This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

22 May 2018

பொதுமக்கள் மீது பொலிஸ் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு பத்துப் பேர் பலி! பலர் படுகாயம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில் 10பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய 2 துப்பாக்கிச் சூடுகளில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், “எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு” என்பதுதான்.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.

ஆனால், இதுகுறித்து தமிழக அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், போராட்டத்தை வீரியமடையச் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக காவலர்கள் தடியடி நடத்தி போராட்டத்தினைக் கலைக்க முயற்சி செய்தனர். இதில் பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்ததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவலர்களை கற்களை கொண்டு திருப்பி தாக்க ஆரம்பித்தனர்.

இதனால் பயந்துபோன காவல்துறை செய்வதறியாது திகைத்து போராட்டத்தினை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தியது. தமிழக காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூட்டினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொந்த மண்ணிலே உரிமைக்காக போராடிய தமிழக மக்களை கொன்றொழிப்பதா என தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை. இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல்என்கிறார்கள் 
நெட்டிசன்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




16 May 2018

நிகழ்ச்சியுடன் பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்குத் தந்தை விருந்து

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு விருந்து வைத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் சாகம் மாவட்டம் டிலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ், கட்டிட ஒப்பந்ததாரரான இவரது மகன் அன்சு 10ஆம் வகுப்பு 
தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஆனால், அன்சு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மனவேதனையடைந்த அவர், தந்தையை சந்திக்க கலக்கத்துடன் சென்றுள்ளார்.ஆனால், அன்சுவின் தந்தையின் மகன் மீது எந்தவித வெறுப்பையும் காட்டாமல், அவரைக் கட்டித்தழுவி இனிப்பு ஊட்டினார்.
அத்துடன், தனது மகனின் தோல்வியை கொண்டாட முடிவு செய்த அவர், அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார்.பின்னர், அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விருந்து வைத்தார் சுரேந்திரகுமார். அவரின் இந்த செயலைக் கண்ட அன்சு உட்பட அனைவரும்
 வியந்தனர்.
இதுதொடர்பாக சுரேந்திரகுமார் கூறும் போது ‘தேர்வுக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வியடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். தேர்வில் தோல்வியடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பள்ளியில் நடைபெறும் அரசு தேர்வு என்பது மாணவரின் கடைசி தேர்வு அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.மாணவர் அன்சு கூறும் போது;  எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



12 May 2018

சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்!!

இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
சிறுவனும் குறித்த பென்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில்
 வைரலாக பரவி வருகிறது.
இப்படி ஒரு திருமணம் நடைபெற்றிருந்தாலும், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்பது சர்ச்சையை 
ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும், இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சமூக 
ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இதே ஆந்திராவில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண் 17 வயது சிறுவன் தன்னை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



02 May 2018

கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகள் வீதியில் வசிக்கும் பரிதாபம்

         பிரபல நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது 
குறிப்பிடத்தக்கது.
, இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் எனது தோழி ஆண்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இன்றி பாலத்தில் வசித்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது
 புனிதமான அன்பு.
எங்களுக்கு உதவி செய்யுமாறு எனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனது தந்தை 395 மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரர். அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், எங்களை பிரித்துவிடுவார்களே என பயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை புரிந்துகொண்டு உதவி செய்ய முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.
ஹாங்காங்கின் முன்னாள் அழகி எலா நங்க்கும்- ஜாக்கி சானுக்கும் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் தான் எட்டா நங். ஜாக்கி சானுக்கு 1982 ஆம் ஆண்டு ஜோன் லிம் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
தனது மகளின் நிலை குறித்து ஜாக்கிசான் பெரிதாக கருத்து கூற முன்வரவில்லை. ஒரு தந்தையாக எனது மகள் விடயத்தில் நான் தோல்வியடைந்துவிட்டேன், இதனை எப்படி அணுகுவது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>