Search This Blog n

11 June 2014

கோடீஸ்வரர் குடும்பங்களது எண்ணிக்கை 1.75 லட்சம்!

 உலக அளவில் கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில், இந்தியா 16-ஆவது இடத்திலிருந்து 15-ஆவது இடத்தை எட்டியுள்ளதாக, போஸ்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 1.75 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் சொத்து குறித்து ஆய்வு நடத்திய போஸ்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பட்டியலில், 71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
2012ஆம் ஆண்டில் 15 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களுடன் இருந்த சீனா, கடந்த ஆண்டு 24 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்டிருந்தது. ஜப்பானில் டாலருக்கு எதிரான யென் மதிப்பு வீழ்ச்சியால், 2102ஆம் ஆண்டு 15 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள், கடந்த ஆண்டு 12 லட்சமாக குறைந்தது. உலக அளவில் 2012ஆம் ஆண்டு 13.7%ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16.3%ஆக அதிகரித்தது.
2012ஆம் ஆண்டு 8.7% இருந்த தனிநபர் நிதி வளர்ச்சி, பங்கு சந்தைகளின் வளர்ச்சியால் 2013ஆம் ஆண்டு 14.6% வளர்ச்சியடைந்தது. கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில் 2012ஆம் ஆண்டு 16ஆவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று போஸ்டன் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment