15 May 2022
வெளியே தெரிந்த சாமி சிலைகள் ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் நீர் உள்வாங்கிய நிலையில் கடலில் உள்ள பவள பாறைகளும், சாமி சிலைகளும் வெளியே தெரிய
தொடங்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முதலாக ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் நீர் உள்வாங்க தொடங்கியுள்ளது. இதனால் படகுகள் கரை தட்டி நிற்கின்றன.
மேலும் கடல்நீர் உள்வாங்கியதால் உள்ளே இருக்கும் பவள பாறைகளும், சாமி சிலைகள் சிலவும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. அதேசமயம் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக மீன் பிடிக்க செல்லவில்லை.
30 April 2022
காங்கேசன்துறை கடற்படையினரால் இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கைது
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின்
ஊடாக 29-04-2022.அன்றயதினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில்
பயணித்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் , கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்காக பலாலி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
29 April 2022
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற இருவர் கைது
இலங்கையிலிருந்து இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.படகு மூலம் அகதிகளாக சென்ற இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்த தமிழக பொலிஸார், அவர்களை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர். குறித்த இரண்டு பேரும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சம் அடைவதற்கான எவ்வித காரணங்களும் இல்லாததாலும் மீன்பிடி படகுடன் வந்ததாலும் அவர்களை அகதிகளாக பதிவதற்கு அதிகாரிகள்
மறுத்துள்ளனர்.
இருவருக்கும் எதிராக கடவுச்சீட்டு இன்றி வந்ததாகக் கூறி இராமநாதபுரம் – தேவிபட்டினம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து இவர்களை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கான விசாரணையை கடலோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைதான இளைஞர்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவிய போது, அவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டி
வருவதாக அவர் கூறினார்.
21 April 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின் இணைப்பு
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளர்
வசந்த பெரேரா கூறியுள்ளார்.
இந்த திட்டம் இலங்கையின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிகப் பெரிய நீண்டகால முயற்சியாக கருதப்படுகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பரவலாக மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும்
இதன் மூலம் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும் இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் இலஙகைக்கும் இடையிலான மின் விநியோக கட்டமைப்பை இணைப்பது தொடர்பான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.இந்த திட்டத்திற்கு இந்தியா
ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டதுடன் ஆயிரம் மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய
உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் கடல் மட்டத்தில் இருந்து 25 மீற்றர் ஆழத்தில் 500 மீற்றர் இடைவெளியில் கேபிள் இணைப்புகள் அமைக்கும் சாத்தியங்கள் தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இலங்கை – இந்தியா இடையிலான இந்த மின் இணைப்பு கட்டமைப்பானது 360 கிலோ மீற்றர் தொலைவை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த மின் இணைப்பானது தமிழகத்தின் மதுரையில் இருந்து இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரத்திற்கும் செல்லும் வகையில் அமைக்கப்படலாம் என அப்போது கூறப்பட்டது.இந்த நிலையில், மீண்டும் இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
20 April 2022
சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 544 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,656-க்கு விற்பனையாகிறது.
அதனபடி இன்று கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து, ரூ.4,957-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேவேளை ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75,000 ரூபாயாக இருந்த நிலையில்,20-04-2022. இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் குறைந்து ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை
செய்யப்படுகிறது
17 January 2022
ஆந்திரவில் வேள்விக்கு வெட்டவேண்டிய ஆட்டின் தலைக்கு பதிலாக இளைஞரின் தலை துண்டிப்பு
இந்தியாவின் ஆந்திரவில் மதுபோதையில், இருந்த ஒருவர் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் 16-01-2022.அன்று இரவு இடம்பெற்றுள்ளது.ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்போது கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர்.இதன்போது பலிகொடுப்பதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞர் பிடித்துக்கொண்டிருந்தார்.இந்தநிலையில் மது அருந்தி முழு போதையில் இருந்து ஆடு வெட்டுபவர் ஒருவர் குறித்த இளைஞனின்
தலையை வெட்டியுள்ளார்.
இதனையடுத்து படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தநிலையில் குறித்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
24 November 2021
இந்தியாவில் 10 இலங்கையர்கள் கைது காரணம் இது தானாம்
இலங்கையர்கள் இந்தியாவில் எட்டு பெண்கள் உள்பட 10 கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பெண்கள் உள்பட 10 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக இந்தியா சுங்க திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் வெளியான தகவலானது, இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் குறித்த அனைவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்ததாக IANS தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-171 இல் 140 பயணிகளுடன் பயணித்துள்ளனர்.
தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பானது சுமார் 10 கோடி மதிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)






























