீர்கானுடன் சேர்ந்து கல்லூரியொன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றார்.
மேலும் பஞ்சாப்பில் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்று வழிபட்ட அவர், இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஜாலியன் வாலாபாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சுமார் 94 வருடங்களுக்கு பின்னர் பிரிட்டன் பிரதமர் ஒருவர் பஞ்சாப்பிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் மத்திய டெல்லியில் உள்ள Janki Devi Memorial Collegeல் கமரூன், பாலிவுட் நடிகர் அமீர்கான் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.{புகைபடங்கள்,}
அரசியலை விட பாலிவுட் பிரபலமானதென்றும் பிரபலமான அரசியல்வாதியொருவர் பாலிவுட் நடிகர்களுடன் செல்ல வேண்டுமென்பதை இந்தியாவில் தாம் கற்றுக்கொண்டதாக கமரூன் தெரிவித்தார்

19 February 2013

பெண்ணை படமெடுத்த வாலிபருக்கு தர்ம அடி,,.



தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த சந்தியா(வயது 21), என்ற ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்திருக்கிறார்.
நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். இதை சந்தியா பார்த்து விட்டு அலற, உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை பொலிஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்
 

பனிச்சரிவில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை,,


நென்டஸ் வேபியர்(Nendaz-Verbier) என்ற மலைச்சரிவில் பனிசறுக்கு விளையாட சென்றபொழுது பனிசரிவில் சிக்கி சியான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார் என்று வெலஸிஸ் கேன்டுநல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
15 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் கொண்ட ஆறு குழு கடந்த வியாழன் அன்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர்.
இதில் 4 குழுக்கள் பனிச்சறுக்கு விளையாடும்பொழுது தவறி விழுந்துவிட்டனர். இதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
ஜெனிவாவை சேர்ந்த 48 வயது நிரம்பிய மற்றொருவர் கடந்த வியாழன் அன்றே சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்றும் கடந்த வார இறுதியில் 38 வயது நிரம்பிய வாடு என்பவர் மலை உச்சியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்,{ புகைபடங்கள்}.
இதுபோன்ற பல இறப்புகள் இந்த அவலாச்சி மலைச்சரிவில் நடைபெற்றுள்ளது.
மேலும் கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை 19 பேர் இறந்துள்ளதாகவும் இந்த வருடத்தையும் சேர்த்து ஏறக்குறைய 25 நபர்களுக்கு மேல் இறந்துள்ளதாக பத்திரிக்கையின் தகவலறிக்கை தெரிவித்துள்ளது.

18 February 2013

Lamborghini அறிமுகப்டுத்தும் அதிநவீன கார்,,

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதும் அழகிய வடிவமைப்பும் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Lamborghini ஆனது தற்போது Sesto Elemento எனும் புதிய மொடல் காரை அறிமுகப்படுத்துகின்றது. இந்நிறுவனத்தின் 50வது வருட முடிவில் அறிமுகப்படுத்துப்படும் இக்காரானது 570 குதிரைவலுவினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தை பெறுவதற்கு 2 செக்கன் நேரத்தினை மட்டுமே எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது,[காணொளி]

15 February 2013

விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பு...

 

சென்னை மெரீனா கடற்கரை அருகே அமைந்துள்ளது நொச்சிக்குப்பம். இங்குள்ள குடிசை வீடுகளை அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவுக்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நொச்சிக் குப்பம் பகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளை அகற்றக் கூடாது என
வலியுறுத்தி நேற்று கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

14 February 2013

ஒரு வழியாக தமிழகம் வந்தது காவிரி நீர்



கர்நாடகம் அரசு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் 5 நாட்களுக்குப் பின், இன்றுதான் தமிழகம் வந்து சேர்ந்தது.
கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு அதிகாலை சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்துசேர்ந்துள்ளது.
காவிரி ஆற்றுப்படுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதால் ஆங்காங்கே உள்ள மேடு பள்ளங்கள் நிரம்பி, வறண்ட பூமி உறிஞ்சி மிஞ்சிய தண்ணீர்தான் இப்போது வந்துகொண்டிருக்கிறது.
இதுவே தண்ணீர் தாமதமாவதற்கு காரணமாக கூறப்படுகிறது. வழக்கமாக பிலிகுண்டுலுவில் இருந்து 8 மணிநேரத்தில் தண்ணீர் மேட்டூருக்கு வரும்.
இந்த முறை தண்ணீரின் அளவு குறைவாலும், வறண்ட நிலை காரணமாகவும் இன்றிரவு மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

13 February 2013

விநோதினிக்கு இன்று இறுதிச்சடங்கு

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வினோதினியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒரு தலைக்காதலால் கடந்த ஆண்டு நவம்பரில் சுரேஷ் என்பவர் ஆசிட் ஊற்றியதில், வினோதியின் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான காரைக்காலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன.
வினோதியின் மீது அமிலம் ஊற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் மீதான வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
அவரது மரணம் புதுச்சேரி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் படத்துக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மாணவ, மாணவிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஆசிட் வீச்சுப்போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்

12 February 2013

ராஜ்யசபைகளில் இலங்கைப் பிரச்சினை எதிரொலிக்கும்,,,

இந்தியாவின் லோக்சபை, ராஜ்யசபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த இரண்டு சபைகளிலும் இலங்கையின் பிரச்சினையை முன்வைக்க தமிழகத்தின் அதிமுகவும், திமுகவும் தயாராகி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த இரண்டு கட்சிகளும் கீழ், மேல் சபைகளில் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் திமுக பிரதிநிதிகள், எம் கே ஸ்டாலின் தலைமையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு சென்று அமெரிக்க யோசனைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி வருகின்றனர். நேற்று அவர்கள் இத்தாலி, மலேசியா போன்ற தூதரகங்களுக்கு விஜயம் செய்து தமது கோரிக்கையை முன்வைத்தனர். அத்துடன் அவர்கள், அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகளையும் சந்தித்தனர்

10 February 2013

சொந்த நாட்டு மக்களை கொல்ல உத்தரவிட்டாரா ஒபாமா?


சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் அசாஞ்ச் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்கா உட்பட பல நாட்டு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அசாஞ்ச், தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தங்கள் நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க அரசியல் நடைமுறையை சிதைத்து விட்டார். இதுபோன்ற அரசுகள் மக்களை மதிக்காமல் செயல்படும்போதுதான், அவர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்த விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகள் தேவைப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், உளவு பார்ப்பதற்காகவும் ஆள் இல்லாத விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான விதிகளின் முழுவிவரங்களை வெளியிட அமெரிக்கா தயாரா? இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து யாராவது எங்களுக்கு உதவ முன்வந்தால் வரவேற்போம். அவர்களின் பெயரை ரகசியமாக வைத்திருப்போம். அமெரிக்காவின் திரைமறைவு நடவடிக்கைகளை உலகுக்கு அம்பலப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

09 February 2013

அமெரிக்காவில் பனிப்புயல்: 2000 விமானங்கள் ரத்து


அமெரிக்காவில் பனிப்புயலின் காரணமாக 2000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடும் பனிப்புயல வீசி வருவதால், சாலைகளில் 2 அடி உயரத்துக்கும் மேல் பனி குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் நியூயார்க், பாஸ்டன் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 2000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது

08 February 2013

வழக்கம்போல் தமிழர்களின்,,,,,,,,,,


இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புத்த கயாவை சென்றடைந்துள்ளார். இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலத்தின் புத்த காயாவை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மாநில பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மஹாபோதி விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர், (புகைபடங்கள்)

பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்,,,,,,,


சீனாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு "ஒரு குழந்தை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி நகர்புறங்களில் இருக்கும் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டும் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியுண்டு. இதனை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி ஷிஜியாங் பகுதி தம்பதியினரிடம் மூன்றாவது குழந்தை பெற்றதற்காக அபராத தொகை கேட்டு சீன மக்கள் தொகை கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பெற்றோர் கையில் இருந்து தவறி விழுந்த, 13 மாத ஆண் குழந்தை மீது அதிகாரிகள் வந்த வாகனம் ஏறியது. இந்த விபத்தில் குழந்தை பரிதாபமாக மரணமடைந்தது

07 February 2013

பிரேரணைகளை எதிர்கொள்ள தயார்:,,,,

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இதேவேளை இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் உள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சில வருடங்களே ஆகின்றன. இந்நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறுவது நியாயமற்றதாகும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பது இந்நாட்டின் ஜனாதிபதி மூலம் ஏற்படுத்தப்பட்டதே தவிர வேறு யாராலும் அல்ல. இந்த ஆணைக்குழு அறிக்கையில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என எங்களுக்கு யாரும் கோரிக்கை விடுக்க அதிகாரம் இல்லை. இதேவேளை நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் வருகின்றோம். எல்லா பிரச்சினைகளுக்கும் குறைந்த காலத்தில் தீர்வை பெற்றுகொடுக்க முடியாது. காலத்திற்கு ஏற்ற வகையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார்

6வது முறையாக மார்பை பெரிதாக்க முயன்ற ஆபாச நடிகை மரணம்


ஜேர்மனியைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர் ஆறாவது முறையாக மார்பகப் பெருக்க அறுவைசிகிச்சை செய்ய முயன்று உயிரை விட்டுள்ளார். ஜேர்மனியைச் சேர்ந்த கரோலின் வொஸ்னிட்ஸா, ஆபாசப் பட நடிகை ஆவார். 23 வயதான இவர் பல நீலப் படங்களில் நடித்துள்ளார். இவர் மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 5 முறை மார்பகப் பெருக்க அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இந்நிலையில் 6வது முறையாக மார்பில் அறுவை சிகிச்சை செய்ய முயன்ற போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டொக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சையின் போது கரோலினுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்தே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழக்கக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹம்பர்க் நகர நீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும் கரோலின், பிக் பிரதர் நிகழ்ச்சியின் ஜேர்மனிப் பதிப்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

06 February 2013

இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை,,,,,,

குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள முதலமைச்சர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தனது வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக சந்தித்துள்ளார். குஜராத் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலவராகியுள்ள நரேந்திர மோடி, தனது வெற்றிக்கு பின்னர் டெல்லி வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று மாலை டெல்லி பல்கலைகழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், நேராக பிரதமர் இல்லம் சென்று மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார். அப்போது அவர் குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது

05 February 2013

செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம்,,,,,,,

புதிய தலைமைச் செயலக வளாகம் இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவ.தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2013 - 12:09 ஜிஎம்டி Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்துவிட்டதாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார். அம்மனு தீர்ப்பாயத்தின் சென்னைப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது. ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த வாரம்தான் ஓமந்தூரார் வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவினை அரசு தொடங்கியது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப் பிரிவு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ன என்று அரசைக் கடிந்துகொண்டார். மேலும் இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன் தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார். மனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட டெல்லி செல்லும்,,,,,,,

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்கின்றனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து தனது தலைமையில் பெப்ரவரி 8-ம் திகதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆ.பாஸ்கரசேதுபதி தலைமையில் சீருடை அணிந்த தொண்டரணியினர் 100 பேர் டில்லி பயணமாகியுள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட சம்பர்க்க கிராந்தி எக்ஸ்பிரஸ் புகையிரதத்தின் மூலம் அவர்கள் டில்லி நோக்கி பயணமாகியுள்ளனர். அவர்களை வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் வழியனுப்பி வைத்ததாகவும் மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது