This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 July 2013

யானை இடித்ததால் தடுமாற்றமடைந்த முதல்வர் ஜெயலலிதா


தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா யூன் 28ம் திகதி முதல் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட காரில் சென்ற இவர், அடர்ந்த வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள், மான் கூட்டங்களை பார்த்து ரசித்துள்ளார்.
பின்னர் தெப்பக் காட்டில் உள்ள யானை முகாமிற்கு வந்த முதல்வருக்கு 22 யானைகள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மூர்த்தி என்ற மக்னா யானைக்கும் முதுமலை என்ற யானைக்கும் காவேரி என்ற 2 வயது குட்டி யானைக்கும் உணவு, பழம் இவற்றை முதல்வர் ஜெயலலிதா ஊட்டியுள்ளார்.
அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்ட காவேரி என்ற குட்டியானை முதல்வரை தும்பிக்கையால் இடித்துள்ளது.
இதனால் தடுமாற்றமடைந்த முதல்வரை அவரை சுற்றியிருந்த காவலர்கள் தாங்கிப் பிடித்துள்ளனர். இதனால் சற்று பதற்றம் ஏற்பட்டவே அங்கிருந்து உடனே புறப்பட்டார் ஜெயலலிதா.

30 July 2013

! கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்


திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நீது ஜெய்சிங்கானி(வயது 21) என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.
இவரை தெருவோரத்தில் கடை நடத்தும் அமீத் தல்ரேஜா என்பவர் திருமணம் செய்ய விரும்பினார்.
இதனை நீதுவிடம் தெரிவிக்க, முதலில் சம்மதித்தவர் பின் வேண்டாம் என கூறினார்.
இதனால் கடும் கோபமடைந்த அமீத், நீது பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.
பலத்த காயமடைந்த நீது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவான அமீத்தை தேடி வருகின்றனர்

சுங்கத்தினரிடம் சிக்கினர்! தங்கம் கடத்தியவர்கள் ?


சென்னை சுங்க அதிகாரிகள் 2.5 கிலோகிராம் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 14 பேரை கைது செய்துள்ளனர்.
இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு வெவ்வேறு வானூர்திகளில் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மற்றும் மதுரை போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலா வீசாக்களில் கொழும்பு, மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.
அவர்களின் பலர் வழமையாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் என்றும் இந்தமுறை கடத்தப்பட்ட தங்க பொதிகளை தமிழகத்தில் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்க செல்ல முன்பதாகவே கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடத்தல் ஒன்றுக்காக அவர்களுக்கு 5 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் இந்திய ரூபாய்கள் வழங்கப்படுகின்றமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது

இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!!


மும்பையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் 2006 ஜனவரி 25ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்த போது சிவானந்தன் என்பவர் தனது சூட்கேசில் 2.7 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிவானந்தத்துடன் சேர்த்து சுந்தர், வசந்தராஜா, சிவராஜ், காளி மற்றும் நாதன் ஆகியோரும் போதைப் பொருள் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் எனவும், இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் பொலிஸாருக்கு தெரியவந்தது.
இந்த ஆறு பேரில், சுந்தர், காளி, நாதன் ஆகியோர் தலைமறைவாகினர்.
சிவானந்தன், வசந்தராஜா மற்றும் சிவராஜ் ஆகிய மூவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருந்தமை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி வி.ராமமூர்த்தி விசாரித்து வந்தார்.
அரசு சார்பில் சிறப்பு வழக்குரைஞர் என்.பி.குமார் ஆஜரானார்.
வழக்கின் இறுதி விசாரணையில் வசந்தராஜா மற்றும் சிவராஜ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சிவானந்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

28 July 2013

முதலமைச்சர் பதவியிலிருந்து விலக தயாரா?


முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்த தவறுகளுக்காக பதவி விலக வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு தீங்கு விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15ம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால் ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது என கூறியிருந்தார்.
அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாததுடன் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார் ஜெயலலிதா.
இந்நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதுடன் அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்காக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து ;


எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
எனது தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் டார்ஜீலிங் மலைப் பகுதியிலும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள்மகால் பகுதியிலும் அமைதி நிலவி வருகிறது.
இந்த அமைதியை சீர்குலைக்கவும் மாநில அரசின் நடவடிக்கைகளில் தடையை ஏற்படுத்தவும் மத்திய அரசு தனது ஏஜென்சிகளின் மூலம் முயற்சித்து வருகிறது.
கடந்த கால ஆட்சியின்போது 2003ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலவரங்களில் 40 பேர் பலியாகினர். 2008 உள்ளாட்சி தேர்தலில் 35 பேர் பலியாகினர். தற்போது நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
கள்ள ஓட்டு சம்பவங்கள் ஏதுமின்றி ஜனநாயக முறையில் தற்போதைய தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
முந்தைய ஆட்சியின் போது மாநிலத்தின் வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் தற்போதைய தேர்தல் வன்முறையைப் பற்றி அழுது புலம்புகின்றனர். அவர்களுடன் சேர்ந்துக்கொண்டு எனது தலைமையிலான மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது.

27 July 2013

பிரபல தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல்!


தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ஒரு மர்ம போனில் மாகாத்மா மேல்நிலைப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த இணைப்பை துண்டித்துள்ளனராம்.
இந்த தகவலை சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து மதுரை பொலிஸ் கொமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு சொல்லியுள்ளனர். இதேபோல் மதுரை பொலிஸ் கொமிஷனர் அலுவலகத்துக்கும் மிரட்டல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை கொமிஷனர் சஞ்சய் மாத்தூர், எஸ்.பி. பாலகிருஷ்ணன், ஐந்து உதவி கொமிஷனர்கள், 50க்கும் மேற்பட்ட பொலிசார் பள்ளியில் சோதனை நடத்தியுள்ளனர்.
இரவு 7.30 மணி முதல் பள்ளியில் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு வண்டிகள் என பள்ளியில் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.
5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளியில் முழு சோதனை நடத்திய பின்னரே பள்ளியில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் நடந்த இந்த சோதனையால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கிழிந்த நிலையில் தேசியக் கொடியை ஏற்றிய பொலிசார் !


இந்தியாவில் தேசியக்கொடியினை கிழிந்த நிலையில் ஏற்றிய இரு பொலிசார்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காள பொலிஸ் துறையின் தலைமை செயலகத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது தேசிய கொடி ஏற்றப்படும். பின்பு அஸ்தமனத்தின் போது இறக்கி மறுநாள் காலை உரிய மரியாதையுடன் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த அலுவலகத்திலிருந்து தேசிய கொடி கிழிந்த நிலையில் பறப்பதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கிழிந்த கொடியை கவனிக்காமல் ஏற்றிய 4 உதவி காவல் துறையினர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி கூறுகையில், தேசிய கொடியை அவமானப்படுத்திய குற்றத்திற்காக அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

பசிக்காக சாப்பிட்ட மாணவர்களை தனியறையில் பூட்டிய ?


உத்திரபிரதேச மாநிலத்தில் தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் மாணவர்களை பூட்டி தண்டனை கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களான ஆயுஷ் மற்றும் ரதி ஆகியோர் மிகுந்த பசியின் காரணமாக மதிய உணவை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டுள்ளனர்.
இதனைக் கண்டறிந்த ஆசிரியர் மாணவர்களைத் தண்டிக்கும் விதமாக அவர்களை ஒரு தனியறையில் வைத்துப் பூட்டியுள்ளார். பின்பு ஞாபக மறதியில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இந்நிலையில் அடைத்து வைக்கப் பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் திறந்து விடாததால் மாணவர்கள் இருவரும் பயத்தில் அழத் தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பூட்டிய அறைக்குள் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த பொதுமக்கள் ஆவேசமாக அப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். பின்பு காவல் துறையினர் ஈடுபட்டு பெற்றோர்களை சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்த்துவைத்துள்ளனர்.
 

26 July 2013

ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? சி.பி.ஐ.!!



சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஐ.டி. கணிதத் துறையில் பணியாற்றும் டாக்டர் வசந்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி. கணிதத் துறையில் கடந்த 1988-ம் ஆண்டு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டேன். 1995-ம் ஆண்டு நடைபெற்ற இணை பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும், 1996-ம் ஆண்டு நடைபெற்ற பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும் என்னை தேர்வு செய்யுமாறு கோரி விண்ணப்பம் செய்தேன்.
அந்தப் பணிகளுக்குத் தேவையான தகுதிகளையும், அனுபவத்தையும் நான் பெற்றிருந்த போதிலும் என்னை தேர்வு செய்யவில்லை. மாறாக என்னைவிட தகுதிகள் குறைந்த நபர்களை அந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
மேலும் இந்த தேர்வுகளின் போது இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இடஒதுக்கீட்டை பின்பற்றி இருந்தால், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த நான் நிச்சயம் தேர்வாகி இருப்பேன்.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை தேர்வுக் குழுவினர் முறையாகப் பின்பற்றாததால் எனக்கு இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதுபோல மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எம்.ராதாகிருஷ்ணன், என்.மனோகரன் உட்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ந நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
1995-ம் ஆண்டு முதல் 26.9.2000 வரை சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த பணி நியமனங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்து சட்டப்படி சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மனுதாரர் வசந்தா, 27.7.1995 முதல் இணை பேராசிரியராகவும், 18.12.1996 முதல் பேராசிரியராகவும் ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வருவதாக கருதப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு நிவாரணமாக 2 ரூபாய்க்கு காசோலை


 டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2, ரூ.3  மற்றும் ரூ.6 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரியான பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளின் பயிர்கள் கடும் சேதத்திற்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஒரு தொகையை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரியான அரசானது விவசாயிகளுக்கு 2 ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கியுள்ளது. ஆனால் இந்த காசோலையானது எங்களது வருமையை அசிங்கப்படுத்துவது போன்று உள்ளது என கூறி விவசாயிகள் இந்த காசோலையினை நிராகரித்துவிட்டனர்.
இது குறித்து அரியான அமைச்சர் புபைன்டர் சிங் ஹோடா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எம்.ஏல்.ஏ.கள் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து இந்த தொகையினை வழங்கியுள்ளோம் எனவும் இந்த இழப்பீட்டுத் தொகையானது சரியான தொகையாகும் என கூறியுள்ளார்.
அரியானா அரசாங்கம் கொடுத்துள்ள இந்த காசோலையானது எங்களை இழிவுபடுத்தும் செயல் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

24 July 2013

மதிய உணவுசாப்பிட்ட குழந்தைகளில் !!!



பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று போலீசில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கில் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரையும் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் இறந்து ஒரு வாரத்திறகுப் பிறகு முதல்வர் நிதிஷ் குமார் இன்று இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாப்ரா பள்ளியில் நடந்த சம்பவத்தால் மிகுந்த கவலை அடைந்தேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவர்களின் சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்தோம். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தேன்.
காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் நான் நேரடியாக சாப்ராவிற்கு செல்ல முடியவில்லை.
மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து பெற்று கல்வி கற்பதை உறுதி செய்யும் சமூக நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
பீகாரில் மட்டும் செயல்படுத்தப்படவில்லை. இது தேசிய அளவிலான திட்டம். மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவோம்.
சாப்ரா பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக தடயவியல் ஆய்வறிக்கை கூறுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, பீகார் டி.ஜி.பி. தலைமையில் உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சதி ஏதேனும் நடந்துள்ளதாக என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த கிராமத்திற்கு இந்த குழுவினரை அனுமதிக்கவில்லை. அவர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. எனக்கு உள்ள பொறுப்புகளை நான் அறிவேன்.
கந்தமான் கிராமத்திற்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடிவு செய்திருக்கிறோம்.
மதிய உணவு மரணம் தொடர்பாக ஏதாவது கூறி, விசாரணைக்கு இடையூறு செய்வதை நான் விரும்பவில்லை. கந்தமான் கிராம மக்கள் நினைப்பதற்கும், வெளியுலகம் நினைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
உண்மை விரைவில் வெளிவரும். மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் நிதி மற்றும் பணியாளர்கள் தேவை என அவர் கூறினார்

பணமழையில் நனைத்த தொண்டர்கள்


தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பணமழையில் நனைந்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான மாவட்ட நிதியளிப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள மு.க.ஸ்டாலின் மதுரையிலிருந்து கார் மூலம் தேனிக்கு வந்தார்.
அப்போது அவர் வரும் வழியில் மாவட்ட செயலாளர் மூக்கையா தலைமையில் தேனி மாவட்ட எல்லையான தெக்கானூரணியிலிருந்து தேனி நகருக்குள் வரும் வரை அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் தேனி புதூர் பிரிவு அருகே மு.க.ஸ்டாலின் வரும்போது தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்டாலின் ரகு என்பவர் தான் வைத்திருந்த 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை கார் மீது தூவி வரவேற்றுள்ளார். அப்போது உடனிருந்த திமுகவினர் உரத்த குரல் எழுப்பி உற்சாகமாக கைத்தட்டியதுடன் அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து தொண்டர்களை சைகையால் அமைதிப்படுத்திய ஸ்டாலின் பின்பு பிரபல ஒட்டல் ஒன்றில் நடந்த மாவட்ட இளைஞரணியின் ஆய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்றார்

நடிகர் சஞ்சய்தத்தின் மனு நிராகரிப்பு: 42 மாதம்!!


மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய்தத்தின் சிறை தண்டனையை குறைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்ததை தொடர்ந்து அவரது தண்டனைக் காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சஞ்சய்தத் மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 5 ஆண்டு சிறைத் தண்டனையை குறைக்கக்கோரியும், மனுவினை மறுபரிசீலனை செய்யுமாறும் தற்போது உச்சநீதிமன்றத்தில் சஞ்சய்தத் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அவரது மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவினை தள்ளுபடி செய்ததுடன், 5 ஆண்டு சிறை தண்டனையில் மீதி உள்ள 42 மாதகாலத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்
 

இந்தியாவில் புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியீடு


சுதந்திர போராட்ட வீரரான மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் புதிய ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படவுள்ளது.
ரிசர்வ் வங்கியானது குறித்த சுதந்திர போராட்ட தியாகியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த நாணயத்தின் பின்புறம் மதன் மோகன் மாளவியாவின் உருவப் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
மேலும் கூகா இயக்கத்தின் 150ம் ஆண்டு நிகழ்வை குறிக்கும் வகையில் நாணயத்தின் பின்புற மத்தியில் சத்குரு ராம் சிங்ஜியின் உருவப்படமும், இடது பக்கம் அவரது தொண்டர்களின் கூட்டம் மற்றும் பீரங்கி பொறிக்கப்பட்டிருக்கும்

23 July 2013

கட்டிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா!!!


சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகர் விஜயக்குமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இவர், விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார்.
இதில் அவருடைய வயிற்றில் கட்டிலின் கால் பலமாக குத்தி விட்டது. இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மஞ்சுளா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் சோகமும், கவலையும் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நடிகைகள் குஷ்புவும், ராதிகா சரத்குமாரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில்,
குஷ்பு: மஞ்சுளா ஆன்ட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். என்னைப் பொருத்த வரை நீங்கள் தான் அழகான பெண். லவ் யூ சோ மச்.
ராதிகா: மஞ்சுளா விஜயகுமார் அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இன்று உங்களைப் பார்த்த பிறகு நாம் ஒன்றாக இருந்த நேரங்கள் மற்றும் உங்களின் அன்பு நினைவுக்கு வருகிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
நவற்கிரி இணையங்கள்,, மறைந்த விஜயகுமார் மஞ்சுளாவின் ஆத்மா சாந்தி அடையவேண்டுகின்றோம்

22 July 2013

ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போன சாய்னா நேவால்


ஐ.பி.எல் கிரிக்கெட்  லீக் போல் இந்தியன் பேட்மிண்டன் லீக்  நடைபெறுகிறது  இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணியில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெறுகின்றனர். 150 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இன்று இந்த லீக்குகான வீரர் , வீராங்கனைகளுக்கான ஏலம் டெல்லியில்  தொடங்கியது.  ஏலத்தில் ஹைதரபாத் அணிக்கு சாய்னா நேவால் 72 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் பிரிவில் பெங்களூர் அணிக்கு கஷ்யப் 44 லட்சம் ரூபாய்க்கும்.  மும்பை மாஸ்டர்ஸ் அணிக்கு மலேசிய வீரர் லீ சாங் ஒய் அதிக பட்சமாக 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை : சிறப்பு புலனாய்வு ?


பாஜ மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் இந்து முன்னணி மாநில செயலாளர்  வெள்ளையப்பன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க, டிஜிபிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:: தமிழக பாஜ பொது செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ், சேலத்தில் கடந்த 19ம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அரசியல் காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ நடைபெறும் வன்முறை மற்றும் வன்முறை குற்றங்களுக்கு நாகரீக சமுதாயத்தில் இடமில்லை. இந்த குற்றங்கள் உறுதியான, வலுவான நடவடிக்கைகளால் வேரறுக்கப்பட வேண்டும். சட்டம்  ஒழுங்கை பராமரிப்பதில் எனது தலைமையிலான அரசு உயர் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை பாதுகாக்க,  சட்ட விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கைகளை தமிழக காவல் துறை எடுத்து வருகிறது.
சட்டத்தை நிலைநாட்ட, சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் செயல்படுவதற்கு ஏதுவாக எவ்வித குறுக்கீடுகளும் இல்லாத சூழ்நிலை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் இருப்பிடமாக திகழ்கிறது. இனவாத, இடது சாரி தீவிரவாதம், மத அடிப்படைவாத வன்முறை  மோதல்கள் ஏதுமின்றி தமிழகம் திகழ்கிறது.
 சமூக விரோத சக்திகள், தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் கொலைகள், இன மோதல்கள் அல்லது தீவிரவாதத்தை எந்த வகையிலாவது தூண்டிவிடுதல், மாநிலத்தின் அமைதி நிலைமையை சீர்குலைக்கும் சக்திகள் அல்லது சமூக விரோத சக்திகளை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றங்களையும் கண்டறிந்து உறுதியான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எப்போதும் மேற்கொண்டு வருகிறது. மத வன்முறை தொடர்பான சம்பவங்களை கையாளுவதற்காக சிறப்பு புலனாய்வு பிரிவு தமிழக காவல்துறையில் ஏற்கனவே உள்ளது. பாஜக மூத்த தலைவர் அத்வானியை குறிவைத்து, திருமங்கலத்தில் கடந்த 2011ம் ஆண்டு வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்தது, இந்த சிறப்பு புலனாய்வு பிரிவு சமீபத்தில் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர்  வேலூரில் கடந்த 1ம் தேதி இந்து முன்னணி மாநில செயலாளர்  வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையையும் மேற்கொள்ளும்.
இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை மிக விரைவில் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏதுவாக, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு காவல்துறையினர் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து உதவிகளையும், தமிழக குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு காவல்துறை (சிபிசிஐடி) தலைமை இயக்குனர் வழங்குவார்.
தமிழக காவல்துறையின் திறமைகளை அனைவரும் அறிவர். ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோரை கொடூரமாக கொலை செய்தவர்களை தமிழக காவல்துறையினர், விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

மீண்டும் கனமழை: 152 பேர் பலி - 5 லட்சம் பேர் தவிப்பு



உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
ஷர்தா, காக்ரா, ராம்கங்கா, கங்கை, யமுனை, பெட்வா, கெய்ன், கோமதி, சாய், சராயு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோமதி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சீதாபூர், லக்னோ, சுல்தான்பூர் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சராயு ஆற்றின் வெள்ளப்பெருக்கில் பய்சாபாத், கோரக்பூர், பஸ்தி, குஷிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களும் கோமதி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் ரேபரேலி பகுதியின் பல கிராமங்களும் நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன.
15 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பயிர்கள் முற்றிலுமாக நாசமடைந்தன.
சுமார் 5 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடும் மழையின் விளைவாக வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்து விழுந்தும், மின்சாரம் மற்றும் மின்னல் தாக்கியும் இதுவரை 152 பேர் பலியாகியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
{காணொளி, }

15 ஆயிரம் அழுகிய முட்டைகள் : ஊழியர் சஸ்பெண்டு


வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் அருகேயுள்ள் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி உள்ளது . இப்பள்ளிக்கு சத்துணவு மையத்துக்கு முட்டைகள் நேற்று பிற்பகல் மினிவேனில் எடுத்து வந்து இறக்கப்பட்டன.
அப்போது பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்து வர மஸியூர் ரஹ்மான் என்பவர் சென்றுள்ளார். வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட முட்டைகளிலிருந்து தூர்நாற்றம் வீசியதால் அது குறித்து மினி வேனின் டிரைவரிடம் அவர் கேட்டுள்ளார்.
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹபிபுல்லா ரூமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து சில முட்டைகளை சோதனை செய்து போது, அவை அழுகியிருந்ததும், புழுக்கள் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஆம்பூரில் இயங்கி வரும் ஹசனாத்–யே–ஜாரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஹசனாத்–யோ–ஜாரியா நிதியுதவி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கும் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக அஸ்லம்பாஷா எம்.எல்.ஏ. வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கரிடம் புகார் செய்தார். இதையடுத்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், ஆம்பூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முட்டைகளைச் சோதனையிட்டனர்.
இதில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் முட்டைகள் அழுகி இருந்தது தெரியவந்தது.பள்ளிகளுக்கு முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் லாரிகளில் நேரடியாக முட்டைகளை கொண்டு சென்று விநியோகம் செய்வார். ஒன்றியங்களில் உள்ள ஒப்பந்ததாரர் முட்டைகளை வாகனங்களில் கொண்டு சென்று சத்துணவு மையங்களில் விநியோகம் செய்வார்.
இவ்வாறாக மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட 110 சத்துணவு மையங்களுக்கும், சுமார் 130 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் 3 லட்சத்துக்கும் மேலான முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அப்படி விநியோகிக்கப்பட்ட முட்டைகளில் ஆயிரக்கணக்கானவை அழுகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சத்துணவு அமைப்பாளர்கள் சரிபார்த்து வாங்க வேண்டிய முட்டைகளை மாணவனின் தந்தை சோதனையிட்டதால், விபரீதம் தடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு நேற்று விநியோகம் செய்யப்பட்ட 15 ஆயிரம் முட்டைகளையும் திரும்பப் பெற்று புதிய முட்டைகளை உடனடியாக விநியோகிக்குமாறு நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை நிறுவனத்துக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.
அத்துடன் அழுகிய முட்டைகளை பள்ளிகள், சத்துணவு மையங்களுக்கு விநியோகித்தமைக்காக அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
முட்டை விநியோகத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக மாதனூர் ஊராட்சி அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் பாலையா உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்

எழுச்சியை நசுக்குவதற்கு பலிகடாவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் ?


முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் அதிதமான இந்து சமய பற்றுடையவர். சுமந்திரன் வரவோடு கிறிஸ்தவ மயப்பட முயற்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் வருகையால் சமநிலைப்படுத்தப்படுகிறது.

ஆயினும், மதத்தை முன் வைத்து தமிழ்த் தேசிய அரசியல் நகர்வதென்பது தமிழினதுக்கு பேராபத்தானதுடன், தமிழர் அரசியை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி நகர்த்துகிறது. இதற்கு விக்னேஸ்வரன் துணைபோய்விடக்கூடாது.

நிற்க. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறையோடு செயற்பட்ட ஒருவர் அல்ல. சமாதான காலகட்டத்தில் கூட தமிழீழ நீதித்துறை அன்புரிமையோடு அவரை அணுகியபோது தமிழ் தேசியத்தை அவமதிக்கும் வகையில் அந்த அழைப்பை நிராகரித்தவர். அத்துடன், கொஐம்பை மையமாக கொண்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சார்ந்தவர். தjமிழர் தாயகத்தில வாழும் மக்களின் அவலங்களை நேரடியாக அனுபவித்திராதவர். இவரே, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கொழும்பிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் நியமிக்கப்பட்ட கையோடு இந்தியா ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கி வருகிறார். அதேவேளை, இந்தியா இவரது நியமளத்துக்கு பின்னால் உள்ளது என்ற செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளது. இவையெல்லாவற்றிற்கும் அப்பால், அமெரிக்காவையே அதிரவைத்த தமிழக மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முகமாக இந்தியா ஊடகமொன்றிற்கு பேட்டி வழங்கியுள்ளார்.

இது, தமிழக மாணவர்களின் எழுச்சியை தடுக்க முடியாது மிரண்டு போன இந்தியாவின் மத்திய அரசுக்கு ஆதரவான முறையிலேயே அமையப்பெற்றுள்ளதால், கடந்த காலங்களில் திரு.விக்னேஸ்வரன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. ஆதலால், திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தனது அரசியல் நகர்வுகள் தொடர்பாக மீள்பரீசீலனை செய்ய வேண்டும் என தமிழகத்திலுள்ள மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வேண்டுகளுக் ஆதரவு அளிப்பதாக யாழ் பல்கலைக்கழக சமூகத்தை சார்ந்தவர்களும்  தெரிவித்துள்ளார்கள்

21 July 2013

குடிநீர் தேவைக்காக ஆழியார் அணை நாளை திறப்பு:

 
முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் அணையின் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்காகவும் மற்றும் பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஆழியார் பழைய வாய்க்காலின் முதல்போக பாசனத்திற்கும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்கும் 22.7.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

பொதுச் செயலர் ரமேஷ் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது -


பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொதுச் செயலராக இருந்த சேலம் தணிக்கையாளர் ரமேஷ் சமூக விரோதிகளால் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும் அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோல கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார்.
தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழிசை செளந்தரராசன் கூறியுள்ளதுபோல் இது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இப்படிப்பட்ட படுகொலைகள் தடையின்றி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இந்த கொலைகள் செய்தவர்களைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பணத்திற்கு கொலை செய்யும் கூலிப் படையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.
தணிக்கையாளர் ரமேஷை அரிவாளால் வெட்டிக்கொன்ற மூன்று பேர் கும்பல் எவ்வித பதற்றமுமின்றி மிகச் சாதாரணமாக நடந்து தெரு முனைக்குச் சென்று தப்பியதாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். இதிலிருந்து கொலையாளிகள் கூலிப்படையினர்தான் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கூலிப்படையினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. 12 ஆண்டுகள் காத்திருந்து என் கணவரைக் கொன்ற எதரியை பழி தீர்த்தேன் என்று காவல்துறையினரிடம் ஒரு குற்றவாளி வாக்குமூலம் தந்த செய்தி நாளிதழ்களி்ல் வந்தது. இதேபோல் பல சமூக குற்றவாளிகள் அவர்களின் 'தொழில்' எதிர்களால் படுகொலை செய்யும் செய்திகள் அடிக்கடி வருகின்றன.
கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய மலையாள நடிகர் மோகன் லால் நான் கொல்லப்பட்டிருந்தால் எனது தாய் எப்படி துடித்திருப்பாரோ அதுபோலத்தானே சந்திரசேகரனின் தாய் துடிதுடித்திருப்பார். அந்த தாயின் மன நிலையில் இருந்து அந்தத் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.
கொலை செய்யப்படுபவர் யாராயினும் அதற்கு கொள்கையோ அரசியலோ காரணமாயினும் கொல்லப்பட்டவரின் தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பும் துயரமும் பொதுவானதுதான். கொள்கை எதிரிகளை தீர்த்துக்கட்டுவது என்கிற நிலை அதுவும் கூலிப்படை கொண்டு கணக்குத் தீர்ப்பது என்று போனால் அது நமது சமூக அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும். எனவேதான் இப்பிரச்சனையை தீவிரமாக கையாண்டு கொலையாளிகளையும் அவர்களை பின்னின்று இயக்கியவர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
கொலை கொள்ள செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெருகியுள்ளது. அதையும் தாண்டி இப்படிப்பட்ட அரசியல் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பாளர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட தணிக்கையாளர் ரமேஷ் குடும்பத்தினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சி தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக

ஓ பிளேக்கின் பதவிக்கு இந்திய பெண் பரிந்துரை


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் தலைவராக நிஷா பிஸ்வாலை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பிஸ்வாலாவின் பரிந்துரை செனட் சபையினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பணியகத்தின் தலைவராக இந்திய வம்சாவளி மற்றும் தெற்காசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பணியகம் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இலங்கை, இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிஷா பிஸ்வால் தற்போது அமெரிக்க உதவித் திட்டத்தில் பிரதி நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
அவரது நியமனம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ரொபேட் ஓ பிளேக்கின் இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் பதவியை பிஸ்வால் வகிக்கக் கூடுமெனக எதிர்ப்பார்க்கப்படுகிறது

18 July 2013

உணவு விஷமானது: 20 பேர் பலி, 35 பேர் உயிருக்கு போராட்டம்


பீகார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு உயிரிழந்த மாணவர்களின் 20ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று மதியம் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த மதிய உணவு வழங்கப்பட்டது.
இதைச் சாப்பிட்டதும் மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து அனைவரையும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சாப்ரா நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நேற்று 11 மாணவர்கள் பலியாயினர். இந்நிலையில் இன்று வரை பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதால், பீகாரில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 48 மாணவர்களுக்கு பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக இன்று சாப்ரா மாவட்ட மாஜிஸ்டிரேட் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
உணவில் விஷம் கலக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,{புகைபடங்கள் }




.

சென்னை மாணவி தற்கொலை !பிரித்தானியாவில்


இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த ஜார்ஜினா என்ற 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜார்ஜினாவின் உடலை பெறுவதற்காக தந்தை தாம்சன் மற்றும் உறவினர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.அங்கு அவரது உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.
தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து லிவர்பூல் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.உயிரிழந்த மாணவி ஜார்ஜினாவின் தந்தை தாம்சன் சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார்

17 July 2013

இந்தியாவில் அழுத்தம் கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில்


கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அரசியலில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் கற்கைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் சிறந்த உறவுகளைப் பேணும் பட்சத்தில் மாத்திரமே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தாக்கல் செய்த மனு தொடர்பில் விடயங்களை ஆராயுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திற்கு நேற்று அறிவித்தல் விடுத்தது.
1974ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை, இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆராய்வதே உயர் நீதிமன்றத்தின் நோக்கமாக அமைந்துள்ளது

கைவிட்ட இந்திய விமானப் படை


இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கரை தமது தூதராக நியமித்திருந்ததை இந்திய விமானப் படை தற்போது கைவிட்டிருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப் படையின் குரூப் கப்டனாக சிறப்பிக்கப்பட்டார். குரூப் கப்டன் பதவி என்பது விளையாட்டுத் துறையினருக்கான கெளரவ பதவியாகும்.
விளையாட்டுத் துறையைச் சேர்ந்த டெண்டுல்கருக்குத் தான் முதலில் குரூப் கப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
டெண்டுல்கர் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.
200வது டெஸ்ட் போட்டியை ஜனவரி மாதம் எதிர்கொள்கிறார். இந்நிலையில் டெண்டுல்கரை தமது தூதராக நியமித்திருந்ததை இந்திய விமானப் படை கைவிட்டிருக்கிறது.
டெண்டுல்கர் விரைவில் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
 

கணவருடன் சேர்த்து வையுங்கள்: 2 குழந்தைகளுடன் பெண் ?


காதல் திருமணம் செய்த கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்கோட்டை அருகே உள்ள அருவங்காட்டையை சேர்ந்த காமராஜ் மகள் செல்வி(வயது 27).
சேலம் மாவட்டம் முக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரவணன்(வயது 30).
அருவங்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சரவணன் சென்ற போது, செல்வியுடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் 2008ம் ஆண்டு ஜனவரி 18ல் திருமணம் செய்து சங்கராபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
சென்னை தனியார் நிறுவனத்தில் பணி செய்த சரவணன், 2010ம் ஆண்டில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளையும் விட்டு பிரிந்து சென்று விட்டார்.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது சிவகங்கை வேம்பத்தூர் வி.ஏ.ஓ., வாக உள்ளார்.
இந்நிலையில் மனைவி செல்வி ஜீவனாம்சம் கேட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலை 6.30 மணிக்கு, சிவகங்கை ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்த செல்வி கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
மாவட்ட அலுவலர் சிதம்பரம், வி.ஏ.ஓ சரவணனை வரவழைத்து இருவரிடமும் விசாரித்தார். பின் இருவரும் மகளிர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.
வி.ஏ.ஓ., சரவணன் கூறுகையில், நான் செல்வியை திருமணம் செய்யவில்லை. அவர் என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இப்பிரச்னையை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்

16 July 2013

பார்களில் அழகிகள் குத்தாட்டம் போடலாம்: நீதிமன்றம் அனுமதி


மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன.
குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன.
இதற்கு எதிராக மும்பை பொலிசார் கடந்த 2005ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது, இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை.
இந்த தடையை எதிர்த்து பார்கள் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், இதனை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மும்பையில் பார்களை மீண்டும் திறந்து அழகிகள் ஆட்டம் போடலாம் என்றும், பார்களில் ஆட்டத்திற்கு தடை இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.

15 July 2013

இளவரசன் உடல் இன்று மாலை அடக்கம்


தருமபுரி இளவரசனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
இளவரசன் மர்மமான முறையில் தருமபுரி அரசு கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும், முதலாவது பிரேத பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவரது பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று பரிசோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து இளவரசனின் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம் காலனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல் அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
உறவினர்கள், நண்பர்கள், நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் இளவரசனின் உடல் அடக்கம் நடக்கிறது.
இதற்காக நாயக்கன் கொட்டாயில் இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் 30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இளவரசன் உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி நத்தம் காலனியில் தருமபுரி எஸ்.பி அஸ்ரா கார்க், கிருஷ்ணகிரி எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் தலைமையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அந்த காலனிக்கு வர வழி உள்ள இரண்டு பாதையிலும் பொலிசார் செக்போஸ்ட் அமைத்து உள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
இளவரசன் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சிறுமியை காரை ஏற்றிக் கொன்ற நடிகர்


மதுரை மாவட்டத்தில் நடிகர் பாலசரவணன் என்பவர் 4 வயது சிறுமியை காரை ஏற்றிக் கொன்றது தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இந்த படத்தில் பரவையைச் சேர்ந்த பாலசரவணன் (வயது 26) என்பவர் நடித்து வருகிறார். இவர் குட்டிப்புலி என்ற படத்தில் பாலா என்ற பெயரில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.
இந்த பகுதியில் நடந்த புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்தவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். காரில் அழகர் கோவிலில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் வல்லாளபட்டியில் வந்து கொண்டிருந்தார்.
அவர் காரின் எதிரே பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வயலில் வேலை செய்து விட்டு தங்களது 4 வயது மகள் உமாமகேஸ்வரியுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே சிறுமி ஓடியதாக கூறப்படுகின்றது. இதில் நடிகர் பாலசரவணன் ஓட்டி வந்த கார் அவள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே காரில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு உமாமகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள். உடலை பார்த்து நடிகர் பாலசரவணன் மற்றும் சிறுமியின் தந்தை முருகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து மேலவளவு பொலிசார் வழக்கு பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
 

இந்திய இளைஞர் சுட்டுக் கொலை,,


மலேசியாவில் மர்மநபர்களால் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பென்னாங்க் மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவழி இளைஞர் எம்.ரவீந்திரன்(வயது 19).
இவர் தனது சக நண்பர்களுடன் பட்டர்வொர்த் நகரில் உள்ள கோவில் வளாகத்தில் மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரவீந்திரன் இறந்தார்.
மேலும் உடன் நின்று கொண்டிருந்த 51 வயது முதியவர் ஒருவர், 18 வயது இளைஞர் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

12 July 2013

சிறீலங்காவிற்கு கடற்பல்லிகளை கடத்தியவர்கள் கைது!


தமிழ்நாடு இராமநாதபுரத்தில் இருந்து சிறீலங்காவிற்கு கடத்த முயன்ற இந்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல் பல்லிகளை கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த மூவர்களையும் கைதுசெய்துள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து சிறீலங்கா வழியாக சீனா மலேஷியா தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான உலரவைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்றாக இந்த கடல்பல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும்இ அதற்காகவே இவை சட்டவிரோதமாக இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் தமிழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த கடல்பல்லிகள் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினமாக இருந்தாலும் இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இவற்றின் ஏற்றுமதிக்கு தடை இல்லை என்பதால் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் சட்டரீதியாக ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களிடமிருந்து ஒரு கிலோ உலரவைக்கப்பட்ட கடல்பல்லிகள் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும் இங்கிருந்து இவை இலங்கைக்கு சென்றபிறகு அதன் மதிப்பு ஒரு கிலோவுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாயாக அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கான முதல் கட்ட அனுமதி!


 தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான அனுமதியை வியாழக்கிழமை வழங்கியது.
இதையடுத்து அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இன்னும் 45 நாட்களுக்குள் மின் உற்பத்தியை தொடங்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக அதன் இயக்குநர் ஆர் எஸ் சுந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக உச்சநீதிமன்றம் விதித்த சில உத்தரவுகளை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளன என்று இந்திய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய வல்லமை கொண்ட இரண்டு அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முதலாவது அணு உலை செயல்படவே இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனினும் மின் உற்பத்தி தொடங்குவதற்கு முன்னர் அங்கு மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவை உள்ளது என்றும் கூடங்குள அணுமின் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதேவேளை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரவே செய்கின்றன

11 July 2013

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்: ??


 இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியாக முயற்சி காரணமாகவே இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சேதுசமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு மட்டுமன்றி இந்தியாவிற்கே இந்தத் திட்டத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
 

இளவரசன் ரயிலில் அடிபட்டதை 2 பேர் நேரில் பார்த்தார்களா?


தருமபுரி இளவரசன் ரயிலில் அடிபட்டதை 2 பேர் நேரில் பார்த்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், அந்த இரண்டு பேரும் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இளவரசன் ரயிலில் அடிபட்டதை தாங்கள் நேரில் பார்த்ததாக அந்த இரண்டு பேரும் டேங்க் ஆபரேட்டரிடம் கூறினராம்.
இதையடுத்து அவர் தலையாரியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமனுக்குத் தகவல் போனதாம்.
ஜெயராமன், தனக்குக் கிடைத்த தகவலை அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்குத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினராம்.
அப்போது இறந்தது யார் என்பது முதலில் போலீஸாருக்குத் தெரியவில்லை. அவரு பையைப் பார்த்தபோது அதில் இருந்த கடிதங்களில் திவ்யாவின் பெயர் இருந்ததால், இறந்தது இளவரசன் என்று சந்தேகமடைந்தனர் பொலிஸார்.
இதையடுத்து இளவரசன் ஊரைச் சேர்ந்த ஒரு பொலிஸ்காரரை அழைத்து வந்து அடையாளம் காட்டச் சொன்னபோதுதான் இறந்து கிடந்தது இளவரசன் என்று தெரிய வந்ததாம். பின்னர் இளவரசனின் தந்தையை அந்த பொலிஸ்காரர்தான் தகவல் கொடுத்து வரவழைத்து உறுதிப்படுத்தினாராம்
 

10 July 2013

ஜியா கான் தற்கொலையின் போது போதையில் இருந்தார்: திடுக்கிடும் தகவல்



இந்தியில் பிரபல நடிகை ஜியா கான் தற்கொலை செய்வதற்கு முன்பு மது அருந்தியிருந்தார் என்று பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜியா கான் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் விசாரணை நடத்தியதில், அவரது மரணத்தில் காதலன் சூரஜ் பஞ்சோலிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தற்கொலையின் போது மது அருந்தியிருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன

மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்


பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு எதிராக வதோதரா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நடனமாட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்காக அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டு இருந்தும், விழாவிற்கு வராமல் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளர் மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக வதேதரா நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்தார் மல்லிகா.
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு ஆஜராகத் தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் 294ல் கீழ் கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

09 July 2013

ஆபத்தான நிலையில் பேருந்து பயணிகள்



 திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புச் சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பேருந்து பயணிகள் பயத்தில் உள்ளனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட இந்த பகுதிக்கு செல்ல பண்ணாரியில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்லவேண்டும். இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை 209 என்பதால் இந்த வழியாக போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இதில் 6,8,9,20,27 உள்ளிட்ட கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்தானவை. கொண்டை ஊசி வளைவுகளின் ஓரத்தில் பள்ளம் என்பதால் தேசிய நெடுஞ்சசாலை திம்பம் மலைப்பாதையில் இரு பக்கமும் தடுப்பு சுவர் கட்டி வைத்துள்ளனர். ஆனால் இந்த தடுப்பு சுவரை அவ்வப்போது வாகனங்கள் திரும்ப முடியாமல் மோதி இடித்து விடுகின்றனர்.
இடிக்கப்பட்ட இந்த தடுப்பு சுவர்களை தேசிய நெடுஞ்சாலை துறை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. பேருந்துகள் இந்த வளைவுகளில் திரும்பும்போது சாலையின் எல்லைவரை செசன்று வருவதால் பஸ் பயணிகள் பயந்து விடுகின்றனர்.
தற்போது 9 மற்றும் 24 வது கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை இடிந்த சுவரை கட்டவில்லை. இதனால் இந்த கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த இரு வளைவுகளின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இருப்பதால் தடுப்பு சுவர் இல்லாமல் விபத்து ஏற்பட்டால் கட்டாயம் உயிர் சேசதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஆகவே தேசிய நெடுஞ்சசாலை துறையினர் உடனே திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் இடிந்துள்ள தடுப்பு சுவர்களை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்

07 July 2013

வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயர்கிறது?



பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செயுதுள்ளதால், வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
 பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதோடு, டீசல் விலையும் மாதம் தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பயணிகள், மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாய சூழலில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிய வருகிறது.

 ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அருணேந்திர குமார், இது பற்றி கூறுகையில், "எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை சீரமைப்பது பற்றிய ஆய்வுக் கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் ரயில் கட்டண உயர்வு பற்றி முடிவு செய்யப்படும்." என்று கூறியுள்ளார். எனவே, வரும் அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தெரிய வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால் சாதாரண மக்களை அதிகமாக பாதிக்காத  வகையில் ரயில் கட்டண உயர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளார். அவரது பரிந்துரை பல்வேறு பிரிவினருக்கும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத் தொடரில் ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் பற்றிய தகவல் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது. மற்ற அமைச்சர்களின் கருத்தை கேட்டபிறகு, ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கை வரைவு திருத்தி அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.இந்த ஆணையம் செலவுக்கு ஏற்ப ரயில் பயணிகள் கட்டணம், மற்றும் சரக்கு கட்டணங்களின் விலையை மாற்றி அமைக்கும் என்றும் தெரிய வருகிறது. இதற்கிடையே ரயில் சேவையை நவீனமயமாக்கும் திட்டம் படு ஸ்லோவாக நடப்பது வேறு, பிரதமருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும் ரயில்வேயில் முதலீடு செய்வதை அதிகரிக்கும் திட்ட அறிக்கைகளைத் தயார் செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 அதோடு, ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் மிகவும் தீவிரம் காண்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலக குறிப்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

06 July 2013

அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த, குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன் போது 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனவும் குர்ஷித், பெசில் ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார்

05 July 2013

இளவரசனின் உருக்கமான காதல் கடிதம்


தருமபுரி காதல் ஜோடி மறைந்த இளவரசனின் சட்டைப்பையில் இருந்து 2 கடிதங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இவரது உடல் நேற்று தருமபுரி அரசு கல்லூரிக்கு பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
அவரது சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்தது. அவற்றில் ஒன்று இளவரசன் தனது காதல் மனைவி திவ்யாவை பற்றி எழுதியது. மற்றொன்று திவ்யா இளவரசனுக்கு எழுதிய காதல் கடிதம்.
அதில் இளவரசன் எழுதியிருப்பதாவது, கடந்த 2010ம் ஆண்டில் திவ்யாவை நான் சந்தித்தேன். அப்போது அவர் ஐ லவ் யூ கூறினார்.
ஐனவரி 1ம் திகதி நானும், திவ்யாவும் வெளியில் சென்றோம். இந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது.
பிறகு சினிமாவிற்கு சென்றோம், அப்போது முதன் முதலில் திவ்யாவை முத்தமிட்டேன்.
நாங்கள் வெளியில் சென்று வருவது, திவ்யாவின் அண்ணனுக்கு தெரிந்த பின்னர் எங்களை சத்தமிட்டார்.
இதனால் நாங்கள் எங்கும் சேர்ந்து செல்லாமல் இருந்தோம். இதன் பின் செல்போனில் அடிக்கடி பேசினோம். சில நாட்களிலேயே கோவிலுக்கு சென்று தாலி கட்டி கொண்டோம்.
இதன் பின்னர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மதியம் 1 மணி முதல் மாலை வரை ஒன்றாக இருந்தோம்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். எங்கள் காதல் ஊராருக்கு தெரிந்து எதிர்ப்பு அதிகமானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ளது இளவரசனின் கையெழுத்து தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இளவரசனுக்கு திவ்யா ஆங்கிலத்தில் எழுதிய காதல் கடிதம் இளவரசனின் சட்டைப்பையில் இருந்தது.
கடந்த 2011ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் திவ்யா தான் இளவரசனுடன் பழகியது பற்றியும், அவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ளது திவ்யாவின் கையெழுத்து தானா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது
 

என்.எல்.சி. பங்கு விற்பனை: சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியகாந்திக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
 
 இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:

 நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடங்கிய 22 தொழிற்சங்கங்களும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது, ஜூன் 22-ஆம் தேதி நெய்வேலி பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது.

 அப்போது தமிழக அரசின் சார்பில் தங்களுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்.

 அப்போதும் அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர்களும் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேலை நிறுத்தமும் நடைபெற்றது. இதன் பின் நிலைமை கடுமையான பிறகு 10 சதவீத பங்குகள் விற்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

 2006-ஆம் ஆண்டு தங்களிடம் கேட்டுக் கொண்டவாறே இப்போது மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். 25 ஆயிரம் தொழிலாளர்கள் தொடர்புடைய பிரச்னை என்பதாலும், அவர்கள் வேலை நிறுத்தம் நீடித்தால் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், தாங்கள் இதனைப் பரிசீலித்து பங்குகளை விற்கும் முடிவினை கைவிட ஆவன செய்ய வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் கூறியுள்ளார்.

 பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகலை கருணாநிதி அனுப்பியுள்ளார்