Search This Blog n

06 January 2013

பகவத் கீதையை படித்து எம்.பியாக பதவியேற்றுக்கொண்ட பெண்

அமெரிக்காவின் ஹவாய் பகுதியை சேர்ந்த துளசி கபார்டு என்பவர் பகவத் கீதையை படித்து எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹவாய் பகுதியிலிருந்து ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு (வயது 31), பிரதிநிதிகள் சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்று முன்தினம் எம்.பிக்களாக பதவி ஏற்றனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து உறுதி மொழி ஏற்றார்.

இது குறித்து துளசி கூறியதாவது: என் தாய் இந்து, தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவர்.

பகவத் கீதை மன அமைதி, வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் நமக்கு வழிகாட்டுவது.

இளம் பருவத்திலேயே பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது.

இதனால் நான் கீதையை படித்து பதவியேற்றுக்கொண்டேன் என்றார்

0 கருத்துகள்:

Post a Comment