Pages

25 November 2013

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை கைது செய்தது மும்பை பொலிஸ்!


நடிகை ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை மும்பை பாந்தரா போலீசார் கைது செய்தனர். தாராவி பகுதியைச் சேர்ந்த அசோக் சங்கர் திரிமுகே என்ற அந்த நபர் புரொடக்‌ஷன் பாயாக பணியாற்றி வருகிறார்.கைது செய்யப்பட்ட அசோக் சங்கர் திரிமுகே, தனது தங்கைக்கு வேலை கேட்பதற்காகவே ஸ்ருதிஹாசனை சந்திக்கச் சென்றதாகவும், பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதிஹாசன் கதவை மூட முயன்றதால் தான் அதை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் செய்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
   
ஆனால் ஸ்ருதிஹாசனோ அந்த நபர் தன்னை கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தினால் ஸ்ருதிஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தனது தோழி வீட்டில் தங்கி வந்தார். போலீசில் புகார்

 கொடுக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், நேற்று பாந்தரா போலீசில் புகார் அளித்தார்.ஸ்ருதிஹாசனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அசோக் சங்கர் திரிமுகே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 452, 354, 354D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நியாயம் வேண்டும்:


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
   
கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்:-சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:-வேளாண்துறையில் உர சப்ளை செய்ய டெண்டர் விட்டதில் பேரம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:-தமிழக விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள் வழங்க மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்குகிறது. இதைக் கொண்டு கரும்பு, வாழை விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான நிதி, மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு, வேளாண்துறை மூலமாக உரம் இறக்குமதி செய்து சப்ளை செய்வதற்கான 'டெண்டர்' விடப்படவேண்டும். இந்த ஆண்டில் இதற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. உரம் சப்ளை செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டது.

என்ன 'காரணத்தாலோ' அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இரண்டு முறை 'டெண்டர்' கோரப்பட்டு, அவைகளும் முறையான காரணம் தெரியாமலேயே ரத்து செய்யப்பட்டன. தற்போது நவம்பர் 27-ல் நான்காவது முறையாக டெண்டர் கோரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
நான்காவது முறையாவது டெண்டர் உறுதி செய்யப்படுகிறதா என்று பார்ப்போம். ஆனால் இவர்கள் டெண்டர் உறுதி செய்வதற்குள், இந்த ஆண்டு வேளாண்மை முடிந்துவிடும் என்கிறார்கள் விவசாயிகள்.
கேள்வி:-மின் உற்பத்தி பாதிப்பு என்ற செய்தி மட்டும் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறதே? அந்தத் துறைக்கான அமைச்சர் அதையெல்லாம் கவனிக்கிறாரா இல்லையா?

பதில்:- மின்துறையிலேயே அமைச்சர் கவனிப்பது வேறு ஒரு பணியை, அதை அவர் முறையாகக் கவனித்து வருகிறாராம். 19.11.2013 அன்று வந்த செய்திப்படி, மின் உற்பத்தி பாதிப்பு என்பது வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாவது அலகில் உள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் பாதையில் ஓட்டை ஏற்பட்டு, அதை சரி செய்யாமல் அலட்சியமாக விட்ட காரணத்தினால், கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் தீப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும், இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணி சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்களாம்.

சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சருக்குப் பதிலாக நீண்ட நேரம் பதிலளித்த முதல்-அமைச்சர் தமிழ்நாடு விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது தமிழ்நாட்டு ஏடுகளைப் புரட்டினால், தமிழ்நாடு மின் மிகை மாநிலமா? மின் பகை மாநிலமா? என்றுதான் சந்தேகம் வருகிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்
 

சிறுமி ஆருஷியை பெற்றோரே கொலை செய்ததாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!


நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார். டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
   
இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ.கோர்ட்டில் கூறியது. அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ. கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரியவந்தது.
ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து

தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
 

23 November 2013

இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது


இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.
மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார்.
மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை பொலிசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்–  சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்
 

இவர்தான் ஸ்ருதியை தாக்கியவராம்! புகைப்படம் வெளியானது


நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது.
மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா பொலிசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது ஸ்ருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.
மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு

அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கமெரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
 

22 November 2013

மனைவியின் துன்புறுத்தல்கள் குறித்து சென்னையில் 5000


ஆண்கள் புகார்; மனைவி தாக்குவதாக 10% புகார், மனைவிக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு 10%
சென்­னையில் இவ்­வ­ருடம் மாத்­திரம் மனை­வி­மார்­களின்  கொடு­மைகள், துன்­பு­றுத்­தல்கள், தொடர்­பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக  ஆண்­களை பாது­காப்­ப­தற்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சர்­வ­தேச ஆண்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நிலையில், இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தி­யாவில் சென்­னை­யி­லி­ருந்­துதான் அதிக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ ளது.
சென்­னையில் கிடைத்த 400 முறைப்­பா­டு­களில் விவா­க­ரத்­துக்­கான கோரி க்கை விடுக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, மும்­பையில் இவ்­வ­ருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனை­வியின் துன்­பு­றுத்தல் தொடர்­பாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

ஈகோ மோதல்கள் முதல் பாலி யல் சித்­தி­ர­வதை வரை பல்­வேறு வகை­யான விட­யங்கள் தொடர்­பாக இம்­மு­றைப்­பா­டுகள் உள்­ளன.
முறைப்­பாடு செய்­த­வர்­களில் 20 சத­வீ­த­மானோர், கூட்­டுக்­கு­டும்­ப­மாக வாழ்­வது குறித்து மனை­விமார் சண்­டையை ஆரம்­பிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.

சென்­னையில் முறைப்­பாடு செய்த 5000 ஆண்­களில் சுமார் 500 பேர் மனைவிமார் தம்மை தாக்­கு­ வ­தாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

மேலும் 10 சத­வீ­த­மான ஆண்கள் தமது மனை­விமார் அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் தம்மை பற்றி பொய்­யான முறைப்­பா­டு­களை செய்­வ­தாக கூறி­யுள்­ளனர்.  முறைப்­பாடு செய்­த­வர்­களில் 10 ஆண்கள்  தன்­னிடம் மனைவி பாலியல் திருப்தி காணாமல் திரு­ம­ணத்­துக்குப் புறம்­பான பாலியல் உற­வு­களில் ஈடு­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளனர்.

தான் இரவுநேர கட­மைக்கு சென்­றபின் தனது மனை­வியும் தனது சகோ­த­ரனும் பாலியல் உற வில் ஈடு­ப­டு­வ­தா­கவும் இதனால் மனை­வி­யுடன் தான் வாழ­வி­ரும்­ப­வில்லை எனவும் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவில் 8 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை திரு­ம­ண­மான ஆண்கள் திரு­மண வாழ்க்கை அல்­லது பணப்­பி­ரச்­சி­னைகள் கார­ ண­மாக தற்­கொலை செய்­து­கொள்­வ­தாக இந்­தி­யாவின் தேசிய குற்­ற­வியல் பதிவு திணைக்­கள புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

சமூக செயற்­பாட்­டா­ள­ரான எஸ்.சயீட் அலி கருத்துத் தெரி­விக்­கையில், "இந்­திய சமூ­கத்தில் ஆண்கள் பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்­து­வ ­தற்கோ, முறைப்­பாடு செய்வதற் கோ, உதவி கோருவதற்கோ சொற்ப வாய்ப்புகளே கிடைக் கின்றன. எம்மிடம் முறைப்பாடு செய்யவரும் பெரும்பலான ஆண்கள் நீண்டகாலமாக மனை வியினால் துன்புறுத்தல்கள், தொல்லைகளுக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.



பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாகக் கூறி, நிந்தவூரில் தம்பதி மீது வாள்வெட்டு, தாக்குதல்!



நிந்­தவூர் பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளில் சென்ற இனந்­தெ­ரி­யாதோர் வீடு ஒன்றில் உள்­நு­ழைந்து கணவன்இ மனைவி மீது வாள்­களால் வெட்டி தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில்
 அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

தப்­பி­யோ­டி­ய­வர்­களின் மோட்­டார்­சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

நிந்­தவூர் மீரா­நகர் பிர­தே­சத்தில் உள்ள குறித்த வீட்டில் சம்­ப­வ­தி­னத்­தன்று இரவு 11.15 மணி­ய­ளவில் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்ற இருவர் உள்­நு­ழைந்து பொலி­ஸா­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தாக கூறி கணவன் மனைவி இரு­வ­ரையும் வாள்­களால் வெட்டி மீது தாக்­கி­யுள்­ளனர்  இதன்­போது அவர்கள் கூக்­கு­ர­லை­யிட்டு அய­வர்கள் சென்­ற­போது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் மோட்­டார்­சைக்­கிளை விட்­டு­விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கணவன் மனைவி இரு­வ­ரையும்  சம்­மாந்­துறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­கப்­பட்­டுள்­ள­துடன் தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

19 November 2013

பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு


பெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது.
நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள், சிறுமியை வாயைப் பொத்தி தூக்கி சென்றனர். மறைவான ஒரு இடத்திற்கு சென்றதும் சிறுமியை மிரட்டி குளிர்பானத்தை குடிக்க வைத்தனர்.

பின்னர் 4 பேரும் மாறிமாறி கற்பழித்தனர். மயக்கம் அடைந்த சிறுமியை அதே இடத்தில் போட்டு விட்டு தப்பி விட்டனர். நேற்று காலை சிறுமி தனியாக கிடந்ததை கிராமத்தினர் சிலர் கண்டு, அவளது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறுமி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ் விசாரணையின்போது சிறுமி, இசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது 4 பேர் சேர்த்து என்னை ஒரு இடத்துக்கு கடத்திச் சென்றனர். என்னை மிரட்டி குளிர்பானம் குடிக்க வைத்தனர். எனக்கு மயக்கம் வந்தது. பின்னர் என்ன நடந்தது என்று தெரிய வில்லை என தெரிவித்தார்.
கடத்தியவர்களில் தனது கிராமத்தை சேர்ந்த 2 பேரின் பெயரையும் கூறினார். அவர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்

18 November 2013

சச்சின் ஓய்வு: மனமுடைந்த ரசிகர் தற்கொலை


டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20). இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்.
சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின் இறுதிநாள் என்று கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சச்சின் ஓய்வு பெற்றதை தாங்க முடியாத விஜய் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்


குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே ஏழு இலட்ம் ரூபா பணத்துடன், ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் அருகே உள்ள சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒரு கனரக வாகனத்தில் வந்த சிலர் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கி அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இயந்திரத்தின் உள்ளே 6.97 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.டி.எம். மையத்தின் வெளியே காவலாளி யாரும் இல்லாததால் கொள்ளையர்கள் துணிச்சலாக தங்களது கைவரிசையை காட்டிவிட்டு சென்றுள்ளனர் என்று கூறும் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்
 

15 November 2013

உதயமானது சென்னை கலங்கரை விளக்கம்


சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்துள்ளார்.

நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று சென்னை கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அவர் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை திறந்து வைத்து நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பயன் பாட்டுக்காக புதுப்பித்து திறக்கப்பட்டுள்ளது.
இது கப்பல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பதற்கும், ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் இது பயன்படும், கடலில் கப்பல் செல்வதையும் இதன்மூலம் பார்க்கலாம்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு இதை திறக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எல்லா வசதிகளையும் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இப்போது திறந்திருக்கிறோம்.

இந்தியாவிலேயே லிப்ட் வசதியுடன் கூடிய கலங்கரைவிளக்கம் சென்னையில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தரைத்தளத்தில் கப்பல் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் துறை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதனை நேற்றைய தினம் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.

கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க சிறுவர்களுக்கு ரூ
.5ம், பெரியவர்களுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்கலாம்.
மேலும் கமெராவுடன் சென்று படம் எடுக்க கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திங்கட்கிழமை விடுமுறை, பார்வையாளர்கள்

  போன்று சமூக விரோதிகள் கலங்கரை விளக்கத்துக்குள் நுழைவதை தடுக்க மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர நேரத்தில் பார்வையாளர்கள் வெளியேற மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை தூரத்தில் இருந்தே கலங்கரை விளக்கத்தினை பார்வையிட்ட பொதுமக்களும், மாணவர்களும் இன்று உள்ளே சென்று நேரடியாக பார்த்து ரசித்தனர். 9மாடிவரை லிப்டில் பயணம் செய்து 10 வது மாடிக்கு படியில் சென்று மெரீனா கடற்கரையின் அழகை கண்டு உற்சாகமடைந்தனர்.
 
 



கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் (காணொளி, இணைப்பு)


இந்தியாவிலேயே பாரம்பரியமிக்க கோவில்களையும், சிற்பங்களையும் பெற்று கலையம்சம் கொண்ட பகுதியாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் காணக் கிடக்கின்றன.
இங்கு பல்வேறு இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன.
இவற்றில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அமையப் பெற்றது தான் மாமல்லபுரம்.

கல்லிலே கலைவண்ணம் கண்ட இந்த மாமல்லபுரமானது சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
மகேந்திரபல்லவராலும், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட பொக்கிஷம்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அழகிய கற்கோயிலானது இது, காண்போரின் கண்களை வெகுவாக கவர்கிறது.
இந்திய மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் இக்கோயில் பற்றிய அருமைகள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொன்னால் ஒரு யுகம் வேண்டுமென்றே சொல்லலாம்.
கடற்கரை கோவில்
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இந்தக் கடற்கரைக் கோவில் இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை.

 

                                                                       பஞ்ச ரதம்
நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை.
இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது.
 


                                                              அர்ச்சுனன் தபசு
சுமார் 30 மீட்டர் உயரமும், சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.


                                                        மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது.

இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.

இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை.
இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச் சின்னங்களை 1984ம் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.
தமிழகத்திற்கு அழியாப் புகழ் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தின் அற்புத சிலைகள் 300 ஆண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குறிய விடயமாகவே உள்ளது.


 

14 November 2013

வெள்ளையர்களை வாய்பிளக்க வைத்த இந்தியர்கள் (காணொளிகள், )

 
இந்தியாவின் போக்குவரத்து துறைக்கு பெரிதும் வரப்பிரசாதமாக இருக்கும் துறை தான் ரயில்வே. முதல் ரயில் வண்டி கடந்த 1853ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி, 14 பெட்டிகளுடன் மும்பை போரி பந்தரிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள தானேக்கு சென்றது. பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்து உலகின் மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வருடந்தோறும் 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். வெள்ளையனால் நம் நாட்டிற்குள் ரயில்கள் இறக்குமதி ஆனாலும் இன்று வெள்ளையனே வியக்கும் அளவுக்கு மலைப்பாதைகள், பாலங்கள் வழியே அவை தவழ்ந்து செல்லும் அழகினை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் மலைப்பாதைகளில் ரயில்கள் செல்லும்போது ஏதோ வேறு ஒரு உலகிற்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்றன. இந்த மலைப்பாதை ரயில்களை அமைக்கப்பட்டதில் ஒரு பரமரகசியமும் உண்டு. அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ தளத்தை அமைக்கவும் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் மலைப்பாதைகள் அமைக்க முடிவெடுத்தார்கள். இதற்காக டார்ஜீலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, மாத்தேரான், ஊட்டி ஆகிய பகுதிகளை தெரிவு செய்தனர். நீலகிரி மலை ரயில் இந்தியாவிலேயே பல சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை. கடந்த 1898ம் ஆண்டு மேட்டுபாளையத்திலிருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது. பின்னர் 1908ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீடிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2004ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. {வெள்ளையர்களை வாய்பிளக்க வைத்த இந்தியர்கள் (காணொளி,கள்,புகைபடங்கள், )

 
 
கல்கா- சிம்லா ரயில்வே கல்கா-சிம்லா ரயில்வே பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. அதாவது ஆங்கிலேயர்கள் சிம்லாவின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாக தங்களுடைய கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். அதோடு இராணுவ அலுவலகமும் அங்கே நிறுவப்பட்டதால் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே இமயமலை அடிவாரத்தில் சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1903ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
 
மாத்தேரான் மலை ரயில் மகராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய ரயில் பாதையாக மாத்தேரான் மலை ரயில் பாதை அறியப்படுகிறது. 1907ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த ரயில் மாத்தேரான் மற்றும் நேரல் நகரங்களை இணைக்கிறது. இந்தப் பாதையில் ஒரே ஒரு சுரங்கவழியே காணப்படுகிறது. அந்த சுரங்கம் 'ஒரு முத்த சுரங்கம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த சுரங்கத்தை கடக்க ஆகும் நேரத்தில் நீங்கள் உங்கள் காதல் துணைக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விடலாமாம்.
 
காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே ஏராளமான இந்து கோயில்களுக்கும், கவின் கொஞ்சும் இயற்கை காட்சிகளுக்கும் பெயர்பெற்றது. இந்த காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 971 பாலங்களும், 2 சுரங்கங்களும் அமைந்துள்ளன. இது பதான்கோட் மற்றும் ஜோகிந்தர் நகருக்கு இடையே 163 கி.மீ தூரம் பயணிக்கிறது. எங்கு பார்த்தாலும் இயற்கையின் அற்புத காட்சிகள் நம்மை கிறங்கடிக்கும் என்பதால் காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பயணம் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்

>

இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு வாய்ப்பே இல்லை:


இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வி.கே. சிங் அளித்த பேட்டியில்,
"எனது வயது வரம்பு பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்ததன் காரணமாக, ராணுவப் புரட்சி நடத்த தில்லியை நோக்கி இரண்டு படைகளை நகர்த்தினேன் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டன.
இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. மேலும், ரகசியப் புலனாய்வுப் பிரிவை நடத்தினேன் என்றும் என்மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதுபோன்று குற்றம் சுமத்துவது இன்னமும் நீடிக்கிறது. இதற்கு பிரதமர் அலுவலகத்தில் உள்ள சண்டீகரைச் சேர்ந்த மூத்த அதிகாரியும், மூத்த பத்திரிகையாளர்கள் இருவருமே காரணம் என்று அவர் கூறினார்.
 

12 November 2013

தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!


திருச்செந்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.2.07 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அப்போது தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன், மகன்கள்

அனந்தபத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேசுவரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சொத்துக்களை முடக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் சுமார் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கே.வெங்கடசாமி தள்ளுபடி செய்தார்

10 November 2013

45 பேர் பலியானது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்


 
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த பேருந்து விபத்தில் 45 பயணிகள் பலியானது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடந்த மாதம் 30ம் திகதி இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றது.

ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் அருகே சாலையோர சுவரில் மோதியதால் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதில் 45 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்து பற்றி ஆந்திர மாநில தடய அறிவியல் பரிசோதனை மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் விவரங்களை இந்த மையத்தின் இயக்குனர் சாரதா வெளியிட்டு இருக்கிறார்.
அதில், சாலையோரத்தில் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சுவற்றின் வெளிப்பகுதியில் 26 அடி நீளத்துக்கு பலமான தண்டவாளம் புதைக்கப்பட்டு இருந்துள்ளது.

இரவு நேரத்தில் வேகமாக சென்றதால் பேருந்தின் கட்டுப்பாட்டை டிரைவர் சில நொடிகள் இழந்துள்ளார்.
அப்போது, பேருந்தின் வலது பின்பக்க பகுதி தண்டவாளத்தின் மீது பலமாக மோதியதால் தண்டவாளம் இரண்டாக உடைந்துள்ளது.
அதில் ஒரு பகுதி, பேருந்தின் டீசல் டேங்க்கை குத்தி கிழித்ததால் டீசல் வெளியே கொட்டியுள்ளது.

தண்டவாளத்தின் அடுத்த பாதி, பேருந்தில் சிக்கிக் கொண்டு சாலையில் உரசியபடி சென்றுள்ளது.
இதனால் ஏற்பட்ட உராய்வால் வெப்பம் உருவாகி டீசல் தீப்பற்றியுள்ளது.
60 முதல் 100 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பட்டால், டீசல் தானாகவே தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

வலது பக்க டீசல் டேங்கில் பற்றிய தீ, பேருந்தின் இடது பக்கமுள்ள டீசல் டேங்குக்கும் பரவி உள்ளது.
இதன் காரணமாக அதிலிருந்த டீசலும் தீப்பற்றி, பின்பக்கமுள்ள ஏசி இயந்திரத்துக்கு பரவி இருக்கிறது.

இதனால் ஏசி இயந்திரம் மூலமாக பேருந்துக்குள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு பரவியுள்ளது, இதை பயணிகள் சுவாசித்துள்ளனர்.
இதனால் இருக்கையிலேயே பெரும்பாலோர் மயங்கி விழுந்துள்ளனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி

 கொண்டு, கொழுந்து விட்டு எரிந்ததால் மயங்கிய நிலையிலேயே தீயில் கருகி இறந்துள்ளனர்.
பெரும்பாலான பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடியே கருகி இறந்து கிடந்ததற்கு இதுதான் காரணம் என்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கு வெடிபொருள்கள் காரணமில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் விபத்தின்போது டிரைவர் பெரோஸ் பாஷா, கிளீனர் மற்றும் 3 பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்தை ஓட்டியபோது இவர் மது குடித்திருந்தாரா என்பதை அறிய, அவருடைய ரத்தத்தை எடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மது குடிக்கவில்லை என்று உறுதியாகி இருக்கிறது.
 

ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்மோகன் சிங்


 கொழும்புவில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தின.

இதையடுத்து மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை. மாறாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தான் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
பிரதமர் எழுதியுள்ள கடிதத்தை கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ராஜபக்சேவிடம் அளிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
 

07 November 2013

முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி



செங்கல்பட்டு முகாமில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டில் இலங்கை அதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கையைச் சேர்ந்த 33 பேர் நைஜிரியாவைச் சேர்ந்த 8 பேர் கனடாவைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் என, 45 பேர், அடைக்கப்பட்டுள்ளனர்

இதில், இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் 29 என்பவர் நேற்று திடீரென தன்னை திறந்தவெளி முகாமில் தங்க வைக்கக்கோரி தோல் நோய்க்கு பயன்படுத்தும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

06 November 2013

ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் விமான நிலையத்தில் பறிமுதல்


தென் கொரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ம் தேதி ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது.
49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பெற்று சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹிமாங்கினி சிங் யாது, சிரிஷ்டி ராணாவுக்கு சிறந்த ஆசிய பசிபிக் அழகிக்கான கிரீடத்தை சூட்டினார்.

வெற்றி களிப்புடன் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடைந்த சிரிஷ்டி ராணாவை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் அவரை இன்னொரு பிரச்சினையும் சூழ்ந்துக்கொண்டது.

அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சூட்டப்பட்ட கிரீடத்தில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான இறக்குமதி சுங்க வரியை கட்டிவிட்டு கிரீடத்தை பெற்று செல்லும்படி கூறிய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
வைரங்களின் மதிப்பு தொடர்பாக நிபுணர்கள் சான்றிதழ் அளித்த பின்னர் அந்த மதிப்புக்குரிய வரியை கட்டிவிட்டு கிரீடத்தை பெற்று செல்லலாம் என சிரிஷ்டி ராணாவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகளில் பெற்ற பரிசுகளை இந்தியாவுக்கு கொண்டு வருபவர்கள், மத்திய சுங்கம் மற்றும் தீர்வை துறையினரிடம் முன்கூட்டியே தெரிவித்து வரிவிலக்குக்கான அனுமதி கடிதம் பெற வேண்டும்.
சிரிஷ்டி ராணா அத்தகைய அனுமதியை பெறாததால் கிரீடம் பறிமுதல் செய்யப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

04 November 2013

சிதம்பரம், கருணாநிதி கோமாவில் இருந்தனரா? வைகோ கேள்வி


இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கோமாவில் இருந்தாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கொல்லப்பட்டது 2008ஆம் ஆண்டு. ஆனால், இப்போதுதான் சிதம்பரம் கண்டனம் தெரிவித்தள்ளார்.

அன்று முதல் இவர் கோமாவில் இருந்தாரா, அதேப்போல, திமுக தலைவர் கருணாநிதியும், இலங்கையில் 8 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவை பழைய புகைப்படங்கள் போல உள்ளதே என்றார்.

ஆனால் அவர் தற்போது இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கிறார். இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களால் மக்களை ஏமாற்ற முடியாது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள், தமிழ் ஆர்வாளர்களின் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
 

சிறுமியைக் கொன்ற சிறுத்தை சுட்டுக்கொலை


உத்தரகண்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தைப்புலி வனத்துறை அதிகாரிகளால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டது.
டேராடூன் மாவட்டம், தெüலாஸ் பிரவாதி மஜ்ரா பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி, பெண் சிறுத்தை தாக்கிக் கொல்லப்பட்டார்.

எனவே, மக்களைப் பயமுறுத்தி வந்த அந்தச் சிறுத்தையைக் கொல்ல வேண்டும் என வனத்துறையினரிடம், அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலியைச் சுட்டுக்கொன்றனர்.
 

“Red Light” பகுதி வேண்டும்! செக்ஸ் தொழிலாளர்களின்


சென்னையில் விபச்சாரத் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கலைவாணி கூறுகையில், சென்னையில் மட்டும் 3000 செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்தியாவின் பெருநகரங்களில் சென்னை, பெங்களூரில் மட்டும்தான் தனியாக சிவப்பு விளக்குப் பகுதி இல்லை.

இதன் காரணமாக சென்னையில் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பொலிஸ் தொல்லை, வன்முறைக் கூட்டங்களிடம் சிக்கிக் கொள்வது, மோசடிக்குள்ளாவது என அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் விபச்சாரம் சட்டத்துக்குட்பட்டதுதான். இருப்பினும் பொது இடங்களில் நின்று கொண்டு ஆண்களை அழைப்பது, விபச்சார விடுதி நடத்துவது, புரோக்கர்களை வைத்துக் கொண்டு ஆட்களைப் பிடிப்பது ஆகியவை குற்றச் செயல்களாக பார்க்கப்படுகின்றன.

விபச்சாரப் பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அமைதியான முறையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் காத்திருந்தால் கூட கைது செய்கிறார்கள்.
எனவே இதுபோன்ற சிக்கல்களை விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

அதில், மும்பையில் உள்ளது போல சென்னையிலும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், பாதுகாப்பான முறையில் தங்களது தொழிலை செய்து கொள்ள வசதியாக தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியைப் பொறுத்தவரை கிராண்ட் பேஸன் சாலை, மும்பையில் காமத்திபுரா, கொல்கத்தாவில் சோனாகச்சி ஆகியவை சிவப்பு விளக்குப் பகுதிகளாகும்.

ஆனால் சென்னையில் அப்படி ஒரு பகுதி இதுவரை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்கிறார் ?


இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் சுமார் 40 நாடுகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச நடத்தும் அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்ட சபையில் இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கிடையே காமன்வெல்த்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லலாம் என்று காங்கிரஸ் உயர் மட்டக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங்கின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன் ஆகிய மூன்று பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், காமன்வெல்த் மாநாட்டில் எப்படியாவது பிரதமரை கலந்து கொள்ள வைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். பிரதமரின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள் செய்து முடித்து விட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வாரா? மாட்டாரா? என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி நீடிக்கிறது.

பிரதமர் அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று நேற்று தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்த பிறகு மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
ஆனால் ராஜபக்சவுடன் நெருக்கமான உறவில் இருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், மன்மோகன் சிங்கை கொழும்பு அழைத்து செல்வதில் இரகசிய வேலைகளை செய்து வருகிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் பிரதமர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பிரதமர் தன் முடிவை தெரிவிப்பார் என்று தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கடைசிக் கட்ட ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், பாடகியுமான இசைப்பிரியா மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்தின் சனல்–4 ஒளிபரப்பியது. அதில் இசைப்பிரியா சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் உள்ளன.

இது உலக மனித உரிமை ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இலங்கை நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணியுங்கள் என்று உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இந்தியா அந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
 

03 November 2013

அதிமுக உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது ஊடுறுவல்


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையளத்தளம் மீது ஊடுறுவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் பாகிஸ்தானிலிருந்து

செயற்படும் குழு ஒன்றினால் ஊடுறுவப்பட்டு தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டை ஓட்டின் படம் ஒன்றை இணையத்தளத்தில் பொறித்துள்ளதுடன் பாகிஸ்தானின் தேசியக் கொடியையும் இணைத்துள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தானுடன் சம்பந்தப்பட்ட சில வாசகங்களையும் அதில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இணையத்தளத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுள் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது
 

வதந்தியால் வந்த வினை: 10 பேர் உடல் நசுங்கி பலி


ஆந்திராவில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவியதும், பயந்து போய் கீழே குதித்த பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.
கேரளாவின் ஆலப்புழா நகரில் இருந்து

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நேற்றிரவு 7.00 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயநகரம் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயிலில் தீப்பற்றியுள்ளதாகவும், பெட்டிகள் எரிந்து விடும் என்றும் சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர்.

இதனை நம்பிய பயணிகள் சிலர், அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர், உடனே பலர் ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.
அப்போது அருகேயுள்ள மற்றொரு தண்டவாளத்தில்

 வந்த ராய்கர்(ஒடிசா மாநிலம்)- விஜயவாடா ரயில் பயணிகள் மீது மோதியது.
இதில் பயணிகளில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த ரயில்வே மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகாஜூன கார்கே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
 

02 November 2013

இன்று முதல் புதிய ஐபோன் மாடல்கள் இந்தியாவில் விற்பனை


 ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.

நுகர்வோர் மின்னணு, கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் மற்றும் வடிவமைப்புகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி இப்போது தங்களின் தயாரிப்பான ஐ-போன்களின் புதிய மாடல்களை இன்று விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாளான இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த போன்கள் '5 எஸ்' மற்றும் '5 சி' என்ற இரண்டு ரகங்களில் வெளியாகி உள்ளன. இந்த விற்பனை குறித்து ஆப்பிள் நிறுவனம் இரண்டு வாரங்கள் முன்பே அறிவித்திருந்தது.

இவற்றில் கோல்டு, சில்வர் மற்றும் சாம்பல் நிறத்தில் வெளியாகியுள்ள '5எஸ்' ரகங்களில் '16 ஜிபி' மாடல் 53,500-க்கும், '32ஜிபி' மாடல் 62,500-க்கும், '64ஜிபி' மாடல் 71,500-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. நீலம், பச்சை, ரோஸ், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகியுள்ள '5சி' ரகங்களில் '16ஜிபி' மாடல் 41,900-க்கும், '32ஜிபி' மாடல் 53,500-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளும், தொழில் நுட்ப உத்திகளும் இவற்றின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
 

01 November 2013

இசைப்பிரியாவின் வீடியோ குறித்து மத்திய அரசு!

 
 
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் கொலை செய்தது தொடர்பான வீடியோவை சனல்-4 வெளியிட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன்,

 விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய வீடியோ உண்மை எனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும்

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயந்தி நடராஜன் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறினார்.
 

பட்டாசு தயாரித்தபோது கும்பகோணத்தில் வெடிவிபத்து! ..


கும்பகோணம்அருகே ஒழுகச்சேரியில் பட்டாசு தயாரித்த போது இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாயினர். பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது

 குறித்த தீயணைப்புத் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலை இயங்கி வந்த தகரக் கொட்டகை வெடி விபத்தில் தரைமட்டமாகியுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 6 தொழிலாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: புதிய..


தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் பணிக் காலம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.முடிகெüடர் கூடுதல் பொறுப்பாக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதால், நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பரிசீலிக்குமாறு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக நீடிக்க பாலகிருஷ்ணா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹாவை நியமித்து கர்நாடக உயர்நீதிமன்றப் பதிவாளர் (பொறுப்பு) கே.பி.சங்கப்பா அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பச்சாபுரே, மனோலி, ஆன்டின், மல்லிகார்ஜுனையா, சோமராஜு, பாலகிருஷ்ணா, முடிகெüடர் ஆகியோர் விசாரித்துள்ளனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் 8-ஆவது நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதியான இவர், கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
அடுத்த வாரத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

கனடாவில் இரசாயன ஆலையில் வெடி விபத்து


கனடாவின் மொன்றியலில் இரசாயன ஆலையொன்றில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

கனடாவின் மொன்றியலுக்கு கிழக்குப் பக்கமாக 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிறான்பி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையே விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலையில் நடந்தது என்றும், தொழிலாளர்கள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அண்மை பகுதியில் வசிக்கும் மக்கள்

 உடனடியாக தத்தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும், கிட்டத்தட்ட 3,600 கிலோ நிறையுள்ள பொலிஸ்றேன் எனப்படும் இரசாயனப் பொருள் நெருப்பில் எரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் மிகவும் அடர்ந்த புகைமூட்டம் காணப்படுவதாகவும், அவைகள் பல மைல்கள் தூரத்திற்கு அப்பாலும் கூட புகைமூட்டத்தைக் காணக்கூடியதாவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.