Search This Blog n

09 April 2015

வெள்ளத்தில் 44 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம் அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர் என்றும் 25 காயம் அடைந்தனர் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் இறுதியில் 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. பத்காம் மாவட்டத்தில் உள்ள லேடன் கிராமத்தில் மண் அரிப்பு காரணமாக பூமியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. மாநிலத்தில் வெள்ளம், மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர் என்றும் 25 காயம் அடைந்தனர் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் நேற்று இவ்விவகாரம் தொடர்பாக பதில்அளித்து பேசிய அம்மாநில மந்திரி ஜாவித் முஸ்தப்பா மீர், ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர். 862 கால் நடைகளும் உயிரிழந்தன, வீடுகளும் சேதம் அடைந்து உள்ளது. என்று தெரிவித்தார். பல்வேறு பகுதிகளில் கிராமங்கள், நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு காரணமாக உயிர்வாழ்வதற்கு
 பாதுகாப்பு அற்ற பகுதியாக உருவாகி உள்ளது. அரசு தரப்பில் 211 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 2907 குடும்பங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். 1,474 கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. என்றும் அவர் தெரிவித்தார். 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment