Search This Blog n

22 October 2015

அரசு பேருந்து ஓட்டுநர்கள் போலி ஆவணங்கள் உடன் பணியில்?

(டி.என்.என்) சிவகங்கை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஓட்டுநர்கள் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி கிளை, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், தேவகோட்டை பழுதுபார்க்கும் மையம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் டவுன், புறநகர் கிளைகள், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம் மற்றும் மதுரை 
ஆகிய 12 கிளைகள் உள்ளன.
இந்தக்கிளைகளில் 1991 முதல் 2002 வரை வேலைக்கு சேர்ந்த டிரைவர்களில் 15 பேர் புதிதாக நியமனம் ஆகியுள்ளனர். இவர்களின் சான்றிதழை சரிபார்த்த போது அவர்கள் 8–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலிசான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது.
சில தினங்களுக்கு முன்பு போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த 15 டிரைவர்களை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் டிஸ்மிஸ் செய்வதற்கு முன்பே 2 பேர்
 இறந்து விட்டனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, டிரைவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது. தற்போது 13 பேரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளோம் இதில் 3 பேர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக
 தெரியவருகிறது என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment