Search This Blog n

06 April 2019

இந்திய வெளியுறவு அதிகாரி போல் அரசாங்கத்திற்கே பெப்பே காட்டிய பெண்

இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர்.டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது கனவு, இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் 
தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு போகாத காரணத்தினால் தான் நினைத்ததை அடைய வேண்டும் சில குறுக்க வழிகளை கையாண்டுள்ளார்.அதன்படி, இவர் தனது 
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ஐ.டி கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான இ-மெயில் ஐ.டி-யை உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி செல்போன் ஆப் மூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார்.இவரது கணவர் வங்கியில் வேலை செய்து, அங்கிருந்து வெளியேறியவர் என்பதால் இவருக்கு போலியான் ஐ.டி.கார்டு போன்றவைகளை ஷோயா தயாரித்து 
கொடுத்துள்ளார்.
அதன் பின் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வர தொடங்கியுள்ளார். 18 மாதங்கள் ஒரு அரசு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை அறியாமல் இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், 
கடந்த வாரம் ஷோயா உத்தரப் பிரதேசம் மீரட்டில் நடந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கும் ஒரு அதிகாரி போல் வலம்வர, இவரை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் நினைத்துள்ளனர். பல காவல் அதிகாரிகளும் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர்.
இதையடுட்த்து நொய்டாவின் கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்ட இவர் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொலிசாரை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார்.அதன் பின்னரே இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரது வீட்டை சோதனை செய்து போது பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் உண்மையான அதிகாரியே இல்லை போலியான ஐ.டி. கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை 
பறிமுதல் செய்துள்ளனர்.
அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் கோ டாடி என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி போலியான இணைய தளம் ஒன்றையும் உ
ருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அரசியல் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் போலியான ஐ.டி கார்டு,
 தயாரித்து மோசடியில் ஈடுபடும் நபர் தான் என்றும், இவருக்கு வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும்தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment