Search This Blog n

04 May 2014

தட்டுத் தடுமாறிய சிறுவன்…. வெளுத்து வாங்கிய பெண் பொலிஸ்

நாகர்கோவிலில் பேருந்தில் பயணித்த சிறுவன், நிலை தடுமாறி விழுந்துவிடாமல் இருக்க பெண் பொலிசை பிடித்ததால் சரமாரியாக அடி வாங்கியுள்ளான்.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காரமண்டபம் அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்நதவர் முத்துசாமி. கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா. இவர் இலவச சீருடை தைக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இதற்கான துணிகளை வாங்குவதற்காக தனது மகன் விஷ்ணுதாசுடன் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
இவரது மகன் விஷ்ணுதாஸ் மூலச்சலில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். பேருந்தல் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷ்ணுதாஸ் பேருந்தின் முன்பக்கம் நின்று கொண்டிருந்தான்.

தக்கலை அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறிய சிறுவனின் கை , அருகில் இருந்த பெண்ணின் மேல் பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சிறுவன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். இதை தட்டி கேட்ட தாய் சரோஜாவிடம் நான் யார் தெரியுமா? சப் இன்ஸ்பெக்டர், என்னிடம் பேசினால் தொலைத்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தினர். இதனை பார்த்த அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார்.

இதனை எதிர்பாராத சக பெண் பயணி ஒருவர் அவரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அவர் தனது பேக்கில் இருந்து கத்தியை எடுத்து தனது கையை கீறிக்கொண்டார். உங்களை கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவரது தாயாரையும் மட்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகாரை எழுதி வாங்கினர்.
முதல் கட்ட விசாரணையில் அடித்தவர் பெண் எஸ்ஐதான் என்பதும், அவர் தற்போது லஞ்ச வழக்கில் தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment