Search This Blog n

19 October 2015

நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பான முடிவு; பொதுச்செயலாளராக விஷால் ; நாசர் தலைவர் ?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். 
தேர்தல்
2015-2018-ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன.
தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் (பாண்டவர் அணி) ஆகிய இருவரும் போட்டியிட்டார்கள். சரத்குமார் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், நாசர் அணியில் விஷாலும் போட்டியிட்டனர். 2 துணைத்தலைவர்கள் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் விஜயகுமார், சிம்பு ஆகியோரும், நாசர் அணி சார்பில் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோரும் போட்டியிட்டார்கள்.
பொருளாளர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், நாசர் அணி சார்பில் கார்த்தி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

மேலும் இரு அணிகளின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தலா 24 பேர் போட்டியிட்டார்கள்.
3,139 ஓட்டுகள்
நடிகர் சங்கத்தில் ஓட்டுப்போட உரிமையுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,139 பேர். இதில் வெளியூர்களில் உள்ள நாடக நடிகர்-நடிகைகளும் அடங்குவார்கள். அவர்களில் 783 பேர் தபால் மூலம் வாக்கு அளித்தனர்.
மீதமுள்ள நடிகர்-நடிகைகளுக்கான ஓட்டுப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
பிரபல நடிகர்-நடிகைகளும், வயதான துணை நடிகர்- நடிகைகளும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்கள். தேர்தல் நடைபெறும் பள்ளி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து நடிகர்-நடிகைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர்
நேரடி ஒளிபரப்பு
ஆம்புலன்சு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் திரளாக குவிந்திருந்தனர். வாக்குப்பதிவு நடைபெற்ற மையத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 
வாக்குப்பதிவு நடைபெற்றதை வெளியே பெரிய திரையின் மூலம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்தன.
பரபரப்பு
இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் பெரும் பரபரப்பாக நடந்தது. வயதான சில நடிகர்-நடிகைகள் 3 சக்கர வண்டியில் வந்து ஓட்டுப்போட்டார்கள். 
பகல் 12.30 மணி அளவில் சரத்குமார் அணியினருக்கும், நாசர் அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு நடந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. போலீசார் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். 
பெரும்பாலான ஓட்டுகள் மாலை 3 மணிக்கு முன்பே பதிவாகிவிட்டன. 3 மணிக்கு மேல் ஒரு சில நடிகர்-நடிகைகள் மட்டும் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்கள்.
ஓட்டு எண்ணிக்கை
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. பதிவான ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள் - 3,139
நேரில் பதிவான ஓட்டுகள்- 1,824
தபால் ஓட்டுகள்- 821
மொத்தம் பதிவான ஓட்டுகள்- 2,607
ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் தேர்தல் அதிகாரி நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
தலைவர்-நாசர்; பொதுச்செயலாளர்-விஷால்
இந்த தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
அந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1,231 வாக்குகள் பெற்றார். 113 ஓட்டுகள் வித்தியாசத்தில் நாசர் வெற்றி பெற்று உள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட சிவசாமிக்கு 4 வாக்குகள் 
கிடைத்தன.
பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு 1,445 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி 1,138 வாக்குகள் பெற்றார். ராதாரவியை விட விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.
நடிகர் கார்த்தி வெற்றி
துணைத்தலைவர்களாக பாண்டவர் அணியைச் சேர்ந்த கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். 
பாண்டவர் அணியின் சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட 
கார்த்தி 
1,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து சரத்குமார் அணியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் 1,080 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.ஆர்.கண்ணனை விட கார்த்தி 413 வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறார்.
செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியிலும் பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்களே 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment