Search This Blog n

22 January 2014

ஆந்திர மாநில எம்.பியான நடிகை விஜயசாந்தி,

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ், தனது முதுகில் குத்தினார் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி மெதக் தொகுதி எம்.பி.யாக உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த அவர் தலைவர் சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இதனால், அவர் காங்கிரசில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மெதக் தொகுதியில் நடந்த ரயில்வே பாதை தொடக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்தபோது அதன் நிர்வாகிகள் யாரும் எனக்கு ஆதரவாக இல்லை. என்னை அரசியலில் இருந்து ஒழிக்க அவர்கள் சதி செய்தார்கள். என்னுடன் இருந்து கொண்டே சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்.

எனது ஒவ்வொரு அடி அரசியல் பயணத்தையும் தடுக்க முயற்சி செய்தார்கள். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் எனது முதுகில் குத்தினார்.
நான் எனது குடும்பத்துக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலில் இருக்கவில்லை. தேவையான பணம் சம்பாதித்த பிறகே அரசியலில் ஈடுபட்டேன்.

யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மக்கள் பிரச்சினையை தீர்க்க உழைத்து வருகிறேன். இந்த விழாவில்கூட எனக்கு புகழ் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சிலர் செயல்பட்டார்கள். எனது அரசியல் பயணத்தில் இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

0 கருத்துகள்:

Post a Comment