Search This Blog n

30 August 2014

ஜப்பான் பிரதமர்: பச்சை தேயிலை தேநீர் கொடுத்து மோடியை கவுரவிக்கவுள்ளார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நாளை ஜப்பான் செல்கின்றார். அங்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே தலைநகர் டோக்கியோவில் வரும் திங்கட்கிழமை அன்று பாரம்பரிய தேநீர் விருந்தினை அளித்து மோடியை கவுரவிக்க இருக்கின்றார். முந்தைய காலத்தில் ஜப்பானியத் தலைவர்களால் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத் தேநீர் விருந்து தற்போது சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
 
அபேயின் விருப்பத் தேர்வான பொடி செய்யப்பட்ட பச்சை தேயிலை பானம் மோடிக்கும் வழங்கப்படும் என்றும் அதுதவிர விருந்து நிகழ்ச்சி ஒன்றும் அவருக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றது என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன. மற்றொரு சிறப்பு சலுகையாக நாளை கியோட்டோவிற்கு வரும் நரேந்திர மோடியை ஷின்சோ அபே நேரில் சென்று சந்தித்து விருந்து ஒன்றினையும் அளிக்கின்றார்.
இந்த பயணம் குறித்து தான் மிகவும் ஆவலுடன் இருப்பதாக தனது இணையதளச் செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டிருந்த இந்தத் தகவலை மொழிபெயர்க்க ஜப்பானில் இருக்கும் தனது நண்பர்கள் உதவியதாகவும் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் மக்களிடம் ஜப்பான் மொழியில் பேசும்படி அங்குள்ள தனது நண்பர்கள் கேட்டுக்கொண்டதாக கூறிய மோடி, இந்த மொழிபெயர்ப்புக்கு உதவிய நண்பர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment