This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

17 December 2016

தமது திருமணத்தை முன்னிட்டு 90 வீடு கட்டிக் கொடுத்த மணமகள்!

அண்மையில் பெங்களூருவில் 500 கோடியில் திருமணம் நடந்து நாடே அலறியது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு பணத்தை வாரி இறைத்து திருமணம் நடத்தி வைத்தார். நகைகள் வாங்குவதற்காக மட்டும் 100 கோடி அளவுக்குச் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதுபோன்ற பிரமாண்டத் திருமணங்களுக்கு மத்தியில் தற்போது பணத் தட்டுப்பாடு காரணமாக 500 ரூபாயிலும் நடந்து வருகின்றன. ஐஏஎஸ் ஜோடிகள் கூட 500 ரூபாயில் திருமணம் செய்து
 கொள்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், தெலங்கானாவைச் சேர்ந்த அபே தீவார், பிரீத்தி ஜோடி, தங்கள் திருமணத்தன்று விவசாயிகளுக்கு உதவி செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி, 10 விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினர். 
வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் ஆடம்பரத் திருமணங்களும் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் அபே தீவார்- பிரீத்தி தம்பதி தங்கள்
 திருமணத்தை மிக எளிமையாக நடத்தினர். மொய் வாங்கும் திருமண வீடுகளில் இருந்து சற்று வித்தியாசத் திருமணமாக அபே- பிரீத்தி திருமணம் அரங்கேறியது. தங்கள் சொந்த சேமிப்பில் இருந்தே இந்த நிதியுதவியை புதுமணத் தம்பதியர் வழங்கினர் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த வரிசையில் அவுரங்கபாத்தைச் சேர்ந்த மணமகள் ஷ்ரேயா சேர்ந்துள்ளார். பிரபல தொழிலதிபர் அஜே முன்னோட்டின் மகள்தான் ஷ்ரேயா. அஜே, ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மகள் ஷ்ரோயாவுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தின்போது ஏழை மக்கள் மனம் நிறைவடையும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென தந்தையும் மகளும் கருதினர். இதையடுத்து, அவுரங்கபாத்தில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 108 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து 2 ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்டும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 20க்கு 12 அடியில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டன. ஒரு வீடு கட்டி முடிக்க ஒன்றரை லட்சம் வரை செலவிடப்பட்டது. மகளின் திருமணத்துக்குள் 108 வீடுகளை கட்டி திருமணத்தன்றே பயனாளிகளுக்கு
 அளித்து விட வேண்டுமென அஜே யோசித்திருந்தார். ஆனால் திருமண தேதிக்குள் 90 வீடுகளே கட்ட முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு கிராமம் போலவே அதனை ஏற்படுத்தி குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார் முன்னோட். சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் இந்த காலனி உருவாக்கப்பட்டுள்ளது.
வீடுகளை யாருக்கு வழங்கலாம் என்பதிலும் முன்னோட் மிகுந்த கவனத்துடன் இருந்தார். உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்குதான் வீடு போய் சேர வேண்டுமென்பதில் உறுதியாக
 இருந்தார். இதனால், பயனாளிகளை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்தனர். பயனாளிகள் அனைவரும் திருமணத்தன்று வரவழைக்கப்பட்டனர். திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியர் பயனாளிகளிடம் வீட்டின் சாவிகளை ஒப்படைத்தனர்.
மிகப்பெரிய தொழிலதிபரான அஜே முன்னோட், தனது மகளின் திருமணத்துக்கு ரூ70 முதல் ரூ.80 லட்சம் வரைதான் செலவிட்டுள்ளார்.  இது குறித்து மணமகள் ஷ்ரேயா கூறுகையில், 'இதுதான் எனது திருமணபரிசு' என கருதுவதாகக் குறிப்பிட்டார். 
தொழிலதிபர் முன்னோட், ''திருமணம் போன்ற சுபகாரியங்களின்போது. இது போன்ற மனநிறைவான செயல்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். நம்மால் முடிந்த வரை சமூகத்துக்கு உதவியாக இருக்க வேண்டும்'' என்கிறார். 
ஜனார்த்தன ரெட்டி போன்றவர்கள் இருக்கும் நாட்டில்தான் அஜே முன்னோட் போன்றவர்களும் வாழ்கின்றனர்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



15 December 2016

ஆட்சிப் பொறுப்பை ‘ தல’ அஜீத்..ஏற்றே ஆகவேண்டும்டெல்லி ஆணை..!

அம்மா ஜெ. விற்கு மிகவும் பிடித்த நடிகர் ‘தல’ என்பது ஊரே அறியும் ..தனது மகனாகவே நினைத்து அன்புகாட்டி அறிவுரைகள் வழங்குவார் 
அம்மா ஜெ.
எங்கு பார்த்தாலும் அஜீத் மற்றும் அவரின் அன்பு மனைவி ஷாலினியை நலம் விசாரிப்பார். சண்டைக் காட்சிகளில், பைக், கார் ரேஸில் ரிஸ்க் எடுக்க கூடாது என்பார்.
அம்மா வின் கட்சியில் இணைவதற்கு லட்சோப லட்சம் பேர் தவம் கிடக்க ஒரு முறை அஜீத்தை அரசியல் ஆர்வம் இருந்தால் வாருங்கள் என்று அழைத்தார் அம்மா ஜெ. ஆனால் அன்பாக மறுத்தாராம் தல…!
இப்போது மீண்டும் அஜித்தை நோக்கி அரசியல் களம்சூழ்ந்துள்ளது என்கிறார்கள். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது..!
அவரின் தலைமயில் தான் அதிமுக கட்டுக் கோப்பாக இருக்கும் என்பதும் பொதுவான கருத்து.
ஜெ.போலவே தொண்டர்களை சிதற விடாமல் பாதுகாக்கும்பக்குவம் கொண்டவர் சசிகலா.
அதே நேரம் அம்மாவிற்கு இணையான மக்கள் செல்வாக்கும்..புகழும் கொண்டவர் தல..! டெல்லி மேலிடமும் இதே கருத்தை முன் மொழிந்ததாக கூறுகிறார்கள்.
இப்படி இருக்க பொதுகுழு கூடி சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதும் அஜீத்திற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படுமா என்கிற கேள்வி தொண்டர்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப் படுகிறது என்கிறார்கள்…!
உண்மையோ பொய்யோ சமீபகாலமாக அஜித்தைச் சுற்றி அரசியல் வலை பின்னப்டுகிறது என்பது மட்டும் நிஜம்…!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



12 December 2016

பேரிரைச்சல்.. கொட்டும் மழை.. வர்தா புயலின் ருத்ர தாண்டவம்

ஓ..வென்ற இரைச்சலுடன் பயங்கர காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 
காலை 11.30 மணியளவில் . கடுமையான காற்றுடன், மழையும் பெய்வதை  காற்றின் வேகமானது ஓ... என்ற பேரிரைச்சலாக வெளிப்படுவதை உங்களால் கேட்கவும் முடியும். இந்த இரைச்சல், தென்னை மரம் சாயும் அளவுக்கான பலம் கொண்ட காற்று, மழை என பல முனை தாக்குதலுக்கு
 உள்ளாகியுள்ளது சென்னை.
பொதுமக்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வர்தா புயல் தற்போது சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மழையால் சென்னை மாநகரம் இருளில் 
மூழ்கியுள்ளது.
இதுவரை, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 4000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 163 மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடலோர பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த புயல் கரையை கடக்க சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


09 December 2016

ஜெயலலிதா இறப்பில் தொடர்ந்து வெளிவரும் உண்மைகள் !

முதல்வர் ஜெயலலிதா இறப்பில் வெளிவரும் உண்மைகள்?அடித்துக் கொலை?
அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்த அனைத்து நடிகை நடிகர்கள் மற்றும் தலைவர்கள்
ஜெயலலிதாவை பார்த்து கதறி அழுத அண்ணன் மகள்.
காணொளி இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தம்பி ஆட்டோ ஓட்டுநர் அண்ணன் பிரதமர் ! உலகில் இப்படியுமா?

இந்திய பிரதமர் மோடியின் சகோதரன் ஆட்டோ ஒட்டுகின்றார்.
மோடியின் சகோதரர் இன்றும் ஆட்டோ தான் ஓட்டி் பிழைக்கிறார் தம்பி பதவியை பயன்படுத்த இவர் விரும்ப வில்லை அவரும் 
விரும்ப வில்லை.
இதேவேளை இலங்கையில் முன்னைய ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்சவின் சகோதர்கள் அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி உயர் பதவிகளில் இருந்து கொண்டு பல்வேறு மோசடிகள்,
 பண துஷ்பிரயோகங்கள் என பெருமாவான குற்றச் செயல்கள் புரிந்தது தற்பொழுது மைத்திரி ஆட்சியில் விசாரணைக்கு உட்பட்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

08 December 2016

வேகமாக பரவி வரும் ஜெயலலிதாவின் மகள் புகைப்படம்.. விலகாத மர்மம்!!!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் வாழக்கையிலும் சரி தனது சினிமா வாழக்கையிலும் சரி பல சாதனைகளுக்கு
 சொந்தகாரராவார்.
ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஒன்று திரண்டுள்ள பொது மக்களும் அவர்களின் கண்ணீரும் அதனை எடுத்து காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.
எனினும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விலகாத சில மர்மங்கள் இன்றளவிலும் இருந்து கொண்டே தான இருக்க செய்கின்றது. எனினும் அதனை அவர் எவ்விடத்திலும் வெளிப்படுத்தியது கிடையாது.

தன் வாழக்கையில் இன்பம் , துன்பம் இரண்டையும் தனக்குள்ளேயே வைத்துகொண்டு வாழ்ந்தது மட்டுமின்றி பல சாதனைகளையும்
 புரிந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் முதலமைச்சரின் பழைய வாழ்க்கை தொடர்பில் தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவருக்கும் சேர்ந்து வாழ்ந்தமை உண்மை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் மகளோ மகனோ இருப்பதாக எங்குமே ஜெயலலிதா இருப்பதாக தெரிவித்ததில்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜெயலிலதாவின் உருவ அமைப்புடன் அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் இந்தப் பெண் யார்..? எனவும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எவ்வாறாயினம், ஜெயலலிதாவின் மகளாக இருந்தால், பெற்ற தாயின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வந்து சேர வேண்டும் தானே எனவும், அவ்வாறு வருகை தரும் பட்சத்தில் மர்மம் விலகுமா என சமூக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன..
முகநூலில் வேகமாக பரவி வரும் ஜெயலலிதாவின் மகள் புகைப்படம். இது எந்த அளவிற்க்கு உன்னை என்று விளங்கவில்லை.  அதற்க்கான எந்த ஆதரமும் இதுவறை வெளியிடப்பள்ளவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


07 December 2016

முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி பயணம் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம்

தொடர்ந்து வாலாஜா சாலை,சிதம்பரம் ஸ்டேடியம்,சென்னை பலகலைகழகம் வழியாக சென்ற முதல்வரின் இறுதி ஊர்வலம் எம்ஜிஆர் சமாதியை அடைந்தது.

இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முதல்வரின் உடல் முப்படை வீரகளால் மரியாதையுடன் குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு சந்தன பேழையில் வைக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மலர் வளையம் வைத்தார். அவரை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் பன்னீர்செல்வம்,மாநிலங்களவை து.தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால்,தலைமை செயலாளர் ராம் மோகன ராவ்,முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி,குலாப் நபி ஆசாத், திருநாவுக்கரசர், நடராஜன், பின்னர் தளபதிகள் ராணுவ முறைப்படி 
மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் அவரது உடலில் இருந்த கொடியை முப்படை வீரர்கள் ராணுவ முறைப்படி அகற்றினர். பின்னர் சசிகலா, மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இருவரும் ஜெயலலிதா உடலை 
சுற்றி வந்தனர்.
ஜெயலலிதாவின் வழக்கமான அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெறும் அவரது ஆஸ்தான ப்ரோகிதர் தேவாதி மந்திரங்கள் சொல்ல அதை பின்பற்றி சசிகலாவும் தீபக்கும் கடமைகளை செய்தனர்
அவரது சவப்பெட்டிக்குள் சிறி சிறு சந்தனகட்டைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்தனர். பின்னர் அவரது உடல் வைக்கப்பட்ட சந்தன பெட்டியை மூடும் பணி நடைபெற்றது. அவரது பெட்டியை மூடுவதற்கு கடைசி சில நொடிகளுக்கு முன்பு முதல்வருடன் எப்போதும் பாதுகாப்பு பணியில் உடன் இருக்கும் ஏசி பெருமாள்சாமி உள்ளிட்ட காவலர்கள் கடைசியாக அவாரது முகத்தை உருக்கமுடன் 
பார்த்தனர்.
பின்னர் சந்தன பேழை மூடப்பட்டது. வீரர்கள் மரியாதையுடன் அவரது உடல் அதங்கிய சந்தனபெட்டியை அதற்கென தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கி வைத்தனர்
பின்னர் அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்ட சவக்குழிக்குள் ரோஜாப்பூக்களையும் பாலையும் ஊற்றினர். உப்பை தூவினர். முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்ட சவகுளிக்குள் பால் ஊற்றினர்.
பின்னர் அந்த குழி மூடப்பட்டது. இந்த நிகழ்வில் லட்சகணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




06 December 2016

இறுதி ஊர்வல காட்சிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்!

முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் ஆயிரக்கணக்கானோர் நல்லடக்க த்திற்கு   ஊர்வலமாகசென்ற நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











கண்ணீர் அஞ்சலி திமுக சார்பில் வீரமங்கையே உனக்கு ஈடாகுமா.!

பல முறை தன் அரசியல் எதிரியான திமுகவை தோற்கடித்த ஜெயலலிதா தனது இறப்பிலும் எதிரியை வென்றுவிட்டார் . ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொண்டர்கள் மனம் வருந்தி பேனர் வைத்துள்ளனர். திமுகவினர் மனதையும் வென்ற ஜெயலலிதாவின் மரணம் யாராலும்
 மறக்க முடியாதது. 
இதோ ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினரின் கண்ணீர் அஞ்சலி ....
நீயில்லையே........ 
தைரியமான எதிரியாய் எங்கள்முன் நீ இப்போது இல்லையே...... 
ஆயிரம் தலைவர்கள் எங்கள்முன்  நின்றாலும்
 வீரமங்கையே உனக்கு ஈடாகுமா..
இனி எங்கள் தளபதி போட்டி மேடைக்கு வீரர்களை எங்கு தேடுவார்.....
உன்னை தேர்தல் களத்தில் ஒரு வீரமங்கையாய் எதிர்த்தோமே அன்றி...  
தலைவரின் உள்ளத்திலும் தளபதியின் உள்ளத்திலும் நீ நீடுலிவாழவேண்டும் என்ற எண்ணமே அல்லாமல் வேறில்லை....  
இனி நாங்கள் எங்களின் சரியான எதிரியை எங்கு போய் தேடுவோம்..... 
நீயில்லாமல் கவலையின் உச்சத்தில்.
--- தி மு கழகம்----
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பொதுமக்களின் பார்வைக்குமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது

ஜெயலலிதா உடல் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ராஜாஜி ஹாலை நோக்கி கிளம்பியது -போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா உடல் புறப்பட்டது -பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாஜி அரங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது -சாலைகளின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி -ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வருவதாக தகவல் -பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல் -முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல் -இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டது -அமெரிக்க அரசு -ஜெ. மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் போலீசார் குவிப்பு
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை வருகை -ஜெயலலிதா உடல் வைக்கப்பட உள்ள ராஜாஜி ஹால் பகுதியில் இப்போதே தொண்டர்கள் குவிந்தனர் -ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது -ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர் -பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிப்பு -குடும்ப முறைப்படி ஜெயலலிதா உடலுக்கு செய்த சடங்குகள் முடிவடைந்தன -போயஸ் கார்டனிலிருந்து
 ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்பட உள்ளது -ஜெயலலிதா மறைவு.. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை -மறைந்த ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் -ஜெயலலிதா அதிமுக தொண்டர்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருப்பார்: கருணாநிதி 
-போயஸ்  கார்டனில் ஜெயலலிதா உடல்
 வைக்கப்பட்டுள்ளது -போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன -இறுதிச்சடங்கு பின்னர் ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் வைக்கப்படுகிறது -போயஸ் கார்டனில் தொண்டர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு -எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் டிஜிபி ஆய்வு -ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது -எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





05 December 2016

ஜெயலலிதாவின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கதறி அழுத தொண்டர்கள்.. கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின்
 கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ 
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாடகமாடியது அப்பலோ! தமிழச்சி சொன்னது உண்மை?வெளிவரும் ஆதாரங்கள்!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி , பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார்.
அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.
தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை
 வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்…
ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் “அம்மா உயிரோடுதான் இருக்கிறார்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்!” என்று தெரிவித்திருந்தார் இன்று அவர் கூறியது போலவே ஜெயலிலதா இறந்துவிட்டார்.
மத்திய அரசின் சூழ்ச்சிக்கு துணைப்போன அப்பலோவின் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியுள்ளன.
இருப்பினும் தற்போது தமிழக முதல்வர்  இறந்துவிட்டதனை கேள்விப்பட்டு கொந்தழிக்கின்ற தமிழகத்தின் நிலையை பார்த்து மீண்டும் அப்பலோ போலியான அறிக்கைகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. அதாவது தமிழக முதல்வர் இறந்துவிட்டதாக வந்த தகவல் பொய் என்று.
அதனை காட்டும் ஆதாரம்..
ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்  தமிழச்சி ஜெயித்துவிட்டார் ..ஜெயலிலதா இறந்துவிட்டார்..
 இனி தமிழகத்தின் கதி?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

முதல்வர் ஜெயலலிதா மரணம் ; சென்னையில் பதற்றம்

தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவிற்று நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் கழித்து 
இன்று மரணமடைந்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

விரைவில் கருணாநிதி அரசியல் களத்துக்கு திரும்புவார்பு

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து அரசியல் களத்துக்கு திரும்புவார் என புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக பேட்டியளித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது மகள் கனிமொழி எம்.பி.யிடம் விசாரித்தார்.
கருணாநிதியின் சிறப்பு மருத்துவர் கோபாலையும் சந்தித்து விசாரித்தார். அப்போது ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: -
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி கனிமொழியிடம் கேட்டறிந்தேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். கருணாநிதி அன்றாடம் அரசியல் நிகழ்வில் இருக்க கூடியவர். அவர் பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிக்கு விரைவில் திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
 தொல்.திருமாவளவன் , நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் நலம் 
விசாரித்தனர்.
அப்போது, திமுக முதண்மை செயலர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், அ.ராசா
 ஆகியோர் உடனிருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



04 December 2016

போடப்பட்ட தையலை பிரிக்க சென்றார்.தாய்க்கு நேர்ந்த அவலம்!

தமிழகத்தில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி கமலா (39) பல வருடங்களாக குழந்தையில்லாமல் இந்த தம்பதியினர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கமலா கர்ப்பமடைந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக கடந்த 23ஆம் திகதி திருவாரூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கமலா சேர்க்கப்பட்டார். பின்னர் 25ஆம் திகதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்‌ பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஒரு வாரம் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த கமலா குழந்தையுடன் தன் வீட்டிற்கு திரும்பினார்.
அதன் பின்னர் தன் உடலில் அறுவை சிகிச்சை செய்த போது போடப்பட்ட தையலை பிரிக்க மீண்டும் அதே மருத்துவமனைக்கு கமலா ஒரு வாரம் கழித்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் அளவில் அவர் தளர்ந்திருப்பதாக கூறி ரத்தம் செலுத்தினார்கள், அதன் பின்னர் கமலா கண்விழிக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக 
கூறியுள்ளார்கள்.
இதை கேட்டு அதிர்ச்சையடைந்த கமலாவின் கணவர் நாகராஜனும் அவர் உறவினர்களும் மருத்துவர்கள் ரத்த வகையை கமலாவுக்கு மாற்றி ஏற்றியதால் தான் அவர் கோமாவுக்கு சென்று விட்டார் என கூறி மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டம் 
நடத்தினார்கள்.
பின்னர் அங்கு வந்த பொலிசார் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





24 November 2016

இடி மின்னல் தாக்கி ஆறு பேர் மருத்துவமனையில்!

ஹட்டன் - நோர்வுட் - கோதி தோட்டத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த அனர்த்தம் நேற்று (23.11.2016) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்கள் தற்போது மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் கண்டுபிடிப்பு

ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள்.
உலகிலேயே இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் மிகவும் சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் விண்மீனுக்கு விர்கோ என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது, பால் அண்டத்தில் இருக்கும் 50 விண்மீன் செயற்கைக்கோள்களில் 40 விண்மீன்கள் மங்கலாகவும், மிகவும் சிறிய அளவிலும், அவைகளின் ஒளிப்பிறக்க அளவு மைனஸ்(-) 8 ஆக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுத்துள்ளார்கள்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விர்கோ விண்மீன் சூரியனில் இருந்து 280,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதுடன், இந்த விண்மீன்கள் இடம் மாறக்கூடியது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>