This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

18 April 2015

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மசரத் ஆலம், கிலானியை கைது செய்யாதது ஏன்?

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மசரத் ஆலம், கிலானியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
எந்த பிரிவில் கைது
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் கொடியை ஏந்தியும், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூறியும் சென்ற காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மசரத் ஆலம், சையது அலிஷா கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதலில் இருவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:-
காஷ்மீர் மாநில அரசு எந்த சட்டத்தின்கீழ் மசரத் ஆலமும், கிலானியும் கைது செய்யப்பட்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். சட்டவிரோதமாக கூடியதாக சாதாரண பிரிவுகளில் கைது செய்யப்பட்டதாக நாங்கள் அறிகிறோம். அவர்கள் துரோகம் செய்ததாகவோ, அரசை எதிர்த்து கிளர்ச்சியை தூண்டியதாகவோ கைது செய்யப்பட்டார்களா?
தேசிய பாதுகாப்பு சட்டம்
வீட்டுக் காவல் என்பது அந்த மாநில அரசின் விருந்தினர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மும்பை தாக்குதல் குற்றவாளி கசாபுக்கு பிரியாணி வழங்குவதாக பா.ஜனதா அப்போது கூறியது. அதுபோல் எதுவும் நடைபெறவில்லை.
கிலானியையும், மசரத் ஆலந்தையும் ஏன் சிறைக்கு அனுப்பவில்லை? அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை? பா.ஜனதா இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
அனுமதி இல்லை
ஆனால் பாரதீய ஜனதா, ‘‘இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம்’’ என்று கூறியுள்ளது.
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறும்போது, ‘‘ஆலம் பாகிஸ்தான் கொடியை உயர்த்தியதும், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியதும் மத்திய உள்துறை மந்திரியே காஷ்மீர் முதல்-மந்திரிக்கு போன் செய்து, அவர்களை விரைவாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்’’ என்றார்.
அக்கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் நலின் கோலி கூறும்போது, ‘‘ஆலம் கைது உடனடியாக நடந்துள்ளது. பா.ஜனதாவும், மாநில அரசும் இந்தியாவுக்கு விரோதமான எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளது’’ என்றார்.
ஆலமை கைது செய்ய தாமதம் ஏன்? என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் ராம் மாதவிடம் கேட்டபோது, ‘‘மாநில அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் போலீஸ் இருமுறை விசாரணை நடத்திய பின்னர் இப்போது உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது’’ என்றார்.
துணை முதல்வர் எச்சரிக்கை
மாநில துணை முதல்-மந்திரி நிர்மல்சிங், இதுபோன்ற சம்பவங்கள் (கிளர்ச்சியை தூண்டுதல், பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது) மீண்டும் தொடர்ந்தால் நாங்கள் இதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதுபோன்ற நடவடிக்கைகளை இனி அனுமதிக்க மாட்டோம். மாநில அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாகத்தான்
 முப்தி அரசு இந்த நடவடிக்கை எடுத்ததா? என்று கேட்டதற்கு, ‘‘இதில் அழுத்தம் என்ற கேள்வியே எழவில்லை. அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இதில் பொறுப்புகள் உள்ளது’’ என்று நிர்மல்சிங் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி??''

ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி அளவுக்கு குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சகங்கள் இந்த அளவுக்கு கட்டணப்பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் கவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது.
ஏராளமான நஷ்டம் காரணமாக மூழ்கும்
 நிலையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 2004 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 388 கோடி நஷ்டத்தை சந்தித்தது. தொடர் நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனத்துக்கு ரூ.14.6 கோடி நிகர லாபம் கிடைத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17 April 2015

இணையங்களின் மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள்.

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் மூன்றாம்ஆண்டில் கால் பதித்து  வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.கொம் நிலாவரை. கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர் 
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும் உடன் 
தொடர்புகொள்ள 
E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில் navatkiricom navatkiri ,,,navatkiri.com தொடர்புகொள்ளவும் நன்றி,,,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


16 April 2015

போலீசார் மீது கொலை வழக்கு20 தமிழர்கள் சுட்டுக்கொலை!!!

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஐதராபாத் ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார்.
கோர்ட்டில் வழக்கு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி, கடந்த 7–ந்தேதி 20 தமிழர்களை அந்த மாநில சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஆனால் இது போலி என்கவுன்டர் என, கொல்லப்பட்ட தமிழர்களின் உறவினர்களும், ஆந்திர மாநில மனித உரிமை சங்கத்தினரும் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் ஆந்திர ஐகோர்ட்டில் மனித உரிமை சங்கம் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
கொல்லப்பட்டவரின் மனைவி
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். மேலும் துப்பாக்கிசூடு தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உரிய முறையில் புகார் அளிக்குமாறும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
அதன்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த மனுவில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்
முனியம்மாளின் இந்த புகார் மனுவை ஐதராபாத் ஐகோர்ட்டு தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த மனு தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி செங்குப்தா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆந்திர மாநில அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் டி.சீனிவாஸ் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏதாவது புகார் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.
பல்வேறு பிரிவுகள்
அதற்கு பதிலளித்த டி.சீனிவாஸ், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அடையாளம் தெரியாத போலீசார் மீது பிரிவு 302 (கொலை), 364 (கொலை செய்வதற்காக வலுக்கட்டாயமாக கடத்தி செல்லுதல்), 34 (பொதுவான நோக்கத்துக்காக ஏராளமானோர் இணைந்து செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு உள்ளது என்றும் சீனிவாஸ்தெரிவித்தார்.
மறுபிரேத பரிசோதனை
இந்த விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த முனியம்மாள், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள தனது கணவரின் உடல் உள்பட 6 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் 
எனவும், அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கொல்லப்பட்டவர்களின் உடல்களில் ஏற்கனவே மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யுமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப தடையை நீக்க முடியாது??'

டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், நாட்டையே அதிர வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் பி.பி.சி. ஆவணப்படம் எடுத்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகேஷ் சிங்கை டெல்லி திகார் சிறையில் பேட்டி கண்டு, அதையும் ஆவணப்படத்தில் இணைத்திருந்தனர்.
இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பாமல் இருக்க, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய அரசு நாடி தடை உத்தரவு பெற்றது. அந்த தடையை மீறி பி.பி.சி. வெளியிட்டது. அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆவணப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் சட்டமாணவர்கள் 3 பேர் வழக்கு தொடுத்துள்ளனர்.
அவற்றை தலைமை நீதிபதி ஜி. ரோகிணி, நீதிபதி ராஜீவ் சஹாய் என்ட்லா ஆகியோர் நேற்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் தடையை நீக்க மறுத்து விட்டனர்.
இதுபற்றி நீதிபதிகள் குறிப்பிடுகையில், ‘‘இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப தகவல், ஒலிபரப்புத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் என கூறுகின்றனர். எனவே இதில் இடைக்கால நிவாரணம் அளிப்பதற்கு இல்லை’’ என கூறினர்.
மேலும் வழக்குகள் மீதான அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 27–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15 April 2015

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்துகிறது இந்தியா

நடப்பு நிதியாண்டில் வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடுகளில் இந்தியா சீனாவை விரைவில் முந்திச்சென்றுவிடும் என சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குவியும் முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, புதிய கொள்கை 
முடிவுகளின் எதிரொலியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என புதிய பொருளாதார அறிக்கையில் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டை விட சீனா பொருளாதார வளர்ச்சியில் 6.8 சதவீதமாக சரிவடையும் எனவும் கணிப்பை வெளியிட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14 April 2015

உள்நாட்டு உற்பத்தி 2017ம் ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடையும்:

உலக வங்கி கணிப்புஇந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.  நாட்டில் விரிவாக்கம் மற்றும் சாதகமான எண்ணெய் விலை ஆகியவை தெற்கு ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்தியாவில், நடப்பு 2015௧6 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த வளர்ச்சி 2017௧8 நிதியாண்டில் 8 சதவீதமாக உயரும் என்றும் அதற்கு அடிப்படையாக 2016௧8 நிதியாண்டுகளில் முக்கியமாக முதலீட்டில் வளர்ச்சி என்பது 12 சதவீதமாக அதிகரித்து காணப்படும் என்றும் தனது அரை ஆண்டு அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா, நுகர்வோர் என்ற நிலையில் இருந்து முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில், சீனா மாற்று பாதையில் செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நடப்பு 2015ம் ஆண்டில் உள்ள 7 சதவீத வளர்ச்சி, வருகிற 2017ம் ஆண்டில் 7.6 சதவீதமாக நிலையான வளர்ச்சியை அடைந்து விடும் என்றும் அதிகமான நுகர்வு மற்றும் முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 
இது இருக்கும் என்றும் வங்கியின் தெற்கு ஆசிய பொருளாதார கண்ணோட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டில் வர்த்தக அடிப்படையிலான சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றம் கண்டு வரும் முதலீட்டில் ஆர்வம் ஆகியவற்றால் இந்தியாவின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி ஆனது மண்டல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எண்ணெய் விலையில் சரிவானது, நாட்டின் பல்வேறு இடங்களிலும் எண்ணெய் பொருட்களின் உள்நாட்டு விலையில் பிரதிபலித்துள்ளது.  பாகிஸ்தானில் பெரும்பாலான எண்ணெய் பொருட்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இந்நிலை காணப்படுகிறது.
ஆனால் வங்காளதேசத்தில் மாற்றம் எதுவும் இல்லை என அறிக்கை தெரிவிக்கின்றது.  நாட்டின் உட்கட்டமைப்பு, அடிப்படை சேவைகள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவளிக்கும் இலக்கு ஆகிய முக்கிய விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் மானியங்களை குறைப்பதால் கிடைக்கும் சேமிப்புகளை பயன்படுத்த கூடும் என்றும் உலக வங்கியின் தெற்காசிய துணை தலைவர் ஆனெட் டிக்சன் கூறியுள்ளார்.
எண்ணெய் விலை குறைவால், வீடுகளில் குடியிருப்போர் நிலையான லாபம் அடைவார்கள் என்றும், குறைவான ஆற்றல் செலவு என்ற நேரடி முறையிலும் மற்றும் விரைவான வளர்ச்சி என்ற மறைமுக முறையிலும் அது இருக்கும் என அறிக்கை தெரிவித்துள்ளது.  ஆனால் மண்ணெண்ணெய் தவிர்த்து, வசதி படைத்தோர் எண்ணெய் பொருட்களில் அதிக செலவு செய்து நிலையான லாபத்தை அதிகமாக அடைவர் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>