Search This Blog n

04 January 2014

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்
சி காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.8% ஆகக் குறைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாதனைகளை அவர் விளக்கிப் பேசினார்.

அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மத்திய அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்தியாவில் பட்டினி, ஊழலை களைய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி காலத்தில் விவசாயத் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைத்துள்ளது. கிராமப்புற வளர்ச்சி தொடர்பாக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ன.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வியை மேம்படுத்த நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பிரதமராக மாட்டேன். மத்திய அரசின் நிர்வாகத்தை புதிய பிரதமரிடம் ஒப்படைப்பேன்.
பிரதமர் வேட்பாளரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்வு செய்து உரிய நேரத்தில் காங்கிரஸ் அறிவிக்கும் என்று பிரதமர் பேசினார்.

0 கருத்துகள்:

Post a Comment