Search This Blog n

18 January 2015

வங்கிகள் மூலம் ஸ்காலர்ஷிப்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

 
சிறுபான்மையின மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கியாஸ் மானியங்களை வங்கிகளின் மூலமாக வழங்குவதுபோல் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையையும் (ஸ்காலர்ஷிப்) வங்கிகள் மூலம் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
10-ம் வகுப்புக்குமேல் பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவியருக்கு மத்திய- மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் கல்வி மானியத் தொகையினை வழங்கி வந்தன. தற்போது, இந்த தொகையில் 100 சதவீதத்தையும் மத்திய அரசே வழங்குகின்றது.
இந்த மானியத்தொகை விரைவாகவும், உரிய நேரத்திலும் பயனாளிகளை சென்றடையும் வகையில் வங்கிகளின் மூலம் வழங்கப்படுவதை இனி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையின மாணவ- மாணவியரையும் ஆதார் திட்டத்துடன் இணைக்கவும் வலியுறுத்தியுள்ள நஜ்மா ஹெப்துல்லா, பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண் விபரங்களை பராமரிப்பதன் மூலம் கல்வி உதவித் தொகையின் முழுப்பலன்கள் வெளிப்படையாகவும், விரைவாகவும் பயனாளிகளை சென்றடையும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment