Search This Blog n

08 April 2013

7 தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் ,,,,


ஈராக் நாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த 7 தீவிரவாதிகளுக்கு மக்கள் முன்னிலையில் நேற்று தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
தீவிரவாத குற்றவாளிகளை முறையான விசாரணையில்லாமல் ஈராக் அரசு தூக்கிலிட்டு வருவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்ற வேளையில், தற்போது 7 பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் கடுமையான மனித உரிமை மீறலாகும் என்று ஈராக்கில் உள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி கூறியுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு வரை ஈராக் அரசின் நிர்வாகம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போது வரை தூக்கு தண்டனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 2004ம் ஆண்டில் ஈராக்கை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஏராளமான தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment