Search This Blog n

16 April 2015

கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப தடையை நீக்க முடியாது??'

டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், நாட்டையே அதிர வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் பி.பி.சி. ஆவணப்படம் எடுத்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகேஷ் சிங்கை டெல்லி திகார் சிறையில் பேட்டி கண்டு, அதையும் ஆவணப்படத்தில் இணைத்திருந்தனர்.
இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பாமல் இருக்க, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய அரசு நாடி தடை உத்தரவு பெற்றது. அந்த தடையை மீறி பி.பி.சி. வெளியிட்டது. அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆவணப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் சட்டமாணவர்கள் 3 பேர் வழக்கு தொடுத்துள்ளனர்.
அவற்றை தலைமை நீதிபதி ஜி. ரோகிணி, நீதிபதி ராஜீவ் சஹாய் என்ட்லா ஆகியோர் நேற்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் தடையை நீக்க மறுத்து விட்டனர்.
இதுபற்றி நீதிபதிகள் குறிப்பிடுகையில், ‘‘இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப தகவல், ஒலிபரப்புத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் என கூறுகின்றனர். எனவே இதில் இடைக்கால நிவாரணம் அளிப்பதற்கு இல்லை’’ என கூறினர்.
மேலும் வழக்குகள் மீதான அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 27–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment