This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2013

குடியிருப்பில் சிக்கிய 42 பேர் சடலங்களாக மீட்பு! -

 
 
மும்பையில் நேற்றுக் காலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 42 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.தெற்கு மும்பையில் மஷ்கான் என்ற இடத்தில் உள்ள இந்தக் கட்டடம் பிரிஹன் மும்பை மாநகராட்சிக்குச்

சொந்தமானது. இதில் 21 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.30 ஆண்டு பழமையான இந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.
   
விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 48 பேர் ஜெஜெ மருத்துவமனை மற்றும் நாயர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கக் கூடும் எனவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது பழமையான கட்டடம்தான் ஆனால் முற்றிலும் பயன்படுத்த முடியாமல் போன கட்டடம் இல்லை.கட்டட ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.4 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் மாநகராட்சியில் மார்க்கெட்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கானது. இந்த கட்டடம் லேசாக

விரிசல் விடுவதையும், குலுங்குவதையும் கண்டு உடனடியாக வெளியேறிவர்கள் தப்பியுள்ளனர். காலை 6 மணியளவில் இடிந்த காரணத்தால் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ள நேரிட்டது
 

இலங்கை அரசு! சர்வாதிகாரப் போக்கிற்கு எடுத்துக்காட்டு

  -
சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக் காட்டாக இலங்கை அரசு உள்ளது என்று தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யபட்ட

விசைப்படகுகளை இலங்கை அரசின் சொத்தாக அங்குள்ள நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது போல் உள்ளது. இதுபோன்ற செயல் சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக்காட்டாக இலங்கை அரசு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

28 September 2013

ரவுடி கழுத்து அறுத்து படுகொலை திருப்பத்தூர் அருகே


 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சோணைமுத்து. இவரது மகன் பாரிமன்னன் (வயது28), ஆட்டோ டிரைவர்.

இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும், பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாரிமன்னன் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று விடுவதால் அவனது 2 மனைவிகளும் வெறுப்படைந்தனர்.

இதனால் முத்துமாரி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கும், பிரவீனா, அரியலூர் தென்மாபட்டு பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கும் சென்று விட்டனர். நேற்று இரவு தென்மாபட்டுக்கு சென்ற பாரிமன்னன் மனைவி பிரவீனாவுடன் தகராறு செய்துள்ளார். குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனா, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பாரிமன்னன் கண்களில் வீசினார். இதில் நிலைகுலைந்த அவனை, பிரவீனா கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்றும் பாராமல் கழுத்தை அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாரிமன்னன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து பிரவீனா கையில் அரிவாளுடன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவியே கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

சினிமா விழாவில் ரஜினி, கமலுக்கு அவமானமா?

 
சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை 21ம் திகதி முதல் ஜெயல லிதா சென்னையில் தொடங்கிவைத்தார்.
நான்குலக சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த விழாவானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இவ்விழா குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை.
மேலும் அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பின் அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்தியது அநாகரிகச் செயல்.
ரஜினியும், கமலும் இரண்டாவது வரிசையில் எங்கோ நின்று கொண்டிருக்கும் காட்சியையும் கண்டேன்.

அவர்களுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருப்பர்?
முதல்வரோ, மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தான் ஆழ்ந்து ஆலோசித்து கவனித்திருக்க வேண்டும்.

ஏனென்றால் கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக, அனிச்ச மலரை ஒத்தவர்களாக இருப்பர்.அவர்களின் மனம் வேதனை அடையும்படி, தன்மானம் காயம்படும்படி நடந்து கொள்ளக் கூடாது.
நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டனரே, நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும் பெருமைப்படுத்தி இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவு புதிய குடியிருப்புகள்:


 தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழுள்ள 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளுக்குப் பதில் ரூ.280 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் பழுதடைந்துள்ளன. அதில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

  எனவே, அங்கு குடியிருக்கும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்தற்கு ஏற்ற வகையில், அந்தக் குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 முதல்கட்டமாக, நடப்பாண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ரங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 480 குடியிருப்புகள் ரூ.38.40 கோடியிலும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 120 குடியிருப்புகள் ரூ.9.60
  
கோடியிலும், பெரம்பூரில் சத்தியவாணிமுத்து நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 392 குடியிருப்புகள் ரூ.31.36 கோடியிலும், எழும்பூர் பகுதியில் நேரு பார்க் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 288 குடியிருப்புகள் ரூ.23.32 கோடியிலும், பிள்ளையார் கோயில் தெரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகள் ரூ.2.56 கோடி மதிப்பிலும் புதிதாகக் கட்டப்படவுள்ளது.

  மேலும், சேப்பாக்கம் பகுதியில் லாக் நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 304 குடியிருப்புகள் ரூ.24.32 கோடியிலும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 708 குடியிருப்புகள் ரூ.56.64 கோடியிலும் கோட்டூர்புரத்தில் 136

  குடியிருப்புகள் ரூ.10.88 கோடியிலும், மயிலாப்பூர் ஆண்டிமான்யம் தோட்டத்திலுள்ள 48 குடியிருப்புகள் ரூ.3.84 கோடியிலும், பல்லக்குமான்யத்தில் 48 குடியிருப்புகள் ரூ.3.48 கோடியிலும் புதிதாக கட்டப்பட்டும்.

கோவை மாவட்டத்தில் ஆடுதொட்டி திட்டத்தின் கீழ் 246 குடியிருப்புகள் ரூ.19.68 கோடியிலும், திருச்சி மாவட்டம் திருச்சி-பூச்சான்குளம் திட்டத்தின் கீழுள்ள 587 குடியிருப்புகள் ரூ.46.96 கோடியிலும், நாகை மாவட்டம் நாகை கூடைமுடைவோர் காலனி திட்டத்தின் கீழ் 117 குடியிருப்புகள் ரூ.9.36 கோடியில் என மொத்தம் 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.280 கோடியில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

27 September 2013

அலுவலகத்துக்கு லீவு போட்ட ஊழியரை கொட்டிய மேலாளர் கைது


தமிழ்நாட்டில் பெண் ஊழியர் விடுமுறை எடுத்ததற்காக கோபப்பட்டு அவரை 3 முறை பலமாக குட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி ரோட்டில் கார்கோ இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது.

அங்கு மேலாளராக இருப்பவர் ரவி சைதன்யா. இவருக்கு வயது 24தான் ஆகிறது. இதே நிறுவனத்தில் ரதி தேவி என்ற 23 வயது பெண் ஊழியர் பணியாற்றுகிறார்.

திருமணமாகாத இவர் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழுதபடி வந்த ரதிதேவி. அங்கு ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் மேற்கண்ட நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்தேன். தற்போது ஒரு வாரம் விடுமுறை எடுத்தேன்.

விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தேன். அப்போது மேலாளர் ரவிசைதன்யா, நான் விடுமுறை எடுத்ததை கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.
பின்பு திடீரென்று எனது தலையில் 3 முறை குட்டினார். பலமாக குட்டியதால் தலையில் வலி ஏற்பட்டது. நான் கதறி அழுதும் கூட இரக்கமே இல்லாமல் திட்டியபடி இருந்தார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரதிதேவி புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சைதன்யாவை இரவோடு இரவாக கைது செய்தனர்.

ஹாப்பி பர்த்டே கூகுள்: கோல் அடிச்சு ட்ரீட் வாங்குங்க!


கூகுள் நிறுவனம் தனது 15வது பிறந்தநாளை சுவாரஸ்யமான கூகுள் டூடுள் மூலம் கொண்டாடுகிறது.
கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் கூகுள் தனது 15வது பிறந்தநாளை ஸ்வராஸ்யமான டூடுளுடன் கொண்டாடுகிறது.
பிறந்தநாள் முன்னிட்டு கூகுளும் நமக்கு சாக்லேட் கொடுக்கிறது ஆனால் டூடுள் மூலம்.
இன்றைய டூடுளில் ஜி ஓ ஓ ஜி எல் இ ஆகிய எழுத்துக்கள் நகரும் தன்மையுடனவாக உள்ளன.
கூகுளில்(GOOGLE) உள்ள இரண்டாவது ஓ கேக் வடிவத்தில் உள்ளது. கேக்கின் மேல் 15 என்ற வடிவத்தில் மெழுகுவர்த்தி உள்ளது.
கேக்கில் உள்ள பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு சர்பிரைஸ் காத்திருக்கிறது.

கேக்கை கிளிக் செய்தால் நட்சத்திர வடிவில் ஒரு பை வந்து நிறுகும். அதன் அருகில் கண்ணை கட்டியபடி ஒரு கம்புடன் ஜி என்ற எழுத்து நிற்கும். நீங்கள் ஸ்பேஸ் பாரை தட்டினால் ஜி எழுத்தின் கையில் உள்ள கம்பு நட்சத்திர பையை அடிக்கும். உடனே அந்த பையில் இருந்து சாக்லேட்டாக கொட்டும்.
பை ஜி அருகே வரும் போதெல்லாம் அதை தட்டினால் சாக்லேட்டுகள் கொட்டும். கிட்டத்தட்ட நம்ம ஊர் உரியடி ஆட்டம் போல் தான் விளையாடி மகிழுங்கள்.
(வீடியோ இணைப்பு)

குற்றவாளிகளை ஜெயிலில் சந்தித்த

 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை தனது மனைவியுடன் சந்தித்துள்ளார் சீமான்.

பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அவரது மனைவி கயல்விழியுடன் சென்னையில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வேலூர் வந்தார்.

அவர்கள் ஜெயிலுக்குள் சென்று முருகன், பேரறிவாளன், சாந்தனை சந்தித்து பேசியுள்ளனர்.

மேலும் ஜெயில் வாசலில் திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமான்–கயல்விழியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

25 September 2013

ரூ.58 ஆயிரம் கோடி செலவு செய்துள்ள இந்தியா :


 இலங்கையின் மறு சீரமைப்பு பணிக்காக இந்தியா ரூ.58 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய தொழில் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:

தோல் கழிவுநீரினால் ஏற்படும் பாதிப்புகளை தீர்ப்பதற்காக மத்திய அரசின் மூலம் திண்டுக்கல் உள்பட 6 இடங்களில் ரூ.100 கோடி மதிப்பில், கழிவுநீரை சுத்தப்படுத்தி மறு சுழற்சி மூலம் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாத வண்ணம் தடுக்கப்படும்.

இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் கட்சி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ராஜீவ்காந்தி– ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு சரியாக செயல்படுத்தவில்லை. சம உரிமை, ஆட்சி மொழி அந்தஸ்து ஆகியவை தரப்படவில்லை. இப்போது தேர்தல் நடத்தப்பட்டு 80 சதவீதம் தமிழ் மக்களின் வாக்குகளில் 70 சதவீத மக்களின் வாக்குகளை வாங்கி தமிழ் தேச கூட்டமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது. இப்போதுதான் ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையும்.

இந்த புதிய அரசுக்கு 37அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக காவல்துறை கொடுக்கப்படவேண்டும். சிங்களர்கள் அல்லாத தமிழ் போலீஸ்காரர்கள் நியமிக்கப்படவேண்டும். 2½ லட்சம் அகதிகளுக்கு வீடுகள், நிலங்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்திய அரசு இதற்கு துணை நிற்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசுக்கு ஆதரவு தர வேண்டும். இதன் மூலம் அரசை வலிமைப்படுத்த வேண்டும். இலங்கை அரசோடு பேச்சு நடத்த துணை நிற்கவேண்டும்.

இலங்கையில் மறு சீரமைப்புக்காக இந்திய மக்களின் பணம் சுமார் ரூ.58ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் ரெயில் தண்டவாளம், சாலைகள் அமைக்கும் பணிகளை நமது அரசே செயல்படுத்தியது. வீடுகள் ஆரம்பத்தில் நமது ஒப்பந்ததாரர்களை வைத்து கட்டி கொடுக்கப்பட்டது. இப்போது தனி தனி வீடுகளை அவர்களே கட்டி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள், மீனவர் வலைகள், 75 பள்ளிகூடம், 11 புதிய மருத்துவமனைகள் என பல வகை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையே நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவை போல இவர்தான் பிரதமர் என முன் கூட்டியே அறிவித்து வாக்கு கேட்கும் முறை நமது நாட்டில் இல்லை. மீனவர் பிரச்சினை பேசி தீர்க்கப்பட வேண்டும். ராணிப்பேட்டையில் 25 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட ரசாயன தொழிற்சாலையில் உள்ள குரோமியக் கழிவு விஷத்தை கலக்கிறது. இதை அகற்ற மாநில அரசு

நடவடிக்கை எடுத்தால் மத்திய அரசு துணை நிற்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது. சிப்காட்டில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறக்க மாநில அரசுடன் மத்திய அரசும் துணை நிற்கும். கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் பயன்படுத்தும்வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்

பா.ம.க-விடுதலை சிறுத்தைகள் மோதல் : போலீஸ் துப்பாக்கி சூடு


 புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்-

 பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர்.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனரை கிழித்தனர். இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கோபப்படுத்தியது. பா.ம.க

தொண்டர்கள் கலைந்து சென்ற சில மணி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகி கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 6 முறை சுட்டனர். இதன் பிறகு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

24 September 2013

விடுதலை35 தமிழிக மீனவர்கள் !


 இந்திய மீனவர்கள் 35 பேர்  திங்கட்கிழமை புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா கடற் பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் அனைவரையும் விதலை
 செய்யுமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மீதான விசாரணையை அடுத்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்

23 September 2013

தமிழக மீனவர்கள் 20 பேருக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை சிறை


 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 தமிழக மீனவர்களுக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை சிறை என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் நேற்று 20 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை அக்டோபர் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்

மரண தண்டனை இன்று உறுதி? பலாத்கார குற்றவாளிகளின்


டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்வது குறித்த விசாரணையை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் துவங்குகிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் உயிர் இழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் மைனர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில் மைனருக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மீதமுள்ள 5 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் முகேஷ்(26), அக்ஷயம் குமார்(28), பவன் குப்தா(19) மற்றும் வினய் சர்மா(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 13ம் திகதி தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி யோகேஷ் கன்னா இந்த தீர்ப்பை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அந்த 4 பேரின் மரண தண்டனையையும் உறுதி செய்வது தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று துவங்குகிறது
 

மட்முட்டியா?பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் பரபரப்பு


 மளையாள நடிகர் மம்முட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார் என்ற செய்திகள் கேரள அரசியலலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் மெகாஸ்டார் மம்முட்டி அரசியலில் குதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி மலையாள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசியல் பிரமுகர்களிடையேயும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
இதுகுறித்து மம்முட்டி அளித்த பேட்டியில், தற்போது வந்திருக்கும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்

22 September 2013

தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டலாம் :


 
நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­ ஜெயவர்தன ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் வடக்கு பகுதியில், தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன்மூலம், இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும்.

இதன்மூலம் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முடியும். இதனால் அகதிகள் தங்களது நிலங்களையும், வீடுகளையும் மீட்க வழிசெய்யும். இது அகதிகளாக உள்ளவர்கள் மீண்டும் தங்களது தாயகத்துக்குத் திரும்ப வாய்ப்பாக அமையும்.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வீடு, நிலங்களை இழந்தவர்களுக்கு மீண்டும் அவை கிடைக்கும். தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், நேர்மையாக தேர்தல் நடத்திய இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்

லண்டன் விமான நிலையத்தில் பாபா ராம்தேவிடம்

  
 போலீசார் 8 மணி நேர தீவிர விசாரணை!  ..லண்டனுக்குச் சென்று இருந்த யோகா குரு பாபா ராம்தேவிடம், லண்டன் விமான நிலையத்தில் வைத்து பிரிட்டன் போலீசார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
 
பாபா ராம்தேவ், லண்டனில் நடக்க உள்ள விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சொற்பொழிவாற்றவே அங்கு புறப்பட்டுச் சென்றார். அவர் கையில் சிறு கைப்பை மட்டுமே வைத்திருந்தார்.

 இந்நிலையில், அவரை லண்டன் போலீசார் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் விடுவித்துள்ளனர் என்றாலும் லண்டன் பத்திரிகைகளில் பாபா ராம்தேவ் கைப்பையில் ஏதோ மாத்திரைகள் வைத்து இருந்தார், எனவேதான் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்று தகவல்கள் வெளியிட்டுள்ளன.
  
கைப்பையில் அப்படி ஒன்றும் இல்லை என்று ராம்தேவின் செய்தித் தொடர்பாளர் கூறினாலும், அவர்கள் அதை நம்புவதாக இல்லை. எனவே, இவ்விடயத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அவர்,
 
விசா குறித்து மட்டுமே போலீசார் விசாரணை நடத்தினர் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருணாநிதி திட்டம் கூட்டணி லாபம், நஷ்டம்: சர்வே எடுக்க

 
  பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, திராவிட கட்சிகள் விருப்பம் காட்டத் துவங்கியுள்ளன. தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்கக் கூடிய லாபம், நஷ்டம் குறித்து, "சர்வே' எடுக்க, தி.மு.க, தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மோடியின் பிறந்ததினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இடதுசாரி கட்சிகளின் தலைவர்களான பிரகாஷ் காரத், பிஸ்வாசை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். பிரதமர் வேட்பாளர் பட்டியலில், முதல்வர் ஜெயலலிதாவும் இடம் பெற்றிருப்பதால், பா.ஜ.,வுடன்

தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க அவர் விரும்பவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியாவை, "மணிமேகலை' என வருணித்ததாலும், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முன்

வந்திருப்பதாலும், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மலரும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா மீது குற்றம் சுமத்தப்பட்டால், காங்கிரஸ் மீது தி.மு.க., அதிருப்தி அடையும். அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., மற்றொரு கதவையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளது.
 
தேசிய அளவில் வீசும் மோடி அலையை, பயன்படுத்திக்கொள்ள தி.மு.க.,வும் தயங்கவில்லை. எனவே தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்கும் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள், எத்தனை சதவீதம் பாதிக்கும். மோடி அலையினால் தி.மு.க.,வுக்கு எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் கூடுதலாக கிடைக்கும். தி.மு.க.,வுக்கு லாபம், நஷ்டம் குறித்த கணக்கை கண்டறிய, "சர்வே' எடுக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
 
 மூன்றாவது அணியா?
    பா.ஜ.,வுடன் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி இதுவரை

தமிழகத்தில் வெற்றி பெற்றது இல்லை. அ.தி.மு.க., அல்லது தி.மு.க., ஆகிய கட்சிகளிடம் கூட்டணி வைக்க தான் பா.ஜ., விரும்பும். இரு கட்சிகளுடன் கூட்டணி அமையவில்லை என்றால் தான், மற்ற கட்சிகளை பா.ஜ.,

பரிசீலிக்கும். தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், பெரிய அளவில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்க போவதில்லை. எனவே, மூன்றாவது அணியை அமைப்பது, போகாத ஊருக்கு வழியை தேடுவதற்கு சமம் என்ற கருத்தும் நிலவுகிறது .

 

21 September 2013

தீவிரவாதி முஜாகிதீன் தப்பியோட்டம்: பொலிசார் காரணமா?


அகமதாபாத் குண்டிவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடிதால் மும்பை முழுவதும் தேடுதல் வேட்டையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தொடர்

 குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கரம் நடந்த மறுநாள், சூரத் நகரில் 22 குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்த குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அப்சல் உஸ்மானி 2008ம் ஆண்டு ஒகஸ்ட் 27ம் திகதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டான்.

அகமதாபாத் மற்றும் சூரத்தில் தீவிரவாதிகள் குண்டுவைக்க திருட்டு கார்களை கொடுத்து உதவியதாக, அப்சல் உஸ்மானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது

இந்த வழக்குகள் விசாரணைக்காக, மும்பை அழைத்து வரப்பட்டிருந்த அப்சல் உஸ்மானி நவி அங்குள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக தென் மும்பையிலுள்ள

மொக்கா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அப்சல் உஸ்மானி மற்றும் 22 குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் தலோஜாவில் இருந்து வேனில் அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, தீவிரவாதி அப்சல் உஸ்மானி மட்டும் எப்படியோ மர்மமான முறையில் நீதிமன்றத்தில் இருந்து மாயமாகி விட்டான்.
சிறிது நேரத்துக்கு பிறகே பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிசாருக்கு அப்சல் உஸ்மானி மாயமானது தெரியவந்துள்ளது.

நீதிமன்ற வளாகம் முழுவதும் பொலிசார் தேடியும் உஸ்மானி சிக்கவில்லை.பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிசாரின் அலட்சியப்

போக்கினாலேயே அப்சல் உஸ்மானி தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
அவனை பிடிக்க மும்பை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை பொலிசார் முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே, அப்சல் உஸ்மானி தப்பியோட

 பொலிசார் யாரேனும் உதவி செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது

தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் ஐதராபாத்தில் அமைக்க


 ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், பிரம்மாண்டமான, தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மண்டலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம்:
 
  பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில், ஐதராபாத்தில், பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த முதலீட்டு மண்டலத்திற்கு தேவையான வசதிகள் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ரயில்வே அமைச்சகங்கள், தீவிர ஆய்வு செய்து, பணிகளை மேற்கொள்ளும்.

தனியார் பங்களிப்புடன், இந்த முதலீட்டு மண்டலம் அமைய உள்ளது. மத்திய அரசு சார்பில், மூன்று முக்கிய சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து நீட்டிப்பு போன்றவை செய்து தரப்படும். இதற்காக, 3,275 கோடி ரூபாய் செலவிடப்படும்.தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 15 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 56 லட்சம் பேருக்கு, மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டம், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

இலக்கு நிர்ணயம்:

இந்த திட்டத்திற்காக, 202 சதுர மீட்டர் நிலம், கையகப்படுத்தப் பட்டுள்ளது. பணிகள், விரைவில் ஆரம்பிக்கப்படும். வரும், 2018ம் ஆண்டிற்குள், இந்த திட்டத்தின் முதல் கட்டம், நிறைவேற்றி முடிக்கப்படும்.இவ்வாறு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில், எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் விவரம்:

வரும், 2016-17ம் ஆண்டிற்குள், 25 லட்சம் டன் அளவுக்கு கூடுதலாக, உணவு தானிய உற்பத்தி இருக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் டன் அரிசி, எட்டு லட்சம் டன் கோதுமை, நான்கு லட்சம் டன் பருப்பு வகைகள், மூன்று லட்சம் டன் சிறு தானியங்கள் என, நிர்ணயிக்கப்பட்டுள்ள, இந்த இலக்குகளுக்காக, 12 ஆயிரத்து 350 கோடி ரூபாய் செலவிடப்படும்.
 

20 September 2013

தேர்தலில் பா.ஜ., செல்வாக்கு; 4 மாநிலங்களில் 3 -ஐ கைப்பற்றும்

                                       
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் 3 - பா.ஜ., கைப்பற்றும் என்றும் டில்லியில் காங்., அரசுக்கும் ,பா.ஜ.வுக்கும் கடும் போட்டி இருந்தும் இரண்டு கட்டசிகளும் சம அளவில் வெற்றி பெற்று இங்கு தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்பு இருப்பதாகவும், ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் எடுத்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.
 
வரும் 2014 ல் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், டில்லி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது இங்கு பா.ஜ., ஆளும்கட்சியாக இருக்கும் சட்டீஸ்கரும், ( மாநில முதல்வர்

ராமன்சிங்) மத்திய பிரதேசமும் ( சவுகான்), மீண்டும் இந்த கட்சியே தக்க வைத்துக் கொள்ளும் என்றும், காங்கிரஸ் கையில் இருக்கும் ராஜஸ்தான் ( முதல்வர் அசோக் கெலாட் ) பா.ஜ.,வுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாவும் சர்வேயில் ஓட்டளிக்கப்பட்டுள்ளது.
   
ஷீலா தீட்ஷித் திணறல்:
    டில்லியை பொறுத்தவரை காங். முதல்வராக இருக்கும் ஷீலாதீட்ஷித் வெற்றியை பெற பெரும் சிரமப்பபட வேண்டியது இருக்கும் என்றும் , காங்., மற்றும் பா.ஜ., வுக்கு சம அளவில் வெற்றி கிட்டும் என்றும் தெரியவந்துள்ளது. இங்கு ஆம்ஆத்மி கட்சி (அரவிந்த் கெஜ்ரிவால்) பல தொகுதிகளில போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் காங் ஓட்டு பெரும் சரிவை சந்திக்கும், இது

பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்றும் தெரிகிறது. இங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. பா.ஜ.,வுக்கு 30 தொகுதிகளும், காங்கிரசுக்கு 29 தொகுதிகளும், கிடைக்கும், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு 7 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவரது ஆதரவுடன் மட்டுமே யாரும் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

   முதல்வரை பொறுத்தவரை ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே ( பா.ஜ.,) முதல்வராக 44 சதவீதத்ததினரும், தற்போதைய முதல்வர் அசோக்கெலாட் முதல்வராக 25 சதவீதத்தினரும், சட்டீஸ்கரில் ராமன்சிங் முதல்வராக 48 சதவீதத்தினரும், அஜீத்ஜோகி முதல்வராக 23 சதவீதத்தினரும், டில்லியில்

ஷீலா தீட்ஷித் முதல்வராக 37 சதவீதத்தினரும் மத்திய பிரதேசத்தில் சவுகான் முதல்வராக 56 சதத்தினரும், ஜோதிராத்தியாசிந்தியா முதல்வராக 23 சதவீதத்தினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்,
  
மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஆதரவு அதிகரிக்குமே தவிர எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் தெரிய வந்துள்ளது. மோடி பிரதமராக 59 சதவீதத்தினரும், ராகுல் பிரதமராக 16 சதவீதத்தினரும், மன்மோகன்சிங் பிரதமராக 8 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்
 

சுவர் இடிந்து விழுந்து திருச்சியில் இருவர் பலி


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது, அப்பகுதிக்கு அருகே இருந்த ஒரு விடுதியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியாயினர்.

  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கல்லூரி இருக்கும் சாலையில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று காலை கட்டடத்துக்கு அடிக்கல் வைக்க பள்ளம் தோண்டும் பணியில் 11 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
 
 அப்போது, அவ்விடத்துக்கு அருகே இருந்த சுற்றுச் சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
 

முறைகேட்டில் ஷிண்டேவுக்கு தொடர்பில்லை: சிபிஐ நற்சான்று


 ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

 ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் கட்டடத்தில் தனது பினாமிகளுக்கு வீடுகளைப் பெற்றுத் தந்தார் ஷிண்டே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சமூக சேவகர் பிரவீண் வடேகோவன்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
  
ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் மறைந்த மேஜர் என்.கே. கான்கோஜை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஷிண்டே வலியுறுத்தினார். வீடு பெற தகுதியுள்ளவர்களாக 71 பேரின் பட்டியல் அளிக்கப்பட்டபோது, அதில் 51 பேர் குறித்து மறுஆய்வு செய்யுமாறு முதல்வராக இருந்த ஷிண்டே உத்தரவிட்டிருந்தார். இதுவே வீடுகளின் ஒதுக்கீடுகளை பினாமிகள் பெற வழி வகுத்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
 இது தொடர்பாக சிபிஐ இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், 'இந்த வழக்கில் ஷிண்டே மீது குற்றம்சாட்டி, சட்டப்படி விசாரணை நடத்துவது தேவையில்லை என கருதுகிறோம். நாங்கள் நடத்திய விசாரணையில் கன்கோஜுக்கும், ஷிண்டேவுக்கும் எந்தவிதமான தொடர்பும்

இருப்பதாகத் தெரியவில்லை. இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக விசாரணை ஆணையத்தின் முன் கித்வானி என்பவர் தெரிவித்த சாட்சியத்துக்கு ஆதாரமில்லை. ஷிண்டே தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்பதற்கும் போதிய ஆதாரமில்லை' என்று சிபிஐ தெரிவித்தது.
  
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.ஹரிதாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 

18 September 2013

மனித உருவில் ஆன ரோபோ உருவாக்கம்


பலவிதமான வடிவங்களில் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மனித உருவில் ஆன 'ரோபோ' உருவாக்கப்பட்டுள்ளது.
'டெர்மினேட்டர்–2' படத்தில் ஹொலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் எந்திரமனிதனாக நடித்து இருப்பார். அதுபோன்ற அமைப்பிலான மனித ரோபோ ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனது உடலில் காயங்களோ அல்லது கோளோரோ ஏற்பட்டால் அதை அந்த ரோபோவே 2 மணி நேரத்தில் சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது.
இதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தாங்கள் உருவாக்கிய இந்த ரோபோவை ரேஷர் பிளேடால் 2 துண்டுகளாக வெட்டி போட்டனர். ஆனால் 2 மணி நேரத்தில் அதை தானே 'ரோபோ' சரி செய்து ஒட்டிக்கொண்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது மிமெடிக் என்ற உலோக கலவையினால் ஆனது. இந்த உலோக கலவையை எலெக்ட்ரிக் பொருட்கள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் உதிரி பாகங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.
 

ஏழைகளுக்காகவே செயலாற்றுகிறது காங்கிரஸ்:



  பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடியை மறைமுகமாகத் தாக்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எதிர்கட்சியினர் பணக்காரர்களுக்காக பணியாற்றுகிறது என்றும், தமது கட்சியோ ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களது கனவுகளை நனவாக்குவதற்குமே செயலாற்றுகிறது என்றும் கூறினார்.
 
சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராஜஸ்தானின் பரன் பகுதியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசுகையில், “உங்கள் குழந்தைகள் மிகப் பெரிய கனவுகளைக் காணவே நாம் விரும்புகிறோம். கனவு காண அனுமதிக்கப்படவில்லை எனில், இந்த தேசம் முன்னேற்றம் அடையாது.
  
சிலர் தங்கள் சாதனைகளை மிகைப்படுத்தி பேசி வருவதுபோல் நாங்கள் பேச மாட்டோம். மாறாக செயலில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது” என்று மோடியை மறைமுகமாகத் தாக்கினார்.
  
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டிய ராகுல், பணக்காரர்கள் மென்மேலும் பலன்களைப் பெறவேண்டும் என்பதற்காகவே அந்தச் சட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பதாகக் குற்றம்சாட்டினார்.
 
“அனைத்து குடிமக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, உணவு பாதுகாப்பு சட்டத்தை அரசு கொண்டுவந்திருக்கிறோம். ஏழைகளின் நலனுக்காக திட்டங்களைக் கொண்டுவரும்போது, அதற்கான பணம்

எங்கிருந்து வருகிறது என்று அவர்கள் (பா.ஜ.க) கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தும்போதும், சுரஙகங்களை ஒதுக்கீடு செய்யம்போதும் எவரும் கேள்வி எழுப்புவதில்லை. இதுதான் அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம்.
 
உங்களுடைய கனவுகளையொட்டியதே எங்களுடைய கனவுகள். ஆனால், அவர்களோ வெறும் 500 பேருக்காக மட்டுமே கனவு காண்கிறார்கள். காரிலும் விமானத்திலும் வலம்வருகிறார்கள். அதுதான் அவர்களது அரசியல்.
  
ராஜஸ்தானில் மருந்துகளை அரசு இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இங்கே மட்டும் அல்ல. இதை நாடு முழுவதும் கொண்டுசெல்வோம்” என்றார் ராகுல் காந்தி.

 மேலும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், பஞ்சாயத்து ராஜ் சட்டம் முதலானவை குறித்தும் அவர் விவரித்தார்

16 September 2013

தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சின்- ஷாருக்கானை அழைக்கும்



நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை அழைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிரச்சாரத்திற்கு அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான முகமது அசாருதீன் மூலம் சச்சினை அணுக திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இது தவிர இந்தி நடிகரும், காங்கிரஸ்காரருமான ராஜ் பாபர் மூலம் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ரேகாவை காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கும் திட்டமும் உள்ளதாம்.

இதில் சச்சினும், ரேகாவும் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் சோ ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு!


சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, துக்கள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராக மோடியின் பிறந்தநாளையொட்டி (17ம் திகதி) அவருக்கு அட்வான்ஸ் பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.


அதே சமயம் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

ஜெயலலிதாவை அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் முதல்வரை சந்திப்போரின் விவரங்கள் பட்டியலில் சோவின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்திய எல்லையில் இன்று காலை ..

 .. 

இந்திய எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதையடுத்து அங்கு நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்களும் திருப்பிச் சுட்டனர். காலை 6.30
மணிக்கு, ஜம்மு-காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மெந்தார்

பிரிவில் தாரி டாப்சி என்ற இடத்தில் உள்ள பில்லி மற்றும் நோவல் ஆகிய எல்லை பகுதிகளிலேயே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர்

ஆட்டோமேட்டிக் மற்றும் சாதாரண ஆயுதங்கள் கொண்டு இந்திய துருப்புகளை நோக்கி சுட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படியான தாக்குதல்கள் கடந்த சில நாட்களாகவே இந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றன.பிரதமர் மன்மோகன் சிங், இம்மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேச உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை

தொடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு விவகாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் இந்த சந்திப்பை உறுதிபடுத்தியுள்ளனர்.

இரு பிரதமர்களின் சந்திப்பின்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது. எல்லைக்கு அருகே பேசப்பட்ட சமாதானப் பேச்சுக்களுக்கே சரியான ரெஸ்பான்ஸ் இல்லாத நிலையில், எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள நியூயார்க்கில் பேசும் பேச்சுக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருக்கப் போகிறதோ !

15 September 2013

மாணவியை மனைவியாக்கிய ஆசிரியர் !!


தமிழ்நாட்டில் தன்னிடம் படித்த மாணவியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவரை மனைவி என்று ஆசிரியர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை சுண்ணாம்பிருப்பை சேர்ந்த மகேந்திரன். இவர் உச்சநீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் நானும், ஜெயராமன் மகள் மகாலட்சுமியும் காதலித்தோம்.
இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்ப்பை மீறி இருவரும், திருப்பத்தூர்

பூமாயி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி திருமணம் செய்து கொண்டோம்.
பின்னர் வேலைக்காக நான் மலேசியா சென்றேன். மலேசியாவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினேன்.

அப்போது மகாலட்சுமியை அவரது தந்தை கடத்திச் சென்றதும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதும் தெரியவந்தது.
மனைவியை மீட்கக்கோரி செப்டம்பர் 5ல் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மகாலட்சுமியை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், துரைச்சாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் முன் மகாலட்சுமியை, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆஜர்படுத்தினர்.
மகாலட்சுமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக நீதிபதி

களிடம் மகாலட்சுமி கூறுகையில்,எனக்கு தற்போது 25 வயதாகிறது.
திருப்பத்தூரில் வசித்து வருகிறேன். மனுதாரர் மகேந்திரன் டியூஷன் சென்டர் நடத்துகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவரிடம் டியூஷன் படித்தேன்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை துன்புறுத்தினார்.

எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அவர் மீது திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

இதனைத் தொடர்நது எனக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கமாட்டேன் என பொலிசில், மகேந்திரன் எழுதி கொடுத்தார்.
எனக்கு 15ம் திகதி திருமணம் நடக்க உள்ளது. என் திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக மனுதாரரும், அவரது ஆட்களும் என்னை மிரட்டி வருகின்றனர்.

எனவே என் திருமணத்திற்கும், குடும்பத்தினருக்கும் போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். எனக்கும், மகேந்திரனுக்கும் திருமணம் நடைபெறவில்லை.

உள்நோக்கத்துடன் எங்களுக்கு திருமணம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார் என்றும் என்னை பெற்றோருடன் செல்ல அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வினோத வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மகாலட்சுமி மேஜர். அவர் விருப்பப்படி பெற்றோருடன் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தன் திருமணத்தை கெடுக்க சதி நடப்பதாக மகாலட்சுமி அச்சம் தெரிவித்துள்ளார். அவரது திருமணத்திற்கு பொலிசார் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்.

திருமணம் முடிந்த பிறகும் குறிப்பிட்ட நாட்களுக்கு பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

விரைவில் சீரடையும்:இந்திய பொருளாதாரம் பிரணாப் முகர்ஜி


ஜனாபதி பிரணாப் முகர்ஜி, தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்றார்.
தனி விமானத்தில் கொல்கத்தா சென்று இறங்கிய அவரை விமான நிலையத்தில் மாநில கவர்னர் எம்.கே. நாராயணன், மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

கவர்னர் மாளிகையில் அவரை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை.

கொல்கத்தாவில் வங்காள தொழில், வர்த்தக சபை கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய பொருளாதார நிலை குறித்து மனச்சோர்வு அடையவேண்டிய சூழல் இல்லை. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் நல்ல வலுவான

நிலையில்தான் உள்ளது. ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்துவது கொள்கை வகுப்பவர்களின் (அரசு மற்றும் ரிசர்வ் வங்கி) மனங்களில் தீவிரமாக உள்ளது. இதில் அன்னிய தூண்டல்களை வலுப்படுத்துவதற்கான (அன்னியச்செலாவணி வரத்தை ஊக்குவிக்க) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் சில குறிப்பிட்ட அம்சங்களில் கவலை இருந்தாலும்கூட, நம்பிக்கை இழக்க அவசியம் இல்லை. நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், தொழில்துறை முதலீடுகளை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சாதகமான பலன்களைத் தரும். இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடைந்து வளர்ச்சிப்பாதைக்கு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மிக தீவிரமாகவும், உறுதியாகவும் தொடர வேண்டும். நமது வளர்ச்சி வளங்கள் கட்டுப்பாடற்று செல்லத்தக்க வகையில் எங்கெல்லாம் மாற்றங்கள் தேவையோ அங்கெல்லாம் அந்த மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் விவசாயப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். உணவு தானியங்களின் விலையும் சாதகமாக அமையும்.

உற்பத்தி துறை செயல்பாடுகளை ஊக்குவிக்க ஏற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 1980-களிலிருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி ஏறத்தாழ 16 சதவீத அளவிலேயே தொடர்கிறது. சில ஆசிய நாடுகளில் இது 25-34 சதவீத அளவுக்கு உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை 25 சதவீத அளவிற்கு உயர்த்துவதில் உற்பத்திதுறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது என பிரணாப் முகர்ஜி கூறினார்

விலையில் வெளுத்துக் கட்டும் மல்லிகை


சுபமுகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ மல்லிகைப்பூ கிலோ 600க்கு விற்பனை செய்யப்பட்டது.
சுபமுகூர்த்தம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்தது.
நாளை 16ம் திகதி சுபமுகூர்த்த தினம். அன்று நாடு முழுவதும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
நேற்று சேலம் வ.உ.சி. பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மல்லிகை, முல்லை, பட்டன் ரோஜா, ஜாதிமல்லி, கோழிக்கொண்டை, செவ்வந்திப் பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.
நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகைப்பூ 600, முல்லை 600, கனகாம்பரம் 800, பட்டன் ரோஜா 200, செவ்வந்தி 140க்கும் விற்பனை செய்யப்பட்டது

உயர்ந்துள்ள விமானப் பயணக் கட்டணம் கடந்த மூன்று !!


கடந்த இரண்டு வாரங்களாக விமானப் பயணக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன. சென்ற மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு 55 சதவிகிதம் கட்டண உயர்வுகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று மாதம் முன்னதாகப் பதிவு செய்யப்படும் பிரிவு முதல் ஒரு வாரம் முன்னதாகப் பதிவு செய்யப்படும் பிரிவு வரை இருக்கும் ஆறு பிரிவுகளிலும் அதிகரித்துள்ள கட்டணத்தொகை குறித்த கணக்கீடுகளை நேற்று இணையதளத் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

முன்பதிவு செய்பவர்களையும் இந்த கட்டண உயர்வு பாதித்துள்ளது. உதாரணத்திற்கு நவம்பர் மாதம் மேற்கொள்ளும் பயணத்திற்கு இந்த மாதம் முன்பதிவு செய்பவர்களும் 55 சதவிகித அதிகரிப்பினை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்னால் கட்டண உயர்வுகள் ஏற்பட்டபோது அவை பல வாரங்களுக்கு பரவலாக அதிகரிக்கப்பட்டன.

ஆனால், இப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே இதுபோல் அதிகரித்துள்ளது முன்பதிவு செய்பவர்களுக்கும் அழுத்தத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது என்று இணையதளத்தில் முன்பதிவு செய்யும் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியான கெயூர் ஜோஷி கூறினார்.

30 நாட்கள் முன்னதாகப் பதிவு செய்வோருக்கு இந்த உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் அதிக அளவு பயணங்கள் ரத்து செய்யப்படுவதும் தடுக்கப்பட முடியும். நீண்டகால செயல்பாட்டு

நடைமுறைகளுக்கு பரவலான உயர்வு தேவை என்றபோதிலும், விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையும் ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம் என்று ஜோஷி குறிப்பிட்டார்

ஆயுதங்கள் மீட்பு பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்:


 
ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் போடியா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலில் பெண் உள்பட 13 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்றும், மாவோயிஸ்டுகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 25-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸார் நடத்திய பேரணியில் மாவோயிஸ்டுகள் நடத்திய அதிரடித்

தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வி.சி.சுக்லா, மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலில் இந்த போடியா மாவோயிஸ்டுகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநில எல்லையையொட்டிய மல்கான்கிரி மாவட்டத்தில்

போடியா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன் மல்கான்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர், மாவட்டத் தன்னார்வப் படையினர் இணைந்து சில குடா வனப்பகுதியில்

வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது பாகாப்புப் படையினரை கண்டவுடன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.


பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் அக்குழுவின் தலைவர் ராகேஷ் தப்பிவிட்டார் என்று பொலிஸார்

தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் மாவோயிஸ்டுகள் அமைத்திருந்த முகாமில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள்,

கண்ணிவெடிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மல்கான்கிரியில் இருந்து போடியா 75 கிமீ தூரம் உள்ளது. போடியாவில் இருந்து 12 கிமீ தூரத்தில் இருக்கும் சிலகுடா வனப் பகுதியில்தான் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

நிலைமையை நேரில் கண்டறிய உளவுப் பிரிவு இயக்குநர் அபய், நக்சல் தடுப்புப் பிரிவு ஐஜி சமேந்திர பிரியதர்சி ஆகியோருடன் காவல் துறை தலைமை இயக்குநர் பிரகாஷ் மிஸ்ரா, மல்கான்கிரியில் முகாமிட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் அந்த இயக்கத்தைச்

 சேர்ந்த காளிமேளா தளத்தின் கீழ் செயல்பட்டுவரும் போடியா படையினர் என்றும் அந்தப் படையில் சுமார் 30 மாவோயிஸ்டுகள் இருந்தனர் என்றும் மல்கான்கிரியில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல் குறித்து காவல் துறைத் தலைமை இயக்குநர் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில்,
"பக்கத்து மாநிலங்களில் இருந்து மாவோயிஸ்டுகள் ஒடிசா மாநிலத்துக்குள் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர்.

அதனால் அவர்களது நடமாட்டத்தை ஒடிசா போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து இந்த அதிரடித் தாக்குதல்

 நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

இது ஒடிசா போலீஸாருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. ஒடிசா மாநில எல்லைக்கு அப்பால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக அமையும்' என்று மிஸ்ரா கூறினார்..
 

14 September 2013

: மன்மோகனுக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய ஜெயலலிதா


இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 97 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளதாவது:
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும்போது

அவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சித்ரவதை செய்வதும் மற்றும் கைது செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து தங்களின் கவனத்தை ஈர்க்க மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.
தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழக

 மீனவர்களின் பாதுகாப்புக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், அவர்கள் தங்களது பாரம்பரியமிக்க இடங்களில் மீன் பிடிப்பதற்கான உரிமைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கிறது.
இலங்கைச் சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களுக்கு கடந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை கடிதங்களை எழுதியுள்ளேன்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாம்பனைச் சேர்ந்த 35 மீனவர்களின் தடுப்புக் காவல் வரும் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஜூலை 30 ஆம் திகதியன்று இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்கள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு அவர்கள் தமிழகம் திரும்ப உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்களது மூன்று படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இதனால், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தால் வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை குற்றவாளிகள் போன்று இலங்கை அரசு நடத்துகிறது. இந்தப் பிரச்னையில் தூதரக ரீதியில் போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருக்குமானால், இதுபோன்ற நிலைமையைத் தடுத்திருக்கலாம்.

இலங்கையின் புதிய யுக்தி

தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசு இப்போது புதிய யுக்தியைக் கையாண்டு வருவதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பிடித்து வைக்கப்படுகின்றன.

தமிழக மீனவர்களை தங்களின் பாரம்பரியமான பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்பதாலேயே இலங்கை அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. படகுகளை பயன்படுத்தாமல், பழுதுபார்க்காமல் நீண்ட காலம் நிறுத்தி வைத்திருந்தால் அது ஏழை மீனவர்களுக்கு பேரிழப்பாக இருக்கும். இலங்கையின் இதுபோன்ற சுயநல செயல்பாடுகளை கடுமையான முறையில் கண்டிப்பது அவசியமாகும்.

97 மீனவர்கள் சிறைவைப்பு: இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 97 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 21 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் வீடு திரும்பவில்லை. மேலும், இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 படகுகளும் விடுவிக்கப்படவில்லை.
எனவே, மீனவர்களை விடுவிக்கும் பிரச்னை குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க

 வேண்டும். அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
பொய்யான வழக்குகள் போடப்பட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறை வைக்கும் நடவடிக்கைகளால், தமிழக கடற்கரையோரத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்களிடையே

கொந்தளிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள முடியும்.
மீனவர்களை விடுவிக்கும் பிரச்னையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும். காலம் குறிப்பிடாமல் நடவடிக்கை எடுப்பதை ஒத்திப் போட முடியாது.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க வேண்டும். மீனவர்களின்

படகுகளை விடுவிப்பதுடன், இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்

வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்:



 தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனது சொத்து, தனிப்பட்ட விவரங்கள், குற்றப் பின்னணி போன்ற விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்தால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இது தொடர்பாக "ரிசர்ஜன்ஸ் இந்தியா' என்ற அரசு சாரா அமைப்பு 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

  "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் வேட்பு மனுவில் தங்கள் பின்னணி, சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி பற்றி முழுமையாகக் குறிப்பிடுவதில்லை அல்லது அந்த பகுதியை நிரப்பாமல் விட்டுவிடுகின்றனர். இதனால், வாக்காளர்களுக்கு வேட்பாளரின் உண்மை நிலை மறைக்கப்படுகிறது.

  அந்த மனுக்கள் ஏற்கப்படுவதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறவும் செய்கின்றனர். இதன் மூலம் வாக்காளர்களுக்கு உண்மை மறைக்கப்படுகிறது. தவிர, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முந்தைய காலங்களில் வழங்கிய வழிகாட்டுதல் நெறிகளும் மீறப்படுகின்றன' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
 இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக பதில் அளித்த தேர்தல் ஆணையமும் "முழு விவரத்தையும் குறிப்பிடாத வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்யலாம்' என்று கருத்துத் தெரிவித்திருந்தது.
  
உத்தரவு: இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய் இடம்பெற்ற அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
  
"தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது கல்வி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட சில பகுதிகளை பூர்த்தி செய்யாதபோதும், அதைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதற்கு ஒப்பாகும். அவ்வாறு தகவல் தெரிவிக்காத வேட்பாளர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125-ஏ பிரிவின்படி நடவடிக்க எடுக்கலாம்.

  எனவே, நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளரைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது குடிமக்களின் உரிமை. அரசியமைலமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு அதற்கான உரிமையை குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. எனவே, குறிப்பிட்ட பகுதியை

வேட்பாளர் பூர்த்தி செய்யாமல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தால் அதை சரிபார்த்து, பூர்த்தி செய்த பிறகே ஏற்க முடியும் என்பதை தெளிவுபடுத்துவது தேர்தல் அதிகாரியின் கடமை. அதையும் மீறி தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்.

  அதே போல, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு முழுமையான தகவல் அளிக்காததால் அந்த வேட்பாளரைத் தண்டிப்பது தேவையற்றது என நீதிமன்றம் கருதுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 

இருளில் மூழ்கும் அபாயம்:மின்துறை ஊழியர்கள் !


 ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல் ஆந்திர மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஆந்திராவை இரண்டாகப் பிரித்துத், தனி தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, சீமாந்திரா, ராயல சீமா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. அரசு ஊழியர்களுடன் தற்போது மின் துறை ஊழியர்களும் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், ஆந்திராவின் 3 மின் தொகுப்புக்களிலும் வேலை பாதிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால், ஆந்திராவில் நேற்றும் இன்றும் பல பகுதிகளில் மின்சாரம்  இல்லை. மேலும் ஆந்திரா முழுவதும் இருளில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 

செய்தித்தாள் மற்றும் காகித ஆலை

(
 
TNPL)யின் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்க! - வைகோ கோரிக்கை

கரூர் மாவட்டம் புகளூரில் 1979 இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL), 1984 ஆம் ஆண்டு முதல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது.

நாள் ஒன்றுக்கு 300 டன் உற்பத்தியில் தொடங்கிய ஆலை, இன்று நாள் ஒன்றுக்கு 1200 டன் என்ற அளவில் உற்பத்தி செய்யும் அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஆலை இதன் உற்பத்தியில் 20 சதவிகிதத்தை 50 க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசாங்கத்திற்கு இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிகர லாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றது.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 3,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் நாளென்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்தில் சுமார் 1800 நிரந்தரத் தொழிலாளர்களும், நாளொன்றுக்கு ரூ. 360/- மட்டும் பெற்றுக்கொண்டு சுமார் 1300 ஒப்பந்தத் தொழிலாளர்களும் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். இந்த இரு தரப்புத் தொழிலாளர்களும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர்கள்.

இந்த இரண்டு பிரிவுத் தொழிலாளர்களும் ஒரே வேலையைச் செய்தாலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியமும், பல சலுகைகளும் 25 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி, அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, இக்கூட்டமைப்பின் சார்பாக 2009 செப்டம்பரில் கடந்த தி.மு.க ஆட்சியிடத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்

கோரிக்கை வைத்த நேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய முதலமைச்சர் இத்தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இவர்களுக்கு ஆதரவாக கடந்த 02.09.2009 ஆம் ஆண்டு பத்திரிகை மற்றும்

தொலைக்காட்சியில் அறிக்கை கொடுத்ததோடு, 04.09.2009 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா தி.மு.க. சார்பில் கரூரில் இந்த ஆலையின் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆனால், அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், காகித ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இவர்கள் பலமுறை மாண்புமிகு முதலமைச்சரிடமும், கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், கரூர் தொகுதியிலுள்ள அமைச்சர்

 மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் பலமுறை முறையிட்டும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ, தொழில்துறை அமைச்சர் அவர்களோ, தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாதது வேதனைக்குரியது.

இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

12 September 2013

அதிரடி உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு


டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வாரம் ரூ. 68 ஆக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு புதிய ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் வெளியிட்ட சில அறிவிப்புகளால் சரிவில் இருந்து மீண்டு 65-யை எட்டியது.

இந்நிலையில் நேற்று ரூபாயின் மதிப்பு 63 ஆக உயர்ந்தது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ரகுராம் ராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் காரணமாக ரூபாயின் மதிப்பு கடந்த 5 நாட்களில் மட்டும் 8 ரூபாய் அதிகரித்துள்ளது.
மேலும் சிரியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளதால் அதன் தாக்கத்தாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

சிரியா மீது அமெரிக்க தாக்குதல் ஆரம்பித்தால் கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் இந்தியாவில் டொலர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்த அச்சமும் சேர்ந்து ரூபாய் மதிப்பை போட்டுத் தாக்கி வந்தது. ஆனால், ரஷ்யாவின் கடும் எதிர்ப்பால் இப்போதைக்கு ராணுவத் தாக்குதல் நடத்தும்

 நிலையில் அமெரிக்கா இல்லை.
ரஷ்யாவை சமாதானப்படுத்திவிட்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா முயன்று வருகிறது.

இதனால் கடந்த 6 மாதங்களில் உலகிலேயே மிக அதிகமான சரிவை சந்தித்த இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 நாட்களில் உலகிலேயே மிக வேகமாக மீட்சியை அடைந்த கரன்சியாக மாறியுள்ளது.

மேலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியே பாதுகாப்புடன் கூடிய உத்தரவாதம் வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை நோக்கி வெள்ளமாக பாய ஆரம்பித்துள்ளன.

அடுத்த இரு வாரங்களில் ரூ. 1.2 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவிலேயே ரூபாயின் மதிப்பு 60 ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்திய ஏற்றுமதிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்தன. இதனால் டொலர் வரத்தும் அதிகமாகியுள்ளது.
குறிப்பாக டீசல் விலையை உயர்த்தினால் தான் நடப்புக் கணக்குப்

பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். இதைக் கட்டுப்படுத்தினால் தான் நாட்டின் நிதி நிலை சரியாகும்.
இதன் மூலமே முதலீடுகளை ஈர்த்து தொழில்துறை வளர முடியும். இதன் மூலமே புதிய ரூபாய் மதிப்பு உயரும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால் டீசல் விலையை உயர்த்த ரகுராம் ராஜன் பரிந்துரை செய்யலாம் என்று தெரிகிறது

இந்தியா மீது மும்முனைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்கா!


வங்க தேசத்தவர்கள் மீது, பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் ஆதரவு வழங்கியிருந்தார்
. அப்போதைய இந்திய பிரதமர் இந்திராவின் அதிரடி நடவடிக்கைகளால் மிரண்டு போன அமெரிக்கா, இந்தியா மீது மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டது' என பிரபல வரலாற்று அறிஞர், கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வரலாற்று ஆசிரியர் கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:
பாகிஸ்தான், 40 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த

 வங்கதேசத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு, அப்போதைய, அமெரிக்க அதிபர், ரிச்சர்டு நிக்சன், ஆதரவு அளித்தார். சட்ட விரோதமாக, ஆயுத உதவிகளையும் அளித்தார். இதற்கு உடந்தையாக, அப்போதைய அமெரிக்க வெளியுறவு

அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர் இருந்தார். ஆனால், இந்திராவின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளால் வங்கதேச மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிஸ்சிங்கர், இந்தியா மீது மூன்று விதமான தாக்குதல்களை நடத்த ஆயத்தமானார்.

அதாவது, சட்ட விரோதமாக, ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக, பாகிஸ்தானுக்கு, அமெரிக்க படைகளை அனுப்புவது, இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க சீனாவுக்கு ரகசியமாக உதவுவது, வங்கக்கடலில்

, அமெரிக்க கடற்படை கப்பலை நிறுத்தி, அச்சுறுத்தலை ஏற்படுத்துவது என்பதே அந்த திட்டம்."இவற்றை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என, நிக்சனிடமும், கிஸ்சிங்கர் கேட்டுக் கொண்டார் என கேரி பாஸ் எழுதி உள்ளார்

பிடிவாரன்ட் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு..

.
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் அக்கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் பேசிய விஜயகாந்த், தமிழக அரசையும், தமிழக முதல்வரையும்

அவதூறாகப் பேசியதாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஏ. குப்புசாமி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு

நீதிமன்றத்தில் விஜயகாந்த் பிப். 27-ஆம் தேதி ஆஜரானார். அப்போது அவர் மீதான புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு

அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. "மற்ற மாவட்டங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஆஜராக செல்வதாலும், தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாலும், அவரால் இங்கு ஆஜராக இயலவில்லை' என, விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறியதால் 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சேதுமாதவன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஜகதீசன் உள்ளிட்டோர், நீலகிரியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால் விஜயகாந்த் இங்கு வர இயலவில்லை என, மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஆஜராகாத விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்டும், செப்டம்பர் 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்

11 September 2013

மாணவி பலாத்கார வழக்கு : நால்வரும் தீர்ப்பு


 டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு

ழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. அனேகமாக, மரண தண்டனை வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 கடந்தாண்டு டிசம்பர், 16ல், டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவியும், அவரது ஆண் நண்பரும், இரவு நேரத்தில், ஒரு பஸ்சில் ஏறினர். அந்த பஸ்சில் இருந்த, ஆறு பேர் கும்பல், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு,

அவரையும், அவரின் ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியது. பின், பஸ்சிலிருந்து இருவரையும் தூக்கி வீசியது.டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர நிகழ்வு, டில்லியில் பெரும், கொந்தளிப்பை

ஏற்படுத்தியது.பெண்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் திரண்டு வந்து, டில்லி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். "குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்' என, போராட்டங்கள் நடத்தினர்.இந்த கொடூர பலாத்கார சம்பவம் தொடர்பாக, பஸ் டிரைவர், ராம்சிங், அவனின் நண்பர்கள், வினய் சர்மா,பவன் குப்தா, அக்ஷய் சிங், முகேஷ் மற்றும் மைனர் சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், மைனர் சிறுவன் மீதான வழக்கு, டில்லி சிறார் நீதி வாரியத்தில் நடந்து, அவனுக்கு, சமீபத்தில்

, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரும், திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், பஸ் டிரைவர் ராம்சிங், கடந்த மார்ச்சில், சிறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.அதனால், மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த, 3ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

  இந்நிலையில், இந்த வழக்கில், விரைவு கோர்ட்டின், கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா, 237 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை, நேற்று வெளியிட்டார்.

  அப்போது, அவர் கூறியதாவது:மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட, வினய் சர்மா,, பவன் குப்தா, அக்ஷய் சிங் மற்றும் முகேஷ் மீது, கொலை செய்தல், கூட்டமாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் தடயங்களை அழித்தல் போன்ற

பிரிவுகளின் கீழ், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்படுகிறது. மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சிகிச்சையின் போது, நோய் தொற்று

 ஏற்பட்டது போன்றவையே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான, மருத்துவ மாணவியின் மரணத்திற்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், முன்வைக்கப்பட்டவாதத்தை ஏற்க முடியாது; அதை தள்ளுபடி செய்கிறேன். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்தார்.

  இந்த வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களாக நடைபெற்றது. விசாரணையின் போது, 100 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், 18 பேர் சாட்சியம் அளித்தனர். இருப்பினும், பலாத்காரத்தில் பலியான, மருத்துவ மாணவியோடு, பஸ்சில் சென்றவரும், ஆறு பேர் கும்பலால் பலமாக தாக்கப்பட்டவருமான, மாணவியின் ஆண் நண்பர், சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால், அவரது சாட்சியம்,

வழக்கில் முக்கியமானதாக கருதப்பட்டது. அது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது, உயிருக்கு போராடும் நிலையில், மாணவி அளித்த மரண வாக்குமூலமும், போலீசாருக்கு வழக்கை விரைவாக முடிக்க, பெரும் உதவியாக இருந்தது.நாடு முழுவதும் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும், பரபரப்பாக பேசப்பட்ட, இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 நேற்று தீர்ப்பு வெளியாக இருந்ததால், டில்லி சாகேத் கோர்ட்டில், தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களும், அணிவகுத்து நின்றன. கோர்ட் முழுவதும், பெரிய அளவில், கூட்டம் காணப்பட்டது. நேற்றே தண்டனை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தண்டனை விவரம், இன்று வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 நான்கு பேருக்கும் மரண தண்டனை- மாணவியின் பெற்றோர் கோரிக்கை: "எங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படவில்லை எனில், அது சரியானநீதியாகாது' என, மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.



அவர்கள் மேலும் கூறியதாவது:எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதங்களாக, நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் மகளிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட, நான்கு பேரும் தூக்கிலிடப்பட வேண்டும்.இந்த வழக்கைப் பற்றியே, கடந்த சில மாதங்களாக, நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்ன நிகழுமோ என்ற

எதிர்பார்ப்பில் இருக்கிறோம். சிறார் நீதி வாரியத்தில், மைனர் சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, எங்களை நிலை குலையச் செய்தது.தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனையை விட, குறைவான தண்டனை வழங்குவதை, நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கில், வழங்கப்படும் தீர்ப்பு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற கொடூர செயல்களில், இனி யாரும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு, மாணவியின் பெற்றோர் கூறினர்.


இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் தான், இதைப் பார்த்து, இது போன்று குற்றம் செய்ய நினைப்பவர்களும் அஞ்சுவர். நாட்டிற்கே இந்த தண்டனை முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
 

சுற்றுலா தலங்களை மேம்படுத்த முதல்வர் உத்தரவு


 தமிழகத்தில் சுற்றுலாத் துறையை வளர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பச்சமலை, முத்துப்பேட்டை ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுற்றுலா நேரடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளுர் மக்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. நாட்டின்

ஒருமைப்பாட்டினை வளர்ப்பதிலும், மாணவ, மாணவியரிடையே சிந்தனை கிளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், அறிவுப் புரட்சியை தோற்றுவிப்பதிலும், சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது

. தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய சுற்றுலா மையங்களை தெரிவு செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான  அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக  அரசு எடுத்து வருகிறது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சமலை பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டுகளிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுலாத் தலமாக உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பச்சமலை 527.61 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து  160  முதல் 1,072 மீட்டர் உயரம் உள்ளது.  இம்மலைப்பகுதியில் 35 காப்பு காடுகள் 19,075 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளன.  இம்மலைப் பகுதியிலிருந்து இயற்கை எழில் மிகுந்த கொல்லிமலையை ஒரு புறமும், துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளை மற்ற இரு பகுதிகளிலும் கண்டு களிக்கலாம்.

 இப்பகுதியில் 154 விதமான பறவையினங்கள் வாழ்கின்றன. 135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும் உள்ளன.  இங்கு உள்ள 3 மான்கள் வாழிடத்தில் சுமார் 50 மான்கள் வாழ்கின்றன.   இதற்கு அருகே உள்ள சோலைமதி காப்புக் காட்டில் இந்திய சாம்பல் அணில்கள் காணப்படுகின்றன. மேலும் காட்டுப்பூனை, மரநாய், மலைப்பல்லி, மயில், குரங்கு, பறவைகளைக் கொல்லும் சிலந்தி, கண்ணாடி விரியன் பாம்பு ஆகிய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.

இந்த மலையில் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் பெரியபக்களம், கோரையாறு அருவிகள் உள்ளன.  இம்மலையில் ஏறுவதற்கு கணபாடி-கன்னிமார்சோலை பாதை, கணபாடி-ராமநாதபுரம் பாதை ஆகிய இரு பாதைகள் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பச்சமலைப் பகுதியை அதிக அளவு பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்திட 2 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கோரையாறு மற்றும் பெரியபக்களம் அருவிகளை மேம்பாடு அடையச் செய்வது, காட்சி கோபுரங்கள் அமைத்தல், மலையேற்றப் பாதை மேம்பாடு, பாரம்பரிய மூலிகைப் பண்ணை மேம்பாடு, சுற்றுச் சூழல் சிறுவர் பூங்கா அமைத்தல், செங்காட்டுப்பட்டி பகுதியில் மரஉச்சி வீடுகள், மலையேற்றப் பகுதியில் நிலச்சீரமைப்பு, துயில்கூடம் கட்டுதல்,

சமையலறை, உணவகம் கட்டுதல், உணவகத்திற்கான உபகரணங்கள் வாங்குதல், செங்காட்டுப்பட்டி வன ஓய்வு இல்லத்தில் கூடுதல் அறைகள் கட்டுதல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய விருந்தினர்

மாளிகையை புனரமைத்தல் போன்ற மேம்பாட்டுப் பணிகளும், தெரு கூத்து மேம்பாடு, மாட்டு வண்டிகள் வாங்குதல், குதிரை வண்டிகள் வாங்குதல், மலைவாழ் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு ஆதரவு அளித்தல், விளம்பரம், அறிவுப் பலகைகள் அமைத்தல், சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்காக

ணையதளத்தில் வலைதளம், வழிகாட்டிகள் பயிற்சி, சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு தேவையான பைனாகுலர், மலையேற்றப் பைகள் போன்றவை வாங்குதல், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான அறைகலன்கள், படுக்கைகள்  வாங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கழிமுகப்பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்புநிலக் காடு முத்துப்பேட்டை.  இது 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில்

அமைந்துள்ளது;  முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல்மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக்கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப் பறவைகள் வருகின்றன.  அவற்றில் கிரே பெலிக்கன் (பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளமிங்கோ (பூநாரை), டார்டர்

(பாம்புத் தாரா), பின்டெயில் டக் (ஊசி வால் வாத்து) பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவை முத்துப்பேட்டையில் காணப்படும் முக்கிய பறவை இனங்களாகும்.  குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டிகள் இங்கு வாழ்கின்றன.   முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம்

காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய  கடற்கரை காயல் ஆகும்.  இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது.  காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த  இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஒதுக்கீட்டின் மூலம்

கண்ணாடி இழைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல், வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், மரப்பாலம், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பச்சமலைப் பகுதி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது