Search This Blog n

20 July 2016

: கேரள பள்ளி மாணவரின் இதயம், சிறுநீரகங்கள் தானம்

திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பமங்கலம் கோராணி பகுதியை சேர்ந்வதர் சதீஷ். இவர் துபாயில் தொழில் அதிபராக உள்ளார். இவரது மனைவி ஷீலா. இந்த தம்பதியின் மகன்கள் இசீஸ்,
 விஷால் (வயது 15).
மூத்த மகன் இசீஸ் துபாயில் தந்தையுடன் தங்கி இருந்து அங்கேயே படித்து வருகிறார். 2-வது மகனான விஷால் தாயுடன் கோராணியில் தங்கி இருந்து தனது வீடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து 
வந்தார்.
கடந்த திங்கட்கிழமை விஷால் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயம் அடைந்த விஷால் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாணவர் விஷாலுக்கு மூளைச்சாவு
 ஏற்பட்டது.
விஷால் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சதீஷ் தனது மூத்த மகனுடன் திருவனந்தபுரம் திரும்பி இருந்தார். அவரிடம் டாக்டர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். இதை கேட்டதும் சதீசும் அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
மகனை இழந்த சோகம் அவர்களை வாட்டினாலும் தனது மகன் இறந்த பிறகும் பிறர்மூலம் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
இதைதொடர்ந்து விஷாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விஷாலின் இதயம், சிறுநீரகம், கண்களை தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விஷாலின் இதயம் அகற்றப்பட்டு நேற்று காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் கொச்சிக்கு 
காலை 9.30 மணிக்கு
 கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து 15 நிமிடத்தில் கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற இதயம் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தியா (27) என்ற பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இதயம் தானம் பெற்ற சந்தியா கேரள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் தனது நிலை பற்றி மனுமூலம் தெரிவித்து இதய தானத்திற்காக காத்திருந்தவர் ஆவார். முன்னுரிமை அடிப்படையில் அவருக்கு இதயம் தானம் செய்யப்பட்டது.
இதேபோல விஷாலின் சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா (30) என்ற பெண்ணுக்கும், கண்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பகருதீன் (39) என்பவருக்கும் தானமாக 
வழங்கப்பட்டது.
மாணவர் விஷாலின் உடல் அவர் படித்த பள்ளிக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் கண்ணீருடன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனும் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார்.
விஷாலின் தந்தை அளித்த உருக்கமான பேட்டியில் எனது மகன் விபத்தில் மூளை சாவு அடைந்தாலும் தற்போது 3 பேர் உடலில் அவன் உயிர் வாழ்கிறான். இறந்தாலும் அவன் உயிர் வாழவேண்டும் என்ற என்னத்தில் அவனது உடல் உறுப்புகளை தானம் 
செய்துள்ளோம் என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment