This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 May 2020

மனித பிழைகளுக்கான மறக்க முடியாத தண்டணை வயிரசும் வெட்டுக்கிளியும்

இன்றைய தேதியில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. 
ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மற்றொருபுறம் கையில் அகப்படாத பூச்சிக்கூட்டம். இந்த இரண்டு சின்ன விஷயங்களையும் கண்டு இன்று இந்தியத் தேசமே உறைந்துபோயுள்ளது 
எனலாம். ஏழாம் அறிவு, 
காப்பான் என சூர்யாவை வைத்து மீம்கள் சிரிக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இவை இரண்டாலும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற, சந்திக்கப்போகிற விளைவுகள் மீம்கள் அளவுக்கு லேசானதாக இருக்காது என்பதே நிதர்சனம். இவை இரண்டும் இயற்கையான அழிவு சார்ந்த நிகழ்வுகளாகப் பார்க்கப்பட்டாலும், இது மனித இனம் மனசாட்சியைத் துறந்து நீண்ட காலமாகச் செய்துவந்த பிழைகளுக்குக் கிடைத்த தண்டனை எனவே கூறுகின்றனர் துறைசார் வல்லுநர்கள்.
எதிர்காலத்திலும் உலக நாடுகள் ஏதும் பாதுகாப்பாக இருக்காது, கரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு பனிப்பாறையின் நுனி மட்டுமே, இதேபோல பல வைரஸ்கள் எதிர்காலத்தில் வரும்“ என்கிறார் ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி. சார்ஸ், கரோனா எனப் பல வைரஸ்களை 
ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் இவர், கடந்த ஆண்டு கரோனா குறித்த தகவலை
 வெளியிட்டதற்காகச் சீன அரசால் மிரட்டப்பட்டவர் ஆவார். தற்போதுவரை இயற்கையாக உருவானதாகக் கூறப்பட்டு வரும் இந்த வைரஸும், இயற்கை படைப்பான வெட்டுக்கிளிகளின் உணவு 
தேடும் பயணமும் எவ்வாறு மனித பிழைகளுக்கான தண்டனையாகும் என நமக்குள் கேள்வி எழலாம். ஆனால் அதற்கான பதிலை நாம் புரிந்துகொள்ளும்போது ஷி ஜெங்லியின் எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் தொலைநோக்கு பார்வையை நம்மால்
 உணர முடியும். 
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் இந்த இருபெரும் பாதிப்புகளுக்கான முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது இயற்கை அழிப்பு. அதாவது வனப்பகுதிகளை அதிகளவில் அழித்தல். வன அழிப்புக்கு வைரஸ் பரவலுக்கு என்ன சம்பந்தம் என நாம் சந்தேகிக்கலாம். ஆனால் வன அழிப்பு என்பது வெறும் மரங்களை அழித்தல் என்பதனை கடந்து பல ஆயிரக்கணக்கான உயிரினங்களின் இருப்பிடத்தை
 அழிப்பதாகும். இப்படி வன அழிப்பின் காரணமாக ஏற்படுத்தப்படும் உயிரின இடப்பெயர்வுகள், ஆபத்தை விளைவிக்கும் வைரஸ் தாங்கிகளான சில விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான எதிர்ப்படுதலை 
அதிகரிக்கிறது.
எலி, முயல், வௌவால், பன்றிகள் உள்ளிட்டவை வன அழிப்பின் காரணமாக மனித வசிப்பிட பகுதிகளை நெருங்கும் போது நோய்த்தொற்றுக்கான எளிய பாதையாக மாறிவிடுகிறது இது. தினமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி உலகம் முழுவதும் மனிதர்களால் அழிக்கப்படுகிறது. இந்த அழிப்பு விலங்குகளை மாற்று இருப்பிடம் தேட வைப்பதோடு,
 மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும் கிருமிகளையும் பரப்புவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், வருங்காலத்தில் வன அழிப்பு தொடரும்பட்சத்தில், மனித மற்றும் விலங்குகளின் எதிர்ப்படுதல் எண்ணிக்கை அதிகரித்து, பல புதிய நோய்களும் உருவாகும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றனர் ஷி ஜெங்லி போன்றோர். 
வைரஸ் மட்டுமல்ல வெட்டுக்கிளிகள் படையெடுப்பும் கூட இப்படிப்பட்ட மனித தவறுகளாலேயே தற்போது நடக்கத் தொடங்கியுள்ளது. ஆம், வன அழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்பட்ட ஒரு எதிர்பாரா மழையே, இந்தியாவில் 27 ஆண்டுக்காலத்தில் இல்லாத 
அளவு வெட்டுக்கிளி படையெடுப்பை அதிகரித்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பாலைவன வெட்டுக்கிளிகளான
 இவை ஆப்பிரிக்கத் தேசங்களில் பயணத்தைத் தொடங்கி தற்போது இந்தியா வரை வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டின் 
பிற்பகுதியில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நீர் வெப்பம் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பலத்த மழையைத் தூண்டியதாகக் கூறும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல், அதுவே இந்த வெட்டுக்கிளி படையெடுப்பிற்கான 
காரணமும் என்கிறார். .
ராக்ஸி மேத்யூவின் கருத்துப்படி, இந்த வெப்ப நீர் என்பது இந்தியப் பெருங்கடலின் இருமுனை நிகழ்வால் ஏற்படும் விளைவு ஆகும். அதாவது, பெருங்கடலின் மேற்கில் வழக்கத்தை 
விட நீரின் வெப்பநிலை அதிகமாகவும் கிழக்கில் வெப்பநிலை குறைவாகவும் மாற்றம் அடைகின்றது. புவி வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் இந்த இருமுனை நிகழ்வு மேற்கு இந்தியப் பெருங்கடலை அதிகமாக 
வெப்பமாக்கியது. இந்த வெப்பமாற்றம் கிழக்கு
 ஆப்பிரிக்கா மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் வழக்கத்தைவிடப் பலத்த மழையை
 ஏற்படுத்தியது. இந்தத் திடீர் மழையால் தூண்டப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு நல்ல உணவையும், இனப்பெருக்க களத்தையும் அமைத்துக்கொடுத்தது. இதனால் திடீர் பெருக்கமடைந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து இந்தியா வரை படையெடுத்து விவசாயத்தையும், உணவுப் பொருள் உற்பத்தியையும் பாதிப்படையச் செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. 
இவற்றின் மூலம், இந்தியாவின் தற்போதைய மிகமுக்கியமான இரு பிரச்சனைகளுக்கும் ஆதி ஒன்றே எனக் கணிக்கமுடிகிறது. அவை, வனஅழிப்பு மற்றும் இயற்கை மாசுபாடு. தொழிற்புரட்சிக்குப் பின்னரான தசாப்தங்களில் இயந்திரங்கள் மீதான அக்கறையும் பராமரிப்பும் இயற்கை மீது இல்லாமல் போனதே இவ்வாறான அழிவுகளின் ஆரம்பப் புள்ளியாக வரையறுக்கப்படுகிறது. இரு சிறிய உயிரினங்கள் இன்று இவ்வுலகிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எதிர்காலத்தில் தொடராமல் இருக்க வேண்டுமானால் இயற்கையைக் காப்பதே அதற்கான ஒரே வழி என்பது நிதர்சனம். 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


27 May 2020

கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியத் தம்பதி

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்து வருகிறது.ஏறத்தாழ 56 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் தாக்கி இருக்கின்றது. இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை எடுத்தும் பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 3½ லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குகிறபோது நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
 நுரையீரல் பாதிக்கப்படுகிறபோது, சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறபோது மரணம் நேருவதற்கான ஆபத்து கண் எதிரே இருக்கிறது.இப்படிப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசக்கருவி முக்கிய பங்கு வகிக்கிறது.
 இந்த கருவியானது நுரையீரலுக்கு சுவாச காற்றை செலுத்துகிறது, வெளியேற்றுகிறது. எனவே உடல்ரீதியாக
 இயற்கையாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு செயற்கையாக சுவாச காற்றோட்டத்தை வழங்க இந்த வெண்டிலேட்டர் உதவுகிறது. இந்த வெண்டிலேட்டரின் விலை அதிகம். அமெரிக்காவில் 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7½ லட்சம்) என்கிறார்கள். தவிரவும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் தேவையை சமாளிக்கக்கூடிய அளவுக்கு 
நினைத்த உடனேயே தேவையான எண்ணிக்கையில் எளிதாக தயாரித்து விடவும் இயலாது. இதற்கு உலகமெங்கும் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது.இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாங்கள் வெண்டிலேட்டர்களை நன்கொடையாக தருவோம் என்று சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.இந்த நிலையில், அதே அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதியர் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி அசாத்திய சாதனையை ஓசைப்படாமல் நிகழ்த்தி 
இருக்கிறார்கள்.இந்த தம்பதியர் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், குமுதா ரஞ்சன் தம்பதியர் ஆவர்.தேவேஷ் ரஞ்சன், ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜார்ஜ் உட்ரப் மெகானிக்கல் என்ஜினீரியங் கல்லூரியின் பேராசிரியர். அவரது மனைவியான குமுதா ரஞ்சன், அட்லாண்டா நகரில் டாக்டராக இருக்கிறார்.இவர்கள் இருவரும் இணைந்துதான் 3 வார காலத்தில் மலிவுவிலை வெண்டிலேட்டரை உருவாக்கி 
இருக்கிறார்கள். 100 டாலருக்கும் குறைவான (சுமார் ரூ.75 ஆயிரம்) விலையில் இந்த வெண்டிலேட்டரை உருவாக்கி விட முடியும் என்கிறார்கள். 500 டாலர் விலைக்கு விற்றால்கூட (சுமார் ரூ.37,500) தயாரிப்பு நிறுவனம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலுமாம்.தங்கள் சாதனை பற்றி பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன் இப்படி சொல்கிறார்…
“நுரையீரல் செயல் இழக்கிறபோது வெண்டிலேட்டர் உடலின் சுவாச செயல்முறையை எடுத்துக்கொள்கிறது. இது நோயாளிகள் தொற்றுநோயை எதிர்த்து போராடி மீட்க அவகாசம் தருகிறது. நாங்கள் தயாரித்து இருப்பது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வெண்டிலேட்டர் அல்ல. இது மிகவும் சிக்கலானது. அதிக செலவு ஆகும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குரிய பொதுவான சிக்கலான கடுமையான 
சுவாசக்குழாய் நோய்க்குறியை நிவர்த்தி செய்வதற்கு இந்த திறந்த காற்றோட்ட வெண்டிலேட்டர் உதவியாக இருக்கும். கொரோனா நோயாளிகளின் விறைத்துப்போன நுரையீரல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் காண்பதற்கு இந்த வெண்டிலேட்டர் உதவும்” என்கிறார் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன்.அவரது மனைவி டாக்டர் குமுதா ரஞ்சன் இதுபற்றி கூறும்போது, “இந்த மலிவு விலை 
வெண்டிலேட்டரை ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கி உள்ளோம். இதில் சுவாச வீதம், அலை அளவு (ஒவ்வொரு சுழற்சியிலும் காற்று நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வது) உத்வேகம், நுரையீரல் அழுத்தம் ஆகியவற்றை மின்னணு 
சென்சார்கள் மற்றும் கணினி கட்டுப்பாடும் கவனித்துக்கொள்ளும். இந்த திட்டத்தின் முழு குறிக்கோளும், மலிவு விலை தற்காலிக வெண்டிலேட்டரை உருவாக்குவதுதான்” என்று சொல்கிறார்.
பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. என்னும் பிராந்திய பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதன்பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார். ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்து 
வருகிறார்.டாக்டர் குமுதா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். 6 வயதாக இருந்தபோதே தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர். மருத்துவ படிப்பை நியுஜெர்சியில் முடித்தார்.தங்களது கண்டுபிடிப்பு பற்றி பேராசிரியர் தேவேஷ் ரஞ்சனும், டாக்டர் குமுதாவும் சேர்ந்து சொல்லும்போது, “இந்தியா, உலகளவிலான மலிவு விலை வெண்டிலேட்டர்களை உருவாக்கி, 
உலகமெங்கும் ஏற்றுமதி செய்வதற்கான வளத்தை கொண்டுள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டுதான் இந்த வெண்டிலேட்டரை மலிவு விலை வெண்டிலேட்டராக உருவாக்கி உள்ளோம். இந்தியாவில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை 
பயன்படுத்தியே இந்த வெண்டிலேட்டரை எளிதாக தயாரிக்க முடியும்” என்கிறார்கள்.ஆப்பிரிக்க நாடான கானா 
மற்றும் இந்தியாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் உற்பத்தி பிரிவுகளை தொடங்குவதற்காக எங்களை நாடி உள்ளனர் என்றும் சொல்கிறார் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன்.இந்த வெண்டிலேட்டரை பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்கி
 விட்டால், உலகளவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் 
சந்தேகம் இல்லை.





26 May 2020

பெண் குழந்தைக்கு .கொரோனா என்ற பெயர்.ஆண் குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர்

உத்திரப்பிரதேசத்தில் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா என்று பெயரிடப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் தற்போது புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ், தேசிய ஊரடங்கு உத்தரவு இரண்டும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். மறக்க முடியாத இந்த
 நிகழ்வையே பிறந்த குழந்தைகளுக்கு பெயராக வைக்கும் சுவாரஸ்யமும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசத்தில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று அவர்களது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.என்னுடைய குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்தான். கொரோனா தொற்று
 மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான சமயத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால், எங்களின் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ பெயர் வைக்க முடிவு செய்தோம்’ என்று குழந்தையின் தந்தை பவன் கூறினார்.இதே
 போன்று கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை குழந்தையின் மாமா நித்திஷ் திருப்பதி வைத்துள்ளார்.இது குறித்து திருப்பதி
 கூறுகையில் ‘இந்த வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. உலகில் பலரை கொன்று குவித்துள்ளது. அதே சமயத்தில் நம்மில் பலருக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளது.
 நம்மில் பலரை ஒன்றிணைத்துள்ளது. தீமையை எதிர்த்து போராடுவதற்கு மக்களுக்கான ஒற்றுமைக்கான அடையாளமாக இருக்க இந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் 
வைத்தேன்’ என்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




22 May 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,088 பேர் பாதிப்பு

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வரும் கொரோனா, நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியாவில் கடந்த 58 நாட்களாக ஊரடங்கு அமுலில் உள்ளது.
 எனினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.கடந்த இரு தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், இந்தியாவில்
 இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே 
நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 48534-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 
உயிரிழப்பு 
எண்ணிக்கை 3583- ஆக அதிகரித்துள்ளது.மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 41642- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு 1454- பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11726- 
ஆக உள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


12 May 2020

இந்தியாவில் வீட்டில் தனியாகவிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.

இந்தியாவில் 8 மாதக் கர்ப்பிணி பெண் வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவத்தில் கொலையாளி அவரின் மைத்துனர் தான் எனத் தெரியவந்துள்ளது.பெங்களூரை சேர்ந்தவர் ஜோதி. திருமணமான இவர் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.11-05-20..நேற்று
 வீட்டில் இவர் தனியாக இருந்த நிலையில், குடும்பத்தார் வெளியில் சென்று
விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜோதி 
இரத்த வெள்ளத்தில் சடலமாக 
கிடந்தார்.வீட்டின் சுவற்றிலும் இரத்தம் படிந்திருந்த நிலையில் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் ஜோதி கணவரின் தம்பி 
ஹரி பாபுவுக்கும், ஜோதிக்கும் பல நாட்களாக பிரச்சனை இருந்தது தெரியவந்தது
.இதையடுத்து ஹரியிடம் பொலிசார் விசாரித்த போதுஅண்ணியை கத்தியால் குத்திக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.மேலும், குடிக்கு அடிமையான ஹரி தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், அவரின் மனைவி கோபித்து
 கொண்டு தாய் வீட்டுக்கு 
சென்றுவிட்டார்.இந்த சூழலில் தான் அண்ணி ஜோதியிடம் அவர் வாக்குவாதம் செய்த நிலையில் அதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது.இதையடுத்து ஹரியை பொலிசார் கைது செய்து மேலும் விசாரணை 
நடத்தி வருகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


05 May 2020

கொரோனா சென்னை ஒரே தெருவில், ஒரே நேரத்தில் 70 பேருக்குத் தொற்று

சென்னை ஐஸ் ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் மேலும் 6 பேருக்கு.05-05-20, இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து வி.ஆர்.பிள்ளை தெருவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கொரோனா 
வைரஸ் பரவும் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் சுமார் 1000ற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,04-05-20,.நேற்று உச்ச பட்சமாக ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று 
உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாளானா ஞாயிற்றுக்கிழமை 203 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்தது.இந்நிலையில், சென்னையில் ஐஸ் ஹவுஸில் உள்ள
 ஒற்றைத் தெருவில் மட்டும் 70 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தன்னார்வலர் ஒருவர் மூலம் பலருக்கும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஐஸ் ஹவுஸில் தன்னார்வலர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள காவலர்கள், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு கடந்த வாரம் நல்லெண்ணத்துடன் டீ, பிஸ்கட் மற்றும் உணவு விநியோகித்தார். சமூக இடைவெளியை
 பின்பற்றியதுடன், மாஸ்க் அணிந்த படி தான் உணவு கொடுத்துள்ளார்.ஆனால், அவருக்கு அடுத்த இரண்டு நாட்களில் காய்ச்சல் இருமல் இருப்பது தெரியவந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தன்னார்வலருக்கு கொரோனா இருப்பதை 
உறுதி செய்தனர். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த போலீசார், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை
 நடத்தப்பட்டது.ஒரே தெருவில் பாதிப்புஅத்துடன் தன்னார்வலருடன் தொடர்பில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதன்பிறகு
 வரிசையாக கொரோனா சங்கிலி தொடர்போல் பலருக்கும் பரவியது. இப்படி ஐஸ் ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் பலருக்கும் கொரோனா பரவி இருந்தது. இந்நிலையில் அந்த தெருவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இதன் மூலம் அந்த ஒற்றை தெருவில் 70 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சங்கிலி தொடராக பரவுகிறது.இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதி ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த வி.ஆர்.பிள்ளை 
தெருவில் உள்ள அனைவருக்கும், அவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவரையும் பரிசோதித்து வருகிறார்கள். எனவே சங்கிலி தொடர் எந்த அளவுக்கு சென்றது என்பது அடுத்தடுத்த 
நாளில் தெரியவரும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>