Search This Blog n

06 March 2017

பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் உயிருடன் எரிப்பு !

இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கணவர் மருத்துவமனையில்
 அனுமதித்துள்ளார்.
ஆனால், அவரது மனைவி அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக 
தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் மனைவியின் உடலை எடுத்துச் சென்ற கணவர் மனைவியின் பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கமால் சவத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இத்தகவல் அறிந்த மனைவியின் பெற்றோர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து சுடுகாட்டிற்கு விரைந்துள்ளனர்.
ஆனால், இவர்கள் செல்வதற்குள் பெண்ணிற்கு தீயிட்டுள்ளனர். சவத்தில் எரிந்துக்கொண்டு இருந்த பெண்ணின் உடலை பொலிசார் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இருப்பினும், பெண்ணின் உடல் சுமார் 70 சதவிகிதம் வரை தீயில் எரிந்து உயிரிழந்துள்ளது.
எனினும், சந்தேகம் அடைந்த பொலிசார் எரிந்த சடலத்தை தடவியல் துறை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சடலத்தை மருத்துவர்கள் சோதனை செய்தபோது, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் சாம்பல் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவரை உயிருடன் எரிக்கும்போது மட்டுமே சாம்பல் மூச்சுக் குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்.
எனவே, பெண்ணை எரிக்கும்போது அவர் சுவாசித்துக்கொண்டு இருந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த கணவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment