This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 January 2014

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

தமிழக – இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித நிபந்தனைமின்றி விடுவிப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவர் இன்று புதன்கிழமை முதல் கடலுக்குச் செல்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதியன்று  ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் கச்சதீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகு மீது மோதி விசைப்படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். பின்னர் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் சிறைப்பிடித்து அவர்களின் 6 விசைப்படகை கைப்பற்றி சென்றனர்.

இலங்கை காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 ஆம் திகதியன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 3 வரை நீதிமன்ற யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை ஜனவரி 27 அன்று நடைபெறுவதற்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி, மீனவர்களை சிறையில் அடைத்ததைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்த போராட்டத்தில் குதித்தனர்.இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதி தேவதாஸ் கூறும்போது, கடந்த 27 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழக – இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித நிபந்தனைமின்றி விடுவிப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை நான்காவது நாளோடு ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று புதன்கிழமையில் இருந்து கடலுக்கு செல்கிறோம் என்றார்.

26 January 2014

பத்ம விருதுகள்! கமல்ஹாசன், வைரமுத்து உள்பட 127 பேருக்கு

 நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விளையாட்டு வீரர்கள் லியாண்டர் பயஸ், யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாரத ரத்னா விருதுக்கு இரு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 2 பேருக்கு பத்ம விபூஷன், 24 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 101 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன்

விஞ்ஞானி ஆர்.ஏ. மஷேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. பாரத ரத்னாவுக்கு பிறகு இரண்டாவது உயரிய விருதைப் பெறும் இவ்விருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
பத்ம பூஷன்

தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி.எச்.விநாயக் ராம் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 பத்மஸ்ரீ

தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், டாகடர் அஜய் குமார் பரிடா, தொழில் துறை பிரிவில் மல்லிகா சீனிவாசன், மருத்துவம் பிரிவில் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் மற்றும் பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா, விளையாட்டுப் பிரிவில் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, பேட்மிட்டன் பயிற்சியாளர் கோபிசந்த், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், எழுத்தாளர் அனிதா தேசாய் உள்ளிட்டோர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், திரைப்பட நட்சத்திரங்கள் பரேஷ் ராவல், வித்யா பாலன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதைப் பெறுகின்றனர்.

பகுத்தறிவாளர் என்.ஏ.தபோல்கர் உள்பட 3 பேருக்கு, அவர்களது இறப்புக்குப் பிறகு பத்ம விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

பாதுகாவலரின் அதிரடி - கோடிக்கணக்கான பணம் தப்பியது

பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பெண் அதிகாரியை கொடூரமாக கத்தியால் வெட்டி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பபவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டம் கானோர் கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் மட்டும் வங்கிக்குள் நுழைந்தான். மற்ற இருவரும் வெளியில் நின்று யாராவது வருகிறார்களா? என பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த காவலாளிகள், வங்கியின் வாசல் அருகே சென்று கதவை பூட்டினர். அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பாதுகாவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு எழுந்த அவர்கள், கொள்ளையர்களுடன் கடுமையாக சண்டையிட்டு, அவர்களில் ஒருவனை மடக்கிப் பிடித்தனர். இதனால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டு, கோடிக்கணக்கான பணம் தப்பியது.

காவலர்கள் மிகவும் தைரியமாக கொள்ளையர்களுடன் சண்டையிட்ட சம்பவம் வங்கியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்களின் கடமையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். தப்பி ஓடிய இரண்டு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படைகள் விரைந்துள்ளன.
 

24 January 2014

மாணவியின் சோக கதை அன்று படிப்பில் முதலிடம் இன்று

 : வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.

இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற தங்கரத்தினம்.
கலையரசி, தங்கரத்தினத்தின் தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. இருப்பினும் வறுமையை வென்று பிளஸ் டூ தேர்வில் தமிழ்- 188, ஆங்கிலம் - 97, வரலாறு - 122, புவியியல் - 149, பொருளியல் - 142 என 1200-க்கு 831 மதிப்பெண்களை தங்கரத்தினம் பெற்றிருந்தார்.

தற்போது மதுரையில் தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். தனது அக்கா கலையரசிக்கும் அவரது கணவர் செல்வக்குமாருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மணமான ஒரே வாரத்தில், கலையரசி பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
இந்நிலையில், ஒரு ஆண்டு ஒடிவிட்டதால் செல்வக்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் கலையரசின் மாமியார் தங்கவேலு.

இதனால் தங்கவேலு மீது ஆத்திரம் அடைந்த தங்கரத்தினம், நேற்று அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார், அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அரிவாளால் கழுத்து, கால், கையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த தங்கவேலு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தங்கரத்தினம் அவனியாபுரம் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
 

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.

சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவாலை விட கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த்தே பொருத்தமானவராக இருப்பார்.

திரைப்படங்களில் சாதாரண வேடத்தில் நடிப்பவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கவர்ச்சி நாட்டி நடிப்பார்கள். அதுபோல தன்னை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள கெஜ்ரிவால் கவர்ச்சி போராட்டங்களில் நடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் ஷிண்டே கெஜ்ரிவாலை பைத்தியக்கார முதலமைச்சர் என்று கூறிய நிலையில், இன்று உத்தவ் தாக்கரே அவரை கவர்ச்சி நடிகையுடன் ஒப்பிட்டு பேசி வருவது அவரின் நடவடிக்கை கேலிக்குறியதாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
 

22 January 2014

ஆந்திர மாநில எம்.பியான நடிகை விஜயசாந்தி,

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ், தனது முதுகில் குத்தினார் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி மெதக் தொகுதி எம்.பி.யாக உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த அவர் தலைவர் சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இதனால், அவர் காங்கிரசில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மெதக் தொகுதியில் நடந்த ரயில்வே பாதை தொடக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்தபோது அதன் நிர்வாகிகள் யாரும் எனக்கு ஆதரவாக இல்லை. என்னை அரசியலில் இருந்து ஒழிக்க அவர்கள் சதி செய்தார்கள். என்னுடன் இருந்து கொண்டே சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்.

எனது ஒவ்வொரு அடி அரசியல் பயணத்தையும் தடுக்க முயற்சி செய்தார்கள். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் எனது முதுகில் குத்தினார்.
நான் எனது குடும்பத்துக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலில் இருக்கவில்லை. தேவையான பணம் சம்பாதித்த பிறகே அரசியலில் ஈடுபட்டேன்.

யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மக்கள் பிரச்சினையை தீர்க்க உழைத்து வருகிறேன். இந்த விழாவில்கூட எனக்கு புகழ் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சிலர் செயல்பட்டார்கள். எனது அரசியல் பயணத்தில் இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

ரயில்வே கட்டணம் உயர்கிறது


ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டதால், ரயில்வே கட்டணம் உயர்கிறது.
ரயில் கட்டணம் கடந்த பல ஆண்டுகளாக மிக அதிக அளவில் உயர்த்தப்படவில்லை. இதனால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

ரயில்வேக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த பரிந்துரைக்கு நேற்று மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

இதன் மூலம் இனி அடிக்கடி ரயில் கட்டணத்தை மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது செலவுக்கு ஏற்ப இனி ரயில் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ரூ.25 ஆயிரம் கோடி இழப்பை சரிகட்ட ரயில் கட்டணத்தை கணிசமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 4 உறுப்பினர்களை கொண்ட குழு இதில் இறுதி முடிவு எடுக்கும்.

21 January 2014

டாய்லெட் இருக்கு ஆனா இல்லை! இது பள்ளியின் கணக்கு

சேலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம் கட்டப்படாமலேயே, கட்டியதாக கணக்கு காட்டியது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அழகாபுரம், ரெட்டியூர், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
2010-11ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நான்கு கழிப்பறை, "யூனிட்' அமைக்க, தலா, 35,000 ரூபாய் வீதம், 1.40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு கழிப்பறை, "யூனிட்'டில் இரண்டு டாய்லெட் ரூம், ஒரு யூரின் பிளாக் அமைக்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுத்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது என்ற அறிக்கை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்பள்ளியில் கல்வி இயக்க அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற போது, ஒரு கழிப்பறை யூனிட் கூட முழுமையாக கட்டப்படாமல் இரண்டு டாய்லெட் ரூம் மட்டுமே கட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது தலைமை ஆசிரியராக இருந்து, இக்கட்டிடத்தை கட்டிய திலகம், தற்போது சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலராக இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கட்டிடம் கட்ட இடமில்லாததால், கட்டப்படவில்லை எனவும் மீதமுள்ள பணத்தை திருப்பித்தர தயாராக இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், உண்மையில் அதற்கு பின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் நான்கு கழிப்பறை யூனிட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கட்டிட நிதியை முறைகேடு செய்யும் நோக்கிலேயே, கட்டிடம் கட்டப்படாமலேயே கட்டியதாக அறிக்கை கொடுக்கப்பட்டது எனவும் தற்போது வகையாக சிக்கிக்கொண்டதால், பணத்தை திருப்பித்தர முன்வந்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திட்ட நிதியில், கட்டி முடிக்கப்பட்டதாக அறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் திட்ட நிதியை திரும்ப பெற முடியாது என்பதால், கழிப்பறை கட்டிடம் கட்டியே தீர வேண்டும் என அலுவலர்கள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கழிப்பறை கட்டிடம் கட்டினாலும், முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை விடவும், அதிக நிதி தேவைப்படும்.

ஆனாலும், சங்ககிரி மாவட்டக்கல்வி அலுவலராக உள்ள முன்னாள் தலைமை ஆசிரியரை காப்பாற்றும் வகையில், தற்போது கழிப்பறை கட்டிடம் கட்ட, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனாலும் கட்டி முடிக்கப்பட்டதாக தவறான தகவல் அளித்த, முன்னாள் தலைமை ஆசிரியர், தற்போது மாவட்டக்கல்வி அலுவலராக இருப்பதால், அவற்றை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கணவரின் சம்பளம் எவ்வளவு? அறியும் உரிமை மனைவிக்கு உண்டு

அரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அவர், ஜோதி ஷெராவத்தின் கணவரின் ஊதிய விவரங்களை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உள்துறை அமைச்சகத்தை அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
கணவர் அரசு ஊழியராக இருந்தால் அவரின் ஊதிய விவரங்களை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு.
மேலும் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப் படுகிறது. எனவே அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக அளிக்கப்படும் மனுக்களை அரசுத் துறைகள் நிராகரிக்கக்கூடாது என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.

20 January 2014

முதலமைச்சரை கடத்த தீவிரவாதிகள் திட்டம்

 டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறையில் உள்ள தங்கள் அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கலை வெளியில் கொண்டுவருவதற்காகவே கேஜ்ரிவாலைக் கடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, உளவு அமைப்புகளிடமிருந்து தங்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி காவல் துறையின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர் இந்த தகவலை கேஜ்ரிவாலிடம் கூறி, ‘இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில்,
“என் உயிரைப்பற்றி கவலை இல்லை. எந்தவித பொலிஸ் பாதுகாப்பையும் நான் ஏற்கப்போவதில்லை” என்றார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பாதுகாப்பு வழங்க டெல்லி பொலிஸார் முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார் கேஜ்ரிவால். விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவதே ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என அவர் கூறி வருகிறார். இந்நிலையில்தான் அவரைக் கடத்தப்போவதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்திய-நேபாள எல்லையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் திகதி பட்கல் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பட்கல் கிராமத்தைச் சேர்ந்த பட்கலுக்கு அகமதாபாத், சூரத், பெங்களூர், புணே, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
பெங்களூரில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பட்கலிடம் விசாரணை நடத்த கர்நாடக போலீஸுக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

முன்பு சிமி இயக்கத்தினருடனும் தொடர்பு வைத்திருந்த பட்கல், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 

தாயின் காதலுக்கு ஆப்பு வைத்த மகள்

பெற்ற தாய் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக மகளே பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், நான் எனது தாய், தந்தை, தம்பி என சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எங்களது குடும்ப வாழ்க்கையில் வாலிபர் ஒருவர் குறுக்கிட்டார்.

எனது தாயுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி கொண்ட அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் எனக்கும், எனது தம்பி மற்றும் தந்தைக்கும் மிகுந்த அவமானம் ஏற்பட்டது.
இதையடுத்து எனது தந்தை வீட்டு முன்பு கமெரா ஒன்றை பொருத்தினார். அதையும் உடைத்து போட்டு விட்டனர் என்றும் எனவே கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் எனது தாய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்
 

19 January 2014

ராகுலுக்கு உதவ களமிறங்கும் ப்ரியங்கா


ராகுல்காந்திக்கு உதவியாக ப்ரியங்கா காந்தியை களம் இறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
தேசிய கட்சியான பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதன் பயனாக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.
நரேந்திர மோடியின் செல்வாக்கால் காங்கிரஸ் மிரண்டு போனது. இதனால் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் இதை எதிர்பார்த்தனர்.
ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
ராகுல்காந்தி தலைமையிலான தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் குலாம் நபி ஆசாத், ஜோகிர் ஆதித்ய சிந்தியா, நந்தீப் சூரஜ்வாலா ஆகிய 3 பேர் மேலும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.
இந்நிலையில் பலவீனமாக காணப்படும் கட்சியை பலப்படுத்த பிரியங்கா காந்தியை தேர்தல் பிரசாரத்தில் களம் இறக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.
ராகுல்காந்திக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் வகையில் அவரை தேர்தல் களத்தில் கொண்டு வருகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக ராகுல்காந்தி மாநில வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் பிரியங்காகாந்தி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு ராகுலுக்கு உதவியாக இருந்து வருகிறார். இதே போல வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்பட பல்வேறு வகைகளிலும் ராகுல்காந்திக்கு அவர் உதவிகரமாக இருப்பார்.


காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற பெண்! நடந்தது என்ன?

 இணையதள காதலனை சந்திக்க போலி பாஸ்போர்ட் மூலம் பாகிஸ்தான் சென்ற குஜராத் பெண் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நகிதா ரமேஷ் (20), இவருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசிக்கும் அசார் என்பவருக்கும் இணையதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அசார் மீது காதல் வசப்பட்டார் நகிதா. இதனைத் தொடர்ந்து காதலனை பார்ப்பதற்காக தோகாவில் இருந்து விமானத்தில் லாகூர் சென்றுள்ளார்.
அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் உள்பட ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது நகிதா, நிம்ரா என்ற போலி பாஸ்போர்ட்டில் லாகூர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவரை தனியாக அழைத்து சென்று பொலிசார் விசாரித்துள்ளனர். விசாரணையில், இணையதளத்தில் அறிமுகமான அசாரை சந்திக்க வந்ததாகவும், தான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகவும் நகிதா தெரிவித்துள்ளார்.
மேலும் விமான நிலையத்தில் நிகிதாவை வரவேற்க அசாரும் அங்கு வந்திருந்தார். அவரையும் மடக்கி பொலிசார் விசாரித்தனர். பின்னர் நிகிதா சொல்வது உண்மை என்று தெரிய வந்ததையடுத்து குடியேற்று துறை அதிகாரிகள் நகிதாவை மீண்டும் தோகாவுக்கு நாடு கடத்தினர். மேலும் அசாரையும் விடுவித்தனர்.
அதன்பின் ஏமாற்றத்துடன் அசார் முல்தான் திரும்பி சென்றுள்ளார், போலி பாஸ்போர்ட்டில் வந்த நிகிதாவை ஏன் கைது செய்யவில்லை என்று நிரூபர்கள் கேட்டதற்கு, பாகிஸ்தான் சட்டப்படி, போலி ஆவணங்களில் வரும் எல்லோரையும் நாடு கடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
 

சுனந்தா புஷ்கரை உயிருடன் பார்த்த தரூர் உதவியாளர்

சுனந்தா புஷ்கர் மரண விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது.
மர்மமான முறையில் மரணமடைந்த சுனந்தா புஷ்கர், அவரது கணவரும்

 மத்திய அமைச்சருமான சசி தரூர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்ற பிறகு உயிருடன் இருந்ததாகவும், அவரை உயிருடன், தரூரின் உதவியாளர் நாராயண் சிங் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

14 January 2014

மாணவியுடன் பேஸ்புக் நட்பு வைத்திருந்த மாணவன் சுட்டுக்கொலை!

 உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக் காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.முசாபர்நகர் அருகே

ஷியாம்லியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மயாங் (17). கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோச்சிங் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் அவனை வழிமறித்து தகராறு செய்தனர். பிறகு தங்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியால் மயாங்கை சுட்டுக் கொன்றனர்.
   
இதுகுறித்து, அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வர்மா கூறுகையில், "தங்களுடன் பயிலும் ஒரு மாணவியுடன் நட்பு கொள்ள வேண்டாம் என மயாங்கை இரண்டு மாணவர்கள் எச்சரித் துள்ளனர். இதை மீறி அந்த மாணவியுடன் பேஸ்புக் இணையதளத்தில் நட்பு வைத்திருந்ததால் மயாங்கை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்" என்றார். இந்த சம்பவத்தில் சம்பந்தப் பட்ட 11-ம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 

13 January 2014

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -: ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற எழுச்சிமிக்க இந்தியர் சுவாமி விவேகானந்தர். மேற்...

இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -

ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற எழுச்சிமிக்க இந்தியர் சுவாமி விவேகானந்தர். மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான இன்றைய கொல்கத்தாவில், 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி விசுவநாத தத்தா, புவனேஸ்வரி தம்பதியரின் மகனாக பிறந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சுவாமி விவேகானந்தரின் போதனைகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கான அவரது எழுச்சிமிக்க உரைகளுக்கு புகழாரம் சூட்டினார். அப்போது அவர் கூறியதாவது;
   
மதவெறி இன்றைக்கு இந்தப் பிராந்தியத்திலும், பல நாடுகளிலும் அமைதிக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட தருணத்தில், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் பலம் வாய்ந்தவை. அவரது எண்ணங்கள் நமது புதிய தலைமுறை இளைஞர்களின் இதயங்களுக்கும், மனங்களுக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். அவர்கள்தான் மதவெறிக்கு எதிராக போராட வேண்டும். விவேகானந்தரின் போதனைகள் முக்கியமாக சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் வலியுறுத்தின. சுவாமியின் போதனைகள் நாம் குறுகிய மனம் படைத்தவர்களுக்கும், சுய நல சக்திகளுக்கும் இரையாகி விடக்கூடாது என கூறுகின்றன. இளைய தலைமுறையினரை தட்டி எழுப்புவதாக அவரது உரைகள் அமைந்தன.

உலகமெங்கும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் நமது தேசத்தில் மட்டும்தான் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. 21-ம் நூற்றாண்டு இந்தியா, இளைஞர்களின் சமூகமாக இருக்கிறது. இந்த இளைஞர் பட்டாளத்தின் எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் உயர்வாக இருக்கின்றன. அவர்கள் சிறப்பான கல்வி அறிவு பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் நல்லமுறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாக அவர்களது வேலைவாய்ப்புக்கள் அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். நாம் அவர்களை தவற விடக்கூடாது. நாம் அவர்களை தவற விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது பேச்சில், "சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திய உயர்வான போதனைகளை நாம் நமது இதயத்தில்

ஏற்றிக்கொள்ளாமல், அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதோ, அவருடைய சிந்தனைகளுக்கு, போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதோ, அவரது நினைவைப் போற்றுவதோ பலன் தராது" என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், "உண்மையான மதம் என்பது வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்காது. அது பரஸ்பர மரியாதை, அனைத்து தரப்பினரிடத்தும் சகிப்புத்தன்மை, அனைவரின் இறைநம்பிக்கையையும் ஏற்றுக்கொள்வதாகும்" என குறிப்பிட்டார்.
 

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : ஜெயலலிதாபல மொழிகள் தெரிந்தவர் - பிரதமர் பதவிக்கு?...

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : ஜெயலலிதாபல மொழிகள் தெரிந்தவர் - பிரதமர் பதவிக்கு?...: கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு இன்று வந்த அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளி...

ஜெயலலிதாபல மொழிகள் தெரிந்தவர் - பிரதமர் பதவிக்கு??


கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு இன்று வந்த அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு பல கொள்கைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்று டெரிவேட்யூ என்ற விதியாகும். இந்த கொள்கையால் வங்கி மூலம் ஏற்றுமதி செய்யும் முறையில் சுமார் ரூ.200 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது.

இதில் கோவை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதில் பன்னாட்டு வங்கிகள் பெரும் பலனடைந்துள்ளன. இதற்கு மத்தியில் ஆளும் அரசும் உடந்தையாக உள்ளது. 2012–ம் ஆண்டு 11 வங்கிகள் மீது புகார் கூறப்பட்டது. இதில் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் அபராதம் விதித்துள்ளார். மோசடி வங்கிகள் குறித்து பிரதமர், மத்திய நிதி மந்திரி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம்.

இந்த மெகா மோசடியை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். மேலும் மத்திய கணக்குத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றார். கூட்டணி கூறித்து கேட்டபோது ஒத்த கருத்துள்ள அ.தி.மு.க.வுடன் எங்கள் கட்சி பாராளுமன்றத்தேர்தலை சந்திக்கும் என்றார். ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் கூறி வருவது பற்றி கேட்டபோது ஜெயலிதா பல மொழிகள் தெரிந்தவர் என்பது மட்டுமல்ல அறிவாளியும் கூட. எனவே அவர் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவரே என்றார்.
 

10 January 2014

ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் :

தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ்  தொகையாக 31.3.2013 அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.
சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டது போல் 500 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

08 January 2014

இந்தியாவில் ரயில் தீ பிடிப்பு; 9 பேர் மரணம்

இந்தியாவில் இன்று புதன்கிழமை அதிகாலை ரயிலொன்றில் தீ பரவியதில் பெண்ணொருவர் உட்பட குறைந்தபட்சம் 09 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து மேற்கு மாநிலமான மஹாராஷ்திரா ஊடாக பயணித்துக்கொண்டிருந்த டெஹ்ரடன் அதிவேக ரயிலின் குறைந்தபட்சம் 03 பெட்டிகள் தீ பிடித்தன.

 இராண்டாம் வகுப்புப் பெட்டியில் பிடித்த தீயானது விரைவாக அருகிலிருந்த பெட்டிகளுக்கு பரவியதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ பிடிப்புக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் அந்நாட்டுச்; செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசெம்பர் மாதம் தென் ஆந்திராப் பிரதேச மாநிலத்தில்   பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் தீ பரவியதில் 02 சிறுவர்கள் உட்பட 26 பேர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

05 January 2014

மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்?


கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  10 சதவீதத்தினர் மட்டுமே மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்குவதாகவும் கூறிய அவர், மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமில்லை என்று கூறினார்.

04 January 2014

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்
சி காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.8% ஆகக் குறைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாதனைகளை அவர் விளக்கிப் பேசினார்.

அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மத்திய அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்தியாவில் பட்டினி, ஊழலை களைய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி காலத்தில் விவசாயத் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைத்துள்ளது. கிராமப்புற வளர்ச்சி தொடர்பாக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ன.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வியை மேம்படுத்த நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பிரதமராக மாட்டேன். மத்திய அரசின் நிர்வாகத்தை புதிய பிரதமரிடம் ஒப்படைப்பேன்.
பிரதமர் வேட்பாளரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்வு செய்து உரிய நேரத்தில் காங்கிரஸ் அறிவிக்கும் என்று பிரதமர் பேசினார்.