Search This Blog n

19 April 2015

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தாமரைக் கோபுர நிர்மாணப் பணி??'

தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் தாமரைக் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண்பதாக இணக்கம் காணப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுக்கமைப்பு ஆணையம், சிறிலங்கா துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படும், கொழும்பு-10 டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள நிலம்,  துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்தை இந்த திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கான எந்த அங்கீகார ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளாமலேயே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும், தாமரைக் கோபுர நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நில உரிமைப் பிரச்சினையை, தீர்த்து வைக்குமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று அரச துறை நிறுவனங்களின் அதிகாரிகளும், குறிப்பிட்ட இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் நில உரிமை குறித்த பிரச்சினையை தீர்ப்பதென்றும், நிர்மாணப் பணிகளைத் தொடர அனுமதிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாமரைக் கோபுரம், சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்புக் கோபுரமாக அமையும் என்றும், இதனால் தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும், இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளரான, பாஸ்கர் ரோய், அண்மையில் எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி! தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து

மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் தாமரைக் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண்பதாக இணக்கம் காணப்பட்டதையடுத்து, சிறிலங்காவின்

தொலைத்தொடர்பு ஒழுக்கமைப்பு ஆணையம், சிறிலங்கா துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படும், கொழும்பு-10 டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள நிலம், துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்தை இந்த திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கான எந்த

 அங்கீகார ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளாமலேயே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும், தாமரைக் கோபுர நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நில உரிமைப்

பிரச்சினையை, தீர்த்து வைக்குமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று அரச துறை நிறுவனங்களின் அதிகாரிகளும், குறிப்பிட்ட இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் நில உரிமை குறித்த பிரச்சினையை தீர்ப்பதென்றும், நிர்மாணப் பணிகளைத் தொடர அனுமதிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமரைக் கோபுரம்,

சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்புக் கோபுரமாக அமையும் என்றும், இதனால் தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும், இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளரான, பாஸ்கர் ரோய், அண்மையில் எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment