This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2014

சசிகலாவையும் தன்னுடன் சிறையில்இருக்க அனுமதி கோரி ஜெயலலிதா மனு!-

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலாவை தன்னுடன் இருக்க அனுமதி கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 4வது நாளாகா சிறையில் உள்ள அவர்களை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அ.தி. மு.க.வின் சட்டப்பிரிவு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
சிறையில் உள்ள ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார். நீரிழிவு நோய், இதயக்கோளாறு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.30 மணிக்கு எழுந்த ஜெயலலிதா, பால் சாப்பிட்டுவிட்டு, சிறிது நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு பொங்கலும், சர்க்கரை சேர்க்காத பாலும் சாப்பிட்டுள்ளார். வழக்கத்தைவிட ஜெயலலிதா இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக சிறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தன்னுடைய தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை தன்னுடைய அறையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா மனு அளித்துள்ளதாக பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள சுதாகரன், சுரங்க ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜனார்த்தன ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மெஃப்சுல் அலி கானுடன் ஒரே சிறை அறையை பகிர்ந்துகொண்டுள்ள நிலையிலேயே, ஜெயலலிதா இந்த மனுவை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, சிறையில் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சுகன்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம்; மனு விசாரணை அக்.6 க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு  தாக்கல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்மைச்சராக இருந்தவர். ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார்.
எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார்” என 15 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுஇ விடுமுறைகால நீதிபதி ரத்னகலா முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் அரசு தரப்பிற்கு தரவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்துஇ ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவரது சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார். இதற்காக நேற்று அவர் அவசரமாக பெங்களூர் வந்தார்.அங்கு அவர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவுக் காக பிரபல மும்பை வழக்கறிஞர் அமீத்தேசாய்  ஆஜராகி வாதாடுவார் என தெரிகிறது..அதேபோல சுதாகரனுக்காக அன்புக்கரசன் என்ற வழக்கறிஞர் வாதாடவுள்ளதாக கூறப்படுகிறது. இளவரசிக்கான வழக்கறிஞர் யார் என்பது தெரியவில்லை.
ஜாமீன் மனு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வாதிடுகிறார்.
இதுகுறித்து பவானி சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது.   தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.
அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமாக படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே நீதிமன்றத்தி்ல் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும்” என்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்!

அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை.
தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது.
2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து ஈழத் தமிழினம் அழுவதற்கும் உரிமையின்றி துடித்து ஓய்ந்தபோது, கலைஞர் பதவிக்கதிரையில் இருந்து இறங்கினார்.
இருந்தும் சோனியாவின் ஆட்சி நமக்குப் பாதகமாகவே அமைந்திருந்தது. இதற்கும் முடிவு வந்து மோடி பிரதமராக,
தமிழகத்தில் நீங்கள் அமோக வெற்றி பெற்று பாரதத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சி என்றிருந்த வேளை நாங்கள் புளகாங்கிதம் உற்றிருந்தோம். என்ன செய்வது! இப்படி ஓர் இடி விழுமென்று யார்தான் நினைத்தார்கள்?
எங்கள் தொடர்பில் பிரதமர் மோடிக்கு நீங்கள் அனுப்பிய கடிதங்கள், சட்டசபையில் எடுத்த தீர்மானங்கள் இதற்கெல்லாம் அப்பால் தமிழகத்தில் தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் அபரிதமான அபிவிருத்திப் பணிகள் என அனைத்தையும் வியந்து பார்த்து நின்ற வேளை, தமிழர்களின் தலைவிதி இதுதான் என்பதாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து போயிற்று.
ஆம் தாயே! சுப்பிரமணிய சுவாமி என்ற துச்சாதனன் தமிழர்களின் துகில் உரிவதற்காக இலங்கைக்கு வந்து போன செய்தி அறிந்திருப்பீர்கள். அநீதியின் வடிவமாகிய சுப்பிரமணிய சுவாமி வென்றார் என்பதை ஒருபோதும் ஜீரணிக்க முடியவில்லை.
இவையயல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மோடிக்கு எழுதிய கடிதங்களை கிண்டல் செய்தவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள் என்று நம்பினோம்.
எங்கள் நம்பிக்கைகள் நடுவானில் அறுந்து வீழ்வதுதான் விதியயன்றாகிவிட்ட பின்னர் அழுது புலம்புவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர்.
ஆம்! சட்டசபைக்குச் செல்லாத முதல்வர் தமிழகத்தில் இருந்தார் என்றால் அது நீங்களா கத்தான் இருக்க முடியும் என்ற சரித்திர வரலாற்றைப் பதிவு செய்வதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் வெதும்பும் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தையும் இக் கடிதம் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜெயலலிதா மனு பிணையில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன்-

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக பிணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஒவ்வொரு பிணை மனுவுடன் தீர்ப்பின் நகலும் ஆயிரம் பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது பிணை மனுவில், ‘’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, தான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.
அவர்களிடத்தில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றும், பிணையில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்! இந்தியா அவதானம்

 அண்மையில் சிறீலங்கா  கடற்பரப்பில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று வந்துள்ளமை தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாக அட்மிரல் ரோபின் தோவன் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28 September 2014

அடுத்த முதல்வர் யார்? ஜெயலலிதாவிடம் ஆலோசனை!

அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது.
பின்னர் ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.பதவியையும் இழந்து விட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மனு கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க உள்ள அவர்கள் அடுத்த தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக யாரை நியமிப்பது? மேலும், இதர அரசு நடவடிக்கைகள் குறித்து ஜெயலலிதாவிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27 September 2014

திமுக அலுவலகம் மீது கல்வீச்சு தமிழகத்தில் பதட்டம்!

ஜெயலலிதா மீதான வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில்  கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல், கல் வீச்சு சம்பங்கள் நடந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை திமுக அலுவலகம் மீது  கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீசார் திமுக அலுவலத்தில் இருந்தவர்களை வெளியேறு கூறினர். அடுத்தடுத்து மூன்று முறை கல்வீச்சு சம்பவம் நடந்தது.போக்குவத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25 September 2014

மீனவர்கள் 6 பேர் தமிழக மற்றும் ஆந்திர கடற்பரப்பில் கைது

தமிழக மற்றும்ஆந்திர மாநில எல்லைப்பகுதியிலுள்ள கடற்பரப்பில்மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணாம்பட்டினம் கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினின் ரோந்து நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள், சென்னை துறைமுக பொலிஸாரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மீனவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சென்னை துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

24 September 2014

இரண்டு வழக்குகள்சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக !

இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக மேலும் இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் பிரின்சிபல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த செப்டம்பர் 20ஆம் திகதியன்று சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மக்கள் மதிக்கும் ஒரு தலைவராக தாம் இருக்கும் போது தம்மை இழிவுபடுத்தும் வகையில் இந்தக்கருத்துக்கள் இருப்பதாக ஜெயலலிதா தமது மனுக்களில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 17ஆம் திகதியன்றும் ஜெயலலிதா, சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சுவாமியை ஒக்டோபர் 30ஆம் திகதியன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் படகுகளை தடுக்க வைக்கவும் தாம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியதாக சுவாமி தெரிவித்த தகவலின் பின்னர் ஜெயலலிதா அதனை கண்டித்திருந்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா மீது சுவாமி அவதூறை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23 September 2014

மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நோக்கம் இல்லை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது பிடிப்பட்ட படகுகள் இலங்கை அதிகாரிகளால் ஏலத்தில் விடப்படவுள்ளதாக அண்மையில் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸின் இது தொடர்பான குற்றச்சாட்டும் இந்திய ஊடகங்களில் வெளியானது.
எனினும் அவ்வாறான எந்த ஏற்பாடுகளும் இல்லை என்ற மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த படகுகளை ஏலத்தில் விடவேண்டுமெனின், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் தற்போது 76 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 73 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21 September 2014

இந்தியப்பிரஜைகள் ஏழு பேர் கைது!

 சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்து கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்தியப்பிரஜைகள் ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாயப்பட்டிமுன எனுமிடத்தில் வைத்தே இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19 September 2014

சிறைக் கைதி தற்கொலைக்கு முயற்சி

 இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கைதியொருவர், தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராஜா (வயது 32) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற நிலையில், கடந்த புதன்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.
இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்னர் 4 பேரில் ஒருவராக கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17 September 2014

விஜய்க்கு 3 நிபந்தனைகள் - புகழேந்தி தங்கராஜ்

 விஜயின் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான உறவும் தொடர்பும், அளவுக்கதிகமாக அம்பலமாகி விட்டது. இப்படியெல்லாம் அம்பலமாவோம் என்பதை அறியாமல் – ‘தமிழரின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் படமெடுக்கிற இழிபிறவிகளா நாங்கள்’ என்றெல்லாம் சவுண்ட் கொடுத்தவர்கள், இப்போது சைலண்ட் மோடுக்குப் போயிருக்கிறார்கள்.
கத்தி தயாரிப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. “படமே முடிந்துவிட்ட நிலையில் அதை எப்படித் தடுக்க முடியும்” என்பது நண்பர்கள் சிலரது கருத்து. இனப்படுகொலையே முடிந்துவிட்ட பிறகு விசாரணை எப்படி நடத்த முடியும் – என்கிற மேலான கருத்துக்கும் இந்த மேதாவிகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
‘படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொழில் நுட்பக் கலைஞர்களின் உழைப்பு வீணாகலாமா’ என்பது நண்பர்கள் சிலரின் வாதம். இந்த வாதத்தில் இருக்கிற குறைந்தபட்ச நியாயத்தை நாம் மறுத்துவிட முடியாது. அதே சமயம், படத் தயாரிப்பின் பின்னணியில் ராஜபக்சேவின் கூட்டாளிகள் இருப்பதை அரசாங்க ரகசியம் மாதிரி அடைகாத்த கத்தி தயாரிப்பாளர்களை மன்னித்துவிடவும் முடியாது.
லைக்கா மொபைல் நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு, வேறு நிறுவனத்தின் பெயருடன் வந்தால் படத்தை வெளியிட அனுமதிக்கலாமே – என்கிற அபத்தமான வாதமும் ஒருகட்டத்தில் முன்வைக்கப்பட்டது. நம்முடைய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் ஒநாய் படத்துக்கு மேலே ஒட்டகம் என்று எழுதிவிட்டாலே நமக்கு வெற்றிதானே – என்று கூசாமல் கேட்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப் பேசுபவர்கள், படத்தின் பெயரையே ‘சுத்தி’ என்று மாற்றிவிட்டு, “இது கத்தியில்லை, சுத்தி” என்று அறிவித்துத் தொலைக்க வேண்டியது தானே! இவ்வளவு குழப்பம் எதற்கு?
நான் – கத்தி வெளியாக அனுமதிக்கவே கூடாது – என்கிற கட்சியில்லை. விஜய், முருகதாஸ் என்கிற இரண்டு பச்சைத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தைத் தடுக்கக்கூடாது என்றே நானும் நினைக்கிறேன். அதே சமயம், இந்தக் கத்தி சிங்களச் சிங்கத்தின் கையில் இருக்கிற அதே கத்தி என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன். அதனால்தான், கத்தி குழுவுக்கு நியாயமான சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசினேன்.
கத்தி படத்தை வெளியிடுவதற்கு முன், உலகெங்கும் இருக்கிற 10 கோடி தமிழ் மக்களிடம் விஜயும் முருகதாஸும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது என் வாதம். ‘ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை விரட்டி விரட்டிக் கொன்ற ராஜபக்சேவின் கூட்டாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்தப்படத்தில் பணியாற்றியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறோம். இனப்படுகொலை செய்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தயாரிக்கும் எந்தத் திரைப்படத்திலும் இனிமேல் பங்குபெற மாட்டோம்’ என்று விஜயும் முருகதாஸும் கூட்டாக அறிவிக்கட்டும்…… அதற்குப் பிறகு படத்தைத் திரையிடட்டும்! இப்படிக் கேட்பதில் என்ன தவறிருக்கிறது?
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பிரபல கலைஞர்களைக் கொண்டே தமிழகத்தின் முகத்தில் கரி பூச முயலும் கொழும்பின் கொழுப்பை அடக்கவேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர, படத்தை எப்படியாவது முடக்கவேண்டும் – என்பது என் நோக்கமில்லை.
தமிழக சட்டப் பேரவையில் 2011ல் முதல்வர் ஜெயலலிதா ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம், இனப்படுகொலை செய்த இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அந்தத் தீர்மானத்தை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்பதற்காக வலைவிரித்துக் காத்துக் கொண்டிருந்தது இலங்கை. ‘வேடன் வருவான், வலையை விரிப்பான், விதைகளைத் தூவுவான்’ என்பது தெரியாமல், அந்த வலையில் போய்ச் சிக்கிக் கொண்டது விஜய் குருவி.
யாரோ ஒரு முகம் தெரியாத ஆளைக் கொண்டுவந்து களத்தில் இறக்காமல், ராஜபக்சேவுடன் நகமும் நெய்ல் பாலிஷுமாக ஒட்டிக் கொண்டிருக்கிற லைக்கா மொபைலைக் களத்தில் இறக்கியிருப்பது, தமிழக முதல்வருக்கு ராஜபக்சே விடுத்திருக்கும் நேரடி சவால். “பொருளாதாரத் தடையா விதிக்கச் சொல்கிறீர்கள்….. என்னுடைய சினேகிதர்களைக் கொண்டே தமிழ்நாட்டில் படமெடுக்கிறேன் பார்” என்பதைச் சொல்வதற்காகவே எடுத்திருக்கிறார்கள் கத்தி படத்தை!
ராஜபக்சே குடும்பத்தின் துணை இல்லாமல் எந்தக் களத்திலும் இறங்காத லைக்கா மொபைல், இந்தக் களத்திலும் அவர்களது ஆசியுடன்தான் இறங்கியிருக்கும். லாபம் பார்ப்பது மட்டுமே அவர்களது நோக்கமாயிருக்க முடியாது…….. ஏழரை கோடி தமிழர்களின் முகத்தில் கரி பூசுவதுதான் பிரதான நோக்கமாக இருக்கும். இப்படியொரு நிலையில், எந்தக் கத்தியால் நம் கழுத்தை அறுக்க முயல்கிறார்களோ அதே கத்தியால் இலங்கையின் குரல்வளையை அறுப்பதுதானே அறிவுடைமை! அதைத்தான் செய்ய வேண்டும் என்கிறேன் நான்.
ஈழத்தில் நடந்தது போர் அல்ல…. திட்டமிட்ட இனப்படுகொலை. விஜய் – முருகதாஸின் மன்னிப்புப் படலத்தின் மூலம், இந்த நிதர்சனத்தை ஊரறியப் பறைசாற்ற முடியும். ‘இனப்படுகொலை செய்தவர்களின் கூட்டாளிகள் பணத்தில் படம் எடுத்ததற்காக 10 கோடி தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று விஜயும் முருகதாஸும் அறிவிப்பது உலகெங்கும் இருக்கிற எங்கள் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக இருக்குமா இருக்காதா? இந்தக் கேள்வியை, ‘லைக்காமொபைல் பெயரை நீக்கிவிட்டால் தமிழன் கழுத்தில் கத்தி வைக்க அனுமதித்துவிடலாம்’ என்று மனசாட்சியைத் தியாகம் செய்துவிட்டு பேசுகிற நண்பர்கள் கவனத்துக்கு விட்டுவிடுகிறேன்.
எது சாத்தியமோ அதைத்தான் இலக்காக வைத்துக் கொள்ளவேண்டும் – என்பது சிலரது வாதம். விஜய் மன்னிப்பே கேட்கமாட்டார் என்றா நினைக்கிறார்கள் இவர்கள்? சென்ற பட வெளியீட்டின் போது, ஆழ்ந்த அரசியல் ஞானம் கொண்ட தன்னுடைய தந்தையுடன் கொடநாட்டுக்கே போய்வந்தாரே இளைய தளபதி…… மறந்துவிட்டார்களா இவர்கள்!
பிரச்சினை எழுந்தவுடன், தங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் ‘இனப்படுகொலை செய்தவர்கள் பணத்திலா படமெடுப்போம்…….. தமிழர்களின் ரத்தத்தை விற்றா பிழைப்போம்’ என்றெல்லாம் தடாலடியாகப் பேசியவர்கள் மனம் விட்டு மன்னிப்புக் கேட்பது தானே முறை! அதை விட்டு விட்டு, லைக்காமொபைல் பெயரை எடுத்துவிட்டு வேறொரு பெயரைப் போட்டுக் கொள்வது – என்பது, குழந்தைக்குத் தகப்பன் யார் என்பது ஊரறியத் தெரிந்தபிறகு வேறொருவனது இனிஷியலைப் பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தைப் போல் அருவருப்பானதா இல்லையா?
சென்னைக் கூட்டத்தில் மூன்று விஷயங்களை நான் வலியுறுத்தினேன்.
ஒன்று – விஜயும் முருகதாஸும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது.
இரண்டு – கத்தி வெளியாகும் திரையரங்குகளில் இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படம் ஒன்றைத் திரையிடுவது. (அந்த ஆவணப் படத்தை உருவாக்கும் பொறுப்பை முருகதாஸிடமே விடுவது.)
மூன்றாவது,- கத்தி படத்தின் முதல் 3 நாள் வசூல் தொடர்பானது.
விஜய் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரம். அவரது காதலுக்கு மரியாதை செய்யாதவர் யார்? அவரது படத்துக்கு முதல் 3 நாள் வசூல் என்ன என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும். அந்த 3 நாள் வசூலை, இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட எம் ஈழத்து உறவுகளுக்குச் செலவிடுவதற்காகக் கொடுத்துவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். எப்படியும் விஜய் – முருகதாஸ் வெற்றிக் கூட்டணியில் கத்தி பிய்த்து உதறப்போகிறது. முதல் மூன்று நாள் வசூலைக் கொடுத்துவிடுவதால் என்ன குறைந்துவிடப் போகிறது?
இதைத்தான் தெள்ளத்தெளிவாகக் கேட்கிறேன் நான்.
லைக்கா மொபைல் பெயரை மாற்றிவிட்டாலே அது நமக்கு வெற்றிதானே – என்கிற குழப்பக் கூத்தின் மூலம், இரண்டு பிரபல கலைஞர்கள் மூலம் இனப்படுகொலையை அம்பலப்படுத்தக் கிடைக்கிற வாய்ப்பைத் தியாகம் செய்ய முயல்கிறார்கள் நண்பர்கள். அயோக்கியத்தனத்துக்குத் துணைபோகிற எந்த அறிவையும், நியாயம் கேட்கத் துடிக்கிற ஓர் இனம் துடைப்பத்தால் பெருக்கியெடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடும் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
“தமிழருக்கான தாயகம் தான் முக்கியம், அதை அடைவது தான் லட்சியம், அதுதான் இலக்கு, வேறு பக்கம் நமது கவனம் திசை திருப்பப்பட்டு விடக் கூடாது” – என்றெல்லாம் நம் மீதே குற்றப்பத்திரிகை வாசிப்பவர்கள்….. கத்தி குறித்து நமக்கு புத்தி புகட்ட முற்படக் கூடும். ராஜபக்சே, லைக்காமொபைல் போலவே இவர்கள் விஷயத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்காக இவர்கள் பேச வருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும். நீதி கேட்கிற ஒரு கூட்டத்தை, நியாயம் கேட்கிற ஒரு கூட்டத்தை, ஒரே ஒரு அயோக்கிய சிகாமணியின் குரல் அசிங்கப்படுத்தி விடும். ஓநாய்க்கும் வாலிருக்கிறது என்பதற்காக அது ஆடாகிவிடுகிறதா என்ன? அந்த வாலுக்கும் இந்த வாலுக்கும் வித்தியாசம் பார்க்க வேண்டாமா?
இனம் – என்கிற என் இனத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டபோது, ‘இதை விடப் பெரிதாக ஈழத் தமிழர்களுக்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது’ என்று வரவேற்பு வளையம் கட்டியவர்கள், நமக்காக மண மாலை கட்டுவார்களா, மலர் வளையம் கட்டுவார்களா?
இவ்வளவு அயோக்கியத் தனங்களுக்கு இடையிலும், தமிழினத்தின் இலக்கு தெளிவாகத்தான் இருக்கிறது. நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நடத்துகிற நீண்ட நெடிய பயணத்தின் போது, வழியிலிருக்கிற கள்ளை முள்ளையெல்லாம் களையெடுத்தால் மட்டுமே இலக்கை அடைவது சாத்தியமாகும் என்பதை என் இனம் முழுமையாக உணர்ந்திருக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதை உலகுக்கு உணர்த்தினால் மட்டுமே, தமிழர் தாயகம் எளிதில் சாத்தியமாகும். விஜயின் கையிலிருக்கிற சிங்களக் கத்தியைக் கூட நமக்கான கருவியாக நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இளைய தளபதி தம்பி விஜய், அரசியல் நோக்கம் அறவே இல்லாமல் பேசுகிறவர்களின் மொழியைப் புரிந்து கொள்வது நல்லது. நடந்துவிட்ட தவறுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதால் அவரது மரியாதை ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. கேட்க மறுத்தால்தான், அவர் யாருக்குத் தளபதி என்கிற விரும்பத் தகாத கேள்வி, அவரே விரும்பாவிட்டாலும் எழும்!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

16 September 2014

ராமநாதபுரத்தில் உள்ள 184 கிராமங்களில் இந்தியப் புலனாய்வாளர்கள்!

 சிறிலங்காவில் இருந்து தென்னிந்தியாவுக்குள் தீவிரவாதிகள் பிரவேசிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள 184 கிராமங்களிலும் இந்திய புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளும், புலனாய்வு அமைப்புகளும் தென்னிந்தியாவில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்காவை பயன்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறிலங்காவில் இருந்து கடல்மார்க்கமாக தென்னிந்தியாவுக்கு தீவிரவாதிகள் ஊடுறுவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான ஊடுறுவலை தடுக்கும் நோக்கில், ஏற்கனவே புலனாய்வு பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த குழு தற்போது சிறப்பாக இயங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

15 September 2014

ஜெயலலிதாவை அழைக்கும் விஜயகாந்த்: சூப்பர் கொமடி

 பேஸ்புக்கில் கிண்டல் அடிப்பது என்றால் முதலில் விஜயகாந்தின் புகைப்படம் தான் எல்லோர் கண்களிலும், கைகளிலும் தட்டுப்படும்.
அருவடைய புகைப்படங்களுடன் வரும், கொமடி வசனங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.
அந்த வகையில் தற்போது, கத்தி படத்தில் பாடல் வரிகளோடு சேர்த்து, முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் கிண்டலடித்துள்ளார்கள்.
கத்தி படத்தில் நடிகர் விஜய், லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த பாடலை விஜயகாந்த் கையில் கமெராவை வைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து ஏ புள்ள செல்வி லெட்ஸ் டேக் எ செல்ஃபி என்கிறாராம்.
அதற்கு ஜெயலலிதா கொன்னுடுவேன் என்பது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

14 September 2014

பா.ஜ.க இரட்டை நிலைப்பாடு- தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதாக் கட்சி இரட்டை நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகத்தலுள்ள பாரதீய ஜனதாக் கட்சியினர் கூறிவருவதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதே கட்சியைச் செர்ந்த மூத்த தலைவர் ஒருவர் மீனவர்களுக்கு எதிராக செயற்படுவதாக தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பறிமுதல் செய்யப்படுகின்ற படகுகளை விடுவிக்கக்கூடாதென தான் ஆலோசனை வழங்கியதாக பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் கூறியமை கண்டனத்திற்குரியதென ஜெயலலிதா ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என தமிழக முதல்வர் குற்றம் சுமத்தியுள்ளார்
இதன்மூலம் பாரதீய ஜனதாக் கட்சியினர் தமிழக மீனவர் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டினை கொண்டுள்ளமை தெளிவாவதாக ஜெயலலிதா ஜெயராம் மேலும் தெரிவித்துள்ளார்.
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

13 September 2014

மாபெரும் தமிழர் பேரணி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி !


                                            5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
                                                      மாபெரும் தமிழர் பேரணி!
நாள்: செப்டம்பர் 24
பேரணி தொடங்கும் இடம்:
                           இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை
                                                      நேரம்:  மாலை சரியாக 3 மணி
பேரணி நிறைவடையும் இடம்:
                              மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில்,
                                                                எழும்பூர், சென்னை.

                                        இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

11 September 2014

தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது!

 இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  மேலும்  தமிழக மீனவர்கள் 30 பேரை தலைமன்னார் கடற்பரப்பில்   இன்று வியாழக்கிழமை  அதிகாலை  கைதுசெய்ததாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வி.ஸ்.மெராண்டா தெரிவித்தார்.
06 படகுகளில் வந்த இந்த மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், இந்த மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விசாரணையின்  பின்னர் 30 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க, கடந்த திங்கட்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ஒரு சிறுவன் உட்பட இந்திய மீனவர்கள் 06 பேரும்  நேற்று புதன்கிழமை (10)  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது 06 மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

10 September 2014

இறந்ததாகக் கூறப்பட்ட பெண் இறுதிச் சடங்கில் கண் விழித்தார்!

தமிழகத்தின் வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஷேனாஸ் (54) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (7) இரவு இறந்ததாகத் தெரிகிறது.
அவரது இறப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று மாலை 5.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்றுள்ளன.  உடல் மீது உறவினர்கள் தண்ணீர் ஊற்றிய போது, ஷேனாசின் கண்கள் லேசாக அசைந்துள்ளன, உதடுகள் மேலும் கீழுமாக அசைந்துள்ளன. இதனால் பயத்தில் உறவினர்கள் அலறினர்.
உடனே அவரது குடும்பத்தினர் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரை அழைத்து உடலை பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதித்த மருத்துவர், ஷேனாஸ் கோமா நிலையில் உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறிது நேரத்தில் ஷேனாஸ் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

09 September 2014

மீனவர்கள் கைது! நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்

 
தமிழ் நாட்டை சேர்ந்த ஆறு மீனவர்கள் நேற்று மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதாகும் போது, அவர்களின் படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர்கள் இன்னும் மன்னார் கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவில்லை.
கைதான ஆறு மீனவர்களில் ஒருவரை கடற்படையினர் படகினை மீட்பதற்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
பெரும்பாலும் அவர்கள் ஆறு பேரும் இன்று கடற்தொழில் கூட்டுத்தாபனத்தினால் பொறுப்பேற்கப்பட்டு, நாளையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

கிடா வெட்டி காவல் நிலையத்தில் பூஜை செய்த பொலிசார்

நாமக்கல் அருகே காவல் நிலையம் ஒன்றில் விபத்து, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பரிகாரத்திற்காக கிடா வெட்டி பொலிசார் ரகசிய பூஜை செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய பல தொடர்ந்து பொலிசார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.
மேலும் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள், சாலை விபத்துகளும் தொடர்ந்து நடந்ததால் பொலிசார் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
இதையொட்டி, நேற்று அதிகாலை பொலிஸ் நிலைய வளாகத்தில் கிடா வெட்டி ரகசிய பூஜை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கடந்த வாரம் நடைபெற்ற சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் இறந்தனர். அந்த வாகனங்கள் காவல் நிலையத்தில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், தினமும் எலுமிச்சம் பழத்தை அறுத்து அதன் சாற்றை காவல் நிலையத்தில் தெளித்து வருகிறோம், அது போல் தான் நேற்றும் நடந்தது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் கிடா வெட்டும்போது பணியில் இருந்த எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், ஏட்டு அருள் இருவரை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

08 September 2014

நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நில நடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 850-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர்.
சுனாமிக்குப் பின்னர் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் கன்னியாகுமரியில் நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நில நடுக்கம், மழையளவு, காற்றின் வேகம், வெப்பநிலை, சூரிய கதிர்வீச்சு உள்ளிட்டவைகளை கண்டறியும் தானியங்கி கருவியை அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது.
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில் விவேகானந்த கேந்திரம் இடத்தை தானமாக வழங்க முன்வந்தது.
இதையடுத்து கேந்திர வளாகத்தில் தானியங்கி கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் குமரியில் முகாமிட்டுள்ளனர்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

விற்கப்படும் பெண்கள்: புரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில்

ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது.
பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள்.
மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள்.
சிறுமி, வயதுக்கு வந்த பெண், இளம் பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள்.
இந்த விற்பனை நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது. வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால்கூட சிலர் விற்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘இங்கு வறுமையில் வாடுகிறார்கள். அங்கு போயாவது நன்றாக சாப்பிட்டு வசதியாக வாழட்டும்' என்கிறார்கள்.
இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் தர தேவையில்லை. மனைவி இல்லாதவர்கள் மனைவியாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. சமூக அந்தஸ்தும் கிடையாது.
இப்படி வாங்கி பயன்படுத்தப்படும் பெண்களை ‘பாரோ’ என்றழைக்கிறார்கள். இந்தப் புரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாகிவிடுகிறார்கள்.
முதலாளி என்ன வேலை சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாத பாரோக்கள் சவுக்கடி வாங்குவதும் சகஜம்.
ஒருவர் தனது செல்வ நிலைக்கேற்ப எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி, வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்.
தன்னிடம் வேலை இல்லாதபோது மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.
இந்த புரோக்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான். தாயிடம் இருந்து பிரித்து வேறுயாருக்காவது விற்றுவிடுவார்கள்.
முன்பு தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு சோகமாக இருந்தாலும், அவர்கள் ஆடை, ஆபரணங்கள் அணிந்து ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்க்கை அதைவிட மிகமோசம்.
புரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும், பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர்கூட 18 வயது பாரோவை வாங்கிச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்.
சிலர் புரோக்களை வாங்கி, அதைவிட அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல, மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள்.
பாரோக்களின் மனக்குமுறல்:
கொல்கத்தாவில் வசிக்கும் மெகரம்:
ஆடு, மாடுகளைவிட கேவலமான வாழ்க்கை எங்களுடையது. பலமுறை வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சித்தேன். தேடி கண்டுபிடிக்கப்பட்டு கால் எலும்பு முறியும் வரை அடித்து தீர்த்துவிட்டார்கள். அந்த அடிக்கு பயந்து மறுபடியும் ஓட முயற்சிக்கவில்லை.
குழந்தை பிறந்ததும் இருக்கும் மவுசையும் இழந்துவிடுவோம். குழந்தையையும் விற்றுவிடுவார்கள்.
அசாமில் வசிக்கும் மரியம்:
என்னை மூன்று முறை விற்றுவிட்டார்கள். கடைசியாக ஒரு கண்ணில்லாத 70 வயது கிழவனுக்கு என்னை விற்றார்கள். அந்தக் கிழவர் என்னை திருமணம் செய்துகொண்டார்.
வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு, வெளியே வேலைக்கும் போகிறேன். கிழவரையும் கவனித்துக் கொள்கிறேன். அவருடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். சில சமயம் மகள் வீட்டிற்கும் என்னை வேலைக்கு அனுப்பிவைப்பார்.
அவருடைய மகளைவிட என் வயது குறைவு. அதைப் பற்றியெல்லாம் அந்த கிழவர் கவலைப் படுவதில்லை.
ஐதராபாத்தில் வசிக்கும் கவுசியா:
35 ஆண்டுகளில் இரண்டு முறை விற்கப்பட்டேன். என் மகளை திருமணம் செய்துகொடுத்தேன். புரோவின் பெண் என்பதால் இரண்டாம் தார வாழ்க்கைதான் அவளுக்கு கிடைத்திருக்கிறது.
பாரோவின் பெண் என்று மாமியார் அவளை கேவலமாக பேசுகிறார்.
அவளது கணவன் கையாலாகாதவன். யாரும் பெண் கொடுக்காத காரணத்தால் என் பெண்ணை கேட்டு வந்தார்கள். மனைவி என்ற அந்தஸ்து என் மகளுக்காவது கிடைக்கட்டும் என்றெண்ணி திருமணம் செய்து வைத்தேன்.
இந்த சமூகம் திருந்தாது. என்னை ஒரு மாமியாராகவும் மதிப்பதில்லை. சம்பந்தி என்ற அந்தஸ்தும் தரவில்லை. ‘உன் மகளை கண்டித்துவை. சொந்த பந்தங்கள் நடுவே உட்கார்ந்து பேசுகிறாள் என்கிறார்கள். எங்கே என் மகளை விரட்டி விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது.
கொல்கத்தாவில் வசிக்கும் முஸ்கான்:
நான் கொல்கத்தாவிலிருந்து பீகாருக்கு விற்கப்பட்டேன், எனக்கு மீன் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் வந்து சேர்ந்த இடத்தில் சுத்த சைவம். மீனை கண்ணால்கூட பார்க்க மாட்டார்கள்.
மீன் சாப்பிட நாக்கு தவியாய் தவிக்கும். ஆனால் அனுமதி கிடையாது. ஒருமுறை அவர்களுக்குத் தெரியாமல் மீன் சாப்பிட்டுவிட்டேன் என்பதற்காக ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறி என்னை உயிரோடு எரித்துவிட முயற்சி செய்தார்கள்.
நான் இருமுறை விற்கப்பட்டவள், மூன்றாவது முறையும் விற்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயதாகிவிட்டால் வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள். எங்காவது போய் பிச்சை எடுத்துதான் பிழைக்கவேண்டும்.
பீகாரில் வசிக்கும் ரேஷ்மா:
நான் வித்தை காட்டும் ஒரு குடும்பத்தினரால் திருமணம் என்ற பெயரில் வாங்கப்பட்டேன். அவர்களுக்காக நிறைய சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன்.
என் கணவரோடு பிறந்தவர்கள் ஏழு ஆண்கள். சொன்னால் வெட்கக்கேடு, எனக்கு பிறந்த குழந்தைகளில் எது என் கணவருடையது என்று எனக்குத் தெரியாது என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

நெஞ்சை உருக்கும் காதல் கதை சிறுநீரகத்தால் இணைந்த இதயங்கள்:

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞருக்கு பெண் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானம் செய்ததோடு அவரை காதல் திருமணமும் புரிந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டை சேர்ந்த ரமீஷ் என்ற இளைஞருக்கு அவரது தாயாருக்கு வந்ததைபோலவே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரமீஷின் நண்பர் சதீஷ் என்பவரின் தங்கை சபிதா மருத்துவமனையில் ரமீஷை பார்த்துகொள்ள சென்றுள்ளார்.
அன்று ரமீஷிற்கு கண்களை பரிசோதிக்க அழைத்து சென்றபோது கண்களுக்கு மருந்து ஊற்றப்பட்டதால் சபிதாவின் கையை பிடித்துக்கொண்டு நடந்துள்ளார்.
பின்னர் கிளம்பும்போது ரமீஷிடம் தனது கைப்பேசி எண்ணை கொடுத்து சென்றதால், அவ்வப்போது இருவரும் குறுஞ்செய்தி மூலமும், பின்னர் போன் பேசியும் வந்துள்ளனர்.
மரண பயத்தோடு இருந்த ரமீஷிற்கு சபிதா நம்பிக்கையூட்டும் வகையில் ஆறுதல் அளித்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் இடையில் நல்ல புரிதலும் காதலும் மலர தொடங்கியுள்ளது.
இதை அறிந்துகொண்ட இருவீட்டாரும், அவன் எந்த நிமிடத்திலும் இறந்து போகக்கூடியவன். உன் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளாதே என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அதனை பொருட்டாக எடுத்துகொள்ளாத சபிதா அவரை தீவிரமாக காதலித்துள்ளார். பின்னர் ஒருநாள் சபிதா இனி நான் திரும்பி வரமாட்டேன் என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
ரமீஷை தொடர்புகொண்டு என்னை தங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். உடலும் சரியில்லாமல், மனதும் சரியில்லாத நேரத்தில் கையில் இருந்த வெறும் 50 ரூபாயுடன் ரமீஷ் செய்வதறியாது இருந்துள்ளார்.
ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
கோவிலுக்கு சென்று மாலைமாற்றிவிட்டு, பதிவு அலுவலகத்தில் போய் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர்.
பின்னர் ரமீஷின் மருத்துவ பரிசோதனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி ஆனால் அதையும் உடனே செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சபிதா தனது சிறுநீரகத்தை வழங்க முன்வந்தபோதும், அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் செய்வதறியாது திகைத்துள்ளார்.
அந்த நேரத்தில் ராஜேஷ் என்ற மருத்துவர் கருணையோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நோயாளிகளின் உறவினர்களிடமும், மருத்துவர்கள் சிலரும் சிறிதளவு பண உதவி செய்ய வெற்றிகரமாக சிகிச்சை முடிந்துள்ளது.
மேலும், அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து தற்போது இந்த தம்பதி கோழிக்கோட்டில் உள்ள ஒரு பார்மசியில் வேலைபார்த்து வருகின்றனர்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

07 September 2014

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்ஜோடிகள்:???'

மதுரையில் இருந்து சென்னை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வடமாநில இளம்ஜோடிகள் சில்மிஷம் செய்ததால் பாதிவழியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில் உள்ள மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறியுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் அரியலூர் ரயில் நிலையம் அருகே செல்லும் போது பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், பி.1 பெட்டியில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 ஜோடிகள் இருக்கையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அரியலூர் ரயில் நிலையத்தில் வடஇந்திய இளம்ஜோடிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் 5 பேரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் ரயிலில் தாங்கள் சில்மிஷம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தபோது சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஏறினால் ரயிலை புறப்படவிட மாட்டோம் என பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த 5 பேரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
பின்னர், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றுள்ளது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

05 September 2014

நடிகர் ரொனால்டு கொலையில் நடிகை ஸ்ருதி சிக்கினார்

மதுரவாயலில் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சினிமா துணை நடிகர் ரொனால்டு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூர்  நடிகை ஸ்ருதி சந்திரலேகா 8 மாதங்களுக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ் (36).
மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளையும் படித்துள்ளார். தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ரொனால்டு பின்னர் அதனை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு ஆன்–லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தார்.
மதுரவாயலில் தங்கி இருந்து தொழில் செய்து வந்த இவர், சினிமா படங்களுக்கு நிதி உதவியும் செய்து வந்தார். காதிதபுரம், கொக்கிரகுளம், நெல்லை மாவட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சினிமா துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் ரொனால்டுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் எப்போதும் கை நிறைய பணம், நகை ஆகியவை இருக்கும். சொகுசு கார் ஒன்றையும் வைத்திருந்தார்.
இவைகளை அபகரிப்பதற்காக ரொனால்டை கொலை செய்ய ஸ்ருதியும் ரொனால்டின் தொழில் கூட்டாளியான உமாசந்திரன் என்பவரும் திட்டம் போட்டனர்.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் மதுரவாயலில் இருந்து ரொனால்டை காரில் கடத்தி கொலை செய்தனர். பின்னர் பாளையங்கோட்டையில் அவரது உடலை புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல இருந்து விட்டனர்.
கொலையையும் செய்து விட்டு நடிகை ஸ்ருதி மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அதில் எனது கணவர் ரொனால்டை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதன் மூலம் 2 பேரும் கணவன்–மனைவியாக வாழ்ந்ததும் உறுதியானது.
தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இப்படி நாடகமாடிய ஸ்ருதி பின்னர் தப்பி ஓடி தலைமறைவானார்.
இந்நிலையில்தான் ரொனால்டு கொலை செய்யப்பட்டது வெளியில் தெரிய வந்தது.
இக்கொலை தொடர்பாக பாளையங்கோட்டை செட்டி குளத்தை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ், சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி, ரபீக் ஆகிய 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஸ்ருதி பெங்களூருக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு விசாரணையை கோயம்பேட்டில் புதிதாக பொறுப்பேற்ற உதவி கமிஷனர் மோகன்ராஜ் முடுக்கி விட்டார். மதுரவாயல் சப்–இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் கடந்த 10 நாட்களாக பெங்களூரில் முகாமிட்டு ஸ்ருதியை தேடினர். இதன் விளைவாக ஸ்ருதி போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ருதி சிறையில் அடைக்கப்படுகிறார்.
இக்கொலைக்கான பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–
ரொனால்டும், நெல்லை டவுனை சேர்ந்த உமா சந்திரன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆன்லைனில் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பிரின்ஸிடம், உமா சந்திரன் கேட்டார். ஆனால் அவர் தரமுடியாது என்று மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. பிரின்ஸ், உமா சந்திரனின் தொடர்பை துண்டித்தார். அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு பிரின்ஸ் சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்நிலையில் நடிகை சுருதி சந்திரலேகாவை சந்தித்தார். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
அப்போது, பிரின்ஸ் வேறு பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சுருதி சந்திரலேகா, பிரின்சை வெறுக்க தொடங்கினார். வேறு வழியில்லாமலேயே அவருடன் வாழ்ந்து வந்தார்.
இதை அறிந்த உமா சந்திரன், சுருதியை தொடர்பு கொண்டார். அவர், ரொனால்டு என்னையும் ஏமாற்றி விட்டார். உன்னையும் ஏமாற்றி விட்டார். அவரை விட்டு வைக்கக் கூடாது என்று கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18–ந் தேதி பிரின்ஸ் வீட்டிற்கு வந்தார். அப்போது, சுருதி பழரசத்தில் விஷம் கலந்து பிரின்ஸிடம் கொடுத்தார். பழரசம் குடித்த சிறிது நேரத்தில் பிரின்ஸ் மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார்.
அங்கு மறைந்து இருந்த உமா சந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வந்தனர். அவர்கள் பிரின்ஸ் வைத்து இருந்த ரொக்கப்பணம் ரூ.75 லட்சம், கழுத்தில் அணிந்து இருந்த 14 பவுன் தங்க சங்கிலி, கையில் அணிந்து இருந்த வைர மோதிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர்.
பின்னர், பிரின்ஸின் உடலை காரில் ஏற்றி பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். காரில் உமா சந்திரன் கூட்டாளிகள் 2 பேர் வந்தனர். அவர்கள் ஏற்கனவே பாளையங்கோட்டையில் தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்து ஆசீர்வாத நகரில் குழி தோண்டி தயாராக வைத்திருந்தனர். அந்த குழியில் பிரின்ஸ் உடலை போட்டு புதைத்தனர்.
இது நடந்து சில நாட்கள் கழித்து ரொனால்டின் சகோதரர் ஜஸ்டீன் நெல்லையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தார். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே சென்ற போது பிரின்சின் கார் நின்று கொண்டு இருந்தது.
அந்த காரில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் இருந்தார். அவரிடம் இந்த கார் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு அவர், உமா சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பேசி ரூ.1 லட்சம் முன் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.
ஏற்கனவே பிரின்சுக்கும், உமா சந்திரனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததை அறிந்த ஜஸ்டின் சந்தேகம் அடைந்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரொனால்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.75 லட்சம் பணம், 14 பவுன் நகை ஆகியவை பற்றி நடிகை ஸ்ருதியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போலீசிடம் ஸ்ருதி கூறியிருப்பதாவது:–
ரொனால்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது தந்தை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். எங்களது குடும்பம் மிகவும் கஷ்டமான குடும்பம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உமாசந்திரன் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். அவர்தான் இந்த பணத்தை எங்காவது பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஸ்ருதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உமாசந்திரனை கடைசியாக எங்கு வைத்து சந்தித்தீர்கள், அப்போது என்ன பேசிக் கொண்டீர்கள் என்பது பற்றியெல்லாம் ஸ்ருதியிடம் விசாரித்து ஏராளமான தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.
இதை வைத்து உமாசந்திரனை பிடிக்கவும், ரூ.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

04 September 2014

பெரும்பாலும் மீன்பிடி இயந்திரப் படகுகள் சசிகலாவுக்கு சொந்தமானது -

 தமிழக மீனவர்களின் இயந்திரப் படகுகளில் பெரும்பாலும் திமுகவின் டி.ஆர். பாலு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமானது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்,
இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள். ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து கடிதமும் அனுப்பியிருந்தார்.

என்னை பற்றி, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு, பதில் கடிதத்தை மோடிக்கு நான்அனுப்பி உள்ளேன். அதில் பல விவரங்களை தெளிவாக கூறியுள்ளேன்.

பிரதமருக்கு சுவாமி விளக்க கடிதம்

இலங்கையில், ராஜபக் ஷேவை சந்தித்தபோது, தமிழக மீனவர் பிரச்னை குறித்து, அவரிடம் பேசினேன். அப்போது, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, ஜாமினில் விடுதலை செய்வதாகவும், அவர்களிடம் பறிமுதல் செய்த இயந்திர படகுகளை விடுவிப்பதாகவும் உறுதி அளித்தார்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் சங்கம் சார்பில், என்னிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, இயந்திரப் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு தெரிவித்திருந்தனர். ஆனால், இக்கோரிக்கையை நான் ஏற்கவில்லை.

இந்த இயந்திரப் படகுகள் பெரும்பாலும்,தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு சொந்தமானவை. இவர்கள், வசதி படைத்தவர்கள் என்பதால், அந்த படகுகளை விடுவிக்க, நான் வலியுறுத்தவில்லை

என் கோரிக்கை எல்லாம், பாதுகாப்பற்ற ஏழை மீனவர்களை விடுக்க வேண்டும் என்பது தான்.என் கோரிக்கையின் படி, தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை, ஜெயலலிதா, தனது வெற்றி என, அபகரிக்க முயற்சிக்கிறார்.

இப்பவும் கூறுகிறேன்... நான் தான், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் பேசி, இலங்கையில் சிறைபட்டிருந்த, தமிழக மீனவர்களை விடுவித்தேன். அதற்காக நான், ராஜபக்ஷேவிடம் பேசிய போது, அவர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்பின் தான், நான், 'அப்படியென்றால், மீனவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள்; அவர்களின் விசைப்படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்' என, கூறினேன். அதன்படியே, அவரும் செய்தார்.

தமிழகத்தில், மீன் பிடி தொழிலில் இப்போது பெரிய பெரிய விசைப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகளில் பெரும்பாலானவை, சசிகலா, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு சொந்தமானவை. அவர்கள் தான் மீனவர்களை தூண்டிவிட்டு, பெரிய அளவில் மீன்பிடிக்க வைக்கின்றனர்.

இப்படி விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்ததால், இந்திய கடல் எல்லையில் இருந்த மொத்த மீன் வளமும் போய் விட்டது. இப்போது, இலங்கை கடல்பகுதியில் தான் மீன் வளம் இருக்கிறது என்பதால், விசைப்படகுகள் மூலம், மீனுக்காக, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர். இதனால் தான், நம் மீனவர்களையும் விசைப் படகுகளையும் சிறை பிடிக்கின்றனர்

தமிழக அரசியல் பிரபலங்கள் குறித்து, ராஜபக்ஷே, என்னிடம் கூறிய தகவல்கள் அனைத்தையும், பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டேன்.

இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்தது. அப்போது, 'தனி ஈழம் அமைய, நீங்கள் உதவ வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு மோடி என்ன கூறினார் தெரியுமா?
'ஒன்றுபட்ட இலங்கையின் அமைதிக்குத் தான் இந்தியா உதவும். இலங்கைப் பிரிவினைக்கு, இந்திய அரசு உதவாது. இலங்கையில், எல்லா மக்களும் அமைதியாக வாழ, ராஜபக்ஷேவிடம் வலியுறுத்துவோம். மற்றப்படி, ராஜபக்ஷே மட்டும் தான் பிரச்னைகளை தீர்க்க முடியும். அதனால், அவரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள்' என, தெள்ளத் தெளிவாக கூறி விட்டார்.

அதன்பின் தான், அவர்கள், இங்கிருக்கும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா என, யாரையும் சந்திக்காமல், இலங்கை திரும்பி விட்டனர். தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களால், இலங்கை அரசு, இங்கிருப்பவர்களை நன்றி இல்லாதவர்களாக நினைத்துத் தான் மீண்டும் மீனவர்களை கைது செய்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நான் மீனவர்களை விடுதலை செய்தது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய ஆட்சியிலும் சரி தற்போதும் சரி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி கடிதம் எழுதியதைத் தவிர வேறு ஒன்றும் ஜெயலலிதா செய்யவில்லை. இது வரும் சட்டசபை தேர்தலில் அவருக்கு எதிர்ப்பாக அமையும் என்று கருதுகிறார்.

ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டைத்தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை. நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை.

'தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மீனவர் பிரச்னையை, முதல்வர் ஜெயலலிதா அரசியலாக்குகிறார். இதற்காக, எல்லாமே தன்னால் தான் நடந்ததாகக் கூறி, பெருமை சேர்க்கிறார்' என, பிரதமர் மோடிக்கு, சுப்ரமணிய சாமி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனது கடின உழைப்பினால், தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிகளை, அவரால் கிடைத்த வெற்றி என, தவறாக பிரசாரம் செய்கிறார்.

கடந்த காலங்களில் என்னுடைய கடினமான முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, நாடாளுமன்றத்தில் தேவர் சிலை அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவை நடந்தன. ஆனால் தன்னால்தான் எல்லாமே நடந்ததாக உரிமை கொண்டாடினார்

ஜெயலலிதா. ராம்சேதுவைக் கூட தானே காப்பாற்றியதாகவும் கூறிக் கொண்டார். இந்த பிரச்சனைகளில் கடினமாக நான் உழைத்த போதும் இதை எல்லாம் நான் பெரிதுபடுத்தவில்லை.

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தைப் போல பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால் காமராஜர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

03 September 2014

"செக்" வைத்த அரசு பார் செல்லும் பெண்களுக்கு

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஹொட்டல்களில் உள்ள மதுமான கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தடைவிதிக்க மாநில அரசால் பரிந்துறைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க விதிமுறைகளை பரிந்துரை செய்ய மகாராஷ்டிரா மாநில அரசின் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தர்மாதிகாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழு ஹொட்டல்களில் உள்ள மது பானக்கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துறை செய்துள்ளது.
இதுகுறித்து அந்த குழுவினர் கூறுகையில், சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிடவை இளைஞர்களிடையே வன்முறை குணத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே ஆண்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பெண்களை இழிவுபடுத்துவதால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களால் உலக அளவில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

02 September 2014

இலங்கையிலிருந்துபாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த அனுமதி

அரசியல் தஞ்சம் கோரி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகளை நாடு கடத்துவதற்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நேற்று நீக்கப்பட்டது.
அரசு சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் ஜனகத் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதால் நாட்டின் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை என பிரதி சொலிஸ்டர் நாயகம் விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய பெண்ணொருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆராய்ந்து, கடந்த 22ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு இலங்கை அரசுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், மேல்நீதிமன்றத்தால் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டு, பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு மேல் நீதிமன்றத்தால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

01 September 2014

காதல் வலைவீசி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள்

சீனாவில் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுபே (Hubei) மாகாணத்தில் பள்ளி மாணவிகள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இணையதளத்தின் வாயிலாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் ஒரு கும்பல் சிக்கவைக்கின்றது.
இதன்பின் அந்தப் பெண்களை யிசாங் (Yazing) நகருக்கு வரவழைத்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட வயதினர் ஆவர்.
இந்நிலையில் பாலியல் தொழில் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர் என்றும் அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 30 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்