Search This Blog n

03 April 2013

பாரிஸ் மேயர் பதவிக்கு மோதும் பெண்கள் ///


பிரான்சின் தலைநகரான பாரிசுக்கு முதன் முறையாக ஒரு பெண், மேயர் பொறுப்பை ஏற்கப்போகின்ற நிலையில் இப்பதவிக்குப் போட்டியிடும் இரண்டு பெண் வேட்பாளர்களிடையே தற்பொழுது சச்சரவு ஏற்பட்டுள்ளது.
பாரிசின் புறநகரான லாங்ஜுமியுவின்(Longjumeau) மேயராக உள்ள UMP கட்சியைச் சேர்ந்த நத்தாலி கோஸியஸ்கோ மோர்ஜெத்(Kosciusko-Morizet) மீது மானநஷ்ட வழக்குத் தொடுக்கப் போவதாக பாரிசின் துணை மேயராக இருக்கும் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த ஆனி ஹிடால்கோ(Anne Hidalgo) தெரிவித்துள்ளார்.
ஹிடால்கோ கடந்த 2012ம் ஆண்டில் நகர் மேம்பாட்டுக் கழகமான APURல் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நத்தாலி குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை தன் மீது சுமத்தி நத்தாலி மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்போவதாக ஹிடால்கோ அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆனி ஹிடால்கோவின் சட்டதரனி பேட்ரிக் கிலுக்மேன்(Patrick Klugman) கூறுகையில், தனது கட்சிக்காரர் இதுவரை காவல்நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ சென்றது கிடையாது. இந்நிலையில் அவரைப் பற்றி நத்தாலி அவதூறு பேசியதால் மான நஷ்டவழக்கு தொடரப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு பற்றிய செய்தியைக் கேட்டு நத்தாலி அதிர்ச்சியடைந்ததாகவும், அவர் ஹிடால்கோ மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானது எனவும் அவரது சட்டதரனி ஜீன்-யேவ்ஸ் டூப்யூ(Jean-Yves Dupeaux) கூறினார்.
இன்னும் மேயர் தேர்தல் நடக்க ஒரு வருடம் இருக்கும் நிலையில் இந்த மேயர் வேட்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment