Search This Blog n

08 April 2015

தீவிரவாத தளபதி தலைக்கு ரூ.1¼ கோடி பரிசு அரசு அறிவிப்பு!!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலிய எல்லையில் காரிசா பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்குள் கடந்த 2–ந்தேதி முகமூடி அணிந்த தீவிரவாதிகள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசி எறிந்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். 16 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கர தாக்குதலுக்கு சோமாலியாவின் அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. கல்லூரி மீது நடந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத அமைப்பின் தளபதி முகம்மது மொகமத் என்ற கமாதிரி என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதனை கென்ய நாட்டு உள்துறை உறுதி செய்துள்ளது.
தீவிரவாத தளபதியை தேடும் குற்றவாளியாக அறிவித்து உள்ள கென்யா, அவரது தலைக்கு 20 மில்லியன் ஷில்லிங்ஸ் அதாவது 2 லட்சத்து 15 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பின்படி 1 கோடியே 33 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment