This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 July 2015

போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணம்

இந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள் 
 உயிரிழந்துள்ளார்.
காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
பொலிசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயும் தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.
இந்த நிலையில், இன்று செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 முக்கிய குறிப்பு மநலம் உடையவர் இதை பார்பதை தவிர்க்கவும் 
காணொளி நிழல் படங்கள் இணைப்பு ....
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




30 July 2015

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் தமிழ்நாட்டில்மழை பெய்யும்:

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் 
தொடர்ந்து 3 நாட்கள் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமேற்கு வங்கக்கடலில் வங்காளதேசத்தின் கடலோரப்பகுதியில் காற்றழுத்த மண்டலமாக இருந்தது. அதுமேற்கு வங்காளத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. அது இன்று 
வங்காளதேச கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆனால் அதற்கும் தமிழ்நாட்டுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை.
இந்த தகவலை வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
விருத்தாசலம் , தொழுதூர் தலா 8 செ.மீ., பெரம்பலூர் 6 செ.மீ., திருப்புவனம் 5 செ.மீ., செய்யாறு 4 செ.மீ., செய்யார், கோவிலங்குளம், கள்ளக்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், போளூர் , மேட்டுப்பட்டி,திருவாடனை தலா 3 செ.மீ., இளையான்குடி, திருமங்கலம், தேவகோட்டை, செங்குன்றம், சேத்தியாதோப்பு, சித்தம்பட்டி, சாத்தனூர், சங்கராபுரம், திருச்சுழி தலா 2 செ.மீ.
மேலும் சில இடங்களிலும் மழை 
பதிவாகி உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்- யாகூப்பின் வழக்கறிஞர்

நள்ளிரவில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான விசாரணையில் யாகூப் மேனனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தனது வாதங்களைத் தொடங்கியுள்ளார்.

அவர் தனது வாதத்தில், “கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மேமனின் புதிய கருணை மனுவை குறுகிய நேரத்தில் குடியரசு தலைவர்

 நிராகரித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆனந்த், கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை பெற யாகூப் மேமனுக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

29 July 2015

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்அப்துல்கலாம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் குவிந்தனர்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு நேற்று டெல்லி யில் இறுதிஅஞ்சலி செலுத் தப்பட்டது. பிரதமர் மோடி உள்பட ஆயிரக்கணக் கானோர் அஞ்சலி செலுத்தி னார்கள்.

இன்று காலை அப்துல் கலாம் உடல் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை கொண்டு வரப்பட் டது.  அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் ராமேசுவரம் எடுத்துச் செல்லப்பட்டது.
ராமேசுவரம் பஸ்நிலை யம் அருகே உள்ள மைதானத் தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அப்துல்கலாம் உடல் வைக்கப்படுகிறது. மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த காலையில் இருந்தே ஏராளமானோர் இங்கு வந்து குவிந்திருந்தனர். இதையட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 தமிழக அரசியல் தலைவர்களும் அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமேசுவரம்  செல்கின்றனர்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  நேற்று மாலையே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் இன்று பிற்பகல் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.  அவ ருடன் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும் சென்றனர்.

தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்,  அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் இன்று காலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றனர்.அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றார்கள். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும் ராமேசுவரம் சென்றனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்கிறார்.

தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்றார்.அங்கிருந்து ராமேசுவரம் சென்று அப்துல்கலாம் உடலுக்கு நேரில் செலுத்து வார். 

ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ நேற்று இரவு ராமேசுவரம் சென்றார். அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற வைகோ, கலாமின் அண்ணன்  மற்றும்  பேரன் சேக் சலீம்,  அண்ணன் மகன் ஜெயினுல் ஆப்தீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அப்துல்கலாம் இல்லத்தில் உள்ள “மிஷன் ஆப் லைப்” கண்காட்சியை ஒரு மணிநேரம் பார்வையிட் டார். இன்று ராமேசுவரத்தில் அப்துல்கலாமின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்து கிறார். 

த.மா.கா.  தலைவர் ஜி.கே.வாசன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராமேசுவரம் செல்கிறார்.பா.ம.க.  இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து ராமேசுவரம் போய் அப்துல்கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம்.பஷீர்அகமது,  உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர்  வேட்டவலம் மணிகண்டன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மண்டல தலைவர் சதக்கத்துல்லா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகி கள் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் ராமே சுவரத்தில்  குவிந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

விடிய-விடிய அப்துல்கலாம் வீட்டில் திரண்ட கிராம மக்கள் படத்துக்கு மலர்தூவி கண்ணீர் அஞ்சலி

ஏவுகணை நாயகனான அப்துல்கலாமின் மறைவு  நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும்  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கடைசி மூச்சுவரை நாட்டிற்கு சேவை செய்த அந்த சரித்திர  நாயகனின் உடல் நல்லடக்கம் நாளை ராமேசுவரத்தில் நடக்கிறது. அவரது மறைவையொட்டி, ராமேசுவரம் 
பள்ளிவாசல்
 தெருவில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
அவர்கள் அங்குள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் பொதுமக்கள்
 அணி அணியாக வந்து  அஞ்சலி செலுத்துவதை காண முடிந்தது.
 ராமேசுவரத்தில் உள்ள  கலாம் படித்த பள்ளி மாணவர்களும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி 
அஞ்சலி செலுத்தினர். ராமேசுவரத்தில்  அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள், கூலித் தொழி லாளர்கள் என அனைத்து தரப்பினரும்  ஜாதி, மத பேதமில்லாமல் தங்கள் மண்ணின் மைந்தன் என்ற பெருமையை நினைத்து அவரது வீட்டிற்கு வந்து 
அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27 July 2015

தங்கக்கடத்தல் இந்தியா சிறிலங்காவுக்கும்அதிகரிப்பு

சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வான்வழியில் இடம்பெற்ற தங்கக்கடத்தல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடத்தல் காரர்கள் மாற்றுவழிகளை தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அவர்கள் சிறிலங்காவில் இருந்து கடல் மார்க்கமாக படகுகள் மூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனினும் தமிழக கடற்பரப்பில் அதிக பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கேரள கடற்பரப்பை அதிகமாக பயன்படுத்தவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் கேரளாவின் கொச்சி முதல் கோழிக்கூடு வரையான கடற்கரையோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இந்த கடற்பரப்பில் 11க்கும் அதிகமான புதிய கண்காணிப்பு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23 July 2015

இந்தியாவில் விபத்தில் இரண்டு இலங்கை அகதிகள் பலி???

இரண்டு இலங்கை அகதிகள் இந்தியாவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் திருநெல்வேலியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 42 வயதான தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் கே. சசிகுமார் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஞானைக்கொண்டான் அகதி முகாமில் வசித்து வந்தவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுரை சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்டு இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த அம்பியூலன்ஸ், மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19 July 2015

விருப்பம் இன்றி மனைவியுடன் உறவு கொண்டால் கணவன் மீது வழக்கு

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் பாலுறவு கொண்டால், அதை பலாத்காரமாகவே கருத வேண்டும் என்று பாம் ராஜ்புத் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. செய்துள்ளது. இதுகுறித்து அத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில்,
திருமண பந்தத்தி்ற்குள் நடைபெறும் அத்துமீறிய உறவும் ஏற்கத்தக்கது கிடையாது. கணவன் தனது செக்ஸ் ஆசையை தணித்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உறவு கொள்வது மட்டுமின்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, செக்ஸ் கருவியாக மனைவியை 
பயன்படுத்திக்கொள்ளும் போக்கும் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் அதை சீரியசாக கருத்தில்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்றார். மகளிர் அமைப்புகள் மேனாகா காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம், நடைபெற்ற 
நாடாளுமன்ற கூட்டத்தில், மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி "திருமணத்திற்குள்ளான பலாத்காரம் (marital rape) என்ற வார்த்தை, சர்வதேச அளவில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும், நமது நாட்டில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும் வேறுபாடு உள்ளது. 
இந்தியாவில் இதுபோன்ற வார்த்தை பொருந்தாது.  ஏன் என்றால் இங்கு   திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், மதம்சார்ந்த நம்பிக்கைகள், சமூக பொருளாதார நிலை, கல்வி நிலை போன்ற பல காரணங்களால், இந்தியாவுக்கு அந்த வார்த்தை பொருந்தாது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு மாறுபட்ட கருத்தை மேனகா காந்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

18 July 2015

பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!

தமிழ்நாடு - மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு 
தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல் எச்சங்கள் கொண்ட ஊர்கள், வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்தில் 
அமைந்துள்ள கீழடி தொல்லியல் அகழாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஊர் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில், தென்கிழக்கு திசையில் ராமேஸ்வரம் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.
தற்போதைய கீழடி ஊரிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் பள்ளிசந்தை திடல் என்றழைக்கப்படும் தொல்லியல் மேடொன்று உள்ளது. தரையிலிருந்து சுமார் 
இரண்டரை மீட்டர் உயர்ந்து காணப்படும் இம்மேடு, தற்பொழுது தென்னந்தோப்பாக பயன்பாட்டில் உள்ளது. முன்பு நிலத்தினை உழும்பொழுது பலவகையான மட்கலன்கள், 
தொல்பொருட்கள், பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள்
 மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைக்க பெற்றுள்ளன. இம்மேட்டின் கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கொந்தகை என்ற ஊருக்கு செல்லும் பாதையில், இதனோடு தொடர்புடைய ஈமக்காடும் அமைந்துள்ளது. இங்கு பல ஈமத்தாழிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
கீழடி மற்றும் கொந்தகை உள்ளடக்கிய பகுதிகள்
 பிற்காலப் பாண்டியர் காலத்தில் ‘குந்திதேவி சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. கீழடியுள்ள அர்ஜுனேஸ்வரர் கோயிலில் காணப்படும் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டு 
கல்வெட்டுகளில், ‘வேலூர் குளக்கீழ்’ என்ற நாட்டு பிரிவின் கீழ் அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது. இதேபோன்று பல்வகை தொல்லியல் ஆதாரங்கள் இருந்தும்கூட வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் விரிவான தொல்லியல் அகழாய்வு ஏதும் இன்று வரை 
மேற்கொள்ளப்படவில்லை. அனுப்பானடி, பரவை, கோவலன் பொட்டல், தி.கல்லுபட்டி, சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக இருந்த அழகன்குளம் போன்ற இடங்களில் சிறிய அளவில் மாத்திரமே அகழாய்வு நடைபெற்றுள்ளது.
இவற்றினை அடிப்படையாக வைத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில், இரும்புக் காலம் முதல் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி மற்றும் உருமாற்றத்தினை அறிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் நடப்பாண்டில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் அகழாய்வில், கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பெரிய அளவிலான சுட்ட செங்கற்களை கொண்டு கட்டபட்ட கட்டட பகுதிகள், பெரிய கூரை ஓடுகள், முத்து மணிகள், கண்ணாடி மற்றும் பல்வகையான கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், அம்மி, குழவி, இரும்பு, செப்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.
ரோமானிய நாட்டுடன் இவ்விடம் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு சான்றளிக்கும் வகையில், வணிகர்களால் கொண்டு வரப்பட்ட ரூலட் மற்றும் அரிட்டைன் வகை மண்பாண்ட துண்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் 
வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை, 
வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை மற்றும் ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்ட வகையும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
இது தவிர்த்து தனி நபர்களின் பெயருடன் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட மண்பாண்ட ஓடுகள் இங்கு கிடைத்திருப்பது 
குறிப்பிடதக்கதாகும். மேலும் விரிவான அகழாய்வுக்கு கால அவகாசத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்து தரக்கோரி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் 
கேட்டிருக்கிறோம். முதன்மை அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 4 அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் அக்ழாய்வு துறை மாணவர்கள் சிலரும் ஆய்வு செய்து வருகிறோம். மக்களின்
 வாழ்வாதாரத்திற்கும் அதே சமயம் எங்களின் 
ஆய்விற்கும் இடையூறு ஏற்படாமல் ஆய்வு செய்து வருவதால் ஊர்மக்களும், நில உரிமையாளர்களும் சிறந்த ஒத்துழைப்பு தருகிறார்கள்" என்று கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இளம் பெண் இரு வாலிபர்களால் அடித்துக் கொலை**

தில்லியில் 19 வயது இளம் பெண் 2 வாலிபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:- தில்லியில் ஆனந்த் பர்பத் பகுதியில் மீனாட்சி என்ற 11ம் வகுப்பு படிக்கும் 19 வயது இளம் பெண் நேற்று சந்தை செல்லும் போது ஜெயபிரகாஷ் மற்றும் அவரது சகோதரரும் 
சேர்ந்து அடித்து கொன்றனர். இதில் அந்த் பெண்ணை காப்பாற்ற முயன்ற அவர்து தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மீனாட்சி சிகிச்சை பலன் இன்றி இன்று
 உயிரிழந்தார். மீனாட்சியை தாக்கி கொன்ற 2 பேரும் கைது செயப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15 July 2015

சென்னைக்கு ஆந்திராவில் இருந்து பறந்து வந்த இதயம்:???

ஆந்திராவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுவனின் இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தானம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி அருகே இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பி.வைஷ்ணவ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு ஏற்பட்டு இறந்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் உறவினர்கள், அவனது உடல் உறுப்புகளை தானம் தர முன்வந்ததை அடுத்து, சிறுவனின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்களை தானமாக கொடுத்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் இதயம் அவசர ஊர்தி மூலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு 
வரப்பட்டுள்ளது.
மேலும், கிரீன் காரிடர் முறை மூலம் எந்த சிக்னலிலும் நிற்காமல் சில நிமிடங்களில் சென்றடைந்த அவசர ஊர்தி, சென்னை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக மருத்துவமனைக்குக்
 சென்றுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14 July 2015

அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார்!

ஜெயலலிதா எந்த நேரத்திலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் யூலை 1ம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.
யூலை 4ம் திகதி தலைமைச் செயலகம் வந்த முதல்வர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார். அன்று பகலில் செல்வதாக இருந்த கொடநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வரவில்லை. இதன் காரணமாக முதல்வரின் உடல்நிலை குறித்த பல்வேறு செய்திகள் பரவின.
இந்நிலையில் ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை என்றும், கால்களின் இரண்டு மூட்டுகளிலும் அதிக வலி அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ 
முறைகளின்படியும் சிகிச்சைக்கான சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.
இருப்பினும் வலி குறைந்தபாடில்லை. அதனால் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், திமுகவும், காங்கிரசும், அவரது உடல் நிலை குறித்த ஐயப்பாடுகளை எழுப்பிய படியே உள்ளன.
இந்நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பதிவு செய்துள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், "ஜெயலலிதா எந்த நேரத்திலும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம். மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அதிமுக தரப்பிலோ, முதல்வர் தரப்பிலோ, இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11 July 2015

இந்திய அமெரிக்கருக்கு 6 வருட சிறை???

இந்திய அமெரிக்கர் ஒருவர் மருத்துவ காப்பீடு திட்டங்களில் முறைகேடு மற்றும் சுகாதார சேவை பணிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தல் ஆகிய குற்றத்திற்காக அவருக்கு 6 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
நெவாடாவில் எண்டோஸ்கோபி மையம் ஒன்றை நடத்தி வந்தவர் தீபக் தேசாய்.  இந்திய அமெரிக்கரான 65 வயது நிறைந்த
 தேசாய் முன்னாள் மருத்துவராகவும் இருந்துள்ளார்.  இந்நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாவட்ட நீதிபதி டேனியல் போக்டென் கூறும்போது, 
தேசாய்க்கு 71 மாதங்கள் 
மத்திய சிறையில் அடைக்க தண்டனை விதிக்கப்படுகிறது.  தேசாய் மத்திய சுகாதார திட்ட முறையை தனது சொந்த வசதிக்காக உள்நோக்கத்துடன் முறைகேடாக பயன்படுத்தி உள்ளார் என்று போக்டென் கூறியுள்ளார்.
இது நெவாடாவின் மக்களுக்கும் மற்றும் 
வர்த்தகத்திற்கும் நீண்ட மற்றும் மதிப்பை குறைக்க கூடிய துன்பத்தை விளைவிக்கும் செயல் என நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.  அவர் கடந்த ஏப்ரலில் சுகாதார 
முறைகேடுகள் தொடர்புடைய குற்ற செயல்களில்
 ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2005 மற்றும் பிப்ரவரி 2008ம் ஆண்டுகளில் தேசாய் மீதுள்ள குற்றச்சாட்டின்படி, தனது எண்டோஸ்கோபி மையத்தில், 
அனெஸ்தீசியா கொடுப்பதற்கு என முறையாக பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்ட செவிலியர்கள் நோயாளிகளுடன் செலவிடுவதம் நேரத்தை அதிக அளவில் காட்டி அதிக கட்டணத்தை பெற்றுள்ளார் என்று 
கூறப்பட்டு உள்ளது.
அனெஸ்தீசியா சேவை பணிகளுக்கான கட்டணத்தை பெறுவதற்கு என்று தனியாக நிறுவனம் ஒன்றை தேசாய் மற்றும் மற்றொரு நபரான டோனியா ரஷிங் ஆகியோர் கூட்டாக தொடங்கியுள்ளனர்.  எண்டோஸ்கோபி மையத்தில் அனெஸ்தீசியா சேவை பணிகளுக்காக பெறப்படும் அனைத்து கட்டண 
தொகையில் இருந்தும் 9 சதவீத தொகையை இந்த நிறுவனம் பெற்று கொள்கிறது.  தேசாய் மற்றும் ரஷிங் இருவரும் எண்டோஸ்கோபி மையத்தில் பணிபுரிந்தவர்களிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு அதிக நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியுமோ அதன்படி செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அதனுடன், அனெஸ்தீசியா முறைகளில் அதிக நேரம் செலவிட்டது போன்று பதிவேடுகளில் குறிப்பிடும்படி செவிலியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த தவறான அனெஸ்தீசியா பதிவேடுகளையே கொண்டு மெடிகேர், மெடிக்எய்டு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை பெற பயன்படுத்தி கொள்ளும்படி அலுவலக ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

09 July 2015

மாரிக்கு ஊதித் தள்ளினாலும் வரிச்சலுகை உண்டாம்

  முப்பது சதவீத வரிச்சலுகை பெறுவதற்காக தலைகீழாக நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தமிழில் பெயர் இருக்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என பல நிபந்தனைகள்.
சிகரெட் புகைக்கும் காட்சி இருந்தால் சிலநேரம் மொத்த காட்சிக்கே தடை விதிக்கிறது தணிக்கைக்குழு. இது சில நேரம். அப்படியானால் பல நேரம்?
மாரி படத்தில் நிற்கும் போது அடிக்கும் போது நடக்கும் 
போது என்று எப்போதும் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 
கதைக்கு, காட்சிக்கு தேவைப்பட்டு சிகரெட் புகைப்பது என்பது வேறு. ஹீரோயிசத்துக்காக ஸ்டைலாக சிகரெட் புகைப்பது வேறு. இதில் இரண்டாவதைதான் படம் முழுக்க தனுஷ் 
செய்திருக்கிறார்.
இருந்தும் படம் யு சான்றிதழ் வாங்கி வரிச்சலுகைக்கு தன்னை தகுதியுடையதாக்கியிருக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>