Search This Blog n

04 December 2016

போடப்பட்ட தையலை பிரிக்க சென்றார்.தாய்க்கு நேர்ந்த அவலம்!

தமிழகத்தில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி கமலா (39) பல வருடங்களாக குழந்தையில்லாமல் இந்த தம்பதியினர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கமலா கர்ப்பமடைந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக கடந்த 23ஆம் திகதி திருவாரூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கமலா சேர்க்கப்பட்டார். பின்னர் 25ஆம் திகதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்‌ பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஒரு வாரம் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த கமலா குழந்தையுடன் தன் வீட்டிற்கு திரும்பினார்.
அதன் பின்னர் தன் உடலில் அறுவை சிகிச்சை செய்த போது போடப்பட்ட தையலை பிரிக்க மீண்டும் அதே மருத்துவமனைக்கு கமலா ஒரு வாரம் கழித்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் அளவில் அவர் தளர்ந்திருப்பதாக கூறி ரத்தம் செலுத்தினார்கள், அதன் பின்னர் கமலா கண்விழிக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக 
கூறியுள்ளார்கள்.
இதை கேட்டு அதிர்ச்சையடைந்த கமலாவின் கணவர் நாகராஜனும் அவர் உறவினர்களும் மருத்துவர்கள் ரத்த வகையை கமலாவுக்கு மாற்றி ஏற்றியதால் தான் அவர் கோமாவுக்கு சென்று விட்டார் என கூறி மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டம் 
நடத்தினார்கள்.
பின்னர் அங்கு வந்த பொலிசார் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

Post a Comment