Search This Blog n

14 April 2015

சித்திரை தமிழ் மன்மத புதுவருடப் பிறப்பு சுபநேரங்கள்.20.04.15.

பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன.
வாக்கிய பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ம் பாதம், திதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம், திதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது,
மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தலையில் கடப்பமிலையும், காலில் வேப்பமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்குப் புறமாகப் பார்த்து நின்று தேய்த்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும்.

விசேட புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 08.23 முதல் மாலை 04.23 வரை,
திருக்கணித பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 09.47 முதல் மாலை 05.57 வரை

கைவிசேடம் - 15-04-2015 புதன்கிழமை
சித்திரை மாதம் 02ம் நாள் (15-04-2015) புதன்கிழமை காலை 07.52 தொடக்கம் 9.48 வரையும் 10.00 தொடக்கம்- 11.00 வரையும் சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களைப் பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள் - சித்திரை, திருவோணம், அவிட்டம், மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1ம் 2ம் 3ம் பாதங்கள், உத்தராடம் 2ம் 3ம் 4ம் பாதங்கள், அவிட்டம், சதயம், ஆயிலியம்
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment