Search This Blog n

01 April 2015

லிட்டருக்கு பெட்ரோல் விலை49 பைசாவும் , டீசல் விலை ரூ. 1.21-யும் குறைப்பு.

 கடந்த 2-முறை தொடர்ந்து விலைஉயர்த்தப்பட்டு வந்தநிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 49 பைசாக்கள் குறைக்கப்பட்டு உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைக்கப்பட்டு உள்ளது.  
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை நாளை முதல் ரூ. 60 ஆக (தற்போது ரூ. 60.49) இருக்கும். 
டீசல் விலை 49.71 இருந்து குறைந்து, நாளை முதல் ரூ. 48.50 க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரித்து உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கணிசமான அளவு உயர்ந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.82 பைசாவும், டீசல் லிட்டருக்கு 0.61 பைசாவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மார்ச் மாதம் 
தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18-ம், டீசல் விலை ரூ.3.09-ம் உயர்த்தப்பட்டது.
2-முறை தொடர்ந்து விலைஉயர்த்தப்பட்டு வந்தநிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைக்கப்பட்டு உள்ளது. “பெட்ரோல் மற்றும் டீசலின் சர்வதேச விலை குறைந்து உள்ளது. இந்திய ரூபாய், அமெரிக்க டாலராக மாற்றும் சதவீதம் குறைந்து உள்ளது. இவை காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளது” என்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. பெட்ரோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 10 முறை விலை குறைந்தது. அதேபோல டீசல் விலையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 முறை விலை குறைந்தது. இதற்கிடையே
 கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி நள்ளிரவு நீண்டநாட்களுக்கு பின்னர் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்ந்தது. மார்ச் மாதமும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. தற்போது விலை மாற்றி அமைக்கப்பட்டதில் விலையானது குறைந்து உள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment