Pages

31 May 2015

வெயிலில் பலியானோர் எண்ணிக்கை 1826 ஆக அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 960 பேர் பலியாகி உள்ளனர். கோடை வெயில் இன்றோடு முடிவடையும் நிலையில் கடந்த ஒரு வாரமாக உச்சகட்ட வெயில் வாட்டி 
வதைத்து விட்டது.
 ஓடிசா மாநிலத்தில் 43 பேர், குஜராத்தில் 7 பேர், தலைநகர் டெல்லியில் 2 பேரும் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒருநாளில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பலி எண்ணிக்கை அதிகளவு காணப்படுவதால் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டாம் என தொழிலாளர்களை மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



85 ஆண்டுகளில் எவரெஸ்ட் பனிச்சிகரம் உருகி விடும்???

புவி வெப்பமடைதல் காரணமாக, வரும் 2100ம் ஆண்டுக்குள், எவரெஸ்ட் பனிச்சிகரம் முற்றிலும் உருவி விடும் என்று, ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புவி வெப்பமடைதல் என்பது, சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக தற்போது உருவெடுத்துள்ளது. காடுகள் 
அழிப்பு, தொழிற்சாலை பயன்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், புவி வெப்பமடைவதால், உலகின் உயர்ந்த பனிச்சிகரமான எவரெஸ்ட்டில் (8,848 மீட்டர் உயரம்) ஏற்படும் மாற்றங்கள் குறித்து, நேபாளம், பிரான்ஸ்,
 நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர்.
அதன் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: புவி வெப்பமடைதல் காரணமாக, எவரெஸ்ட் சிகரத்தின் வடிவில் மாற்றம் ஏற்படும் என்பது, தெளிவாக தெரிகிறது. இதனால், தனது பெரும்பகுதியை எவரெஸ்ட் இழக்க 
நேரிடும். இதன்படி, 2100ம் ஆண்டுக்குள் 70 சதவீதத்தில் இருந்து 99 சதவீதம் வரைக்கும் எவரெஸ்ட் சிகரம் உருகிவிடுவதற்கு
 வாய்ப்புள்ளது. புவி வெப்பமடைவது அதிகரித்து வருவதால், பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகும். மேலும், பனிப்பிரதேசங்களில், பனி மழை பெய்யாமல், சாதாரண மழை பெய்வதற்கு இது வழி வகுக்கும்.
அத்துடன், பனிச்சிகரங்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை உருகி ஓடும் பகுதிகள் அதிகமாகும். நேபாளம் - இமாலய பகுதியில் உள்ள துத் கோசி பிராந்தியமும், பாதிப்படையும் அபாயம்
 உள்ளது. அங்கு, பனிச்சிகரங்கள் உருகுவதால் ஏற்படும் நீர்ப்பெருக்கு, கோசி ஆற்றை சென்றடையும். இதனால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


28 May 2015

மீனவர் விவகாரம் - சிறிலங்கா அமைச்சருக்கு இந்தியா கண்டனம்

தமிழக மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்திருந்த கருத்துக்கு, இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 65 நாட்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு தமிழக மீனவர்களால் கோரப்பட்டிருந்தது.
எனினும் இதனை மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்ததுடன், 65 நிமிடங்களேனும் தமிழக மீனவர்களுக்கு அனுமதிவழங்க முடியாது என்று கூறி இருந்தார்.
 இது தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 சிறிலங்காவின் மீனவாகளும் இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர்.
அவர்களை இந்தியா மனிதாபிமான அடிப்படையிலேயே பார்ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27 May 2015

விமானநிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது|||

இந்தியாவின் ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுடன் பயணிக்க முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் சிவா என்பவரிடம் 50,000 ரூபாய் பணம் கொடுத்து போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுக்கும்படியும் தன்னை சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளதாக தெரிகிறது.
அவ்வாறே போலி கடவுச்சீட்டை தயாரித்த சிவாவும், அவரை ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அது போலி கடவுச்சீட்டு எனத் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22 May 2015

பொதுத்தேர்வு: பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காண முடிவுகளை 21.05.2015. காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவ-மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவ-மாணவிகளூம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%, அதில் மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள், தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்திருந்தது.
அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை:
அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழில் 586 பேர் சதம்
586 மாணவ-மாணவிகள் தமிழ் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேர் சதம்
ஆங்கிலம் பாடத்தில் 644 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 27,134 பேர் சதம்
கணிதப் பாடத்தில் 27 ஆயிரத்து 134 மாணவ- மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
அறிவியலில் 1,13,853 பேர் சதம்
அறிவியல் பாடத்தில் 1,13,853 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியலில் 51,629 பேர் சதம்
சமூக அறிவியல் பாடத்தில் 51,629 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்
பிறமொழிகளில் படித்த மாணவர்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21 May 2015

8 வயது சிறுமி மோடிக்கு எழுதிய கடிதம்???

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆக்ராவைச் சேர்ந்த தையபா (Taiyyaba) என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
பிறவியில் இருந்தே இதயக் கோளாறால் (congenital heart disease) பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் கூலி வேலை செய்யும் அவரது தந்தை மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படும் என்றும், சிறுமிக்கு டெல்லியில் தான் சிகிச்சை அளிக்க முடியும் ஆக்ராவில் வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு தனக்கு உதவி செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரது கடிதம் கிடைத்த உடன் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசு டெல்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
சிறுமிக்கு உடனே சிகிச்சையை துவங்குமாறு டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தையபா கூறுகையில், பிரதமர் மோடி அனைவருக்கும் உதவி செய்வதை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
நானும் ஒரு இந்திய குடிமகள் என்பதால், வாழ விரும்பும் எனக்கு உதவுமாறு மோடிக்கு கடிதம் எழுதலாம் என்று தோன்றியது.
மேலும், எனக்கு உதவி செய்துள்ள பிரதமருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19 May 2015

கழுத்தை அறுத்து பென் படு கொலை???

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைக் குழந்தையுடன் இருந்த பெண் பொறியாளர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மென்பொறியாளர் ராஜீவ் இவரது மனைவி ஆர்த்தியும் மென்பொறியாளர்.
இந்த தம்பதிகளுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. உறவினரான ஆர்த்தியும், ராஜீவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஆர்த்தி சில மாதங்களாக குழந்தையை கவனிப்பதற்காக வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்நிலையில், ஆர்த்தியும், குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
வேலை முடிந்து இரவு 11 மணி அளவில் ராஜீவ் வீடு திரும்பிய போது, ஆர்த்தி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அங்கு நடந்த சோதனையில், கொலையுண்ட ஆர்த்தி அணிந்திருந்த தாலி மாயமாகி இருந்ததை கண்டறிந்தனர்.
எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதியுள்ளனர்.
இது தொடர்பான தடயங்களை சேகரிக்க தொடங்கியதோடு, ஆர்த்தியின் உடலில் வேறு எங்காவது காயங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது, அவரது உள்ளாடைக்குள் ஒரு சிறிய கவர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதற்குள், தாலியும், 2 பக்கங்களில் எழுதப்பட்ட கடிதமும் இருந்தது. அதில், ‘‘ஓம் நமசிவாய....தாலி எனக்கு வேண்டும்.... அன்புக்காக ஏங்குகிறேன். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
திருமணமானதில் தொடங்கி கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பிரச்சினைகள் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்டதாக கருதப்பட்ட செயினில் மாட்டப்பட்டிருந்த தாலி டாலர் கிடைத்ததால் நகைக்காக ஆர்த்தி கொலை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும், தாலிச் செயின் வீட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதனை கொலையாளி திருடிச் சென்றிருக்கலாம் என்று பொலிசார் கருதினாலும், அவரது ஆடைக்குள் தாலியும் கடிதமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17 May 2015

ஃபேஸ்புக் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.

பேஸ்புக் பக்கம் வாயிலாக தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ஒரு சமுதாயத்தில் உள்ள சமூக கட்டமைப்பில் இணைய தளம் என்றுமில்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இனி மேல் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவோர் இணைய தளத்திற்கு முன்பிருந்த காலம், அதற்குப் பின்பு இருந்த காலம் என்று பிரித்துப் பேச வேண்டிய சூழல் மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆம், இது இணையதள காலம்! இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவொருக்கொருவர் வேகமாக தொடர்பு கொள்ளும் அளவிற்கு தகவல் தொடர்பில் சமூக
 வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. நேருக்கு நேர் பேசுவது போன்ற உணர்வை சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ளும் போது ஏற்படுவதில்லை என்று சிலர் சொன்னாலும், தகவல் தொடர்பில் சமூக வளைதளங்கள் அசாத்திய வேகத்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை
 விட மேலும் எளிதாக இப்போது உங்களுடன் நான் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு என் முகநூல் பக்கம் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் மிகவும் ஆர்வத்துடனும், அதிகமான அக்கறையுடனும் படித்துத் தெரிந்து கொள்கிறேன். அந்த வகையில் இன்று இந்த முகநூல் பக்கம் வாயிலாக என்னைத் தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை பத்து லட்சம் பேரை எட்டியுள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும் தான் இந்த இலக்கை எட்ட வைத்தது, அதற்காக முதலில் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் நாட்களில் மேலும் அதிகமான நண்பர்களுடன் தொடர்பு கொள்ள இந்த முகநூல் பக்கம் எனக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை . அப்படி வரும் கருத்துக்கள் இன்று நம் மாநிலம் சந்திக்கும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எனக்கு ஒரு பார்வையையும், மாற்று சிந்தனையையும் கொடுக்கிறது. தனியொருவனாக என்னால் சிறிதளவு செய்து முடிக்க முடியும், ஆனால் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
அந்த மாற்றத்தின் மூலம் நம் மாநிலத்தில்
 நல்லாட்சி மலரச் செய்து, நம் வருங்காலத் தலைமுறைக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தர முடியும். பல லட்சம் முகநூல் நண்பர்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னால் பதில் போட முடியாமல் போயிருக்கலாம்.ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் நான் படித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆகவே உங்கள் பதிவுகளும், கருத்துக்களும் எனக்கு மிகவும் முக்கியம், தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை
 முடிவு செய்வதில் அந்த அரிய கருத்துக்கள் எனக்கு கை கொடுக்கின்றன. வருங்காலத்திலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் திமுக தலைவர் கருணாநிதியை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை 3,50,044 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


14 May 2015

மடங்களில் சிஏஜி தணிக்கை: முறைகேடுகள் எதிரொலி

ஒடிஸாவில் செயல்படும் சுமார் 18,000 கோயில்கள், மடங்களின் வருவாயை முதல் முறையாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தணிக்கை செய்யவிருக்கிறார்.
 இதற்கான நடைமுறைகளை சிஏஜி அலுவலகம் தொடங்கிவிட்டதாகவும் இத்தணிக்கைப் பணிக்காக சுமார் 18,000 கோயில்கள், மடங்கள் அடங்கிய பட்டியலை ஒடிஸா அரசு தயாரித்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 கோயில்கள், மடங்களின் சொந்த வருமானத்துடன் அரசிடம் இருந்து பெறப்படும் நிதியுதவியும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
 இந்த கோயில்கள், மடங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதால் பெருமளவில் முறைகேடுகளும் நடந்து வருவதாக அரசுக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
 கோயில், மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு கிடைத்த விலைக்கு சில நபர்கள் விற்றுவிட்டதாகவும், இன்னும் பலர் நீண்ட காலமாக கோயில்கள், மடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

நான்கு வழிச்சாலையில் விபத்து: முதியவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
விராலிமலை அருகே உள்ள வளநாடு கும்பக்கோன்களத்தை சேர்ந்தவர் மாதக்கோனார் மகன் சின்னையா(65) விவசாய வேலை செய்து வரும் இவர் வியாழக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காளப்பனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது, இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி கார் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த க. ராஜ்குமாரை(58)  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி ஒருவர் படுகாயம்

தில்லியில் சொத்துத் தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கூட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தில்லி, ராஜேந்திர நகரில் சொத்துத் தகராறு தொடர்பாக இரு கோஷ்டியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13 May 2015

மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு கடிதம்???

மறுபடி தமிழக முதல்வராகும் செல்வி ஜெயலலிதாவிற்கு டக்ளஸ் தேவானந்தா எழுதிய கடிதம் 
மாண்புமிகு தலைவி
செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
அன்புடையீர்!
உங்கள் மீது சோடிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீங்கள் விடுதலையாகி வந்திருப்பது குறித்து தமிழகமெங்கும் பெரு மகிழ்ச்சி பொங்கி வழிகிறது.
இந்த மகிழ்ச்சி தனியே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. உங்களது விடுதலையால் தமிழக மக்களை போல் ஈழத்தமிழ் மக்களின் மனங்களும் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன.
உண்மைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. இந்த உயிருள்ள தத்துவத்தை உங்களது விடுதலை
உலகத்தின் செவிகளுக்கு மறுபடி ஒருமுறை உரக்க சொல்லியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் உங்களது நேரடி பிரசன்னம் சில காலங்கள் இல்லையென்றாலும்,..
தமிழக மக்களின் மனங்களை நீங்களே தொடர்ந்தும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறீர்கள்.
அது போல் ஈழத்தமிழ் மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கிறீர்கள். மீண்டும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் நீங்களே நேரில் உட்கார்ந்து, உங்களது நல்லாட்சியை தொடர மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
ஈழத்தமிழ் மக்களுக்காக நீங்கள் எழுப்பி வந்த உரிமைக்குரல் தொடர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

12 May 2015

நாளை 65 அகதிகள் நாடு திரும்புகின்றனர்!

இந்தியாவிற்கு யுத்தம் காராணமாக  அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த 65 இலங்கையர்களும் நாளை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வரவேற்கவுள்ளார்.
இது தொடர்பில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் அண்டைய உறவு நாடான இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வசித்துவருகின்றனர்.
தற்போது நாட்டில் அமைதியான சூழல் 
உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்தவர்களில் பலர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி குடியேறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். இருந்த போதிலும் முன்னைய ஆட்சிக்காலத்தில் அதற்கான சாதகமான நிலைமை காணப்படவில்லை. இந்நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் வந்த பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இந்தியாவில் அகதிகளாக வசித்துவந்த 65 இலங்கையர்கள் நாளை நாடுதிரும்பி தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறவுள்ளனர். மேற்படி நாடுதிரும்பவுள்ள 65 பேரும் நாளை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இவர்களை மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 
வரவேற்கவுள்ளார்.
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



11 May 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்துள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு புரட்டாதி 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

10 May 2015

தமிழக மீனவர்கள் கடற்பரப்பில் கைது

54 தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறையில் ஐந்து படகுகளுடன் 21 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் ஐந்து படகுகளில் எஞ்சிய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை சிறிலங்காவின் கடற்படையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

06 May 2015

நிலநடுக்க வாய்ப்பு தமிழகத்துக்கு குறைவுதான்!

 தமிழகத்துக்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் எனத் தெரிய வந்துள்ளது. நிலஅதிர்வு, பூகம்பம், நிலநடுக்கம் என இயற்கைப் பேரிடர்கள் பல பெயர்களில் இருந்தாலும் "பூகம்பம்' என்று சொல்லும் போதே மக்கள் அதிர்ச்சியடைவது வாடிக்கையாகி விட்டது. 
 அண்டை நாடுகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் நிலநடுக்க பாதிப்புகள் நேரலாம் என்ற பீதி அண்மைக்கால சம்பவங்கள் மூலம் பரவி வருகிறது. 
 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன்கொட்டாய், குப்பூர், ஜமுனாபட்டி, சிந்தல்பாடி, மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலநடுக்க பீதி ஏற்பட்டது. இதனால், அக்கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இரவு முழுவதும் வீதியில் தங்கிய நிகழ்வு "வேதனை அளிக்கும் வினோதம்' என்று புவியலாளர்கள் கருதுகின்றனர். மேலும், பேரிடர் பாதிப்புகளைப் பயன்படுத்தி சில விஷமிகள் தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், நிலநடுக்கம் பற்றியும், அதன் தன்மை, விளைவுகள் பற்றியும் பொதுமக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. 
 நிலநடுக்கம் என்றால் என்ன? பூமியின் மேல் பரப்பு நகரும் பிளேட்டுகளாக உள்ளன. நிலம், நீர் பரப்புகளில் அமைந்துள்ள இந்த பிளேட்டுகளில் ஏழில் ஐந்து பிளேட்டுகளில்தான் ஐந்து கண்டங்களும், பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளும் உள்ளன. இந்த பிளேட்டுகளுக்கு அடியில் உள்ள பாறைகள், கொதிக்கும் குழம்பு
 கள் உள்ளன. பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக்குழம்பு நகருகின்றன. இதனால்தான் மேல் பரப்பில் உள்ள பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து நகருகின்றன. இந்த நகர்வின் வேகம், வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் 13 செ.மீ. வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. பூமியின் சுழற்சியுடன் ஒப்பிடுகையில், இந்த அளவு மிகச் சிறியது என்ற போதிலும், இந்த பிளேட்டுகளின் லேசான உராய்வுகூட சில வேளைகளில் பெரும் நிலநடுக்கத்தை உருவாக்கும். ஒரு நிலநடுக்கம், நிலச்சரிவையும் சில நேரத்தில் எரிமலையின் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும். 
 நேபாள நிலநடுக்கம் ஏன்?: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட, வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நேபாளத்தின் பூமிப் பகுதிக்கு அடியில் உள்ள பாறைகளே காரணம். இதன் விளைவாக இமயமலையைச் சார்ந்துள்ள பகுதிகளான அஸ்ஸாம், காத்மாண்டு தொடங்கி பாகிஸ்தானின் வட பகுதி வரை நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதன் பாதிப்புதான் அவ்வப்போது தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உணரப்படுகிறது. நிலநடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க இன்னும் விஞ்ஞானிகளால் முடியவில்லை. ஆனால், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை ஐந்தறிவுள்ள விலங்குகள், பறவைகள் முன்கூட்டியே அறியும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளன. பல மணி நேரத்துக்கு முன்பே பறவைகளின் சப்தம், சிறு சிறு விலங்குகள் ஓலமிடும் குரல்கள் மூலம் இதை உணர முடியும். 
 இந்தியாவின் மண்டலங்கள்: இந்தியாவின் மாநிலங்களை பல மண்டலங்களாகப் புவியிலாளர்கள் பிரித்துள்ளனர். இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்களான இமாசல பிரதேசம், அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஐந்தாவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. அதாவது நிலநடுக்கத்தின் அளவுகோல் தலைகீழாக அளவிடப்படுகிறது. முதல் மண்டலம் என்பது நிலநடுக்க வாய்ப்பு குறைவானது. ஐந்தாவது மண்டலம் என்பது ஆபத்து அதிகமானது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர், பாரமுல்லா உள்ளிட்ட பல பகுதிகள் ஐந்தாவது மண்டலத்திலும், லடாக் சார்ந்த பகுதிகள் நான்காவது மண்டலத்திலும் உள்ளன. தில்லி, மும்பை நான்காவது மண்டலத்தில் உள்ளது. இதில் இரண்டாவது மண்டலத்திலிருந்த தமிழகமோ 2004-இல் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு மூன்றாவது மண்டலத்துக்கு மாறியுள்ளதாகத் தெரிய வருகிறது. 
தமிழகத்துக்கு பாதிப்பு வராது ஏன்?
 நிலநடுக்க வாய்ப்பு தமிழகத்தில் குறைவு என்கிறார் மூத்த புவியியல் வல்லுநரும், தில்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் கே.எஸ்.ஆர். சாய்பாபா. இதுகுறித்து அவர் கூறியது:
 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பூகோள அறிவியலின்படி, நிலப் பகுதியைச் சூழ்ந்து நீரோட்டம் அதிகமாக உள்ளது. இதனால், நிலப் பகுதிக்கு ஆபத்து ஏற்படாது.
 2004, டிசம்பர் 24-ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அலைகளைத் தோற்றுவித்தது. 
 இதன் எதிரொலியாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி ஆழிப்பேரலையின் தாக்கம் அதிகரித்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர், சென்னை ஆகியவற்றில் ஏற்படுத்திய சேதத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளையும் இன்னும் நாம் மறந்து விட முடியாது. ஆனால், நேபாளத்தில் நிலைமை வேறு. 
சென்னை, ராமேசுவரத்தில்: நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைக் குழம்பால் நிலத்தடி நீர் ஆவியாகிறது. இதனால், அதிவேகமாக அங்குள்ள பூமிப் பகுதி வறண்டு அதன் அடியில் உள்ள பாறைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாதிப்புகள் சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை ஆகிய நகரங்களில் கண்டிப்பாக இல்லை. எனவே, இந்த நகரங்களில் நிலநடுக்க வாய்ப்புகள் குறைவு. 
 சுனாமியின் தாக்கம் இருந்தாலும் கூட, கடலோர நகரங்களான ராமேசுவரம், விசாகப்பட்டினம், இலங்கையின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்க வாய்ப்பு கிடையாது. இங்கு 2 முதல் 7 சதவீதம் வரைதான் நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் உள்ளன' என்றார் அவர். 
சேதம் விளைவித்த பெரிய நிலநடுக்கம்
 (ரிக்டர் அளவில்)
 குஜராத், கட்ச் (2001, ஜனவரி 26) 7.1 
 இந்தோனேசியா, சுமத்ரா தீவு 
 (2004, டிசம்பர் 24) 9.2 
 பாகிஸ்தானின்
 மேற்கு மாகாணம் (2005) 7.6 
 இந்தோனேசியாவின்
 யோக்யகர்த்தா (2006) 6.3 
 சீனாவின் சிச்சுவான் (2008) 8 
 ஹைதி (2010) 7 
 ஜப்பானின் வடகிழக்குப் பகுதி (2011) 9 
 இரானின் தப்ரீஸ் (2012) 6.4 
 நேபாளம்: (2015, ஏப்ரல் 25) 7.9 
 பப்புவா நியூ கினியா தீவு 
 (ஏப்ரல் 30, மே 1) 7.4 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

04 May 2015

நிலநடுக்கத்தால் பலியானோர் 7,040 ஆக உயர்வு..

நேபாள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியமான ரூ. 1 லட்சத்தை, நிதீஷ் குமார் வியாழக்கிழமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.???
 நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7,040-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தேசியப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அலுவலக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 
(மே 2) நிலவரப்படி 7,040-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 14,100-ஆக உள்ளது.
நில அதிர்வு: கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு பின் அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோர்க்கா மாவட்டத்தின் பார்பக் கிராமத்தில் 5.1 ரிக்டர் அளவில் சனிக்கிழமை காலை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வால், அப்பகுதியில் நிலச்சரிவு
 ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
வீடுகள் தரைமட்டம்: இதனிடையே, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நிலநடுக்கத்தால் 90 சதவீத வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக நேபாளத்தின் சிந்துபால்செளக் மாவட்டத்தில் உள்ள செளதாரா மாநகராட்சியில் இருந்து திரும்பிய எங்கள் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அங்கு மருத்துவமனை சேதமடைந்துள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்கள் இடிபாடுகளில் தேடி வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
19 இந்தியர்கள் பலி: நேபாள நிலநடுக்கத்தில், 19 இந்தியர்கள் பலியாகி உள்ளதாக, காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் அபய் குமார் தெரிவித்தார். ஆனால், நிலநடுக்கத்தில் 38 இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டவர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு போலீஸார் கூறினர்.
வெளிநாட்டவரின் கதி என்ன? இந்நிலையில், மலையேற்றத்துக்காக நேபாளம் சென்றிருந்த 1,000-த்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
"மலையேற்றத்துக்காக சென்ற டச்சு, இஸ்ரேல், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்
 இமயமலைப் பகுதிகளில் சிக்கி உள்ளனர். அவர்களை விமானங்கள் மூலம் மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
விமானம் செல்லாத பகுதிகளுக்கு ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளோம்' என்று தனியார் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உதவி: நேபாளத்துக்கு கூடாரங்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை 2 ராணுவ விமானங்களில் பாகிஸ்தான் சனிக்கிழமை அனுப்பியது.
பிகார் அமைச்சர்கள் நிவாரணம்: நிலநடுக்க நிவாரண நிதி வழங்குமாறு பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தனிநபர்கள் ஆகியோர் "முதல்வர் நிவாரண நிதி'க்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
மாநில சாலைகள் கட்டுமானத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், சுங்கம், கனிம வளத் துறை அமைச்சர் ராம் லக்கன் ராம் ரமண் ஆகியோர் தலா ரூ.1.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம்
 சனிக்கிழமை வழங்கினர்.
பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளதரி, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சதானந்த சிங்,
 காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் நிவாரண நிதி வழங்கினர்.
கடந்த 2 நாள்களில் நிவாரண நிதி ரூ. 2 கோடியைத் தாண்டியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

படைவீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் 8 பேரை ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: மோன் மாவட்டம், சாங்லான்சுவில் பாதுகாப்புப் படையினர், நீர் எடுப்பதற்காக தண்ணீர்
 டாங்கர்களுடன் சென்றிருந்தபோது, பதுங்கிடம் ஒன்றிலிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 7 பேர், அஸ்ஸாம் 
துப்பாக்கிப் படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ராணுவ வீரர். பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



02 May 2015

12 வயது சிறுமி குடும்ப தலைவியானர் ---

 
சிறுமி விளையாடும் வயதில் குடும்ப தலைவி: வறுமையின் கொடுமையில் 
 உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகேயுள்ள கிராமத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 4 பேர் குடிசை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகளில் மூத்த சகோதரி குடும்ப தலைவியாகியுள்ளார்.
இந்த குடிசை வீட்டில் தங்குவதற்காக இவர்கள் மாதம் தோறும் ரூ. ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு கொள்கின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்பு வறுமை காரணமாகவும், பயிர்கள் சேதமடைந்ததாலும், இவர்களது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து இந்த 4 குழந்தைகளும் உறவினர் வீட்டில் தஞ்சம் பகுந்தனர். ஆனாலும், உறவினர் வீட்டிலும் வறுமை தாண்டவமாடியதால், அவர்களாலும் இவர்களை பராமரிக்க முடியவில்லை. இதனையடுத்து அவரும் குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டார்.
வீடில்லாமலும், வறுமை மற்றும் பசியினால் குழந்தைகள் தவித்தனர். இந்நிலையில், இந்த குழந்தைகளில் 6 வயதான ரோகித் என்ற சிறுவன், உதவி கேட்டு போலீஸ் நிலையத்தை நாடினான். போலீசார் அந்த குழந்தைகளை அழைத்து கொண்டு கிராம பஞ்சாயத்தை அணுகி, இவர்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தினர்.
இது தொடர்பாக கிராம தலைவர் கூறுகையில், இந்த குழந்தைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம்ரூபாய் வாடகையில் அறை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறினார். உணவுக்கும், வாடகை மற்றும் மற்ற செலவுகளுக்கு இந்த குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க திணறிய அவர், இந்த குழந்தைகளில் மூத்த பெண் வயல்களில் வேலை செய்து சம்பாதித்து கொள்வாள் என கூறி மழுப்பினார்.
அந்த கிராமத்தில் பெற்றோரின் வயலுக்கு அருகே ஒரு அறை 4 குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாக இவர்கள் வசிக்க வேண்டிய போதிலும், தங்க அறை கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாக, குடும்ப தலைவர் பொறுப்பை ஏற்ற சோனியா கூறினார்.
மேலும் அவர், படிக்க விரும்புவதாகவும், தனது சகோதரர் மற்றும் சகோதரிகள் படிப்பதை பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, சிறுமிகள் பற்றிய நிலை தங்களுக்கு தெரியவந்துள்ளதாகவும், எங்களால் ஆன உதவியை அவர்களுக்கு செய்ய உள்ளதாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறினார். மாவட்ட அதிகாரி ஒருவர் விரைவில் சென்று அச்சிறுமிகளை பார்ப்பார் 
எனவும் கூறினார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவமானம்

 நிலநடுக்கத்தால் காயமடைந்து தர்பங்கா மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (டிஎம்சிஎச்) சிகிச்சை பெற்று வருபவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக் கிழமை சக்தி
 வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிஹார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் காயமடைந்து, டிஎம்சிஎச் மருத்துவ மனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் நெற்றியில், அடையாளம் காண்பதற்காக ‘நிலநடுக்கம்
 என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அந்த ஸ்டிக்கர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுசில் குமார் மோடி கூறும்போது,
“நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் நெற்றியில் சிறைக்கைதிகள் போல ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அவர்களை அவமதிக்கும் செயல் என்றார்.
இதையடுத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தர்பங்கா மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் வைத்யநாத் சஹானி, டிஎம்சிஎச் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
இதன்போது இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

01 May 2015

இழப்பை சந்திக்கும் சென்னை ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 80 சதவீத கட்டிடங்கள் பலத்த சேதம் அடையும் என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரழிவு நிர்வாக மையம் சார்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆள் இல்லா குட்டி விமானங்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு சென்னையில் உள்ள கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3 மாடிக்கு மேல் கொண்ட 22,758 கட்டிடங்களின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது.
அப்போது அந்த கட்டிடங்களில் சுமார் 30 சதவீத கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் அமைப்புடன் கட்டப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் சென்னையில் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் பூகம்பம் ஏற்படும் பட்சத்தில் 80 சதவீத கட்டிடங்கள் சேதம் அடையும் என்ற அதிர்ச்சி தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேரழிவு நிர்வாக மையத்தினர் தங்களது ஆய்வு தகவல்களை தொகுத்து ஒரு அறிக்கையாக தயாரித்து கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
அதில் சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை 5 மண்டலங்களாக பிரித்துள்ள நிபுணர்கள், தமிழ் நாட்டில் 80 சதவீத பகுதிகள் நிலநடுக்க அச்சுறுத்தல் இல்லாத முதல் மண்டலத்துக்குட்பட்டதால் பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகள் அதிக பாதிப்பு ஏற்படும் நிலநடுக்க மூன்றாவது மண்டலத்தில் உள்ளன.
எனவே நிலநடுக்கம் வந்தால் இந்த நகரங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பஸ்சில் பாலியல் தொல்லை கீழே குதித்த தாய் காயம், மகள் பலி

பஞ்சாப் மாநிலத்தில் பேருந்தில் நடத்துனரின் உதவியாளர் அளித்த பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க தாயும், மகளும் கீழே குதித்துள்ளனர்.
இதில் 13 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 35 வயது மனைவி தனது 13 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் உறவினரை சந்திக்க பேருந்தில் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று மாலை சென்றார்.
பேருந்தில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர். பேருந்து மோகா நகரில் இருந்து 10 கிமீ சென்ற பிறகு நடத்துனரின் உதவியாளர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார்.
இது குறித்து அந்த பெண் நடத்துனரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண் ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூற அவரும் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் தனது மகளுடன் ஓடும் பேருந்தில்
 இருந்து கீழே குதித்தார்.
இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். நடத்துனரும், அவரது உதவியாளரும் தப்பியோடி 
விட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மகள் இறந்துவிட்டார். தாய் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்-----
பஸ்சில் பாலியல் தொல்லை கீழே குதித்த தாய் காயம், மகள் பலி
.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ரூ.2 லட்சம் கோடி: அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும். இவற்றில் பாதி முதலீடு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்கும்,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்கவும், புதிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் இந்த திட்டங்களுக்கு, ஒரு லட்சம் கோடி
 ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள நகரங்களை மேம்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படலாம்.
 இவற்றில், 50 முதல், 56 சதவீத முதலீடு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும். இந்த முதலீடுகள் மூலம் நகர்ப்புற வாழ்க்கை வசதியானதாக மாறும். கல்வி, 
பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் தரமான சுகாதார சேவைகள் போன்றவை நகரங்களில் கிடைப்பதால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்
 பெயர்வது அதிகரித்து வருகிறது. அதனால், நகர வாழ்க்கையை வசதியானதாகவும், வாழ்வதற்கு ஏற்றதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>