Search This Blog n

19 January 2014

காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற பெண்! நடந்தது என்ன?

 இணையதள காதலனை சந்திக்க போலி பாஸ்போர்ட் மூலம் பாகிஸ்தான் சென்ற குஜராத் பெண் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நகிதா ரமேஷ் (20), இவருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசிக்கும் அசார் என்பவருக்கும் இணையதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அசார் மீது காதல் வசப்பட்டார் நகிதா. இதனைத் தொடர்ந்து காதலனை பார்ப்பதற்காக தோகாவில் இருந்து விமானத்தில் லாகூர் சென்றுள்ளார்.
அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் உள்பட ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது நகிதா, நிம்ரா என்ற போலி பாஸ்போர்ட்டில் லாகூர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவரை தனியாக அழைத்து சென்று பொலிசார் விசாரித்துள்ளனர். விசாரணையில், இணையதளத்தில் அறிமுகமான அசாரை சந்திக்க வந்ததாகவும், தான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகவும் நகிதா தெரிவித்துள்ளார்.
மேலும் விமான நிலையத்தில் நிகிதாவை வரவேற்க அசாரும் அங்கு வந்திருந்தார். அவரையும் மடக்கி பொலிசார் விசாரித்தனர். பின்னர் நிகிதா சொல்வது உண்மை என்று தெரிய வந்ததையடுத்து குடியேற்று துறை அதிகாரிகள் நகிதாவை மீண்டும் தோகாவுக்கு நாடு கடத்தினர். மேலும் அசாரையும் விடுவித்தனர்.
அதன்பின் ஏமாற்றத்துடன் அசார் முல்தான் திரும்பி சென்றுள்ளார், போலி பாஸ்போர்ட்டில் வந்த நிகிதாவை ஏன் கைது செய்யவில்லை என்று நிரூபர்கள் கேட்டதற்கு, பாகிஸ்தான் சட்டப்படி, போலி ஆவணங்களில் வரும் எல்லோரையும் நாடு கடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment