Search This Blog n

08 January 2015

வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் தீவிரம்

திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக பெருகி வரும் கால்நடைகளின் நடமாட்டம், நாய்கள் பெருக்கம் மற்றும் பன்றிகளின் அட்டகாசம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

நடத்தினார்கள். இந்த விவாதத்தின் பலனாக திருச்சி மாநகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை பிடிப்பதுடன் அவற்றிற்கு அபராத நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அபராத நடவடிக்கை மேற்கொண்ட போதிலும்

மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் மாடுகளின் முகாம்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பயத்தின் பீதியிலேயே வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையும் மாறவில்லை. இந்த பணிகள்

முழுமையாக எடுக்கப் படுமா? என்ற கேள்விக்குறியுடன் பொதுமக்கள் பார்வையும் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை பகுதியில் தொடர்ந்து மாடுகள் சாலைகளில் ஆக்கிரமித்து வருவதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு

வருகிறது. இதனால் இந்த பகுதியை குறிவைத்த மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மூலமாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அண்ணா சிலை பகுதியில் ரோட்டில் திரிந்த 8 மாடுகளை பிடித்து மாநகர ஊழியர்கள்

வாகனத்தில் ஏற்றினார்கள். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த கவுன்சிலர் மாநகர ஊழியர்களிடம் மாடுகளை அபராத நடவடிக்கையுடன் விட்டு செல்லுமாறும், அதனை அங்கிருந்து கொண்டு செல்ல வேண்டாம் என்று வாதிட்டார். அதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால்

அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த கவுன்சிலர் மாடுகளை பிடிக்கும் நீங்கள் உங்கள் கண் எதிரே திரியும் பன்றிகளை பிடிப்பதில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஊழியர்கள் அவைகளை பிடிக்க தனி டீம் உள்ளது என்று கூறினர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பானது. கடும் வாதத்திற்கு பிறகும் பிடிபட்ட மாடுகளை அங்கு விட்டு செல்லாமல் வாகனத்தில் அதனை ஊழியர்கள் கொண்டு சென்றனர். இருப்பினும் அந்த பகுதியில் நாய்களின் தொல்லையும், பன்றிகளின் அட்டகாசமும் இருந்து வருவது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

0 கருத்துகள்:

Post a Comment