Search This Blog n

01 February 2013

மாலியின் கடைசி நகரத்தையும் கைப்பற்றியது பிரெஞ்சு ?

ஆப்ரிக்க நாடான மாலியில் ஒரு பகுதியை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். காவோ, திம்க்டு, கிடால் ஆகிய முக்கிய நகரங்கள் அவர்கள் பிடியில் இருந்தன. மாலி நாடு முன்பு பிரெஞ்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. எனவே பிரான்சின் உதவியை மாலி நாடியது. இதனால் பிரெஞ்சு படைகள் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீவிரவாதிகளுக்கெதிராக பிரெஞ்சு ராணுவம் போரில் ஈடுபட்டது. அவர்கள் தீவிர தாக்குதல் நடத்தி காவோ, திம்க்டு இரு நகரையும் கைப்பற்றினார்கள். கடைசியாக கிடால் நகரம் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது. நேற்று இந்த நகருக்குள் பிரெஞ்சு படைகள் புகுந்தன. ராணுவ ஹெலிகொப்டர்கள் உதவியுடன் 4 விமானங்களில் வீரர்கள் கிடால் விமான தளத்தில் இறங்கினார்கள். பின்னர் ஆயுதங்களுடன் நகருக்குள் சென்றனர். பிரெஞ்சு படையினரை எதிர்த்து ஆரம்பத்தில் தீவிரவாதிகள் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பிரெஞ்சு படைக்கு தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய அவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள். எனவே கிடால் நகரை பிரெஞ்சு படைகள் கைப்பற்றிக்கொண்டன. தற்போது தீவிரவாதிகள் கிராம பகுதிகளுக்குள் சென்றுவிட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த பிரெஞ்சு படை தயாராகி வருகிறது. ஏற்கனவே நைஜர், ஜாட் ஆகிய நாடுகளின் படைகளும் மாலிக்கு உதவுவதற்காக அங்கு முகாமிட்டுள்ளன. அனைத்து படைகளும் சேர்ந்து தீவிரவாதிகள் மீது கூட்டு தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றன

0 கருத்துகள்:

Post a Comment