Search This Blog n

14 August 2016

அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து 
கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்கான் வானி கடந்த 8–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை பரவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவார முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு
 இருந்தனர்.
எனினும் நேற்று மாலையில் இந்த யாத்திரையை மீண்டும் தொடங்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதைத் தொடர்ந்து பகவதிநகர் அடிவார முகாமில் தங்கியிருந்த 3,500 பக்தர்கள் பல்தால் மற்றும் பகல்காம் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment