Pages

27 December 2020

புரட்டியெடுக்குமா இந்தியா 195 ஓட்டங்களுடன் சுருண்டது அவுஸ்;

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 26-12-20-அன்று மெல்பேர்னில் ஆரம்பமாகியது.
போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை 
மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3) 
விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி, இன்றைய ஆட்ட நாள் நிறைவில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செதிகள் >>>



23 December 2020

ஐதராபாத்தில் கொரோனா சோதனை. தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி
 கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி
 கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக 
நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு 
நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது.
 இதையடுத்து ஐதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் படுத்திக் கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் 
விரைவில் ரஜினி 
சென்னை திரும்ப இருக்கிறார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



15 December 2020

இலங்கையில் மீன்வளத்தை அள்ளவந்த இந்திய மீனவர்கள் 19 பேர் கைது

அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது 
செய்துள்ளனர்.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு மிக நெருக்கமாக வந்து மீன்வளத்தை வாரி அள்ளிச் சென்ற இந்திய மீனவர்களின்
 மோசமான நடவடிக்கையால் இனி வரும் நாட்களில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை தீர்மானம் எடுத்திருந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடிப் படகுகளை சுற்றிவளைத்த கடற்படையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில் இருந்த 19 மீனவர்களும் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக அத்துமீறும் மீனவர்கள் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>>>



06 November 2020

திரைப்படத்தை மிஞ்சும் மெய்சிலிர்க்கும் மரம் விட்டு மரம் தாவும் பனையேறி

தமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன் தான் இருக்கும் கடந்த புயலின் சீற்றத்தில் தென்னை மாற்றங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் பனைமரங்கள் மட்டும் கீழே சாயாமல் பெரும்பாலும் கம்பீரமாக நின்றது
தமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத
 இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன் தான் இருக்கும் கடந்த புயலின் சீற்றத்தில் தென்னை 
மாற்றங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் பனைமரங்கள் மட்டும் கீழே சாயாமல் பெரும்பாலும் கம்பீரமாக நின்றது
அதில் இருக்கும் நபர் சர்வசாதாரணமாக ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு தாவுகிறார் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



02 November 2020

டும்.டும்.டும் ,பிரபல நடிகை காஜலுக்கு .கெளதம் கிச்லு திருமணம்

பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிச்லு திருமணம் மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம்(30) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



16 October 2020

இந்திய யாவில் 50 ஆயிரத்தை நோக்கி குறைந்து வரும் தினசரி பாதிப்புகள்

இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 73 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 
எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 73,70,469 ஆக 
உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,12,161 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64,53,780 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,04,528 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

09 October 2020

முசோரியில் கோர விபத்தால் அந்தரத்தில் தொங்கிய பேருந்து.

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பொலிஸார் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி
 அந்தரத்தில் தொங்கிய சம்பவம்  உயிரை உறைய வைத்த விபத்தின் திக் திக் நிமிடங்கள் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.முசோரியில் கெம்ப்டி நீர்வீழச்சி அருகேயே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
இந்தோ-திபெத் எல்லை அருகே பொலிஸார் பயணம் செய்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் 
தொங்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 41 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.பிரேக் பிடிக்காததே 
விபத்திற்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கட்டிடத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் பேருந்தை பொலிஸார் மீட்கும் புகைப்படம்
 வெளியாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


25 September 2020

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம். மருத்துவமனை அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற பாடகர் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் 
முன்னேற்றம்
 இருப்பதாக அவர து மகன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

15 September 2020

ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் இப்படியும் நடக்கின்றது

கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் 
பெயர் கொரோனா.
இவருக்கு தற்போது 34 வயது. இவருக்கு 34 வருடங்களுக்கு முன் ஒரு பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் அர்த்தம் கிரவுன் (Crown) அதாவது 
கிரீடம் என்பதாகும்
தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். ஒரு சிலர் அவரை கேலி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரத்த தானம் செய்வதற்காக பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக திருமதி. எஸ்.கொரோனா கவலைத் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



10 September 2020

பெண் குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது

 

தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி 
கிராமத்தை சேர்ந்தவர் ரொசாரியோ (45). இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி (5) என்ற குழந்தை இருந்தது
. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்து விட்டார். இதையடுத்து
 ரொசாரியா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயை இழந்த குழந்தை ரென்சிமேரியை, 
ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் (70) வளர்த்து வந்தார். அதே வீட்டில் ஜெயராணியின் அக்காள் ஆரோக்கியமேரி (35) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு 
திருமணமாகவில்லை.
வழக்கம்போல் நேற்று காலை பச்சையம்மாள், கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது குழந்தை ரென்சிமேரி சாப்பிடுவதற்காக ஆரோக்கியமேரி இட்லி கொடுத்தார். ஆனால், குழந்தை, அந்த இட்லி தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட சென்றது.இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி, வீதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தையை 
அடித்து, தரதரவென்று வீட்டுக்கு இழுத்து வந்தார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட ஆரோக்கியமேரி, அந்த குழந்தையை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் இருந்த
 கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை அலறி துடித்தது. இந்த 
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை
 ரென்சிமேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஆரோக்கியமேரியை கைது செய்தனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



06 September 2020

கோதாவரி மாவட்டத்தில் திடீரெனத்தீப்பற்றியெரிந்த ஆலயத் தேர்

                                    

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆலயத் தேர் நள்ளிரில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு சொந்தமான தேர், ஆலய வளாகத்திலுள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 
நிலையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்நிலையில், குறித்த சம்பவம் அறிந்து 
அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு 
துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், தேர் முழுவதும் எரிந்து சேதமாகியுள்ளது.இவ்வாறு 
ஆலயத்துக்கு சொந்தமான 
வரலாற்று சிறப்பு மிக்க 
தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.மேலும், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத 
நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



05 September 2020

எஸ்.பி.பாலா தமது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்

 

இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்,04-09-20. வெள்ளிக்கிழமை. அன்று தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வு 
வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு 
பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு.04-09-20 அன்று  திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக பிரத்யேகமாக
 கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டது. பின்னர் வைத்தியர்களின் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரி ஆகிய இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 5ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு 
தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்த மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. ‘2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்’ என்று கூறி அவர் ஒரு காணொலியையும் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. 
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் எம்.ஜி.எம்.மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டுவரும் நிலையில், நுரையீரல் செயல்பாடு இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான சிகிக்சைகள்
 தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.மகன் சரண் வெளியிட்ட காணொளியில், அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்
 நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.இந்நிலையிலேயே எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



15 August 2020

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் என்றும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள
தாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான 
மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது என்றும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்ததாகவும், அவர் விரைவாக குணமடைய 
வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் பரவத் தொடங்கின.
இதை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தனது டுவிட்டர் தனது தந்தையின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-
“எஸ்.பி.பி.-யின் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் எம்ஜிஎம் மருத்துவமனையின் பாதுகாப்பான சிகிச்சையில் உள்ளார். விரைவில் அவர் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் உள்ளோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

13 August 2020

சென்னையில் தன்னந்தனியாக 23வது மாடியின் வெளிப்புற விளிம்பில் சுற்றிய சிறுமி

 

சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 23ஆவது மாடியின் விளிம்பில் 15 வயது சிறுமி சுற்றி வந்த சம்பவம் வைரலாகி 
வருகிறது. இந்த சிறுமியை எதிரில் உள்ள குடியிருப்புவாசிகள் காணொளி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இளம் கன்று பயமறியாது 
என்பார்கள். மேலும் ஓடும் பாம்பை பிடிக்கும் வயசு என்றும் சிறுவர்கள், சிறுமிகளின் துணிச்சலை ஒப்பிடுவது உண்டு. அந்த வகையில் குழந்தைகள் பாம்புடன் விளையாடுவது, நாயுடன் விளையாடுவது, பாம்பை பிடிப்பது என நாம் செய்திகளில் படித்திருப்போம்.அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. 
இங்கு வசிக்கும் ஒருவரது 15 வயது சிறுமி 23 ஆவது மாடியின் விளிம்பில் நடப்பதை பலர் பார்த்துள்ளனர். அப்போது அந்த குடியிருப்புக்கு 
எதிர் குடியிருப்பில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தனர்.யாருக்கு தைரியம் அதிகம் என 15 வயது சிறுமிக்கும் அவருடைய சகோதரருக்கும் போட்டியாம். இதில் 23 ஆவதுமாடியின் விளிம்பில் எந்தவித 
பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த அந்தக் குடியிருப்பின் சங்கத்தினர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மீது புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


23 July 2020

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுனர் முடிவெடுக்காமைக்கு உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

இந்தியாவில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை 
அனுபவித்து வருகின்றனர்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக 
ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.இது தொடர்பாக 
கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் எனவும், நீதிமகன்றம் அதிரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>


ஆலங்குடியில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வசித்து வந்தவர் சதீஷ்குமார்(19). தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் சதீஸ்குமாரால் சமீபத்தில் இவரது வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது அப்பா மற்றும் அண்ணன் இருவரும் சதீஷ்குமாரை மோசமாக 
திட்டி அடித்துள்ளனர்.
இந்த நிலையில், மனமுடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை செல்போனிலேயே டிசைன் செய்து அதனை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து சதீஷ்குமாரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து
 சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.பின்னர் மறுநாள் மழவராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் கதறி துடித்துள்ளனர்.இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சதீஷ்குமாரின் தற்கொலைக்கு காரணமான அப்பா, அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


21 July 2020

இலங்கைக்குள் இந்தியாவிலிருந்து நுழைந்த பூனையினால் பேராபத்து

இந்திய உயரஸ்தானிகர் குழுவுடன் ஸ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற 
அச்சம் எழுந்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 -07-20.ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.இவர்களுடன் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.அதனை
 ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வர பேராதனை விலங்கு
 உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இந்த பூனையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா 
என்பது குறித்த பரிசோதனை நடத்தப்படவில்லை எனத் தெரியவருகிறது.விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இது ஆபத்தான நிலைமை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


16 July 2020

கொரோனாவினால் எதிர்வரும் செப்ரெம்பரில் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்களாம்

நாட்டில் தற்போதைய நிலையைப்போன்று கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துச் சென்றால், செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) தெரிவித்துள்ளது.
அதேநேரம் அதில்
 10 இலட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக மஹராஷ்டிராவில் 6.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லியில் 2.4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், தமிழகத்தில் 1.6 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும்
 இந்திய அறிவியல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், குஜராத் மாநிலத்தில் 1.8 இலட்சம்
 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கர்நாடகாவில் மட்டும் 2.1 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் 2021 மார்ச்சில் 37.4 இலட்சம் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் 1.88 லட்சம் பேர் வரையில் உயிரிழந்திருப்பார்கள் என அந்த ஆய்வில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் சஷிகுமார் தீபக் குழுவினர் கூறுகையில், செப்டம்பர் கணக்கின்படி இந்தியாவில் 1.4 இலட்சம் பேர்
 உயிரிழந்திருப்பார்கள். அதில், மஹாராஷ்டிராவில் 25 ஆயிரம், டில்லியில் 9,700 பேரும் கர்நாடகாவில் 8500 பேரும் தமிழகத்தில் 6300 பேரும் குஜராத்தில் 7300 பேரும் உயிரிழந்திருப்பார்கள் 
என தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>



09 July 2020

.நண்பனை கோழிக்கடை நடத்தும் தகராறில் வெட்டிக் கொலை செய்த நண்பர்கள்.

கோழிக்கறிக் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை படுகொலை செய்துள்ளனர் வாலிபர்கள். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அம்மாப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உதயா (30) என்பவர் அங்குள்ள சந்தையில் தேவி பிராய்லர்ஸ் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தார். கடந்த 4ம் திகதி இரவு 10.30 மணியளவில், தனது கடைக்கு எதிர்ப்புறமுள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார் உதயா. 5ம் திகதி ஞாயிற்றுகிழமை என்பதால் முழு ஊரடங்கு இருந்தது. இதனால், 
அதிக மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிட்டிருக்கிறார் உதயா.
மது போத்தல் வாங்க உதயா வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், திடீரென உதயாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்துச் செல்ல உதயா முயன்றபோது அவரது முகத்திலேயே கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு 
அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு 
செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடினர்.இந்த நிலையில் உதயாவின் நண்பர்களான 
சுபாஷ் (32) மணிகண்டன் (32) ஆகியோர் மீது சந்தேகப்பார்வை விழுந்தது காவல்துறையினருக்கு. இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் உதயாவின் கடைக்கு அருகிலேயே நாங்கள் கோழிக்கறிக் கடை
 நடத்தி வந்தோம். இது உதயாவுக்குப் பிடிக்கவில்லை.இதனால், எங்களிடம் உதயா அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
உதயாவின் கடைக்கு கூட்டம் அதிகமாக சென்றது. எங்கள் கடை காத்தாடியது.இதனால் உதயாவை 
தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி உதயாவை படுகொலை செய்தோம்’ என்று கூறியுள்ளனர்.
2015ம் ஆண்டு உதயா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக உதயா கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம் என தமிழகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>



26 June 2020

தாஜ்மஹால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடுவதற்கு தீர்மாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு அதிகளவானவர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.
இதனால் அதிகளவானவர்கள் ஒன்று கூடும் போது நோய் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மார்ச் மாத இறுதிவரை தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



25 June 2020

பிகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் பலி

இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு 
அறிவிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


09 June 2020

முசாபர்பூரில் இறந்து கிடந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தை

  ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது
 உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக 
சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார்.அவரது உடல் ரெயில்நிலைய
 பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சித்தது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுத்தது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுத்தது. இதைப் பார்த்த
 அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.பசியினாலும், தாகத்தினாலும் அந்தப் பெண் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தாயின் மரணத்தை கூட அறிய முடியாத குழந்தையின் நிலையை நினைத்து 
மக்கள் வருத்தமடைந்தனர்.இந்தக் காட்சிகளை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மீர் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் 
பதிவில்:-
பீகார் ரெயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. அந்தக் குழந்தை, இறந்து கிடந்த தனது தாயை எழுப்ப முயன்ற காட்சிகள் மனதை கலங்க வைத்தது. தற்போது தனது தாத்தாவின் அரவணைப்பில் இருக்கும் அந்த குழந்தைக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.மேலும், தங்களை 
குழந்தையுடன் தொடர்பில் வைக்க உதவியவர்களுக்கு நடிகர் ஷாருக்கானும் நன்றி தெரிவித்துள்ளார். தாயை இழந்த 
இந்த துரதிருஷ்டமான சூழலில், குழந்தைக்கு மன வலிமை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். நமது அன்பைபும், ஆதரவையும் அந்தக் குழந்தைக்கு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார். தாயை பிரிந்து வாடும் குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாருக்கானை பலரும் பாராட்டி 
வருகின்றனர்.


இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

02 June 2020

கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற 
மனைவியும், இரண்டும் மகன்களும் 
மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.ஐக்கிய 
அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார்.மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக
 வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாகச் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றித்தர மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாகத் தெரிகிறது
.ஆனால், சொத்துக்களை 
எழுதித்தர நாகராஜன் மறுத்துள்ளார், இதையடுத்து சொத்துக்களை அபகரித்து கொண்டு அவரை வீட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.சொந்த ஊரில் நிம்மதியாக வாழலாம் என நினைத்த நாகராஜனுக்கு 
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவர் சாலையில் சுற்றி திரிகிறார்.இது குறித்து நாகராஜன் கூறுகையில், நான் நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என் குடும்பத்தார் என்னை அடித்து துரத்தி சாலையில் பிச்சையெடுக்க வைத்துவிட்டனர்.நானும் எவ்வளவு தான் அவர்களை எதிர்த்து 
போராட முடியும் என அழுது கொண்டே கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் 
என தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



30 May 2020

மனித பிழைகளுக்கான மறக்க முடியாத தண்டணை வயிரசும் வெட்டுக்கிளியும்

இன்றைய தேதியில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. 
ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மற்றொருபுறம் கையில் அகப்படாத பூச்சிக்கூட்டம். இந்த இரண்டு சின்ன விஷயங்களையும் கண்டு இன்று இந்தியத் தேசமே உறைந்துபோயுள்ளது 
எனலாம். ஏழாம் அறிவு, 
காப்பான் என சூர்யாவை வைத்து மீம்கள் சிரிக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இவை இரண்டாலும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற, சந்திக்கப்போகிற விளைவுகள் மீம்கள் அளவுக்கு லேசானதாக இருக்காது என்பதே நிதர்சனம். இவை இரண்டும் இயற்கையான அழிவு சார்ந்த நிகழ்வுகளாகப் பார்க்கப்பட்டாலும், இது மனித இனம் மனசாட்சியைத் துறந்து நீண்ட காலமாகச் செய்துவந்த பிழைகளுக்குக் கிடைத்த தண்டனை எனவே கூறுகின்றனர் துறைசார் வல்லுநர்கள்.
எதிர்காலத்திலும் உலக நாடுகள் ஏதும் பாதுகாப்பாக இருக்காது, கரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு பனிப்பாறையின் நுனி மட்டுமே, இதேபோல பல வைரஸ்கள் எதிர்காலத்தில் வரும்“ என்கிறார் ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி. சார்ஸ், கரோனா எனப் பல வைரஸ்களை 
ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் இவர், கடந்த ஆண்டு கரோனா குறித்த தகவலை
 வெளியிட்டதற்காகச் சீன அரசால் மிரட்டப்பட்டவர் ஆவார். தற்போதுவரை இயற்கையாக உருவானதாகக் கூறப்பட்டு வரும் இந்த வைரஸும், இயற்கை படைப்பான வெட்டுக்கிளிகளின் உணவு 
தேடும் பயணமும் எவ்வாறு மனித பிழைகளுக்கான தண்டனையாகும் என நமக்குள் கேள்வி எழலாம். ஆனால் அதற்கான பதிலை நாம் புரிந்துகொள்ளும்போது ஷி ஜெங்லியின் எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் தொலைநோக்கு பார்வையை நம்மால்
 உணர முடியும். 
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் இந்த இருபெரும் பாதிப்புகளுக்கான முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது இயற்கை அழிப்பு. அதாவது வனப்பகுதிகளை அதிகளவில் அழித்தல். வன அழிப்புக்கு வைரஸ் பரவலுக்கு என்ன சம்பந்தம் என நாம் சந்தேகிக்கலாம். ஆனால் வன அழிப்பு என்பது வெறும் மரங்களை அழித்தல் என்பதனை கடந்து பல ஆயிரக்கணக்கான உயிரினங்களின் இருப்பிடத்தை
 அழிப்பதாகும். இப்படி வன அழிப்பின் காரணமாக ஏற்படுத்தப்படும் உயிரின இடப்பெயர்வுகள், ஆபத்தை விளைவிக்கும் வைரஸ் தாங்கிகளான சில விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான எதிர்ப்படுதலை 
அதிகரிக்கிறது.
எலி, முயல், வௌவால், பன்றிகள் உள்ளிட்டவை வன அழிப்பின் காரணமாக மனித வசிப்பிட பகுதிகளை நெருங்கும் போது நோய்த்தொற்றுக்கான எளிய பாதையாக மாறிவிடுகிறது இது. தினமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி உலகம் முழுவதும் மனிதர்களால் அழிக்கப்படுகிறது. இந்த அழிப்பு விலங்குகளை மாற்று இருப்பிடம் தேட வைப்பதோடு,
 மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும் கிருமிகளையும் பரப்புவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், வருங்காலத்தில் வன அழிப்பு தொடரும்பட்சத்தில், மனித மற்றும் விலங்குகளின் எதிர்ப்படுதல் எண்ணிக்கை அதிகரித்து, பல புதிய நோய்களும் உருவாகும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றனர் ஷி ஜெங்லி போன்றோர். 
வைரஸ் மட்டுமல்ல வெட்டுக்கிளிகள் படையெடுப்பும் கூட இப்படிப்பட்ட மனித தவறுகளாலேயே தற்போது நடக்கத் தொடங்கியுள்ளது. ஆம், வன அழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்பட்ட ஒரு எதிர்பாரா மழையே, இந்தியாவில் 27 ஆண்டுக்காலத்தில் இல்லாத 
அளவு வெட்டுக்கிளி படையெடுப்பை அதிகரித்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பாலைவன வெட்டுக்கிளிகளான
 இவை ஆப்பிரிக்கத் தேசங்களில் பயணத்தைத் தொடங்கி தற்போது இந்தியா வரை வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டின் 
பிற்பகுதியில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நீர் வெப்பம் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பலத்த மழையைத் தூண்டியதாகக் கூறும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல், அதுவே இந்த வெட்டுக்கிளி படையெடுப்பிற்கான 
காரணமும் என்கிறார். .
ராக்ஸி மேத்யூவின் கருத்துப்படி, இந்த வெப்ப நீர் என்பது இந்தியப் பெருங்கடலின் இருமுனை நிகழ்வால் ஏற்படும் விளைவு ஆகும். அதாவது, பெருங்கடலின் மேற்கில் வழக்கத்தை 
விட நீரின் வெப்பநிலை அதிகமாகவும் கிழக்கில் வெப்பநிலை குறைவாகவும் மாற்றம் அடைகின்றது. புவி வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் இந்த இருமுனை நிகழ்வு மேற்கு இந்தியப் பெருங்கடலை அதிகமாக 
வெப்பமாக்கியது. இந்த வெப்பமாற்றம் கிழக்கு
 ஆப்பிரிக்கா மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் வழக்கத்தைவிடப் பலத்த மழையை
 ஏற்படுத்தியது. இந்தத் திடீர் மழையால் தூண்டப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு நல்ல உணவையும், இனப்பெருக்க களத்தையும் அமைத்துக்கொடுத்தது. இதனால் திடீர் பெருக்கமடைந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து இந்தியா வரை படையெடுத்து விவசாயத்தையும், உணவுப் பொருள் உற்பத்தியையும் பாதிப்படையச் செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. 
இவற்றின் மூலம், இந்தியாவின் தற்போதைய மிகமுக்கியமான இரு பிரச்சனைகளுக்கும் ஆதி ஒன்றே எனக் கணிக்கமுடிகிறது. அவை, வனஅழிப்பு மற்றும் இயற்கை மாசுபாடு. தொழிற்புரட்சிக்குப் பின்னரான தசாப்தங்களில் இயந்திரங்கள் மீதான அக்கறையும் பராமரிப்பும் இயற்கை மீது இல்லாமல் போனதே இவ்வாறான அழிவுகளின் ஆரம்பப் புள்ளியாக வரையறுக்கப்படுகிறது. இரு சிறிய உயிரினங்கள் இன்று இவ்வுலகிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எதிர்காலத்தில் தொடராமல் இருக்க வேண்டுமானால் இயற்கையைக் காப்பதே அதற்கான ஒரே வழி என்பது நிதர்சனம். 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


27 May 2020

கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியத் தம்பதி

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்து வருகிறது.ஏறத்தாழ 56 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் தாக்கி இருக்கின்றது. இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை எடுத்தும் பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 3½ லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குகிறபோது நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
 நுரையீரல் பாதிக்கப்படுகிறபோது, சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறபோது மரணம் நேருவதற்கான ஆபத்து கண் எதிரே இருக்கிறது.இப்படிப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசக்கருவி முக்கிய பங்கு வகிக்கிறது.
 இந்த கருவியானது நுரையீரலுக்கு சுவாச காற்றை செலுத்துகிறது, வெளியேற்றுகிறது. எனவே உடல்ரீதியாக
 இயற்கையாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு செயற்கையாக சுவாச காற்றோட்டத்தை வழங்க இந்த வெண்டிலேட்டர் உதவுகிறது. இந்த வெண்டிலேட்டரின் விலை அதிகம். அமெரிக்காவில் 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7½ லட்சம்) என்கிறார்கள். தவிரவும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் தேவையை சமாளிக்கக்கூடிய அளவுக்கு 
நினைத்த உடனேயே தேவையான எண்ணிக்கையில் எளிதாக தயாரித்து விடவும் இயலாது. இதற்கு உலகமெங்கும் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது.இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாங்கள் வெண்டிலேட்டர்களை நன்கொடையாக தருவோம் என்று சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.இந்த நிலையில், அதே அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதியர் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி அசாத்திய சாதனையை ஓசைப்படாமல் நிகழ்த்தி 
இருக்கிறார்கள்.இந்த தம்பதியர் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், குமுதா ரஞ்சன் தம்பதியர் ஆவர்.தேவேஷ் ரஞ்சன், ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜார்ஜ் உட்ரப் மெகானிக்கல் என்ஜினீரியங் கல்லூரியின் பேராசிரியர். அவரது மனைவியான குமுதா ரஞ்சன், அட்லாண்டா நகரில் டாக்டராக இருக்கிறார்.இவர்கள் இருவரும் இணைந்துதான் 3 வார காலத்தில் மலிவுவிலை வெண்டிலேட்டரை உருவாக்கி 
இருக்கிறார்கள். 100 டாலருக்கும் குறைவான (சுமார் ரூ.75 ஆயிரம்) விலையில் இந்த வெண்டிலேட்டரை உருவாக்கி விட முடியும் என்கிறார்கள். 500 டாலர் விலைக்கு விற்றால்கூட (சுமார் ரூ.37,500) தயாரிப்பு நிறுவனம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலுமாம்.தங்கள் சாதனை பற்றி பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன் இப்படி சொல்கிறார்…
“நுரையீரல் செயல் இழக்கிறபோது வெண்டிலேட்டர் உடலின் சுவாச செயல்முறையை எடுத்துக்கொள்கிறது. இது நோயாளிகள் தொற்றுநோயை எதிர்த்து போராடி மீட்க அவகாசம் தருகிறது. நாங்கள் தயாரித்து இருப்பது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வெண்டிலேட்டர் அல்ல. இது மிகவும் சிக்கலானது. அதிக செலவு ஆகும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குரிய பொதுவான சிக்கலான கடுமையான 
சுவாசக்குழாய் நோய்க்குறியை நிவர்த்தி செய்வதற்கு இந்த திறந்த காற்றோட்ட வெண்டிலேட்டர் உதவியாக இருக்கும். கொரோனா நோயாளிகளின் விறைத்துப்போன நுரையீரல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் காண்பதற்கு இந்த வெண்டிலேட்டர் உதவும்” என்கிறார் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன்.அவரது மனைவி டாக்டர் குமுதா ரஞ்சன் இதுபற்றி கூறும்போது, “இந்த மலிவு விலை 
வெண்டிலேட்டரை ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கி உள்ளோம். இதில் சுவாச வீதம், அலை அளவு (ஒவ்வொரு சுழற்சியிலும் காற்று நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வது) உத்வேகம், நுரையீரல் அழுத்தம் ஆகியவற்றை மின்னணு 
சென்சார்கள் மற்றும் கணினி கட்டுப்பாடும் கவனித்துக்கொள்ளும். இந்த திட்டத்தின் முழு குறிக்கோளும், மலிவு விலை தற்காலிக வெண்டிலேட்டரை உருவாக்குவதுதான்” என்று சொல்கிறார்.
பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. என்னும் பிராந்திய பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதன்பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார். ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்து 
வருகிறார்.டாக்டர் குமுதா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். 6 வயதாக இருந்தபோதே தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர். மருத்துவ படிப்பை நியுஜெர்சியில் முடித்தார்.தங்களது கண்டுபிடிப்பு பற்றி பேராசிரியர் தேவேஷ் ரஞ்சனும், டாக்டர் குமுதாவும் சேர்ந்து சொல்லும்போது, “இந்தியா, உலகளவிலான மலிவு விலை வெண்டிலேட்டர்களை உருவாக்கி, 
உலகமெங்கும் ஏற்றுமதி செய்வதற்கான வளத்தை கொண்டுள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டுதான் இந்த வெண்டிலேட்டரை மலிவு விலை வெண்டிலேட்டராக உருவாக்கி உள்ளோம். இந்தியாவில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை 
பயன்படுத்தியே இந்த வெண்டிலேட்டரை எளிதாக தயாரிக்க முடியும்” என்கிறார்கள்.ஆப்பிரிக்க நாடான கானா 
மற்றும் இந்தியாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் உற்பத்தி பிரிவுகளை தொடங்குவதற்காக எங்களை நாடி உள்ளனர் என்றும் சொல்கிறார் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன்.இந்த வெண்டிலேட்டரை பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்கி
 விட்டால், உலகளவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் 
சந்தேகம் இல்லை.