| செவ்வாய் கிரகத்தில்
உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆய்வு
செய்து வருகிறது.
இதற்காக நாசாவால் கியூரியாசிட்டி என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விண்கலம் செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, பாறை, மணல், சுற்றுப்புற சூழல், காற்றின் வேகம் மற்றும் புழுதி புயல் போன்றவற்றை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. இதன் மூலம் உயிரினங்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலை சிகரத்தில் கியூரியாசிட்டி இன்று ஏற தொடங்கியுள்ளது. இந்த எரிமலையின் சிகரம் 3 மைல் உயரம் கொண்டது. அதன் மீது ஏற தொடங்கியுள்ள கியூரியாசிட்டி வருகிற பிப்ரவரி மாதம் மத்தியில் மலையில் சிகரத்தை எட்டும். மேலும் அங்குள்ள பாறைகளை வெட்டி புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இத்தகவலை கியூரியாசிட்டி ஆய்வு தலைமை விஞ்ஞானி ஜான் கிராட்ஷின்ஜர் தெரிவித்துள்ளார் |
Pages
▼
31 December 2012
எரிமலை சிகரத்தில் ஏறி கியூரியாசிட்டி சாதனை
15 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த கொடூரம்
| செய்யாத குற்றத்திற்காக 15
ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த நபர், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நேபாளத்தை சேர்ந்த கோவிந்த பிரசாத்(வயது 46) என்பவர் ஜப்பானில் ஓட்டல் ஊழியராக
வேலை செய்து வந்தார். இவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகே செக்ஸ் தொழிலாளி ஒருவர்,1997ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த செக்ஸ் தொழிலாளியுடன் கோவிந்த பிரசாத்துக்கு தொடர்பு உண்டு என்பதால், இந்த கொலையை அவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கொலையில் அவருக்கு தொடர்பில்லை என கீழ் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ஐகோர்ட்டில் இவர் மீது கொலை குற்றம் சாட்டியது. இதையடுத்து கோவிந்த பிரசாத் டோக்கியோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 15 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கோவிந்த பிரசாத்துக்கு, இந்த கொலை வழக்கில் தொடர்பில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து தற்போது அவர் விடுவிக்கப்பட்டார். செய்யாத கொலைக்காக 15 ஆண்டு சிறையில் அடைத்ததற்காக ஜப்பான் அரசு, நான்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார் |
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மக்களுக்கு உதவி!
பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு, புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.[புகைபடங்கள்]
இதன்போது, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பிஸ்கற் வகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மடு தியான மையத்தின் பணிப்பாளர் பங்குத் தந்தை ரூபன், எழுத்தாளர் சண் மாஸ்ரர் ஆகியோர் பொருட்களை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கையளித்தனர்.
பெற்றோர் கண் எதிரில் மாணவி உயிர் பிரிந்தது: தவிக்க வைத்த கடைசி 8
மணி நேரம் டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர்.
வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதன் பிறகு 8 மணி நேரம் மாணவி பெற்றோர் அனுபவித்த தவிப்பு கொடூரமானது. இதுபற்றி மாணவியின் 2 தம்பிகளில் ஒருவர் கூறியதாவது:-
வெள்ளிக்கிழமை இரவு எங்களிடம் வந்த டாக்டர்கள் நாடி துடிப்பை காட்டும் கருவியை என் சகோதரி உடம்பில் பொருத்தி இருப்பதாக கூறினார்கள். அந்த கருவி 0 என்று காட்டினால் மூச்சு நின்று விட்டதாக அர்த்தம். அருகில் இருந்து கொள்ளுங்கள் என்றனர். இதனால் நாங்கள் எல்லோரும் அந்த கருவியையே பார்த்து கொண்டிருந்தோம். அதில் நம்பர் குறைய, குறைய என் தாய் கதறி அழ தொடங்கினார். அதிகாலை 4.45 மணிக்கு அந்த கருவியில் 0 என்று வந்தது. எங்கள் கண் எதிரிலேயே அவர் மூச்சு நின்று போனது
வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதன் பிறகு 8 மணி நேரம் மாணவி பெற்றோர் அனுபவித்த தவிப்பு கொடூரமானது. இதுபற்றி மாணவியின் 2 தம்பிகளில் ஒருவர் கூறியதாவது:-
வெள்ளிக்கிழமை இரவு எங்களிடம் வந்த டாக்டர்கள் நாடி துடிப்பை காட்டும் கருவியை என் சகோதரி உடம்பில் பொருத்தி இருப்பதாக கூறினார்கள். அந்த கருவி 0 என்று காட்டினால் மூச்சு நின்று விட்டதாக அர்த்தம். அருகில் இருந்து கொள்ளுங்கள் என்றனர். இதனால் நாங்கள் எல்லோரும் அந்த கருவியையே பார்த்து கொண்டிருந்தோம். அதில் நம்பர் குறைய, குறைய என் தாய் கதறி அழ தொடங்கினார். அதிகாலை 4.45 மணிக்கு அந்த கருவியில் 0 என்று வந்தது. எங்கள் கண் எதிரிலேயே அவர் மூச்சு நின்று போனது
தலைக்கு ரூ.கோடி பரிசு அறிவித்த அல்கொய்தா தீவிரவாதிகள்.
ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அங்கு பயிற்சி முகாம்கள் அமைத்து சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டு அவர்களை அழித்து வருகிறது.
இது அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஒரு அறிவிப்பை ஆடியோ மூலம் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அல்கொய்தா இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் ஏமன் நாட்டில் தங்கியிருக்கும் அமெரிக்க தூதரை கொலை செய்பவருக்கு ரூ.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம் வழங்கப்படும்.
மேலும் ஏமனில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க ராணுவ வீரரின் தலைக்கு தலா ரூ.15 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத்தை ஊக்குவிக்க இந்த பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தீயை அணைக்க தாமதமாக வந்த இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக்?
தீயை அணைக்க தாமதமாக வந்த இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக் கொலை.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஓய்ந்த பாடில்லை. நியூயார்க் நகரில் தீயை அணைக்க தாமதமாக வந்ததற்காக இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட்டில் நியூடவுன் பள்ளியில் புகுந்த மர்ம நபர் 20 குழந்தைகள் உள்பட 27 பேரை சுட்டு கொன்றான். அதன் பின்னர் வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் நியூயார்க் நகரில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வர கால தாமதமானது. இதனால் தீ அருகே இருந்த மற்றொரு வீட்டுக்கும் பரவியது.
இந்நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து சேர்ந்தனர். அப்பொழுது ஒருவர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமது பாட்டியை சுட்டுக் கொன்றவர் என தெரியவந்துள்ளது
30 December 2012
நெருப்பு மனிதன் புதிய உலக சாதனை!
சாதிக்க துடிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு பொருட்டல்ல. அதை நிரூபிக்கின்றார் இந்த மனிதன். அமெரிக்காவை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளரான Ted A Batchelor ஒட்சிசன் இல்லாமல் தனது உடல் முழுவதும் நெருப்பினால் எரிய விட்டு எல்லோர் இரத்தத்தையும் உறைய வைக்கின்றார். சுமார் 2 நிமிடம் 57 செக்கன்கள் இந்த சாகசம் தொடர்ந்தது.
இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரா ரோம்மில் இச் சாதனை இடம்பெற்றுள்ளது.
எரியும் மனிதனை காண…[காணொளி, ]
மாணவியின் உடல் தகனம்: தலைவர்கள் அஞ்சலி
| பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. |
|
மாணவியின் உடலுடன் சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்ட
விமானம், அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை
வந்ததடைந்தது. பின்னர் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து, கொண்டு வரப்பட்ட மாணவியின் உடல், டெல்லி வந்த சில மணி நேரங்களில் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவியின் பெற்றோரை இருவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவி வசித்த டெல்லி மஹாவீர் கிளைவிவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கடும் பனி மூட்டத்திற்கு இடையே நடைபெற்ற உடல்தகனத்தில் ஆர்.பி.சிங் பங்கேற்றார். நடந்த சம்பவத்தின் விபரம்: பிஸியோதெரபி மாணவியான குறித்த பெண், கடந்த 16ம் திகதி இரவு, பேருந்து ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவருக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவியின் மூளை, நுரையீரல், குடல் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவியைக் காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனைத் தரவில்லை. மரணத்துடன் போராடிய அவரது உயிர் நேற்று அதிகாலை 2 மணி 15 நிமிடங்களுக்கு பிரிந்தது.,¨,[புகைபடங்கள்] |
இமயமலை பகுதியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு
| இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். |
|
சிங்கப்பூரின் மிகப்பெரிய Nanyang Technological
Universityயின் தொழில்நுட்ப குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய
ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர். இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் |
மாணவி இறப்பு: குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு
| மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், அக்ஷய் தாக்குர், பவன் மற்றும் வினய் ஆகிய 6 பேர் மீது டெல்லி பொலிசார் கொலை வழக்கைப் பதிவு செய்தனர். |
|
இது குறித்து டெல்லி பொலிஸ் (சட்டம், ஒழுங்கு) ஆணையர் தர்மேந்திர
குமார், செய்தியாளர்களிடம் கூறியது: இவ்வழக்கில் வரும் ஜனவரி 3ம்
திகதிக்குள் குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பிப்போம். இவ்வழக்கில், கொலைக்குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் நடத்துவதற்காக சிறப்பு அரசு சட்டத்தரனி நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர தீவிர முயற்சி மேற்கொள்வோம். இத்துயரச் சம்பவத்துக்காக மற்றவர்களைப் போலவே நாங்களும் வருத்தமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். 6ஆவது குற்றவாளி சிறையில் அடைப்பு: மாணவி பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் தொடர்புடைய 6ஆவது நபரான அக்ஷய் தாக்குர் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஷ் குமார் சர்மா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜனவரி 9ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அக்ஷய் தாக்குர் சிறையில் அடைக்கப்பட்டார். |
இந்துக்களை பிடிக்காது” கொலை செய்த பெண்ணின் பரபரப்பு
| அமெரிக்காவில் சுரங்க ரயிலில்
தள்ளி நபரொருவரை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் இந்தியரான சுனந்தோ சென் என்பவர் தனது
நண்பர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி சுரங்க ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம பெண் அவரை கீழே தள்ளி கொலை செய்து விட்டார். அதன் பின் அந்த பெண் தப்பி சென்றார். இந்த விபரங்கள் அங்கிருந்த வீடியோ கமெராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து குறித்து பெண்ணை பற்றி துப்பு கொடுப்பவருக்கு 12,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்தனர். தற்போது இந்தக் கொடூரக் கொலையை செய்ததாக எரிகா என்ற 31 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடந்த 2001-ம் ஆண்டு நியூயார்க் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தமக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது என்றும், இதன் காரணமாகவே அவரை கொலை செய்தேன் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், சுமார் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.[புகைபடங்கள்] |
கடத்தப்பட்ட 20 இராணுவ வீரர்கள் சடலமாக மீட்பு
| தலிபான்களால் கடத்தப்பட்ட
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பெஷாவர் பகுதியின் சோதனை சாவடிகளில்
இருந்த 20க்கும் மேற்பட்ட துணை நிலை இராணுவத்தினரை தலிபான்கள் கடத்தி சென்றனர். இவர்களை மீட்பதற்கான முயற்சிகளை இராணுவத்தினர் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 20 பேரின் உடல்களை பொலிசார் மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அமெரிக்காவுடனான உறவை முறிக்காத பட்சத்தில் நாங்கள் ஆயுதங்களை கீழே போடப் போவதில்லை என தலிபான்கள் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. |
29 December 2012
காம வெறிக்கு பலியாகும் இந்திய பெண்கள்
| (வீடியோ இணைப்பு) |
| [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:02.18 PM GMT +05:30 ] |
| இந்தியாவில் ஒரு ஆங்கில மாலை நாளிதழின் பெண் நிருபர் கிராந்தி விபுதேயும் ஆண்
நிருபர் பூபன் படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு பார்த்து அரபு ஷேக்குகளின் காம
லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். அதாவது, இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும் பெண் தேடும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள சில புரோக்கர்கள் அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு பெண்களை கூட்டி செல்கின்றனர். இவ்வாறே தங்களுக்கு பிடித்தமான பெண்களை அரபு ஷேக்குகள் தெரிவு செய்கின்றனர். எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும் என விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன்பு ரூ.15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பேசப்பட்டு பெண்ணுக்கு கைமாறி விடுகிறது. மேலும் எத்தனை நாட்களுக்கு ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பின், ஷேக்கின் மனைவியாக இந்திய பெண் மாறுகிறாள். அந்த பெண்ணுடன் இந்தியாவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை தன் காம இச்சைக்கு விருப்பம் போல பயன்படுத்துகிறார். தன் விசா காலம் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும் சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும் அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண் கசக்கி வீசப்படுகிறாள். இதில் கொடுமை என்னவென்றால் அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு அவள் பெறும் பணத்தில் கொஞ்சமே கிடைக்கிறது. 50 சதவீத பணத்தை திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதமுள்ளதை பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த கொடுமை மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது குறிப்பிடத்தக்கது,[காணொளிகள்,இணைப்பு] |
நீண்ட நதியின் குறுக்கே சுரங்க ரயில் பாதை:சீனா சாதனை
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும் 26 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுளளது.
சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கப்பல் போக்குவத்தும், மேம்பால சாலைப் போக்குவரத்தின் தேவையும் குறையும்.
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸி, சீனாவின் வடமேற்குப் பகுதியில் உருவாகி 6,300 கி.மீ. தூரம் பயணம் செய்து கடலில் கலக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன், பெய்ஜிங்குக்கும் - குவாங்செüவுக்கும் இடையே உலகின் மிக நீண்ட அதிவேக இருப்புப் பாதையில் (2,298 கி.மீ.) ரயில் போக்குவரத்தை சீனா தொடங்கி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது
அப்பிளின் புதிய ஐ கடிகாரம்
| புதிய ஐ
கடிகாரமொன்றை அப்பிள் நிறுவனம் உலகுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும்
அப்பிளின் ரசிகர்களாக மாறிவருகின்றனர். அப்பிள் அறிமுகப்படுத்திய ஐ போன், ஐ பேட் அனைத்தும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஐ கைகடிகாரமொன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கடிகாரம் 1.5 அங்குலத்தில் தொடு திரை வசதியுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகிறது. கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட்(Indium tin oxid) பூச்சைக் கொண்ட மேற்பரப்புடன் கூடிய O.L.E.T வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் I.O.S மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது. இதேவேளை இதேபோன்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ள பெபெல் என்ற கடிகாரம் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
இரட்டை குடியுரிமை விரிவாக விசாரணை நடத்தப்படும்!
இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து, அவர்களின் பின்னணி குறித்து, விரிவாக விசாரணை நடத்தப்படும் முறையொன்றை அடுத்த வருடம் முதல் செயற்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய புதிய சட்டத்திட்டங்களை வகுப்பதற்காக பல்கலைக்கழக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றின் மூலம் ஏற்கனவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இரட்;டை குடியுரிமையை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து,உரிய விசாரணைகளை நடத்தாது, இரட்டை குடியுரிமைகளை வழங்கியுள்ளன.
1980 ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள், இலங்கையில் வசிக்க முடியாது என கூறி, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்று அந்த நாடுகளின் பிரஜைகளாக மாறியுள்ளனர்.
போருக்கு பின்னர், அந்த நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய புலிகளின் ஆதரவாளர்கள், இரட்டை குடியுரிமைகளை பெற்று சர்வதேச ரீதியில் இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக முயற்சித்து வருவது அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக முன்னைய சட்டங்களில் திருத்தங்களை செய்து, இரட்டை குடியுரிமை வழங்குவதில் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்
முட்டையால் ஏற்பட்ட விபரீதம்!?
நண்பர்கள் வைத்த பந்தயத்தில் போட்டி போட்டு, 28 முட்டைகள் சாப்பிட்ட வாலிபர் வயிற்று வலியால் துடித்து பலியானார்.
துனிசியா நாட்டின் எல்-பேட்டன் பகுதியை சேர்ந்தவர் தாவூ பட்னாசி(வயது 20).
இவர் தன் நண்பர்களிடம் வேக வைக்காத 30 முட்டைகளை ஒரே சமயத்தில், சாப்பிட்டு காண்பிப்பதாக பந்தயம் கட்டினார்.
இதற்கு நண்பர்கள் ஒப்பு கொண்டதால் புயல் வேகத்தில் முட்டைகளை உடைத்து வாயில் ஊற்றிக் கொண்டார்.
28 முட்டைகளை விழுங்கிய பட்னாசிக்கு அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இவர் இறந்து விட்டார்
துனிசியா நாட்டின் எல்-பேட்டன் பகுதியை சேர்ந்தவர் தாவூ பட்னாசி(வயது 20).
இவர் தன் நண்பர்களிடம் வேக வைக்காத 30 முட்டைகளை ஒரே சமயத்தில், சாப்பிட்டு காண்பிப்பதாக பந்தயம் கட்டினார்.
இதற்கு நண்பர்கள் ஒப்பு கொண்டதால் புயல் வேகத்தில் முட்டைகளை உடைத்து வாயில் ஊற்றிக் கொண்டார்.
28 முட்டைகளை விழுங்கிய பட்னாசிக்கு அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இவர் இறந்து விட்டார்
பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டம்
சக மாணவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலே பல்கலைக்கழக நிர்வாகம் விசேட கூட்டத்தினை நடாத்த தீர்மானித்துள்ளது.
இதேவேளை, மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதிமேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையிலே பல்கலைக்கழக நிர்வாகம் விசேட கூட்டத்தினை நடாத்த தீர்மானித்துள்ளது.
இதேவேளை, மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதிமேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார்
| ( |
| [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:06.37 AM GMT +05:30 ] |
| கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி
பரிதாபமாக இறந்தார். கடந்த 16ஆம் திகதியன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26ஆம் திகதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணியளவில்(சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு) உயிரிழந்தார்[காணொளி, இணைப்பு] |
போர்க் குற்றவாளிகளைப் பிடிக்க சுவிஸ் தீவரம்
| சுவிஸ் அரசு சிறப்புப்படை
ஒன்றை நிறுவி தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ள போர்க் குற்றவாளிகளையும் மனித உரிமை
மீறலில் ஈடுபடுபவர்களில் பிடிக்க தீவிரமாக இறங்கியது.
ஜெனீவாவில் உள்ள Trial என்ற அமைப்பும் International என்ற மனித உரிமை அமைப்பும்
சுவிஸ் அதிகாரிகள் உடனடியாக இப்பணியில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. யூலை முதல் மத்திய கூட்டரசின் சட்டத்துறையுடன் புதிய சர்வதேச குற்றவியல் சட்ட அறிஞர் மையமும் இணைந்து செயல்படுகிறது. இந்த புதிய மையத்தில் இரண்டு மத்திய கூட்டரசுடன் போரிஸ் அதிகாரிகளும் மூன்று சட்ட வல்லுநர்களும் இடம் பெற்றுள்ளனர். டிரையலின் இயக்குனர் பிலில் கிராண்ட் சர்வதேச வேண்டுகோளை ஏற்று சுவிஸ் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 2001ம் ஆண்டில் ரோம் கொள்கை ஒப்பந்தம் ஒன்றில் சுவிஸ் அரசு கையெழுத்திட்டு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவியது. 2011 ஜனவரி 1 வரை சுவிஸ் தண்டனைச்சட்டப்படி போர் குற்றங்களில் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஒருவர் மீதோ மனித உரிமை மீறலில் தொடர்புடையவர் மீதோ உலகில் ஏதாவது ஒரு நாட்டில் இனப்பகை குற்றவாளிகளில் ஈடுபடும் ஒருவர் மீதோ சுவிஸ் அரசு விசாரணை நடத்தலாம். இவர் சுவிட்சர்லாந்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. யாராக இருந்தாலும் சுவிஸ் அரசுக்கு விசாரிக்க உரிமையுண்டு. இப்போது அல்ஜீரியாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் காலேத் நேசாரையும் கவுதமாலா நாட்டின் முன்னாள் காவல் துறை தலைவர் எர்வினையும் சுவிஸ் அரசு கைது செய்து விசாரிக்கும். இவர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது |
28 December 2012
பஸ்நிறுத்த சிமிண்டி பெஞ்ச் மீது தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது தீ ?.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் Van Nuys என்ற இடத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமிண்ட் பெஞ்ச் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த் சிமிண்ட் பெஞ்ச் அடியில் நெருப்பு வைத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Van Nuys section of Los Angeles என்ற பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 67 வயது பெண் ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு எவ்வித சொந்த வீடும் இல்லாததால், தினசரி அந்த பெஞ்ச் மீது தூங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது. அந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கடை வைத்துள்ள ஒரு இருபது வயது இளைஞர் அந்த பெண்ணை பலமுறை அந்த சிமிண்ட் பெஞ்ச் மீது படுத்து தூங்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண், அந்த இளைஞரின் பேச்சைக் கேட்காததால், ஆத்திரத்தில் அந்த பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, சிமிண்ட் பெஞ்ச் அடியில் தீவைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண், அருகிலுள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருபது வயது இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்
டெல்லி மாணவி சரணடைந்திருக்கலாம். பெண் விஞ்ஞானியின்
மருத்துவ படிப்பு மாணவி தன்னை 6 பேர் சூழ்ந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருந்தால் இந்நேரம் அவரது குடல் தப்பித்திருக்கும் என்று விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படு்ததியுள்ளது.மேலும் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சுற்றினால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல் துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆண்களை கற்பழிப்பு போன்ற குற்றங்களைச் செய்ய பெண்கள் தான் தூண்டுகிறார்கள். டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி இரவு 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே ஏன் இருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சுற்றினால் இது போன்றவை நடக்கத் தான் செய்யும். தன்னை 6 ஆண்கள் சூழ்ந்தவுடனே அந்த பெண் அவர்களிடம் சரணடைந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்நேரம் அவரின் குடல் தப்பித்திருக்கும் என்றார்.
அவ்வாறு இப்படி பேசுகையில் போலீசார் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். அனிதா அரிமா சங்க செயலாளராகவும், விவசாய விஞ்ஞானியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு கடத்தல்
| டைனோசர் எலும்புக்கூட்டை
மங்கோலியாவிலிருந்து கடத்த வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டதுடன் நியூயோர்க்
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஃபுளோரிடாவைச் சேர்ந்த எரிக் புரேக்கோப்பி(வயது 38) என்பவர் மங்கோலியாவிலிருந்து
70 மில்லியன் பழமையான டைனோசர் உட்பட புதைப்படிவங்களை அமெரிக்காவிற்கு கடத்தி
வந்துள்ளார். கடந்த யூன் மாதம் மங்கோலிய அரசு, தங்களிடமிருந்த டைனோசர் எலும்புக்கூடு திருடப்பட்டு விட்டதாக அறிவித்ததும் சர்வதேச காவல் துறை தேடுதல் வேட்டையை தொடங்கியது. இந்நிலையில் கடத்தப்பட்ட பொருட்களை இணையத்தில் எரிக் ஏலம் விட்டபோது மாட்டிக்கொண்டார். அப்போது அவரை கைது செய்த பொலிசார், அவரிமிருந்த புதைப்படிவங்களை கைப்பற்றியதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் தான் கடத்தியதாக எரிக் ஒப்புக்கொண்டார். தற்போது இந்த புதைப்படிவங்களை அமெரிக்கா, மங்கோலியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது[புகைபடங்கள்] |
பிலிப்பைன்சில் சூறாவளி: 11 பேர் பலி
| பிலிப்பைன்ஸை தாக்கிய
வெப்ப மண்டல சூறாவளிக்கு இதுவரையிலும் 11 பேர் பலியாகி உள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸை வுவோங் என்ற வெப்ப
மண்டல சூறாவளி தாக்கியது. பிலிப்பைன்சின் மத்திய பகுதியை தாக்கிய இந்த சூறாவளிக்கு, 11 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அந்நாட்டு தேசிய பேரிடம் மையம் கூறுகையில், சமர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் நிலச்சரிவு காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். மற்றவர்கள், நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் பிலிப்பைன்சை புரட்டி போட்ட போபா புயலுக்கு 1000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது |
எனது மகளுக்கு ஆண் நண்பர்களின் தொல்லை அதிகம்:
| அமெரிக்க ஜனாதிபதி பராக்
ஒபாமாவின் மகள் மலியாவுக்கு, ஆண் நண்பர்களிடம் இருந்து அழைப்புகள் அதிகமாக
வருகிறதாம்.
இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமாவும், மிஷெல் ஒபாமாவும்
அளித்துள்ள பேட்டியில், இப்போது மலியாவுக்கு கைபேசி கொடுத்து விட்டோம். ஆனால் அவர்
யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் நீண்ட கயிறு கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம். அதேசமயம், ஜனாதிபதி மாளிகையில் வசிப்பதால் அழைப்புகள் நிச்சயம் கண்காணிக்கப்படும் என்றார் மிஷல். அப்போது குறுக்கிட்ட ஒபாமா, எனது மகள்கள் பெரிய பொய் சொல்லிகள் என்று கூற முடியாது. பெரும்பாலும் உண்மயைத்தான் பேசுவார்கள். எனது மகளுக்கு இப்போது அவரது ஆண் நண்பர்களிடமிருந்து நிறைய போன் அழைப்புகள் வருகின்றன என்றார். இந்த பேட்டியின் போது தங்களது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை குறித்தும் ஒபாமாவும், மிஷலும் பேசினர்[காணொளி ] |
பனிப்புயல். 200 விமானங்கள் ரத்து. 2 லட்சம் பேர் மின்சார இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர்.
கடும் பனிப்புயல்–மழை
அமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக பனி பொழிந்தது. பல இடங்களில் பனிப்புயல் வீசியதுடன் ஆலங்கட்டி மழையும் கொட்டியது. இதனால் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
2 லட்சம் பேர் தவிப்பு
இதன் காரணமாக வடக்கு டெக்சாஸ், அலபாமாவிலுள்ள அர்கான்சாஸ் ஆகிய இடங்களில் மின்சார தடை ஏற்பட்டு சுமார் 2 லட்சம் பேர் தவிக்கிறார்கள். பல அடி உயரத்துக்கு பனி உறைந்து கிடப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அங்கு மோசமான வானிலை காரணமாக விபத்துகளில் 5 பேர் இறந்தனர். நியூயார்க், நியூஜெர்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் இயங்கவில்லை. புதன்கிழமை இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்தது.
200 விமானங்கள் ரத்து
இந்த பனிப்புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கும் கடும் மழை, சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக நியூயார்க், வெர்மவுண்ட், நியூ ஹாம்ப்ஷிரே உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 2 அங்குலம் பனிப்பொழிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.இதனை அடுத்து நேற்று 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில கவர்னர்கள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்
இந்திய மாணவனின் நாக்கொடூரமாக தாக்குதல்கை அறுத்து
இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி இந்திய மாணவன் மீது ஜெர்மனியில் கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஜெர்மன் போலீஸôர் தெரிவித்துள்ள விவரம்:
ஜெர்மனியின் பான் பகுதியில் 24 வயது மிக்க இந்திய மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில் அவரை மறித்த சிலர் மாணவருடைய மதத்தைப் பற்றி கேட்டிருக்கிறார்கள். அவரும் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர்கள் அந்த மாணவனை உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். மாற மாட்டேன் என்று சொன்னால் மாணவனுடைய நாக்கை அறுத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
ஆனால் அதற்கு அந்த மாணவன் மறுக்கவே அவரைக் கொடூரமாகத் தாக்கி நாக்கையும் அறுத்துவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்தக் காயங்களால் துடித்துக்கொண்டிருந்த மாணவனை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் மாணவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரைத் தாக்கியவர்கள் தீவிர மதவாதிகளாக இருக்கலாம்; அவர்களைப் பற்றிய அடையாளமோ, சரியான விவரமோ மாணவனுக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவத்தின் அடிப்படையில் அவர்களைத் தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்
இது குறித்து ஜெர்மன் போலீஸôர் தெரிவித்துள்ள விவரம்:
ஜெர்மனியின் பான் பகுதியில் 24 வயது மிக்க இந்திய மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில் அவரை மறித்த சிலர் மாணவருடைய மதத்தைப் பற்றி கேட்டிருக்கிறார்கள். அவரும் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர்கள் அந்த மாணவனை உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். மாற மாட்டேன் என்று சொன்னால் மாணவனுடைய நாக்கை அறுத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
ஆனால் அதற்கு அந்த மாணவன் மறுக்கவே அவரைக் கொடூரமாகத் தாக்கி நாக்கையும் அறுத்துவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்தக் காயங்களால் துடித்துக்கொண்டிருந்த மாணவனை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் மாணவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரைத் தாக்கியவர்கள் தீவிர மதவாதிகளாக இருக்கலாம்; அவர்களைப் பற்றிய அடையாளமோ, சரியான விவரமோ மாணவனுக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவத்தின் அடிப்படையில் அவர்களைத் தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்














































