Search This Blog n

10 January 2014

ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் :

தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ்  தொகையாக 31.3.2013 அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.
சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டது போல் 500 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment