Search This Blog n

18 February 2014

சுவிட்சர்லாந்தாக மாறிய டார்ஜிலிங்


இந்தியாவின் டார்ஜிலிங் தற்போது சுவிட்சர்லாந்து போன்று காட்சியளிக்கின்றது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும்.
ஆனால், கடந்த 2007-2011 வரையுள்ள நான்கு வருடங்களாக மாநில அரசுக்கும், உள்ளூர் நிர்வாகமான கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையில் இருந்த தனி மாநிலப் பிரச்சினைகளில் டார்ஜிலிங் தன்னுடைய சுற்றுலா முக்கியத்துவத்தை இழந்தது.
அரசியல் கொந்தளிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அங்கு வெகுவாகக் குறைந்தது.
கடந்த 2011ம் ஆண்டில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக ஒப்பந்தம் அங்கு அமைதியை ஏற்படுத்தியது.
டார்ஜிலிங்கை மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக மாற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிக்கு இந்த ஆண்டு இயற்கையின் கருணையும் கிட்டியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்குப் பிறகு இந்த ஆண்டு அங்கு மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி யூன் மத்தியில் முடியும் சுற்றுலா பருவம் இந்த ஆண்டு பனிப்பொழிவை முன்னிட்டு தற்போதே தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிறன்று ஜோர்பங்ளோ பகுதியில் உள்ள டைகர் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த பனிப்பொழிவினால் இரண்டு அங்குல உயரத்திற்கு அங்கு பனி படர்ந்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக 3-4 டிகிரி செல்சியஸ் அளவிலேயே காணப்பட்ட வெப்பநிலை நேற்று 8 டிகிரி என்ற அளவில் உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

எனினும் நேற்று இரவு அதிகரித்த பனிப்பொழிவினால் வெப்பம் 2 டிகிரியாகக் குறைந்தது மட்டுமின்றி டார்ஜிலிங்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் பனிப்பொழிவு குறித்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.



0 கருத்துகள்:

Post a Comment